N.M.R. SUBBARAAMAN 1905 AUGUST 14 - 1983 JANUARY 25
என். எம். ஆர். சுப்பராமன் (பிறப்பு: 14.08.1905- இறப்பு:25.01.1983) காந்தியவழியில் இந்திய விடுதலைப் போராட்டத்தில் கலந்துகொண்டவர். மதுரையில் நாட்டாண்மை மல்லி குடும்பத்தில், இராயலு அய்யர்-காவேரி அம்மாள் தம்பதியருக்கு இரண்டாவது மகனாக பிறந்தவர். இவரது மனைவி பெயர் பர்வதவர்தனி. காந்தியவழியில் இந்திய விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டதால் ”மதுரை காந்தி“ என மதுரை மக்களால் அன்பாக அழைக்கப்பட்டவர். [1] இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்களிப்பு தேசியக் கவி இரவீந்திரநாத் தாகூர் கல்கத்தாவில் நடத்திக்கொண்டிருந்த சாந்திநிகேதன் கல்விக்கூடத்தில் இரண்டு ஆண்டு காலம் கல்வி பயின்றார். சுப்பராமன் செல்வக்குடும்பத்தில் பிறந்தாலும், இந்திய விடுதலைப் போராட்டத்தில் தீவிர பங்கேற்று கடுஞ்சிறை கண்டவர். சிறைவாசத்தின் போது இவருக்கு கிடைத்த அருமையான நண்பர்களான கோவை தி. சு. அவினாசிலிங்கம் செட்டியார் மற்றும் வேதாரண்யம் சர்தார். அ. வேதரத்தினம் ஆகியவர்களுடன் இணைந்து காங்கிரசு பேரியக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டார். சர்வோதயத் திட்டங்களிலும் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டார். நிலக்கொடை இயக்கம் முதன்மைக் கட்...