NEPAL ROYAL MURDERS
NEPAL ROYAL MURDERS மன்னராட்சிக்கு எதிராக நேப்பாளத்தில் ஒவ்வொரு நாளும் ஆர்ப்பாட்டம்; போராட்டம் என்று நாடே அதிர்கிறது. King Nepalஎத்தனை ராணுவம் வந்தாலும், உணர்ச்சிகளை ஆயுதங்களால் அடக்கிவிட முடிவதில்லை. இப்போது, மத ஐதீக முறையில் விமோசனம் கிடைக்காதா என்று மன்னர் பரிவாரங்கள் சோதிடர்களிடம் அடைக்கலம் புகுந்திருக்கின்றன. ஞானேந்திரர் பதவி ஏற்றபோதும் இப்படித்தான், ஐதீக முறைப்படி யாகம் நடத்தி... மறுபடியும் அதே மருத்துவம். அன்று என்ன நடந்தது? உலகில் எந்த மதத்துக்கும் இல்லாத பெருமை(!) இந்து மதத்துக்கு உண்டு. இந்து மதத்தைத் தவிர மற்ற மதங்களுக்கெல்லாம் ஒரே ஒரு கடவுள்தான் உண்டு. இந்து மதத்துக்குத்தான் எத்தனை கடவுள்கள்! இவ்வளவு பெரிய மந்தையை அடைத்து வைக்க எத்தனை கோடிக் கோயில்கள்! (ஒரே கடவுள்கூடப் பல ‘பினாமி’ பெயர்களில் மோசடி செய்திருப்பதும் உண்டு. நூற்றுக்கும் அதிகமான பெயர்களில் சிவன். அப்படியே விஷ்ணு. அப்பனைப் போலவே பிள்ளைகள் முருகனும் விநாயகனும். பெண்டாட்டி கடவுள்களும் வைப்பாட்டி கடவுள்களும் கூட பினாமி பெயர்களில்!) ஆனால், இத்தனை கடவுள்கள் இருந்தும் உலகில் இந்தியா கடன்பட்ட நாடாகவே க...