Sunday, 13 October 2019

சிறுகதை - காதல் இன்று ! - ரூ. 1500 சன்மானம் - நாதன்

சிறுகதை - காதல் இன்று ! - 
ரூ. 1500 சன்மானம் - நாதன்

எதிர்பாராத மனிதர்களை, எதிர்பார்க்காத இடத்தில், எதிர்பார்க்காத நேரத்தில் சந்திப்பது தான், வாழ்க்கை என்று சொன்னால் தவறில்லை. ஏனென்றால், குவைத் திலிருந்து பதினைந்து நிமிடங்கள் தாமதமாக வந்த எமிரேட்ஸ் விமானத்தின் தொடர் சென்னை விமானத்தைப் பிடிக்க, மூச்சைக் கையில் பிடித்து, கிட்டத்தட்ட இரண்டு கி.மீ., உள்ள துபாய் சர்வதேச விமான நிலையத்தின் தாழ்வாரங் களையும், பாதுகாப்பு சோதனைகளையும் கடந்து, 122வது வாசல் எது என்று பார்த்தபடி வந்து சேர்ந்த போது, கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் கடந்துவிட்டன.

புன்னகை மாறாத முகத்துடன் என் போர்டிங் பாஸை கிழித்துக் கொடுத்து, "ஹாப்பி ஜர்னி' என்று வாழ்த்திய பர்சரைத் தாண்டி காத்திருந்த மகத்தான கூட்டத்தினுள் நுழைந்து, இன்னும் திறக்காத நுழைவாசலை நோக்கி மெதுவாக நடந்த போது தான், அவள் கண்ணில் பட்டாள்.

நேருக்கு நேர் எங்கள் பார்வைகள் சந்தித்துக் கொண்டன.

அவள்... அனுபமா...

பதினைந்து ஆண்டுகள், "ப்ளாஷ் பாக்'கில் திரைப்படங்களில் செல்வது போல் போனால், ஆமாம்... நீங்கள் ஊகித்திருப்பீர்கள்... என் காதலி! எத்தனை கதைகளும், சினிமாக்களும் பார்த்திருப்பீர்கள்? இதைக் கூடக் கண்டு பிடிக்க இயலாதா என்ன?

ஆனால், என்னுடைய காதல் கதை சற்று வித்தியாசமானது. என்ன மறுபடியும் எல்லாத் திரைப்படங்களிலும், கதைகளிலும் வரும் வசனத்தையே பேசுகிறாயே என்கிறீர்கள், அப்படித்தானே?

அப்படித்தான்!

அதாவது, கல்லூரி நாட்களில், வேலையில் சேர்ந்து நாலு காசு பார்க்கும் சமயங்களில், அதிகம் பொறுப்புகள் சேராத நிலையில், எல்லா ஆண்களையுமே இந்தக் காதல் என்ற மாயவலை வந்து சூழ்ந்து கொள்ளும்.

அது, "ஹார்மோன்' சமாச்சாரமோ அல்லது இதிகாச, இலக்கியத் தாக்கமோ, எல்லா ஆண்களுமே ஏதோவொரு சந்தர்ப்பத்தில் காதல் வயப்படுகின்றனர். இது, அவர்களுடன் பேசி, பழகி, உரையாடும் பெண்கள் தான் என்றில்லை... பேசாமல் வெறும் பார்வைப் பரிமாற்றத்திலேயே, இன்னும் சொல்லப் போனால், ஒரு சினிமாவில் காட்டியது போல், வெறும் கடிதங்களின் தொடர்பாலேயே காதலில் வீழ்கின்றனர்.

நான் அப்படியெல்லாம் இல்லை.

அனுபமாவும், நானும் ஒரே கல்லூரியில், ஒரே பாடத்தில் தான் பொறியியல் படித்தோம். அவள் கிளாஸ் பர்ஸ்ட்; நான் நடுநிலை. காதலுக்குக் கண்ணே இல்லை என்ற போது, மதிப்பெண்கள் எம்மாத்திரம்?

ஆனால், எங்களிடையே தோன்றிய காதலில் கவிதை இல்லை; கட்டுரை இல்லை. சில அபிப்ராயங்களில் ஒத்துப் போனோம்; பல விஷயங்களில் வேறுபட்டோம். ஆனால், இவை எல்லாவற்றையும் தாண்டி, ஒரு பரஸ்பர ஈர்ப்பு எங்களுக்கிடையே இருந்தது.

இருவருக்கும், அதிர்ஷ்டவசமாக ஒரே கம்பெனியில் வேலையும் கிடைத்தது. பின்னே, எங்கள் காதல் ஏன் கல்யாணத்தில் முடியவில்லை என்று தானே கேட்கிறீர்கள்?

கல்யாணத்தில் தான் முடிந்தது. கொஞ்ச நாட்கள் ஆனந்தமயமாகவும் சென்றது.

பின்னே ஏன் அனுபமாவை, "காதலி' என்று சில பாராக்களுக்கு முன் குறிப்பிட்டேன் என்று கேட்கிறீர்கள் அல்லது குழம்புகிறீர்கள்... அப்படித் தானே?

மனைவி என்ற ஸ்தானத்திலிருந்து நகர்ந்து சென்றவளைப் பின் என்னவென்று அழைப்பது? மனைவியாக ஆகும் முன் அவள் எனக்குக் காதலியாகத் தானே இருந்தாள்? மாஜி மனைவி என்ற சொல், எனக்கு உடன்பாடாக இல்லை. அதனால் தான், "காதலி' என்று குறிப்பிட்டேன்.

காதல் கல்யாணம் எப்படி முறிந்தது?

காதல் கல்யாணமாகி, கணவன்-மனைவி என்ற உறவு தொடங்கும் போது, "அன்பு' மட்டும் போதாது. சில, "உடன்படிக்கை'களும் தேவையாகிறது.

அனுபமா முதல் மாணவி என்றேன். அலுவலகத்தின் ஏணிப் படிகளிலும், அவள் மிக விரைவாக முன்னேறினாள். என் காதலி, முதல் மாணவி என்று மாணவப் பருவத்தில் இருந்த கர்வம், என் மனைவி, என் அலுவலகத்தில் என்னை விட உயர்ந்த பதவியில் இருக்கிறாள் என்ற போது வரவில்லை; பொதுவாக எந்த (இந்திய) ஆண் மகனுக்கும் வராது என்றே நினைக்கிறேன்.

கணினித்துறை சிக்கலானது. அங்கு ஏற்றமும், இறக்கமும் பரமபதம் விளையாட்டைப் போன்றது. அனுபமா வெகுவிரைவாக ஏணிகளில் ஏறியதை, நான் மூச்சு வாங்கக் கீழே நின்று பார்த்துக் கொண்டிருந்தேன். அப்படி ஏறிய சில இடங்களிலும் போன சுருக்கில், சில குட்டிக்குட்டிப் பாம்புகள் வாயிலாக, நான் கீழே இறங்கும்படி ஆயிற்று.

இந்த இடைவெளி, எங்கள் பரஸ்பர நம்பிக்கை மற்றும் உறவைப் பாதித்தது. அனுபமாவிற்கும் அவளுடைய முன்னேற்றமா அல்லது அதிக சாதுர்யம் இல்லாத கணவனா என்ற கேள்வி வந்த போது, இரண்டாவதை அவ்வளவு முழு மனதாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. என்னாலும், சில நாசூக்கான குத்தல் பேச்சுக்களையும், நேரடியான நக்கல்களையும், வெளிப்படையான அதீத இடைவெளியையும், சகித்துக் கொள்ள முடியவில்லை.

சண்டை, சச்சரவு, நாலு பேர் வந்து மத்யஸ்தம் என்றெல்லாம் போகாமல், கவுரவமாக ஒருவருக்கொருவர் பேசிப் பிரிந்து கொண்டோம்.

நான் வேலையிலிருந்து விலகி, முதலில் சென்னையிலிருந்து கிளம்பி பெங்களூரு சென்றேன். பின், அங்கிருந்து என் பயணம் மாறிக் கொண்டேயிருந்தது.

நானும், அவள் எங்கே, எப்படிப் போனாள் என்பதை விசாரிக்கவில்லை. அவளும், என் வாழ்க்கையில் இந்தப் பதினைந்து வருடங்களில் எந்த இடத்திலும் குறுக்கிடவில்லை.

உலகம் மிகப்பெரியது அல்லவா?

ஆனால், இந்த வினாடி, உலகம் மிகச் சிறியதாகிப் போனது.

இரண்டு பேருமே ஒரு கணம் திகைத்தாலும், மறு வினாடி விழித்துக் கொண்டோம்.

""ஹலோ...''

""ஹாய்... ஹவ் ஆர் யூ? வாட் எ சர்ப்ரைஸ்?'' என்றாள் அனுபமா.

""யெஸ்... எனக்கும் தான்...'' என்றேன்.

அடுத்து என்ன பேசுவது என்று நினைப்பதற்குள், அனுபமா, ""சென்னைக்கா? எங்கிருந்து வருகிறாய்?'' என்றாள்.

""இங்கு காத்திருக்கும் அத்தனை பேரும், சென்னைக்கு போகத் தான் என்று நினைக்கிறேன்... நானும் தான்... குவைத்திலிருந்து...'' என்றேன்.

""நான் பாரீசிலிருந்து வருகிறேன்...'' என்றாள் அனுபமா.

""ஓ...''

""ஆர் யூ இன் குவைத் நவ்?'' என்றாள்.

""நோ... ஒரு க்ளையன்ட்டுக்காக ஒரு வாரம் போயிருந்தேன்...'' என்றவன், அதற்கு மேல் அவளைக் கேள்வி கேட்கவில்லை.

அனுபமாவே பேசினாள்.

""நானும் ஒரு வேலை விஷயமாகத் தான் பாரீஸ் போயிருந்தேன். கிட்டத்தட்ட ஒரு மாசம் ஸ்டே...'' என்றாள்.

""ஐ ஸீ... ஆர் யூ ஸ்டில் வித் த சேம் கம்பெனி?'' என்றேன்.

சிரித்தாள் அனுபமா.

""நான் அந்த அளவு சிம்பிள் என்றா நினைத்தாய்... நோ நவ்... ஐம் ஹாவிங் மை ஓன் கம்பெனி...'' என்றாள்.

நான் கிட்டத்தட்ட எதிர்பார்த்த பதில் தான் என்பதால், ""குட்... வாழ்த்துக்கள்...'' என்றேன்.

""தாங்க்ஸ்...'' என்ற அனுபமா, நான் எங்கே, எதற்கு வேலை செய்கிறேன் என்பதைக் கேட்கவில்லை. அதுதான் அவள் குணம். தனித்தன்மை என்ற வகையில் அடுத்தவனை அலட்சியப்படுத்தும் நோக்கு.

நானும் பதில் சொல்லவில்லை.

ஆனால், அனுபமா அடுத்ததாக நான் சற்றும் எதிர்பார்க்காத கேள்வி ஒன்றைக் கேட்டாள்.

"" ஆர் யூ மாரீட்?'' சற்று வெளிப்படையான முகத்தில் அறைவது போன்ற வினா. நான் ஒரு கணம் திகைத்தேன். ஆனால், மறு நிமிஷமே விழித்துக் கொண்டு, ""யெஸ்... அப் கோர்ஸ்...'' என்றேன்.

""ஓ... குட்...'' என்றவள், ""சென்னையில் தான் இருக்கிறாயா?'' என்றாள்.

""ம்... ஆமாம்...'' என்றேன். தொடர்ந்து, "நீ திருமணம் செய்து கொண்டு விட்டாயா?' என்ற கேள்வி, நாக்கு நுனி வரை வந்ததை வேண்டுமென்றே தவிர்த்தேன்.

ஆனால், நான் கேட்காத கேள்விக்கு அனுபமாவே பதில் தந்தாள்.

""நான் கூடக் கல்யாணம் செய்து கொண்டேன்... பட்... ப்ச்... அதுவும் ஒர்க் ஆகவில்லை... பட் ஐ ஹேவ் எ சன்...'' என்று அவள் சொல்லும் போதே அவள் கைபேசி சிணுங்கியது.

""எக்ஸ்க்யூஸ் மீ...'' என்று அதன் திரையைப் பார்த்தவள், ""மை சன்...'' என்று போனைக் காதில் பொருத்திக் கொண்டு, "சொல்லு கிரண்... ஐ திங்க் மை பிளைட் வில் பி டிலேய்ட்... நாளைக் காலை ஒன்பதே கால் மணி வாக்கில் தான் சென்னை வரும் என்று நினைக்கிறேன்... நான் இமிக்ரேஷன் எல்லாம் முடிந்து வெளியே வரும் போது, நிச்சயம் பத்து மணி ஆயிடும்... நீ வர வேண்டாம். டிரைவரை அனுப்பு... ஓ.கே., டேக் கேர்... பை கிரண்...' என்று கைபேசியை அணைத்து விட்டு, சற்று திகைத்து நின்ற என்னைப் பார்த்து புன்னகை செய்தாள்.

""என்ன கிரண்... உன் பெயரைச் சொல்லி, என் பையனைக் கூப்பிடுகிறேன் என்று பார்க்கிறாயா... நல்ல நண்பர்களின் நினைவு நம்மோடு எப்போதும் இருப்பதில் என்ன தவறு... நீ ரவி கிரண்; அவன் உதய் கிரண்...

""அவன் அப்பா இருந்த வரை அவனை, உதய் என்று கூப்பிடுவார்... நான் தான் அவனை கிரண் என்று கூப்பிடுவேன். ஹீ ஈஸ் இன் எய்ட்த்... ஸ்மார்ட் பாய்...'' என்றாள் சிரித்தபடி.

நான் என்னை சமாளித்துக் கொண்டேன்.

""உன் பையனில்லையோ... ஸ்மார்ட்டாகத் தான் இருப்பான்...'' என்றேன்.

""எனி சர்காஸம்?'' என்றாள் அனுபமா புன்னகையுடன்.

""நோ... ஐ மீன் இட்...'' என்றேன் நானும் புன்னகையுடன்.

""ஆனால், நான், என் பெண்ணுக்கு உன் பெயர் வைக்கவில்லை...'' என்றேன்.

""அதனால் என்ன... பரவாயில்லை...'' என்றவள் சில நொடிகள் கழித்து, ""ஐ ஹோப் யூ ஆர் ஹாப்பி வித் யுவர் வொல்ப்...'' என்றாள் ஏதோ நினைத்துக் கொண்டவள் போல்.

""யெஸ்... ஐ'ம்...'' என்றேன் அமைதியாக.

சில வினாடிகள் மவுனத்தில் கரைந்தன. வாஸ்தவத்தில் மேலே என்ன பேசுவதென்று எனக்குத் தெரியவில்லை.

அனுபமாவே தொடர்ந்தாள்.

""என்னை மாதிரி ரொம்ப, "இன்டிவிடிவரிஸ்டிக்' பெண்களுக்குக் கல்யாணம் அவ்வளவாக ஒத்து வருவதில்லை கிரண்...'' என்றாள்.

நான் தோள்களை குலுக்கினேன். ""பெர்ஹாப்ஸ்... நோ கமென்ட்ஸ்...'' என்றேன் பட்டும் படாமலும்.

""ரொம்ப டிப்ளமாடிக்காகப் பேசுகிறாய்... பாராட்டுகிறேன். ஆனால், எனக்கு ஒரு உண்மையான பதில் வேண்டும்...'' என்றாள் அனுபமா, என் கண்களையும், முகத்தையும் கூர்மையாகப் பார்த்தபடி.

""யெஸ்...'' என்றேன் நான்.

""ஆர் யூ ஹாப்பி?''

""இது என்ன கேள்வி... ஐ'ம்... ஆர் யூ நாட்?''

""யெஸ்... ஐ'ம் நாட்...'' என்றாள் அனுபமா. இதைச் சொல்லும் போது, அவள் முகத்தில் திடீரென்று ஒரு சோகம் கவிழ்ந்தது போல் எனக்குத் தோன்றியது. அது என்னுடைய பிரமையாகக் கூட இருக்கலாம்.

""பட்... வொய்?'' என்றேன் மென்மையாக.

""நீ நேரில் வா... எங்கே இருக்கிறாய்... நான் வேளச்சேரியில் இருக்கிறேன். இந்தா என் கார்ட்... உன் போன் நம்பர் கொடு... நான் கால் பண்ணுகிறேன். நான் உன்னுடன் பேச வேண்டும்...'' என்றாள்.

தொடர்ந்து, ""உன் அட்ரஸ் கொடு... நான் வந்து உன் குடும்பத்தைப் பார்க்க வேண்டும்... என்ன பயமா?'' என்றாள் அனுபமா.

""சே... சே... பயமில்லை. நான் என்னுடைய வீட்டை மாற்றிக் கொண்டு சிறுசேரி அருகில் சொந்த ப்ளாட் வாங்கியிருக்கிறேன். அங்கே போகப் போகிறேன். இதுதான் என் மொபைல் நம்பர்... நீ போன் பண்ணு...'' என்று என் எண்ணைச் சொன்னேன்.

அவள் அதை தன் போனில் பதிவு செய்த போது, "பிஸினஸ் க்ளாஸ்' பயணிகளுக்கான அழைப்பு எதிரொலித்தது.

""பை... ஐ'ல் கால் யூ...'' என்று கிளம்பினாள் அனுபமா.

பதினைந்து வருடங்களில், அனுபமாவின் தோற்றத்தில் அதிகம் மாற்றமில்லை. குணத்திலும், பேச்சிலும் கூட; என்னிடமும் தான்.

அதனால் தான் இருவரும், சட்டென ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முடிந்தது.

என்னுடைய அழைப்பு வர, இன்னும் சில நிமிடங்கள் ஆகும். நான், "எகானமி கிளாஸ்' பயணி.

அனுபமா வாசல் வழியாக, "ஏரோ ப்ரிட்ஜி'ல் நுழைவதைப் பார்த்த பின், நான் ஆண்களின் ஒப்பனை அறையை நோக்கி நடந்தேன். மற்ற இடங்களைப் போலவே, ஓய்வு அறைகளும் துபாயில், பளிச்சென்று ஒளிரும். அந்த அறைக்குள் சென்று, அவள் கொடுத்த கார்டைப் பார்க்காமலேயே சிறுசிறு துண்டுகளாகக் கிழித்து, அங்கிருந்த குப்பைக் கூடையில் போட்டேன்.

என் போன் நம்பருக்குப் போன் செய்தால், நான் கட்டாயம் கிடைக்க மாட்டேன். ஏனெனில், நான் அவளிடம் தந்த அந்த பத்து இலக்க எண்களில் இரண்டு எண்கள் மாற்றிச் சொல்லியிருக்கிறேன்; நான் அவளிடம் சொல்லாதது.

"எனக்குக் கல்யாணம் ஆகவில்லை. நான் சிறிது நாட்கள் வேலை பார்த்த பிறகு, புதுச்சேரியில் உள்ள ஒரு சமூக நல நிறுவனத்தில் மிகக்குறைந்த சம்பளத்திற்கு பொதுத் தொண்டு புரிந்து கொண்டிருப்பதுடன் அவ்வப்போது, ஏதாவது வெளிநாட்டு நிறுவனங்களின் உதவிக்காக அவர்களுக்கு உதவிகள் செய்வதும், அங்கு அது தொடர்பாகச் சென்று வருவதும் வழக்கம்... அது போன்ற ஒரு பயணம் தான் இது...' என்பதையும்...

சில உறவுகள் அறுந்த பின், அவைகளைப் புதுப்பிப்பது நடக்காத காரியம். டூத் பேஸ்டில் இருந்து பிதுக்கி எடுக்கப்பட்ட பேஸ்டை, உள்ளே திரும்பச் செலுத்துவது போல் தான்!

நான் சந்தோஷமாக, ஒரு குடும்பம் உள்ளவனாக இருக்கிறேன் என்பது அனுபமாவிற்குத் திருப்தியோ, அதிருப்தியோ, சந்தோஷமோ, பொறாமையோ எது வேண்டுமானாலும் தரலாம்.

அதைப் பற்றி நான் கவலைப்படுவதிலோ, அன்றி சந்தோஷப்படுவதிலோ அர்த்தமில்லை.

இன்றைய வேகமான சமூகத்தில், சில உறவுகளுக்கே அர்த்தமில்லை. அது தான் கசப்பான உண்மை.

***

dinamalar
aug 15,2010

No comments:

Post a Comment