Saturday 5 December 2020

#சில்க்.. அழகுக்கு அப்பாலும் ஜொலித்தவர்..

 





v#சில்க்.. அழகுக்கு அப்பாலும் ஜொலித்தவர்..
பெண் என்றாலே ஒவ்வொரு நாளும் ஆண்களின் பலவிதமான கண்பார்வையை கடந்தே ஆகவேண்டும். பல நேரங்களில் அருவெறுப்பான பார்வைகளால் நரக வேதனையை சந்திப்பவர்கள்.
அதிலும் பேரழகு வாய்க்கப்பெற்ற பெண் என்றால் கேட்கவேண்டியதில்லை. பார்க்கிறர்வர்கள் அத்தனைபேரும் பார்வையில் 'படுக்கை விண்ணப்பம்' போடாமல் போகமாட்டார்கள்.
அப்படிப்பட்ட சூழலில் நடிகை சில்க் சுமிதா போன்றோரின் வாழ்க்கை நிம்மதியாகவா இருந்திருக்கும்..? அதனை அப்படியே நிரூபித்துவிட்டது இளவயதிலேயே அவரை தேடிவந்த மர்மச்சாவு
1979ல் வண்டிச்சக்கரம் படம் உருவானபோது விஜயலட்சுமி என்ற ஆந்திர வைரத்தை கதை வசன கர்த்தா வினுச்சக்ரவர்த்திதான் சுமிதா என பெயரிட்டு அறிமுகம் செய்துவைத்தார். சாரயம் விற்கும் சில்க் என்ற பாத்திரம்தான் சுமிதாவிடையது.
வா பாளையம் வா பாளையம் என்று நடிகர் சாமிக்கண்ணு கூவியபடிய வா மச்சான் வா வண்ணாரபேட்டை என்று சில்க்கை வர்ணித்து பாடும் பாடல் தியேட்டர்களில் ரிபீட் முறையில் ஆடியன்சை வரவழைத்து அந்த படத்தை தாறுமாறாக ஓடச்செய்தது.
இன்றும் நமக்கு நினைவில் இருக்கிறது ரிலீசில் வந்தவாசியில் பார்த்தபோதும் சரி இரண்டு ஆண்டுகள் கழித்து காஞ்சிபுரத்தில் பார்த்தபோது சரி தியேட்டர் அதகளப்பட்ட விதம்.. பாடல் முடிந்தவுடன் எழுந்து போன ரசிகள் ஏராளம், அந்த பாடலுக்காகவே வருபவர்கள் அவர்கள்..
அப்படிப்பட்ட சில்க், பிரேத பரிசோதனைக்கான சடலமாய் சென்னை அரசு மருத்துவமனையில் ஒரு ஓலைப்பாயில் சுருட்டி வைக்கப்பட்டிருந்தார் என போட்டோகிராபர் சொன்னதையும் அதை வைத்து செய்தியாக எழுதுவோம் என்றும் பின்னாளில் நினைத்துக்கூட நம்மால் பார்க்கமுடியவில்லை
சரி, விட்ட இடத்தில் தொடருவோம். மூன்றாம் பிறையில் கமலோடு ஆடிய பொன்மேனி உருகுதே, சகலகலாவல்லவனில், நேத்து ராத்திரியெம்மா, பாயும்புலியில் ரஜினியுடன் ஆடி மாசம் காத்தடிக்க போன்ற பாடல்கள் சில்க் எங்கே கொண்டுபோயின.
முன்னணி நடிகர்களாக இருந்தாலும் கூடுதல் வசூலுக்காக சில்க்குடன் ஒரு பாடலுக்காவது ஆடவேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டனர் என்பது தமிழ் சினிமாவின் விசித்திரம், இங்குமட்டுமல்ல, தென்னிந்திய திரைப்படங்கள் அத்தனையிலும் சில்க் ஆட்டம் பேயாட்டம் போட்டது.
உறங்கினால் சில்க்கோடு உறங்கவேண்டும், அல்லது உறங்கியவன் காலைத்தொட்டாவது கும்பிடவேண்டும் என்று இளவட்டங்கள் பேசும் அளவுக்கு சில்க் சுமிதாவின் கவர்ச்சி வீச்சு இருந்தது
அவரை வெறுத்தவர்கள் அப்பட்டமான செக்ஸ் நடிகை என்று பட்டம் கட்டிவிட்டார்கள். எழுதினார்கள். ஆனால் சில்க் எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஒரு எல்லையை வகுத்துக் கொண்டு ஆபாசத்தில் சிக்காமல் திரையில் பயணம் செய்தார்.
அதேபோல தன் சொந்த வாழ்க்கையில் அவர் காட்டிய தெளிவு, வியப்பின் பக்கங்களாக இன்றளவு உள்ளன.
12 வயதில் ஏழ்மைக்கு தாக்குபிடிக்க முடியாமல் நடிக்க வீட்டைவிட்டு ஓடிவந்தபோது அவரது குடும்பத்தி னர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுபற்றி பின்னர் சில்க்கிடம் கேட்டதற்கு, பணம், பங்களா வந்தபிறகு எல்லாம் சரியாயாகிவிட்டது ’’ என குடும்பத்தி னரின் நிஜ முகத்தை நாசூக்காய்தான் சொன்னார்..புகழ் கிடைந்ததும் வந்து சேர்ந்தவர் களை ,காழ்ப்புணர்ச்சிகாட்டி பொதுவெளியில் என்றைக்குமே சில்க் அவமானப்படுத்தவில்லை..
சிவாஜிபோன்ற மூத்த ஜாம்பவான்கள் வரும்போது ஷுட்டிங் ஸ்பாட்டில் கால்மேல்போட்டு அமர்திருக்கிறார்களாமே என்று கேட்டதற்கு அவர் பதற்றப்படவேயில்லை..
’’நான் சிறுவயதிலிருந்தே அப்படி கால்மேல் கால் போட்டே அமர்ந்து வளர்ந்தவள். செட்டில் ஆடி வந்து விட்டு டயர்டாக அமரும்போது எனக்கு அதுதான் வசதி..அதையெல்லாம் விட்டுவிட்டுபோலியாக மரியாதை கொடுக்க நான் தயாரில்லை’’ என்று பட்டென்று சொன்னவர் சில்க்.
முதலமைச்சர் எம்ஜிஆர் தலைமையில் திடீர் விழா என்றபோதும், ஏற்கனவே தெலுங்கு சூப்பர் ஸ்டாருக்கு கொடுத்த கால்ஷீட்டை கேன்சல் செய்தால், அதனை சமன் செய்ய சிலமாதங்களாகும் என்றும் அதனால் தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டம் என்றும் தெரியவந்ததால், முதலமைச்சரின் விழாவையே ஒதுக்கிவிட்டு ஷுட்டிங்கிற்கு போன துணிச்சல்கார பெண்..
சாவித்திரி, சுஜாதா மாதிரி நடிக்க ஆசைப்பட்ட வருக்கு கிடைத்தது கவர்ச்சி வேடங்கள்தான்.. ஒரு கட்டத்தில டாப் ஸ்டார் என்ற அந்தஸ்தை எட்டி, தயாரிப்பாளர்கள் அவர் காலடியில் தவமிருந்த போதும், தனக்கு இந்த வெயிட்டான வேடம்தான் வேண்டும் என்று யாரையும் அவர் நிர்பந்தித்தது கிடையாது.
தன்னை நம்பி எதை எதிர்பார்த்து தயாரிப்பாளர்கள் வருகிறார்கள் என்பதும் அவர்களிடம் தனக்குள்ள செல்வாக்கை காட்டினால் குழப்பம் மிஞ்சி தர்ம சங்கடங்கள்தான் நேரும் என்று சொன்னவர் சில்க்
200 படங்கள் நடித்த நிலையில் தயாரிப்பாளர்களுக்கு கால்ஷீட் குளறுபடி செய்யும் நடிகை சில்க் என்று குற்றம்சாட்டி பத்திரிகைகள் எழுதியபோது, ‘’நீங்கள் சொல்வது உண்மையென்றால், ஏன் தயாரிப்பாளர்கள் என்னை தொடர்ந்து நாடிவருகிறார்கள்’’? என பத்திரிகை உலகத்தையே திருப்பி கேட்டவர்.
அலைகள் ஓய்வதில்லை பட ரோல்தான் அவருக்கு மிகவும் பிடித்தது என்பதால் சில்க்கின் முதல் பேவரைட் இயக்குநர் பாரதிராஜாதான். அடுத்து பாலுமகேந்திரா..
சில்க் ஸ்மிதாவின் மனம் கவர்ந்த ஒரே நடிகர்,, வேறு யாரு நம்ம உலக நாயகன்தான்.
சரியான நேரத்தில் திருமணமாகி செட்டில் ஆவேன் என்று சொல்லிக்கொண்டுவந்த சில்க் ஸ்மிதாவுக்கு.. கடைசியில் நிரந்தர வாழ்வு தந்தது தற்கொலைதான்..
சில்க்கின் வாழ்வில்தான் எத்தனையெத்தனை மனிதர்கள்,, எத்தனையெத்தனை ஏமாற்றங்கள்..மர்மச்சாவு கண்ட மர்லின் மன்றோபோல்
என் மனம் என்னவென்று
என்னையன்றி யாருக்கு தெரியும்?
கண்ணிலே என்ன உண்டு
கண்கள்தான் அறியும்..
அவள் ஒரு தொடர்கதை படத்தின்
கண்ணதாசன் பாடல் வரிகள்தான் ஞாபகத்திற்கு வருகின்றன..
#HBD rerelease
Ezhumalai Venkatesan

கலைவானர் என்.எஸ்.கிருஷ்ணர்

 



கலைவானர் என்.எஸ்.கிருஷ்ணர்






நகைச்சுவை நடிகர்கள் என்பவர்கள் திரையில் சும்மா வந்துவிட்டுப்போகிறவர்கள் என்கிற எண்ணத்தை உடைத்து நொறுக்கிய திரையுலகப்போராளி அவர்.

நாற்பத்தி ஒன்பது ஆண்டுகள் வாழ்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களின் மூலம் மக்களை சீர்படுத்த முயன்றவர்.
டென்னிஸ் பால் பொறுக்கிப்போட்டும்,கடையில் பொட்டலம் மடித்தும் வாழ்க்கையை ஓட்டிய அவர் நாடக கம்பெனியில் நடிப்பவர்களுக்கு கலர் சோடா வாங்கித்தந்து நடிப்புலகுக்குள் நுழைந்தார் என்பதை நீங்கள் நம்பத்தான் வேண்டும்.
நகைச்சுவை நடிகர்களுக்கு என்று தனி ட்ராக் என்பதை முதன் முதலில் தொடங்கி வைத்தவர் அதையும் தன் முதல் படத்திலேயே தானே எழுதிக்கொண்டார். அப்படம் சதி லீலாவதி.
அவர் தான் கலைவானர் என்.எஸ்.கிருஷ்ணர்.
பூனா சென்ற பொழுது மதுரம் அவர்களின் நகையை விற்று பணமில்லாமல் இருந்த படக்குழுவினரின் பசியை தீர்த்த என்.எஸ்.கேவுக்கும் அவருக்கும் காதல் பூத்தது. முதல் திருமணத்தை மறைத்துவிட்டார் கலைவாணர். பின் அதைப்பற்றி கேட்டதும் ,”அவனவன் ஆயிரம் பொய் சொல்றான் நான் ஒரு பொய் சொல்லித்தானே கல்யாணம் பண்ணினேன் !”
திருடன் ஒருவன் வீட்டுக்கு வந்து திருட முயன்ற பொழுது மதுரம் சத்தம் போட அவனுக்கு சோறு போட்டு "இவன் என் நாடக கம்பெனி ஆள் !"என்றவர் என்.எஸ்.கே.
இட்லி கிட்லி நந்தனார் கிந்தனார் என்று நக்கல் அடிக்கும் பாணியை அவரே துவங்கி வைத்தார்.

சீர்திருத்த கருத்துக்களை படங்களில் இயல்பாக கொண்டு சேர்த்தார் அவர். தன்னுடைய நிலம் முழுவதையும் ஊர் மக்களுக்குப் பொதுவாக்கி, கூட்டுஉழைப்பால் கிடைக்கும் பலனை ஊர் மக்கள் ஒற்றுமையாக பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நல்லத்தம்பி படத்தில் வலியுறுத்தினார். தீண்டாமை மற்றும் மதுவை எதிர்த்தும் அவர் குரல் கொடுத்தார். கிந்தனார் நாடகத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வி கற்க வேண்டும் என்று குரல் கொடுத்தார்.
இது எதுவும் அறிவுரை போல இருக்காது என்பது தான் கலைவாணரின் முத்திரைக்கு சான்று
அண்ணா காஞ்சியில் தேர்தலில் போட்டியிட்ட பொழுது அவரை எதிர்த்து நின்ற மருத்துவரைப்புகழ்ந்து நெடுநேரம் பேசி விட்டு,”இப்படிப்பட்ட மருத்துவரை நீங்கள் சட்டசபைக்கு அனுப்பிவிட்டால் யார் உங்களுக்கு சேவை செய்வார்கள் ? அண்ணாவுக்கு ஓட்டுப்போடுங்கள் !” என்று கூறி இருக்கிறார்.
என்.எஸ்.கே தான் எடுத்த படத்தில் எம்.ஆர்.ராதாவை வில்லனாக போடாமல் போய் விடவே அவரை கொல்ல துப்பாக்கியை தயார் செய்துகொண்டிருந்த விஷயம் தெரிந்து என்.எஸ்.கே நேரிலே வந்து ,”ராதா நீ எவ்வளவு பெரிய நடிகன் ;உன்னை நான் இப்படி நடி அப்படி நடி என அதட்டி வேலை வாங்க முடியுமா ?அதான் போடலை என்றதும் அவரிடம் துப்பாக்கியை நீட்டி தன்னைச்சுட சொன்னார் ராதா .
லக்ஷ்மிகாந்தன் வழக்கில் சிறை சென்று மீண்ட பின் நடித்த படங்களிலும் மின்னினார். அதே சமயம் தியாகராஜ பாகவதரால் அந்த மாயத்தை நிகழ்த்த முடியவில்லை.
சிறை மீண்ட பின் அவருக்கு கலைவாணர் பட்டத்தை ஸ்ரீநடராஜா கல்விக் கழக இலவச வாசகர் சாலையில் பம்மல் சம்பந்த முதலியார் வழங்கினார்
என்.எஸ்.கே கொடுத்து கொடுத்தே கரைந்து போனவர்.
ஹனுமந்த் ராவ் எனும் வருமான வரித்துறை அதிகாரி இவரின் கணக்காளரிடம் “என்ன இது எல்லா இடத்திலும் தர்மம் தர்மம் அப்படின்னு எழுதி இருக்கு ?” என்று கேட்ட பொழுது அவர் சொன்னபடியே தன்னை யாரென்று காட்டிக்கொள்ளாமல் கலைவாணரை சந்தித்து தன் மகள் திருமணத்துக்கு பணம் வேண்டும் என்று கேட்க உடனே பணத்தை எடுத்து கொடுத்திருக்கிறார் கலைவாணர். “நீங்கள் கிருஷ்ணன் இல்லை கர்ணன் !” என்றார் அதிகாரி.
"நாங்கள் கொள்ளை அடிக்கிறோம் என்பதும் எங்களால் நன்மையை விடக் கேடே அதிகம் என்பதும், எங்களைத் திருத்த வேண்டும் என்பதே சரியான அவசியமானதுமாகும். இதில் என்ன தப்பு ? "என்று சினிமாவால் மக்கள் பாழ்படுகிறார்கள் என்கிற பெரியாரின் விமர்சனத்துக்கு பதில் சொன்னார்.
அக்ரகாரத்து அதிசய மனிதர் வ.ரா. பெரியார் வரிசையில் கலைவாணர் என்று எழுதி விட பெரியாரிடம் இது குறித்து கருத்து கேட்டார்கள் . ” தனக்கே உரிய வகையில் நானும் சீர்திருத்தக் கருத்துக்களைச் சொல்கிறேன்; கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனும் சொல்றாரு. நான் சொல்லும்போது அழுகிய முட்டையையும் நாற்காலியையும் வீசி எறிகிறார்கள். ஜனங்க, இதையே கலைவாணர் சொன்னா காசு குடுத்துக் கேட்டுக் கை தட்டி ரசித்துச் சிரிச்சுட்டு அதை ஒத்துக்கிட்டுப் போறாங்க. அந்த வகையிலே என்னைவிட அவரு உசந்துட்டாரு ”
என்றது வரலாறு.
ஒன்றுமே இல்லாமல் மருத்துவமனையில் இறப்பதற்கு முன்னர் கலைவாணர் கடைசி சொத்தான வெள்ளி கூஜாவையும் தனது திருமணம் என்று சொன்ன தொழிலாளிக்கு தந்துவிட்டுத்தான் அவரின் மூச்சு ஓய்ந்தது.
தன் மனைவி மதுரத்திடம் இப்படிச்சொன்னார் ,"நான் ஐம்பது வயசுக்குள்ள இறந்துடணும் மதுரம். ஒரு கலைஞன் தன்னோட கலை வறண்டு போறதுக்கு முன்னாடி இறந்துடணும் !" என்று
சொன்னபடியே நாற்பத்தி ஒன்பது வயதில் மரணமடைந்தார்.

கண்கள்

 

 கண்கள்.*- 1). கண்கள் வலப்புறமாக பார்த்தால் பொய் சொல்கிறது.

2). கண்கள் இடப்புறமாக பார்த்தால் உண்மை பேசுகிறது.

3). கண்கள் மேலே பார்த்தால் ஆளுமை செய்கிறது.

4). கண்கள் கீழே பார்த்தால் அடிபணிகிறது.

5). கண்கள் விரிந்தால் ஆச்சர்யப்படுகிறது,

ஆசைப்படுகிறது.

6). கண்கள் சுருங்கினால் சந்தேகப்படுகிறது. 

7). கண்கள் கூர்ந்து பார்த்தால் விரும்புகிறது.

8). கண்கள் வேறு எங்கோ பார்த்தால் தவிர்க்கிறது.

9). கண்கள் வலமும் இடமும் மாறி மாறி ஓடினால் பதட்டத்தில் உள்ளது.

10). கண்கள் படபடத்தால் விரும்புகிறது, வெட்கப்படுகிறது.

11). கண்கள் மூக்கைப்பார்த்தால் கோபப்படுகிறது.

12). கண்கள் எதை பார்க்கிறதோ அதை விரும்புகிறது.

13). கண்கள் கழுத்துக்கு கீழே பார்த்தால் காமம்.

14). கண்கள் கண்ணுக்குள் பார்த்தால் காதல்.

15). கண்கள் இடமாக கீழே பார்த்தால் தனக்குள் பேசிக்கொள்கிறது

16). கண்கள் இடமாக மேலே பார்த்தால் பழைய நினைவுகளை தேடுகிறது.

17). கண்கள் வலமாக கீழே பார்த்தால் விடை தெரியாமல் யோசிக்கிறது.

18). கண்கள் வலமாக மேலே பார்த்தால் பொய் சொல்ல யோசிக்கிறது.

19). கண்கள் உயர்ந்தும் தலை தாழ்ந்தும் இருந்தால்  எதையோ தேடுகிறது.

20). கண்கள் ஓரப்பார்வையில் அவ்வப்பொழுது பார்த்தால் விரும்புகிறது. 

21). கண்கள் மூடித்திறந்தால் உள்ளுக்குள் தேடுகிறது.

22). கண்களை கைகள் மறைத்தால் எதையோ மறைக்கிறது.

23). கண்களை கைகள் கசக்கினால் தஞ்சம் கேட்கிறது. 

24). கண்கள் மூடித்திறந்தால் வெறுக்கிறது.

25). கண் புருவங்கள் உயர்ந்தால் பேச விரும்புகிறது.

26). கண் புருவங்கள் சுருங்கினால் பேச விருப்பமில்லை. 

27). கண்களும் புருவங்களும் சுருங்கியிருந்தால் கோபம்.

28). ஒரு கண் திறந்திருந்தால் சேட்டை.

29). இரண்டு கண்களும் மூடி இருந்தால் தூக்கம்.

30). கண்கள் திறக்கவில்லையென்றால் மரணம்.

Wednesday 2 December 2020

டால்மியாபுரம் ..

 டால்மியாபுரம் .





\x


பாளையங்கோட்டை சிறையினிலே பாம்புகள் பல்லிகள் நடுவினிலே என பாடல் பிறந்த கதை.!!

அந்த திருச்சி மாவட்டம் அரியலூர் பகுதி கல்லகுடி ஏரியா சுண்ணாம்பு பாறைகள் நிறைந்தபகுதி என்பதால் அங்கு சிமென்ட் ஆலை வந்தது, டால்மியா எனும் கம்பெனி ஆலை தொடங்கியது, வடக்கே ஜாம்ஷெட்பூர் நகர் ஜாம்ஷெட்ஜி டாட்டா பெயரால் உருவானது போல டால்மியா நகரும் உருவாயிற்று
அது 1930களிலே உருவான திட்டம், மெல்ல ஆரம்பித்து 1950களில் பெருந்திட்டமாக செயல்பட ஆரம்பித்தது, ஜாம்ஷெட்பூர் போல டால்மியாபுரம் உருவானது
அவ்வளவுதான் போர்முரசு கொட்டியது திமுக, தமிழன் மண்ணில் அன்னிய பெயரா என பொங்கிற்று, பெரும் போராட்டம் இந்தி எதிர்ப்பு என வெடித்தது. சிமென்ட் ஆலைக்கும் இந்திக்கும் என்ன தொடர்பு என்பதுதான் தெரியவில்லை
அப்பொழுது திமுக அடிக்கடி ரயிலை மறிப்பதை கண்டு நான்சென்ஸ் என சொன்னார் நேரு, வசமாக அதை பிடித்த திமுக நேருவுக்கு நோசென்ஸ் என எதிர்ப்பு, ராஜாஜி குலகல்வி எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பு என மும்முனை போராட்டத்தை தொடங்கியது
கல்லகுடிக்கு கருணாநிதி அனுப்பபட்டார்
அந்த களம் கருணாநிதியிடம் ஒப்படைக்கபட்டது, கண்ணதாசனும் கலந்துகொண்டிருந்தார். டால்மியாபுரம் எனும் பெயர்பலகையில் கல்லகுடி என போஸ்டரை ஒட்டிவிட்டு தமிழ் வாழ்க என வந்துவிடுவதுதான் போராட்ட நோக்கம், அண்ணா அதைத்தான் சொல்லியிருந்தார்
கலைஞர் கிளம்பும்பொழுதே ரத்தம் தெறிக்க பேசினார் "தாயிடம் விடைபெற்றேன், மனைவியிடம் விடைபெற்றேன்,குழந்தையினை முத்தமிட்டேன்.,, தமிழே உன்னிடம் எப்படி விடைபெறுவேன்" என கடும் முழக்கம்
வெறியேறிய கூட்டத்துடன் புறப்பட்டார், போஸ்டர் ஒட்டபட்டது அவரை கைது செய்யவில்லை அவர் உடனே நிலையத்துக்குள் நுழைய முயன்றார், தன்னை கைது செய்யவில்லை என்ற வருத்தம் அவருக்கு
போலிசார் இது அனுமதிவாங்கிய ஊர்வலம் அதனால் நிலையத்துக்கு வெளியே கைது செய்ய முடியாது, உள்ளே உங்களுக்கு அனுமதி இல்லை என்றது.
உடனே சட்டென உள்ளே புகுந்தார், கைது நடக்கும் என எதிர்பார்த்தார் அப்பொழுதும் காவல்துறை தயங்கியது
இன்னுமா கைது இல்லை? என பொங்கியவர் தண்டவாளத்தில் படுத்து அழிச்சாட்டியம் செய்தார், அது மெட்ரொ ரயில் போல மின்சார தண்டவாளம் என்றால் சென்றிருப்பாரா என்றால் இல்லை
வேறுவழியின்றி காவலர் அவரை அப்புறபடுத்த கலவரம் வெடித்து துப்பாக்கி சூடு நடந்து சிலர் செத்தனர், பலர் காயம், கண்ணதாசனுக்கு முட்டி பெயர்ந்தது
அண்ணாவினை நோக்கி பரிதாபமாக பார்த்தார் காமராஜர், அண்ணாவிடம் இதற்கு பதில் இல்லை தலை குனிந்தார், ஆம் இது அவர் எதிர்பாராதது
3 தமிழ்குடும்பம் சோகத்தில் மூழ்க, ஏகபட்ட தமிழ்குடும்பம் நீதிமன்ற வாசலில் காத்திருக்க, கண்ணதாசன் உட்பட்ட தமிழர் சிறையில் இருக்க தமிழை மீட்ட மகிழ்ச்சியில் இருந்தார் கருணாநிதி
இதுதான் கல்லகுடி போராட்டம்
அது முடிந்து சிறையில் கருணாநிதி இருந்தபொழுது தன் வழக்கமான பாணியான தானே கேள்வி கேட்டு தானே பதிலும் எழுதிகொண்டார்
"ஒருவேளை ரயில் ஏறியிருந்தால் என்னாயிருக்கும்?" என அவரே கேள்வி கேட்டு, "ரயில் ஏறி நான் சிதைத்து செத்திருந்தால் என் ரத்தத்தை எடுத்து கல்லகுடி வாழ்க, தமிழ்வாழ்க என எழுதியிருப்பார் அண்ணா..." என அவரே பதிலும் சொல்லிகொண்டார்
"நான் என்ன ரத்தகாட்டேரியா?" என திகைத்து நின்றார் அந்த பெயருக்கு அறிஞர்..
1965 இந்தி எதிர்ப்பு போரட்டாம் கடுமையானது , 100 பேர் செத்தனர் பல நூறு பேர் காயமடைந்தனர், துணைராணுவம் வந்து நிலமையினை அடக்கியது
கல்லூரிமாணவர்களை தூண்டிவிட்டு அந்த பாதகத்தை செய்தது திமுக, கலவர முடிவில் பாளை சிறையில் அடைக்கபட்டார் கருணாநிதி, காரணம் திமுகவுக்கு செல்வாக்கு இல்லா பகுதி அது
கருணாநிதி தேர்ந்த சாமர்த்தியசாலி நிச்சயம் தான் கைதுசெய்யபட வேண்டும், கைது செய்யபட்டால் என்னென செய்யவேண்டும் என வகுப்பெடுத்துவிட்டே காட்சிகளை நடத்தினார்
எல்லாவற்றையும் அரசியலாக்கி தனக்கு லாபம் பார்ப்பவர் அவர், அழிவுகள் பற்றியெல்லாம் அவருக்கு கவலையில்லை
அவர் உள்ளே சென்றதும் அடிபொடிகள் களமிறங்கின..
ஒன்று அய்யய்யோ பாம்பு நடுவில் கலைஞர் என கொதித்தது, ஒரு கோஷ்டி பஸ் எரிப்பு, மறியல் என கிளம்பியது தமிழகம் அல்லோலபட்டது
அஞ்சிய அன்றைய முதல்வர் பக்தவச்சலம் வெளியே விட சொன்னார், அதுவும் மிக சில நாட்களிலே வெளிவந்தார் கருணாநிதி
அடுத்தநாள் பிரபலமில்லா பத்திரிகைகள் இப்படி செய்திவெளியிட்டன‌
"கருணாநிதி பெரும் அறிவாளி, மாபெரும் ஆற்றல்மிகுந்தவர். அவர் சிறையில் இருப்பதை என் அரசு விரும்பாது என்பதால் விடுதலை செய்கின்றேன் என அறிவித்தார் பக்தவச்சலம்"
அப்படி பக்தவச்சலம் அப்படி ஒரு அறிவிப்பையும் செய்யவில்லை,
ஆனால் செய்தி தானாக சுற்றி அச்சேறி அவருக்கே வந்தது ,
ஆம் , ஒருபக்கம் அண்ணா ஒரு ஊர்வலம் நடத்த சொன்னால் ஊரையே கொழுத்திவிட்டு சிறையில் இருக்கின்றான் தம்பி என அதிர்ந்திருந்தார்
இன்னொரு பக்கம் தான் கலவரத்தை தடுக்க கருணாநிதியினை வெளியேவிட சொன்னால் இப்படி செய்திகள் வருகின்றதேன தலையில் கைவைத்தபடி அமர்ந்திருந்தார் பக்தவச்சலம்.
தன் கனபாடி கோஷ்டிகளுடன் "பாளையங்கோட்டை சிறையினிலே பாம்புகள் பல்லிகள் நடுவினிலே" என பாடல் ஒலித்தபடி அண்ணாவினை நோக்கி ஆசீவாங்க சென்றுகொண்டிருந்தார் கருணாநிதி
பாம்புகள் பல்லிகள் நடுவினிலே என பாடல் பிறந்த கதை இதுதான்..
(டால்மியாபுரம் என சிமென்ட் ஆலை குடியிருப்புக்கு கொடிபிடித்து பலரை போராட்டம் என கொன்ற கருணாநிதியின் குடும்பம் இன்று எத்தனை சிமென்ட் ஆலைகளில் பிடியினை வைத்திருகின்றது என்பது தலைசுற்ற வைக்கும் விஷயம்
டால்மியா பெயரில் ஏன் நகரம் என்றனர், பின் அண்ணா நகர், கலைஞர் நகர் தமிழகமெல்லாம் வந்தது தெரியாததல்ல‌
இந்திக்காக 100 பேரை கொன்ற திமுக 1995க்கு பின் 15 வருடம் டெல்லியில் அமர்ந்து மற்றவர்கள் இந்தி பேசுவதை காதார கேட்டு ரசித்தது
இதெல்லாம் திராவிட புரட்சியன்றி வேறல்ல‌ )
நன்றி Stanley Rajan.
Image may contain: 1 person, standing and outdoor

ஓஷோ பாணியில் நித்யானந்தா...

 



ஓஷோ பாணியில் நித்யானந்தா...





அமெரிக்காவில் ஓஷோ செய்தது என்ன? -
ஒரு குட்டி ஃப்ளாஷ்பேக்!
ர.முகமது இல்யாஸ்
`ஓஷோ' என்றழைக்கப்பட்ட ரஜ்னீஷைப் போலவே, பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளானவர் நித்யானந்தா. தற்போது அவர், ரஜ்னீஷ் பாணியில் தனக்கென்று ஒரு `கம்யூன்' உருவாக்கி, அதைத் தனி நாடாக அறிவிக்க இருக்கிறார். அமெரிக்காவில் ரஜ்னீஷ் தனக்கென்று `கம்யூன்; உருவாக்கியபோது என்ன செய்தார்?
ரஜ்னீஷ்!
இருபதாம் நூற்றாண்டின் இறுதியில், மேற்கத்திய உலகைக் கலக்கிய இந்திய சாமியாரின் பெயர். தனது பிற்காலத்தில் `ஓஷோ' என்றழைக்கப்பட்ட ரஜ்னீஷ், தனது அமெரிக்க சீடர்களால் `பகவான்' எனறு அழைக்கப்பட்டார். தற்போது நித்யானந்தா, ஈக்வடார் நாட்டிற்குச் சொந்தமான தீவு ஒன்றை விலைகொடுத்து வாங்கியிருப்பதோடு, அதைத் தனி நாடாக அறிவிக்கப்போவதாகவும் தெரியவந்துள்ளது. தனது பேச்சுகளில் ஓஷோவை காப்பியடிப்பதாக நித்யானந்தா மீது குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில், தற்போது ஓஷோ பாணியில் தனக்கென்று தனியாக `கம்யூன்' ஒன்றை உருவாக்க இருக்கிறார் நித்யானந்தா. இந்த வாரத்தின், ஜூனியர் விகடன் இதழில் இதைப் பற்றிய கட்டுரையைப் படிக்கலாம்.
`ஓஷோ' என்று அழைக்கப்பட்ட ரஜ்னீஷ், அமெரிக்காவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியவர். ரஜ்னீஷின் சீடர்கள், அமெரிக்க அரசால் கிரிமினல் வழக்குகளில் கைதுசெய்யப்பட்டனர். சர்ச்சைகளின் முடிவில், ரஜ்னீஷ் அமெரிக்காவிலிருந்து நாடுகடத்தப்பட்டு, மீண்டும் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவரது உயிர் இந்தியாவில் பிரிந்தது.
அமெரிக்காவில் ரஜ்னீஷ் செய்தது என்ன?
அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்திலுள்ள சிறிய கிராமம், ஆன்டெலோப். அந்தச் சிறிய கிராமத்தின் மக்கள்தொகை, வெறும் 60 பேர் மட்டுமே. ஆன்டெலோப் அருகில் இருந்த பெரும் நிலப்பரப்பை விலைகொடுத்து வாங்கியது ரஜ்னீஷின் ஆசிரமம். 64,000 ஏக்கர் நிலம், ஏறத்தாழ 5.7 மில்லியன் டாலர்களுக்கு வாங்கப்பட்டது. இதன் தற்போதைய மதிப்பு, ஏறத்தாழ 8,000 கோடி ரூபாய்.அந்தப் பெரும் நிலப்பரப்பில், ரஜ்னீஷுக்காக ஆசிரமம் கட்டப்பட்டது. மேலும், சீடர்கள் தங்குவதற்கான இடம், தனியாக காவல்துறை, தீயணைப்புத் துறை, உணவகங்கள், மால்கள் முதலானவை கட்டப்பட்டன. வெறும் 60 பேர் மட்டுமே வாழ்ந்துகொண்டிருந்த ஆன்டெலோப் கிராமத்தில், ரஜ்னீஷ் சீடர்கள் படிப்படியாகக் குடியேறினர். இந்தக் குடியேற்றம், அந்தப் பகுதி மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. அந்த நிலப்பரப்பு `ரஜ்னீஷ்புரம்' என அறிவிக்கப்பட்டதோடு, சில நாள்களிலேயே தனது 7 ஆயிரம் சீடர்களோடு அங்கு குடியேறினார் ரஜ்னீஷ். தன் சீடர்களைச் சந்திக்க, 1980-களிலேயே, ரோல்ஸ் ராய்ஸ் காரில் தான் வருவார் `பகவான்' ரஜ்னீஷ்.
ஆன்டெலோப் கிராம மக்களின் பதற்றம் காலப்போக்கில் அதிகரிக்கத் தொடங்கியது. கிராம உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட ரஜ்னீஷின் சீடர்கள், `ஆன்டெலோப்' கிராமத்தின் பெயரை, `ரஜ்னீஷ்புரம்' என அதிகாரபூர்வமாக மாற்றினர். ஆன்டெலோப்பின் குடிமக்களின் வரிப்பணத்தில் `ரஜ்னீஷ்புரம்' அதிகாரபூர்வமாக உதயமானது. ஆன்டெலோப் கிராமத்தில் ரஜ்னீஷின் சீடர்கள் பல்வேறு கட்டுமானங்களைச் செய்தனர். உதாரணமாக, ரஜ்னீஷ் ஆசிரம நிலத்தில் ஒன்றரை கிலோமீட்டர் தொலைவுக்கு விமான ரன்வே ஒன்று அமைக்கப்பட்டது; கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு ஹிட்லரின் பெயர் சூட்டப்பட்டது.
ரஜ்னீஷ் ஆசிரமத்தின் நடவடிக்கைகளை ஒரேகான் மாகாணத்தின் பல்வேறு சிவில் அமைப்புகள் எதிர்க்கத் தொடங்கின. 1984-ம் ஆண்டு, ரஜ்னீஷ் ஆசிரமம் தங்கள் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள, தேர்தலில் வெற்றிபெறுவது மட்டுமே உதவும் என்ற முடிவுக்குவந்தனர். ரஜ்னீஷ்புரம் கிராமம் இருந்த வாஸ்கோ என்ற மண்டலத்தின் ஆட்சியாளர்களாக மாறுவது என்று தீர்மானம் செய்தபோதும், ரஜ்னீஷ் சீடர்களுக்கு யார் வாக்கு செலுத்துவார்கள் என்ற கேள்வி அவர்கள் முன் நின்றது. ஏனெனில், மொத்த வாஸ்கோவிலும் ரஜ்னீஷ் சீடர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் மிகக்குறைவு.
இதைச் சரிசெய்ய, சட்டவிரோத நடவடிக்கைகளில் இறங்கினர் ரஜ்னீஷ் சீடர்கள். இதை முன்னின்று நடத்தியவர், ரஜ்னீஷின் தனிச்செயலாளரும் முதன்மைச் சீடருமான மா அனந்த் ஷீலா. வாஸ்கோ மக்கள், தேர்தலில் வாக்கு செலுத்த வரக்கூடாது என முடிவுசெய்து திட்டம் தீட்டினர். அதன்படி, ரஜ்னீஷ் சீடர்கள் பொது மக்கள் பயன்படுத்தும் 10 ரெஸ்டாரன்ட்டுகளைத் தேர்ந்தெடுத்தனர். ஒவ்வொரு ரெஸ்டாரன்டாகச் சென்று, `சால்மோனெல்லா' எனப்படும் பாக்டீரியா நிரம்பிய திரவம் ஒன்றை உணவில் கலந்துவிட, மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். உயிர்ப்பலி எதுவும் இல்லையென்றபோதிலும், மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வழிந்தன.
ஒரு பக்கம், சால்மோனெல்லா தாக்குதல் நடந்துகொண்டிருக்க, மறுபக்கம் நாடு முழுவதும் வீடற்றவர்களைத் தேடிய ரஜ்னீஷ் சீடர்கள், `வீட்டைப் பகிர்வோம்' என்ற மனிதாபிமான நோக்கத்தில் திட்டம் அறிவித்து நாடு முழுவதும் ஏறத்தாழ 2,500 பேரைப் பேருந்தில் அழைத்துவந்தனர். வீடற்றவர்களுக்கு தங்குமிடம் அளிக்கும் திட்டமாக வெளியில் தெரிந்தாலும், இவர்களைப் பதிவுசெய்வதன் மூலம் தங்களுக்கான வாக்காளர்களை உருவாக்குவதே ரஜ்னீஷ் ஆசிரமத்தின் பிரதான நோக்கமாக இருந்தது.போலி வாக்காளர்கள் உருவாவதை அறிந்த அமெரிக்க அரசு, வாஸ்கோ பகுதிக்கு `எமர்ஜென்சி' அறிவித்து, தேர்தலைத் தடைசெய்தது. சால்மோனெல்லா விவகாரமும் போலி வாக்காளர் விவகாரமும் ஊடகங்களை ஈர்க்க, சர்ச்சை உருவானது. மா அனந்த் ஷீலாவும் அவரது கூட்டாளிகளும் தனி விமானம் ஒன்றில் அமெரிக்காவை விட்டு வெளியேறினர். ரஜ்னீஷ் ஊடகங்களை அழைத்து, தான் மிகவும் நம்பிய ஷீலா தனக்கு துரோகம் இழைத்துவிட்டதாகவும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாகவும் பேட்டியளித்தார்.
எனினும், ரஜ்னீஷுக்கு 4 லட்சம் அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்பட்டதோடு, இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். மேற்கு ஜெர்மனியில் இருந்த ஷீலா, அமெரிக்காவுக்கு நாடுகடத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். இந்தியா திரும்பிய ரஜ்னீஷ், சில நாள்களில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். தனது ஆன்மிக பாணியில் மாற்றங்களைப் புகுத்தியதோடு, தன் பெயரையும், `ஓஷோ' என்று மாற்றிக்கொண்டார்.
ரஜ்னீஷ், மா அனந்த் ஷீலா, அமெரிக்காவில் நிகழ்ந்த சர்ச்சைகள் ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்ட ஆவணப்படம் ஒன்றை சில ஆண்டுகள் முன்பு வெளியிட்டது `நெட்ஃப்ளிக்ஸ்' நிறுவனம். `Wild wild Country' என்ற தலைப்பில் வெளிவந்த அந்த ஆவணப்படம், ரஜ்னீஷ்புரத்தின் அன்றைய கால வீடியோக்களைக் கொண்டதோடு, மா அனந்த் ஷீலாவுடனான உரையாடலையும் கொண்டிருக்கிறது. இந்த ஆவணப்படம் பலரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
ரஜ்னீஷைப் போலவே, பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளானவர் நித்யானந்தா. ரஜ்னீஷ் ஆசிரமங்கள்மீது வைக்கப்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள், நித்யானந்தாவின் ஆசிரமங்கள் மீதும் உண்டு. தற்போது நித்யானந்தா, ரஜ்னீஷ் பாணியில் தனக்கென்று `கம்யூன்' உருவாக்கி, அதைத் தனி நாடாக அறிவிக்க இருக்கிறார் என்பது ரஜ்னீஷின் கால சர்ச்சைகளை மீண்டும் உருவாக்கவே வாய்ப்புகள் அதிகம்.
Anandan Brindha, Aman Tamilan and 10 others
1 Comment