. OMMAR KHAYYAM ,PERSIAN POET, MATHEMATICIAN,ASTRONOMICAL BORN 1048 MAY 18 - 1122,DECEMBER 4
. OMMAR KHAYYAM ,PERSIAN POET, MATHEMATICIAN,ASTRONOMICAL BORN 1048 MAY 18 - 1122,DECEMBER 4 .ஓமர் கய்யாம் என அழைக்கப்படும் கியாஸ் ஒத்-தீன் அபொல்-ஃபத் ஓமார் இபின் எப்ராகிம் கய்யாம் நேஷபூரி (பாரசீக மொழி:غیاث الدین ابو الفتح عمر بن ابراهیم خیام نیشابوری பிறப்பு நேஷபூர், பாரசீகம், மே 18, 1048, இறப்பு டிசம்பர் 4, 1122) ஒரு பாரசீகக் கவிஞரும், கணிதவியலாளரும், மெய்யியலாளரும், வானியலாளரும் ஆவார். இவர் ஓமர் அல் கய்யாமி எனவும் அழைக்கப்படுகிறார். இவர் அவரது கவிதைகளுக்காகவே கூடுதலாக அறியப்படுகிறார். இயற்கணிதப் புதிர்கள் தொடர்பான செயல்விளக்கம் குறித்த ஆய்வுக்கட்டுரை (Treatise on Demonstration of Problems of Algebra), கணிதவியலில் அவரது குறிப்பிடத்தக்க பங்களிப்புகளில் ஒன்றாகும். இதில் முப்படிச் சமன்பாடுகளுக்குத் தீர்வு காண்பதற்கான வடிவவியல் முறை ஒன்றைக் கொடுத்துள்ளார். இருபடிச் சமன்பாடுகளைத் தீர்க்கும் விதியைத் தந்தார். இவர் இயற்றிய இயற்கணக்கியல் பர்சியாவில் பாடநூலாகப் பயன்பட்டது.காலக்கணிப்பு முறையின் மேம்பாட்டுக்கும் இவர் பங்களிப்புச் செய்துள்ளார். பர்சியக் காலங்காட்டியைத்...