Thursday 24 October 2019

N.M.R. SUBBARAAMAN 1905 AUGUST 14 - 1983 JANUARY 25








என். எம். ஆர். சுப்பராமன் 
(பிறப்பு: 14.08.1905- இறப்பு:25.01.1983) 

காந்தியவழியில் இந்திய விடுதலைப் போராட்டத்தில் கலந்துகொண்டவர். மதுரையில் நாட்டாண்மை மல்லி குடும்பத்தில், இராயலு அய்யர்-காவேரி அம்மாள் தம்பதியருக்கு இரண்டாவது மகனாக பிறந்தவர். இவரது மனைவி பெயர் பர்வதவர்தனி. காந்தியவழியில் இந்திய விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டதால் ”மதுரை காந்தி“ என மதுரை மக்களால் அன்பாக அழைக்கப்பட்டவர். [1]
இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்களிப்பு
தேசியக் கவி இரவீந்திரநாத் தாகூர் கல்கத்தாவில் நடத்திக்கொண்டிருந்த சாந்திநிகேதன் கல்விக்கூடத்தில் இரண்டு ஆண்டு காலம் கல்வி பயின்றார். சுப்பராமன் செல்வக்குடும்பத்தில் பிறந்தாலும், இந்திய விடுதலைப் போராட்டத்தில் தீவிர பங்கேற்று கடுஞ்சிறை கண்டவர். சிறைவாசத்தின் போது இவருக்கு கிடைத்த அருமையான நண்பர்களான கோவை தி. சு. அவினாசிலிங்கம் செட்டியார் மற்றும் வேதாரண்யம் சர்தார். அ. வேதரத்தினம் ஆகியவர்களுடன் இணைந்து காங்கிரசு பேரியக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டார். சர்வோதயத் திட்டங்களிலும் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டார்.

நிலக்கொடை இயக்கம்
முதன்மைக் கட்டுரை: நிலக்கொடை இயக்கம்
தமது நிலங்களைப் சர்வோதய சங்க தலைவர் வினோபா பாவே வகுத்த திட்டப்படி தனது நூறு ஏக்கர் விளைநிலங்களை பூதானம் (பூமி தானம்) மூலம், ஏழை எளிய மக்களுக்கு வழங்கிய சர்வோதயத் தொண்டர்.

அரசியல் இயக்கம்
1923ல் காக்கிநாடாவில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் கட்சி மாநாட்டுக்கு, மதுரை நகர் பிரதிநிதியாக கலந்து கொண்டார். இதனால் இவரது இந்திய விடுதலை வேட்கை அதிமாக்கியது. 1930ல் மதுரை மாவட்ட காங்கிரசு கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டார். 1934ல் மகாத்மா காந்தி நாடு முழுவதும் தீண்டாமைக்கு எதிரான பிரசாரம் மேற்கொண்டார். அவரது பயணத்தில் காந்தியடிகள் மதுரை வருகையின் போது, என். எம். ஆர். சுப்பராமன் வீட்டில் இரண்டு நாட்கள் தங்கி இருந்தார். மகாத்மா காந்தி சுப்பராமனின் குடும்ப நண்பராக விளங்கினார்.

மதுரை நகராட்சியின் தலைவராக 1935-1942 வரை பதவியில் இருந்தார். மேலும் 1937ஆம் ஆண்டு மற்றும் 1946ஆம் ஆண்டு ஆகிய முறை சென்னை மாநில சட்டப்பேரவையில் உறுப்பினர் பதவியில் இருந்து மக்கள் பணி ஆற்றினார். ”வெள்ளையே வெளியேறு” என்று காந்தியடிகள் தொடங்கி வைத்த போராட்டத்தில் கலந்து கொண்டு கடுஞ்சிறைவாசம் அனுபவித்தார்.

இந்தியா 1947ல் விடுதலை பெற்ற பின்பும் சுப்பராமன் மக்கள் பணியை தொடந்து ஆற்றினார். நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக 1962-1967 வரை தொடந்தார்.[2]

தீண்டாமை ஒழிப்பு இயக்கம்
காந்தீய கொள்கைகளில், அரிசன முன்னேற்றத்தை தேர்ந்தேடுத்து இதற்காகவே தம்மை அர்பணித்துக் கொண்டவர். 1939ஆம் ஆண்டில் தாழ்த்தப்பட்டவர்கள் மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குள் நுழையும் போராட்டத்தில் மதுரை. அ. வைத்தியநாதய்யருடன் சுப்பராமன் துணையாக போராடியதுடன் கக்கன் போன்றவர்களையும் தன்னுடன் அழைத்துச் சென்றார். தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி மேம்பாட்டிற்காக உறைவிடப்பள்ளிகள் நிறுவினார். நரிக்குறவப் பெண் குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்து திருமணம் செய்துவைத்தார்.

உருவாக்கிய தொண்டு நிறுவனங்கள்
காந்தி கிராமம் கிராமிய பல்கலைக் கழகம், திண்டுக்கல்
காந்தி அருங்காட்சியகம், மதுரை
காந்தி நிகேதன் ஆசிரமம், தே. கல்லுப்பட்டி
இராமகிருட்டிண மிசன் வித்யாலயம், கோவை
அகில இந்திய காந்தி நினைவு நிதி, மதுரை காந்தி அருங்காட்சியகம், மதுரை
அரிசன சேவா சங்கம், மதுரை
சென்னை மாநில ஆதாரக்கல்வி நிறுவனங்கள்
மதுரையில் கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்த கூட்டுறவு சங்கங்களை அமைத்தார்.
காந்தியப் பணியில்
”அகில இந்திய காந்தி நினவு நிதி” அமைப்பு துவக்கப்பட்ட போது, சுப்பராமன், தமிழ்நாட்டில் அதன் அமைப்புச் செயலராகவும், பின் அதன் தலைவராகவும் 1981ஆம் ஆண்டு வரை பணியாற்றினார்.

கொடைத்திறன்
ஆன்மீகத்தில் மிகவும் பற்றுக் கொண்ட இவர் கீதா பவனம் கட்டி பகவத்கீதை பாராயணம் நடத்த வழி வகுத்தார். சௌராட்டிர சமூக பெண்கள் கல்வி முன்னேற்றத்திற்காக, மதுரையில் சௌராட்டிர பெண்கள் மேல்நிலைப் பள்ளி, இவர் முயற்சியால் துவக்கப்பட்டது.

தன் இல்லத்தில் இருந்த நூல்களை மதுரை சௌராட்டிரக் கல்லூரி நூலகத்திற்கு நன்கொடையாக வழங்கினார். மதுரையில் பல கூட்டுறவு சங்கங்களை நிறுவி, கூட்டுறவு இயக்கத்தை வளர்த்தவர்களில் இவர் முக்கியமானவர். தாம் மதுரை சொக்கிக்குளத்தில் வாழ்ந்த மாளிகையை மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் ”காந்தியியல்” (Gandhian Thought) துறைக்கு நன்கொடையாக வழங்கினார்.

மறைவுக்குப்பின் அரசு செலுத்திய மரியாதை
சுப்பராமனின் பொதுநலத் தொண்டினை பாராட்டும் விதமாக, சுப்பராமனின் நூற்றாண்டு பிறந்த நாளில், (2005ஆம் ஆண்டில்) சுப்பராமானின் நினைவு தபால் தலையை இந்திய அரசின் அஞ்சல் துறை வெளியிட்டது.[3][4]

மதுரை மாநகராட்சி இவர் பெயரில் பூங்கா ஒன்று மதுரையில் அமைத்ததுடன், மதுரை மாநகர், தெற்குவாசல்-வில்லாபுரத்தை இணைக்கும் மேம்பாலத்தின் திறப்பு விழாவின் போது (11-08-1989), என். ஆர். சுப்பராமனின் நினைவை போற்றும் விதமாக அந்த மேம்பாலத்திற்கு ’என். எம். ஆர். சுப்பராமன் மேம்பாலம்’ என்று பெயரிட்டார், அன்றைய தமிழக முதல்வர் மு. கருணாநிதி.

தமக்கு சொந்தமான இடத்தை மதுரை மாநகராட்சிக்கு தானமாக அளித்து அதில் மகப்பேறு மருத்துவமனை கட்ட உதவினார். மதுரை மாநகராட்சி நிர்வாகம் இந்த மருத்துவமனைக்கு, சுப்பராமனின் தந்தை இராயலு அய்யர் நினைவாக என். எம். இராயலு அய்யர் மகப்பேறு மருத்துவமனை எனப்பெயர் சூட்டி கெளரவித்தது. (இந்த மகப்பேறு மருத்துவமனையை காந்தி பொட்டல் ஆசுபத்திரி என்று இப்பகுதி மக்கள் அழைப்பர். மேலும் இந்த மகப்பேறு மருத்துவமனை முன்பாக, மகாத்மா காந்தியின் முழு உருவச்சிலை பொதுமக்களால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.


தேசப்பிதா என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தியை அறியாதவர் யாரும் இல்லை. ஆனால், மதுரை காந்தி என்று பிரபலமாக அறியப்பட்ட ஒரு சுதந்திர போராட்ட வீரர் பற்றி நம்மில் எத்தனை பேர் அறிவார்கள்.

நிலாவில் முதலில் கால் வைத்தவர் பெயர் மட்டுமே இந்த உலகம் நினைவில் கொண்டுள்ளது என்ற கூற்றினை போல.. சுதந்திர போராட்டத்திலும் முன்னின்ற சில தலைவர் பெயர் மட்டுமே வரலாற்றில் பிரபலமாக அறியப்பட்டு வருகிறது.

விடுதலைக்காக தங்கள் பொருள், நிலம், உயிர் என தியாகம் செய்த பலரது வரலாறு யாரும் அறியாத, காணாத சுவடுகளாய் மறைந்துக் கொண்டிருக்கின்றன. காந்தியின் வழியை பின்தொடர்து விடுதலைக்காக போராடிய விடுதலை போராட்ட வீரர் தான் என்.எம்.ஆர். சுப்பராமன் என்கிற மதுரை காந்தி. இன்று இவரது பிறந்தநாள்...பிறப்பு!
இவர் மதுரை நாட்டாண்மை மல்லி குடும்பத்தில் பிறந்தவர். இவரது பெற்றோர் இராயலு அய்யர் - காவேரி அம்மாள் ஆவர். இந்த தம்பதிக்கு சுப்பராமன் இரண்டாவது குழந்தை. பர்வதவர்தனி என்பவரை சுப்பராமன் திருமணம் செய்துக் கொண்டார். காந்தியின் வழியில் நின்று விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டு வந்த காரணத்தால் இவரை மதுரை காந்தி என்று மதுரை மக்கள் அழைத்தனர்.
கல்வி!
தேசிய கீதம் இயற்றிய இரவீந்திரநாத் தாகூர் கலகத்தாவில் நடத்தி வந்த சாந்தி நிகேதனில் இரண்டு ஆண்டுகள் கல்வி பயின்றார் சுப்பராமன். இவரது குடும்பம் மிகுந்த செல்வாக்கும், செல்வமும் கொண்ட பணக்கார குடும்பம். ஆயினும், இவர் இந்திய விடுதலை போராட்டத்தில் தீவிரமாக பங்கெடுத்துக் கொண்டார். விடுதலைக்காக போராடி இவர் கடுமையான சிறை தண்டனைகளும் பெற்றிருக்கிறார்.
சிறை நட்பு!
விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டு சிறை தண்டனை பெற்ற போது தான். இவர் கோவை அவினாசிலிங்கம் செட்டியார் மற்றும் வேதாரண்யம் சர்தார்.அ. வேதரத்தினம் போன்றவர்களுடன் நட்பு கொண்டார். இந்த அற்புதமான நட்பு இவர்களை ஒன்றாக இணைந்து சுதந்திரத்திற்காக போராட வைத்தது. இவர் காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து தீவிர விடுதலை போராட்டங்களில் ஈடுபட்டனர். இதுமட்டுமின்றி இவர் காந்தியின் சமூக கொள்கைகளை குறிக்கும் சர்வோதய திட்டங்களிலும் தங்களது பங்களிப்பை அளித்தனர்.
பூதானம்!
சுப்பராமன், தனது சொந்த நிலங்களில் நூறு ஏக்கர் விளைநிலங்களை சர்வோதய சங்க தலைவர் வினோபா பாவே வகுத்த திட்டத்தின் படி, ஏழை மக்களுக்கு பூதானமாக அளித்தார். பூதானம் என்பது பூமி தானம் ஆகும். இவர் சுதந்திர போராட்ட வீராரக மட்டுமின்றி சிறந்த சர்வோதய தொண்டராகவும் காணப்பட்டார்.

அரசியல்!
காக்கிநாடாவில் 1923ம் ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் கட்சி மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில் மதுரையின் பிரதிநிதியாக பங்கெடுத்துக் கொண்டார் சுப்பராமன். இந்த மாநாட்டின் போது தான், இவரது விடுதலை போராட்ட குணம் அதிகமானது. 1930ம் ஆண்டு இவரை மதுரை மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவராக தேர்வு செய்தனர்.

1934ம் ஆண்டு தீண்டாமைக்கு எதிராக இந்தியா முழுவதும் காந்தி விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டார். காந்தியின் அந்த பயணத்தில் தன்னையும் ஈடுப்படுத்திக் கொண்டார் சுப்பராமன். இந்த பயணத்தின் போது காந்தி மதுரை வந்த போது, சுப்பராமன் வீட்டில் இரண்டு நாட்கள் தங்கி சென்றார் என்று கூறப்படுகிறது.நகராட்சி தலைவர்!
1935 - 1942 வரை சுப்பராமன் மதுரை நகராட்சி தலைவர் பதவி வகித்தார். அதுமட்டுமின்றி 1934 மற்றும் 1946ம் ஆண்டுகளில் சென்னை மாநில சட்டபேரவை உறுப்பினராக பதவி வகிட்டகார். வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டு கடுமையான சிறை வாசமும் அனுபவித்தார் சுப்பராமன்.
நாடாளுமன்ற உறுப்பினர்!
இந்தியா விடுதலை பெற்ற பிறகு மதுரை காந்தி என்கிற சுப்பராமன் தொடர்ந்து மக்களுக்கு நிறைய நற்பணிகள் செய்துக் கொடுத்தார். 1962-67 வரை இவர் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலை போராட்ட காலத்திலும், அதற்கு பின்னரும், நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போதிலும் என பல்வேறு காலக்கட்டத்தில் மதுரை காந்தி அவர்கள் மக்களுக்கு நிறைய பொதுநல தொண்டாற்றி இருக்கிறார்.அரசு மரியாதை!
சுப்பராமனின் பொதுநல தொண்டினை பாராட்டும் வகயில் இவரது நூற்றாண்டு பிறந்தநாளில் (2005ல்) சுப்பராமன் நினைவு தபால் தலையை இந்திய அரசின் அஞ்சல் துறை வெளியிட்டது.

மதுரையில் சுப்பராமன் பெயரில் மதுரை மாநகராட்சி அமைத்துள்ளது. மேலும், தெற்கு வாசல் - வில்லாபுரத்தை இணைக்கம் மேம்பாலத்திற்கு என்.எம்.ஆர் சுப்பராமனம் மேம்பாலம் என்று பெயர்சூட்டப்பட்டுள்ளது. இந்த ஆணையை வெளியிட்டவர் அன்று தமிழக முதல்வராக இருந்த மறைந்த மு. கருணாநிதி.

மதுரை மகப்பேறு மருத்துவமனை சுப்பராமன் நன்கொடையாக அளித்த இடத்தில் தான் கட்டப்பட்டுள்ளது. கட்டுமானத்திற்கும் உதவி செய்திருக்கிறார் சுப்பராமன். இவரது பொதுநல உதவியை போற்றி, அந்த மருத்துவ மனைக்கு சுப்பராமனின் தந்தை என்.எம். இராயலு அய்யர் மகப்பேறு மருத்துவமனை என்று பெயர் சூட்டப்பட்டது. இந்த மருத்துவமனை முன்பாக காந்தி சிலை நிறுவப்பட்டுள்ளது.

மதுரை:தமிழ்நாடு அரிஜன சேவக சங்கம் மூலம் ஆதி திராவிடர், பிற்பட்ட மாணவர்களுக்காக மதுரை விநாயகநகர் டாக்டர் தங்கராஜ் சாலையில் என்.எம்.ஆர்.சுப்பராமன் நினைவு உறைவிடப் பள்ளி செயல்படுகிறது.
இங்கு குழந்தைகளுக்கு தங்குமிடம், உணவு, சீருடை, மருத்துவம், பாடப் புத்தகங்கள், கல்வி இலவசமாக வழங்கப்படுகிறது. தற்போது முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடக்கிறது. விரும்பும் பெற்றோர் தொடர்பு கொள்ளலாம். இதை அரிஜன சேவா சங்க செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

1 comment: