Thursday 18 May 2017

JAMUNA RANI SINGER ஜமுனா ராணி BORN 1938 MAY 17



ஜமுனா ராணி BORN 1938 MAY 17
பாட முடியாத பாடல்களை பாடி சாதனை படைக்கல
எனக்கு இனிமையான குரல் . எனவே நிறைய பாடல்கள் பாடியிருக்கேன்
இளையராஜா இசை அமைப்பில் கடைசியாய் பாடிய பாடல் நான் சிரித்தால் தீபாவளி பாடல் .
இளையராஜா பழைய பாடகிகள் யாரையும் மதிக்க மாட்டார் என்று இவரிடம் சொல்லப்பட்டது
பாடல் பதிவு முடிந்ததும் இளையராஜா தங்களை நல்ல முறையில் வரவேற்றதாய் கூறுகிறார்
பிறப்பு 1938 மே 17 .தந்தை தனியார் கம்பனியில் ஒரு அதிகாரி .தாயார் திரோவ்பதி ஓர் வீணை
கலைஞர் , மற்றும் பாடகரும் கூட .ரேடியோவில் படும் பாடலை கவனித்து அப்படியே பாடும் ஜமுனா ராணிக்கு மூன்றே வயது .நான்கு வயதில் சங்கீதம் கற்றார் .ஐந்து வயதில் வானொலியில் பாடினார் .சித்தூர் நாகையா சிபாரிசின் பேரில் தியாகையா 1946 தெலுங்கு படத்தில் பாடினார் பின்னர் பல படங்களில் நடனமும் ஆடினார் .தீனபந்து ,ஜீவன் முக்தி ,வாலமீகி ,போன்ற தெலுங்கு படங்கள் இவற்றிற்கு சாட்சி
தமிழில் தேவதாஸ் 1952 படத்தில் நடிகை சச்சு சிறுமியாய் அடிப்பதும் ஓ ..தேவதாஸ் இவருடைய பாடலே
 பின்னர் மாடர்ன் தியேட்டர்ஸில் மாத சம்பளத்திற்கு ரெண்டு வருடம் 1952 -54பாடினார் .
அப்போது கண்ணதாசன் இயற்றிய கதாநாயகி பட பாடலை அற்புதமாய் பாடியிருந்தார் .
மாத சம்பளத்தை விட்டு வெளியே வந்தாலும் எம் எல் வசந்தகுமாரி ,பி லீலா ,ஜிக்கியே ஆதிக்கம் செலுத்தி வந்தனர் .குலேபகாவலி படத்தில் ஆசையும் நேசமும் பாடலுக்கு சிபாரிசு செய்தவர் கண்ணதாசன் .
இந்த பாடல் ஹிட் .அதிலிருந்து கவர்ச்சி பாடலா ? கூப்பிடு ஜமுனா ராணியை என்று வாய்ப்புகள் குவிந்தன
அப்போதெல்லாம் பாடுவதற்கு வாய்ப்பு குறைவு .பணத்திற்கும் நாயாய் அலைய வைப்பார்கள்
அலைந்தே வாங்கியிருக்கிறார் .
மஹாதேவி திரைப்படம் தயாராகி கொண்டிருந்தது . அதிலே நிறைய பாடல் பகவதி பாடினார் . காமுகர் நெஞ்சில் நீதியில்லை பாடலுக்கு ஜமுனாராணிதான்
பாடவேண்டும் என்று உறுதியாய் சொல்லி விட்டார்
கண்ணதாசன்..படத்தின் பாடல் ,கதை வசனம்
கண்ணதாசன் தான் .எம் .எஸ் .விஸ்வநாதனுக்கு இதில் விருப்பம் இல்லை .எனவே ராமமூர்த்தி சரணத்தை பாட சொல்லி கொடுத்தார் .
இந்த தேர்வில் நீ தேறினால் தான் உனக்கு உருக்கமான பட்டு கிடைக்கும் .இல்லேன்னா உன்னை SEX பாடகின்னு முத்திரை குத்திடுவாங்க அதனால நல்லா பாடி என் மானத்தை காப்பாத்து விளைவு .பாடலை கதாபாத்திரத்தின் சோகத்தை அப்படியே குரலில் வடித்து விட்டார் விஸ்வநாதனுக்கு ம் பரம திருப்தி
நல்லா படியிருக்கே ..உன்னை தவறா எடை போட்டுட்டேன் என்கிறார் விஸ்வநாதன்
அதை பின்பற்றி ராணி சம்யுக்தாவில் சித்திரத்தில் பெண் எழுதி சூப்பர் ஹிட்
" என் ஆசையும் என் நேசமும் ரத்த பாசத்தினால் ஏங்குவதை பாராயடா "
"செந்தமிழ் தேன் மொழியாள்"
"காமுகர் நெஞ்சில் நீதியில்லை"
" அக்காளுக்கு வளைகாப்பு அத்தான் முகத்திலே புன்சிரிப்பு "
" காளை வயசு கட்டான சைசு களங்கமில்லா மனசு "
"சித்திரத்தில் பெண் எழுதி சீர் படுத்தும் மானுடமே ஜீவனுள்ள பெண்ணினத்தை வாழவிட மாட்டாயா "
"பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன் நான் அதை பாடவில்லை "
"அத்திக்காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே "
" ஆதி மனிதன் காதலுக்குப் பின் அடுத்த காதல் இது தான்"
"நெஞ்சினிலே நினைவு முகம் நிலவிலும் தெரிவதும்
 அழகு முகம் ஆசைமுகம் "
"எனக்காகவா நான் உனக்காகவா என்னைக் காணவா என்னில் உன்னைக் காணவா வா வா "
"புன்னகை மன்னன் பூவிழி கண்ணன் "
இந்த கீதங்களில் குழையும் ஜமுனா ராணி.
இது ஒரு வகை.
இன்னொரு பாணி பாடல்கள் உண்டு.
அன்பு எங்கே படத்தில் " மேலே பறக்கும் ராக்கெட்டு. மின்னல் பூச்சி ஜாக்கெட்டு "
உத்தம புத்திரனில் "யாரடி நீ மோகினி " பாட்டில்
" விந்தையான வேந்தனே !"
குமுதம் படத்தில் " மாமா,மாமா மாமா "
மரகதத்தில் சந்திரபாபுவுடன் " குங்குமப் பூவே, கொஞ்சும்புறாவே"
காலை 9 டு மதியம் 1
மதியம் 2 டு இரவு 9
இரவு 9 டு இரவு 12
ஆகிய மூன்று ஷிப்ட் வேலை .
எல்லோரும் ஒரே கூட்டு குடும்பம் போல் பணியாற்றினோம் பின்னர் ராமமூர்த்தி யுடன் பிணக்கு ஏற்பட்டு விஸ்வநாதன் பிரிந்தார் ஜமுனாராணி வாய்ப்பு பறிபோனது .விஸ்வநாதன் எல் ஆர் ஈஸ்வரிக்கு வாய்ப்பு தந்தார்
ரொம்ப பல வருடங்கள் ஸ்டுடியோ வாசலையே மிதிக்காமல் இருந்த ஜமுனா ராணிக்கு 1987ல் 'நாயகன்' படத்தில் " நான் சிரித்தால் தீபாவளி''பாடலுக்காக இளைய ராஜா மூலம் வாய்ப்பு கிடைத்தது!
ஜமுனா ராணி அந்தக்கால இசை அமைப்பாளர்கள் இசையில் பாடிய அனுபவம் பற்றி சொன்ன விஷயங்கள்:
"1. ஜி. ராம நாத ஐயர் சொல்கிற சங்கதிகள் பாடுகிறவர் குரலில் வந்தே தீரவேண்டும். அந்த சங்கதிகள் வராமல் பின்னணி பாடகரை விடவே மாட்டார்.
2. மாமா கே.வி.மகாதேவன் மெட்டின் உருவத்தை அழகாக கோடி காட்டி விடுவார்." உன் கற்பனைக்கு ஏற்றவாறு உணர்ச்சி,பாவத்துடன் பாடி , தேவையான இடத்தில் சங்கதிகள் நீயே போட்டுக்கொள் " என்று பாடுபவருக்கு முழு சுதந்திரம் கொடுக்கக்கூடியவர்!
3. விஸ்வநாதன் -ராமமூர்த்தி எப்படி சொல்லிக்கொடுக்கிரார்களோ அப்படியே தான் அச்சர சுத்தமாக பாடியே தீரவேண்டும்.பாட்டின் ஒவ்வொரு சொல்லும் தெளிவாக ஒலிக்கவேண்டும்.இதில் இசை அமைக்கும் இருவருமே கவனமாக இருப்பார்கள்.அப்படிப் பாடலைன்னா ஒலிப்பதிவுக்கூடத்திலேயே பாடுபவரின் மானம் கப்பலேறிவிடும்." பாடத்தெரியாம ப்ளேபேக் சிங்கர்னு சொல்லிக்கிட்டு ஏன் பாடவர்றீங்க'' - இப்படி எம்.எஸ். வி கேட்டு விடுவார். அதனால் பயந்து கொண்டே தான் பாடுவோம்."
ஜமுனாராணி இறுதி வரை திருமணம் செய்து கொள்ளவே இல்லை 
(THIRAI ISAI ALAIKAL MATRUM RP RAJANAYAGAM BLOGSPOT)
LikeShow more reactions
Comment