Sunday, 20 October 2019

MADAN BOB ACTOR,COMEDIAN OCTOBER 19,1953


MADAN BOB ACTOR,COMEDIAN 
OCTOBER 19,1953





எஸ். கிருஷ்ணமூர்த்தி (ஆங்கிலம்:Madhan Bob) என்னும் இயற்பெயர் கொண்ட இவர், மதன் பாப் என்று பரவலாக அறியப்படும் திரைப்பட நகைச்சுவையாளரும், நிகழ்ச்சி தொகுப்பாளரும் ஆவார்.[1]

இசையமைப்பாளராக தன்னுடைய திரைப்பட வாழ்க்கையை தொடங்கினார். சன் தொலைக்காட்சியில் அசத்தப் போவது யாரு? என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றினார்.[2]

சிரிப்புக்கென்றே முத்திரை பதித்துள்ள நடிகர் மதன் பாப். நகைச்சுவைக் கலைஞர், இசையமைப்பாளர், தொலைக்காட்சியில் ‘பாட்டு தர்பார்’, ‘அசத்துப்போவது யாரு’, ‘மதன்பாபுடன் சிரியுங்கள்’ எனப் பல நிகழ்ச்சிகள் நடத்தியவர் எனப் பன்முகப் பெருமை கொண்டவர். இவரது சிரிப்பை கே.பாலசந்தர் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில பார்த்துவிட்டு அதை வைத்து ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி இவரை “வானமே எல்லை” படத்தில் நடிக்க வைத்தார். அதுதான் ரசிகர்கள் மனதில் இன்றும் பதிந்து போயிருக்கிறது.

இவருக்கு நல்ல இசைஞானம் உண்டு. மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், ஏ.ஆர்.ரஹ்மான் என்று பல இசையமைப்பாளர்களின் குழுவில் பங்கு பெற்றிருக்கிறார். சோ, எஸ்.வி.சேகர், ஒய்.ஜி.மகேந்திரா, வி.எஸ்.ராகவன், பிரியதர்ஷன் என்று பலருடைய நாடகங்களுக்கு இவர் இசை அமைத்திருக்கிறார். இவரே ‘மதன் பாப் மெல்லிசைக் குழு’ என்று ஒன்றை ஆரம்பித்து, தொடர்ந்து நிகழ்ச்சிகள் நடத்தினார். திரைப்படங்களில் வாய்ப்பு வர ஆரம்பித்த பிறகு மெல்லிசைக் குழுவைத் தொடரவில்லை. சமீபத்தில்தான் ஐந்தாறு வருடங்களாக ‘மதன் உத்சவ்’ என்ற பெயரில் மறுபடியும் மெல்லிசைக் குழுவை ஆரம்பித்து நடத்தி வருகிறார்.

இவரது மகன் அர்ச்சித் எம்.சி.ஏ, எம்.பி.ஏ படித்திருக்கிறான். திரைப்படங்களில் பின்னணியும் பாடுகிறான். அவர்தான் ‘மதுரைக்குப் போகாதடி’ பாடலைப் பாடியது. இவரது பெண் ஜனனியும் எம்.பி.ஏ முடித்திருக்கிறாள். அவரும் நன்றாகப் பாடுவாள்.  இவரது மனைவி சுசீலாவும் நன்றாகப் பாடுவார். இவர்கள் இணைந்து இந்தக் குழுவைக் குடும்பமாக நடத்துகிறார்கள்.


இவரது வீட்டில் எட்டாவது மகன் – அதனால் எனக்குக் ‘கிருஷ்ணமூர்த்தி’ என்று பெயர் வைத்தார்கள். ஆனால், இவரது சித்தப்பா பெயரும் கிருஷ்ணமூர்த்தி. அவர் பெரியவர், அவர் பெயரைச் சொல்லிக் கூப்பிட முடியாது – இவரைக் கிருஷ்ணமூர்த்தி என்று கூப்பிடுவது சங்கடமாக இருந்தது. அப்போது இவரை ‘மதன்’ என்று கூப்பிட ஆரம்பித்தார்கள். பின்னர், அது ‘மதன் பாபு’ ஆகி, கடைசியில் ‘மதன் பாப்’ ஆகிவிட்டது.

இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என்று கிட்டத்தட்ட 600 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தமிழில் தேவர் மகன், ஜாதி மல்லி, உழைப்பாளி, உடன் பிறப்பு, திருடா திருடா, ஆனஸ்ட் ராஜ், நம்மவர், சதி லீலாவதி, மகளிர் மட்டும், பூவே உனக்காக, சுந்தரப்புருஷன் பிரியம், கோபுர தீபம் உள்ளிட்ட படங்கள் இவர் நடித்து வெளிவந்தவை. இவ்வாண்டில்கூட இவர் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தில் நடித்திருக்கிறார்.




Filmography[edit]

  1. Neengal Kettavai (1984)
  2. Vaaname Ellai (1992)
  3. Thevar Magan
  4. Jathi Malli (1993)
  5. Uzhaippali
  6. Udan Pirappu
  7. Thiruda Thiruda
  8. Honest Raj (1994)
  9. Pattukottai Periyappa
  10. Nammavar
  11. May Madham
  12. Sathi Leelavathi (1995)
  13. Magalir Mattum
  14. Pullakuttikaran
  15. Aasai
  16. Poove Unakkaga (1996)
  17. Sundara Purushan
  18. Tamizh Selvan
  19. Vetri Mugam
  20. Priyam
  21. Gopura Deepam (1997)
  22. Mannava
  23. Vivasaayi Magan
  24. Nandhini
  25. Pagaivan
  26. Nerrukku Ner
  27. Ratchagan
  28. Roja Malare
  29. Arasiyal
  30. Chachi 420 (Hindi)
  31. Thulli Thirintha Kaalam (1998)
  32. Rathna
  33. Kaadhala Kaadhala
  34. Jolly
  35. Priyamudan
  36. Unnidathil Ennai Koduthen
  37. Aasai Thambi
  38. Unnudan
  39. Thulladha Manamum Thullum (1999)
  40. Unnai Thedi
  41. Ethirum Pudhirum
  42. Anandha Poongatre
  43. Suyamvaram
  44. Nee Varuvai Ena
  45. Poovellam Kettuppar
  46. Minsara Kanna
  47. Jodi
  48. Unakkaga Ellam Unakkaga
  49. Kannukkul Nilavu (2000)
  50. Thai Poranthachu
  51. Sandhitha Velai
  52. Unnai Kann Theduthey
  53. Ilaiyavan
  54. Kuberan
  55. Thenali
  56. Anbudan
  57. Friends (2001)
  58. Looty
  59. Rishi
  60. Sonnal Thaan Kaadhala
  61. Pennin Manathai Thottu
  62. Star
  63. Azhagana Naatkal
  64. Parthale Paravasam
  65. Alli Thandha Vaanam
  66. Red (2002)
  67. Punnagai Desam
  68. Pammal K. Sambandam
  69. Kamarasu
  70. Krishna Krishna
  71. Gemini
  72. Yai! Nee Romba Azhaga Irukke!
  73. Anbe Un Vasam
  74. Youth
  75. Sundhara Travels
  76. Villain
  77. Kadhaludan (2003)
  78. Pallavan
  79. Nala Damayanthi
  80. Priyamana Thozhi
  81. Thithikudhe
  82. Three Roses
  83. Anbe Un Vaasam
  84. Indru
  85. Thendral (2004)
  86. Jairam
  87. Aethirree
  88. Campus
  89. Ennavo Pudichirukku
  90. Vasool Raja MBBS
  91. Karka Kasadara
  92. Vishwa Thulasi
  93. Chatrapathy
  94. Giri
  95. Ayyaa (2005)
  96. Chandramukhi
  97. 6'2
  98. Jithan
  99. ABCD
  100. Mazhai
  101. Bambara Kannaley
  102. Aathi (2006)
  103. Sudesi
  104. Jerry
  105. Kusthi
  106. Jambhavan
  107. Varalaaru
  108. Mudhan Mudhalai
  109. Manikanda (2007)
  110. Periyar
  111. Thottal Poo Malarum
  112. Marudhamalai
  113. Thavam
  114. Vel
  115. Vedha (2008)
  116. Arai En 305-il Kadavul
  117. Seval
  118. Ananda Thandavam (2009)
  119. Thee
  120. Bhramaram (Malayalam)
  121. Engal Aasan
  122. Ainthaam Padai
  123. Sura (2010)
  124. Pen Singam
  125. Kaavalan (2011)
  126. Maapillai
  127. Eththan
  128. Singam II
  129. Yuvan Yuvathi
  130. Pathayeram Kodi (2013)
  131. Chandhamama
  132. Ethir Neechal
  133. Saravanan Engira Surya
  134. Thulli Vilayadu
  135. Ramanujan (2014)
  136. Aindhaam Thalaimurai Sidha Vaidhiya Sigamani
  137. Jamai
  138. Poriyaalan
  139. Lingaa
  140. Vellaikaara Durai
  141. En Vazhi Thani Vazhi (2015)
  142. Adhibar
  143. Saagasam (2016)
  144. Tea Kadai Raja
  145. Ka Ka Ka Po
  146. Ennama Katha Vudranunga
  147. Tamilselvanum Thaniyar Anjalum
  148. Uchathula Shiva
  149. Kaththi Sandai
  150. Ner Mugam
  151. Motta Shiva Ketta Shiva (2017)
  152. Vaigai Express
  153. Saravanan Irukka Bayamaen
  154. Ivan Thanthiran
  155. Ullam Ullavarai
  156. Nagesh Thiraiyarangam (2018)
  157. Aalukku Paathi 50/50
  158. Pattinapakkam

References

No comments:

Post a Comment