Wednesday 2 December 2020

டால்மியாபுரம் ..

 டால்மியாபுரம் .





\x


பாளையங்கோட்டை சிறையினிலே பாம்புகள் பல்லிகள் நடுவினிலே என பாடல் பிறந்த கதை.!!

அந்த திருச்சி மாவட்டம் அரியலூர் பகுதி கல்லகுடி ஏரியா சுண்ணாம்பு பாறைகள் நிறைந்தபகுதி என்பதால் அங்கு சிமென்ட் ஆலை வந்தது, டால்மியா எனும் கம்பெனி ஆலை தொடங்கியது, வடக்கே ஜாம்ஷெட்பூர் நகர் ஜாம்ஷெட்ஜி டாட்டா பெயரால் உருவானது போல டால்மியா நகரும் உருவாயிற்று
அது 1930களிலே உருவான திட்டம், மெல்ல ஆரம்பித்து 1950களில் பெருந்திட்டமாக செயல்பட ஆரம்பித்தது, ஜாம்ஷெட்பூர் போல டால்மியாபுரம் உருவானது
அவ்வளவுதான் போர்முரசு கொட்டியது திமுக, தமிழன் மண்ணில் அன்னிய பெயரா என பொங்கிற்று, பெரும் போராட்டம் இந்தி எதிர்ப்பு என வெடித்தது. சிமென்ட் ஆலைக்கும் இந்திக்கும் என்ன தொடர்பு என்பதுதான் தெரியவில்லை
அப்பொழுது திமுக அடிக்கடி ரயிலை மறிப்பதை கண்டு நான்சென்ஸ் என சொன்னார் நேரு, வசமாக அதை பிடித்த திமுக நேருவுக்கு நோசென்ஸ் என எதிர்ப்பு, ராஜாஜி குலகல்வி எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பு என மும்முனை போராட்டத்தை தொடங்கியது
கல்லகுடிக்கு கருணாநிதி அனுப்பபட்டார்
அந்த களம் கருணாநிதியிடம் ஒப்படைக்கபட்டது, கண்ணதாசனும் கலந்துகொண்டிருந்தார். டால்மியாபுரம் எனும் பெயர்பலகையில் கல்லகுடி என போஸ்டரை ஒட்டிவிட்டு தமிழ் வாழ்க என வந்துவிடுவதுதான் போராட்ட நோக்கம், அண்ணா அதைத்தான் சொல்லியிருந்தார்
கலைஞர் கிளம்பும்பொழுதே ரத்தம் தெறிக்க பேசினார் "தாயிடம் விடைபெற்றேன், மனைவியிடம் விடைபெற்றேன்,குழந்தையினை முத்தமிட்டேன்.,, தமிழே உன்னிடம் எப்படி விடைபெறுவேன்" என கடும் முழக்கம்
வெறியேறிய கூட்டத்துடன் புறப்பட்டார், போஸ்டர் ஒட்டபட்டது அவரை கைது செய்யவில்லை அவர் உடனே நிலையத்துக்குள் நுழைய முயன்றார், தன்னை கைது செய்யவில்லை என்ற வருத்தம் அவருக்கு
போலிசார் இது அனுமதிவாங்கிய ஊர்வலம் அதனால் நிலையத்துக்கு வெளியே கைது செய்ய முடியாது, உள்ளே உங்களுக்கு அனுமதி இல்லை என்றது.
உடனே சட்டென உள்ளே புகுந்தார், கைது நடக்கும் என எதிர்பார்த்தார் அப்பொழுதும் காவல்துறை தயங்கியது
இன்னுமா கைது இல்லை? என பொங்கியவர் தண்டவாளத்தில் படுத்து அழிச்சாட்டியம் செய்தார், அது மெட்ரொ ரயில் போல மின்சார தண்டவாளம் என்றால் சென்றிருப்பாரா என்றால் இல்லை
வேறுவழியின்றி காவலர் அவரை அப்புறபடுத்த கலவரம் வெடித்து துப்பாக்கி சூடு நடந்து சிலர் செத்தனர், பலர் காயம், கண்ணதாசனுக்கு முட்டி பெயர்ந்தது
அண்ணாவினை நோக்கி பரிதாபமாக பார்த்தார் காமராஜர், அண்ணாவிடம் இதற்கு பதில் இல்லை தலை குனிந்தார், ஆம் இது அவர் எதிர்பாராதது
3 தமிழ்குடும்பம் சோகத்தில் மூழ்க, ஏகபட்ட தமிழ்குடும்பம் நீதிமன்ற வாசலில் காத்திருக்க, கண்ணதாசன் உட்பட்ட தமிழர் சிறையில் இருக்க தமிழை மீட்ட மகிழ்ச்சியில் இருந்தார் கருணாநிதி
இதுதான் கல்லகுடி போராட்டம்
அது முடிந்து சிறையில் கருணாநிதி இருந்தபொழுது தன் வழக்கமான பாணியான தானே கேள்வி கேட்டு தானே பதிலும் எழுதிகொண்டார்
"ஒருவேளை ரயில் ஏறியிருந்தால் என்னாயிருக்கும்?" என அவரே கேள்வி கேட்டு, "ரயில் ஏறி நான் சிதைத்து செத்திருந்தால் என் ரத்தத்தை எடுத்து கல்லகுடி வாழ்க, தமிழ்வாழ்க என எழுதியிருப்பார் அண்ணா..." என அவரே பதிலும் சொல்லிகொண்டார்
"நான் என்ன ரத்தகாட்டேரியா?" என திகைத்து நின்றார் அந்த பெயருக்கு அறிஞர்..
1965 இந்தி எதிர்ப்பு போரட்டாம் கடுமையானது , 100 பேர் செத்தனர் பல நூறு பேர் காயமடைந்தனர், துணைராணுவம் வந்து நிலமையினை அடக்கியது
கல்லூரிமாணவர்களை தூண்டிவிட்டு அந்த பாதகத்தை செய்தது திமுக, கலவர முடிவில் பாளை சிறையில் அடைக்கபட்டார் கருணாநிதி, காரணம் திமுகவுக்கு செல்வாக்கு இல்லா பகுதி அது
கருணாநிதி தேர்ந்த சாமர்த்தியசாலி நிச்சயம் தான் கைதுசெய்யபட வேண்டும், கைது செய்யபட்டால் என்னென செய்யவேண்டும் என வகுப்பெடுத்துவிட்டே காட்சிகளை நடத்தினார்
எல்லாவற்றையும் அரசியலாக்கி தனக்கு லாபம் பார்ப்பவர் அவர், அழிவுகள் பற்றியெல்லாம் அவருக்கு கவலையில்லை
அவர் உள்ளே சென்றதும் அடிபொடிகள் களமிறங்கின..
ஒன்று அய்யய்யோ பாம்பு நடுவில் கலைஞர் என கொதித்தது, ஒரு கோஷ்டி பஸ் எரிப்பு, மறியல் என கிளம்பியது தமிழகம் அல்லோலபட்டது
அஞ்சிய அன்றைய முதல்வர் பக்தவச்சலம் வெளியே விட சொன்னார், அதுவும் மிக சில நாட்களிலே வெளிவந்தார் கருணாநிதி
அடுத்தநாள் பிரபலமில்லா பத்திரிகைகள் இப்படி செய்திவெளியிட்டன‌
"கருணாநிதி பெரும் அறிவாளி, மாபெரும் ஆற்றல்மிகுந்தவர். அவர் சிறையில் இருப்பதை என் அரசு விரும்பாது என்பதால் விடுதலை செய்கின்றேன் என அறிவித்தார் பக்தவச்சலம்"
அப்படி பக்தவச்சலம் அப்படி ஒரு அறிவிப்பையும் செய்யவில்லை,
ஆனால் செய்தி தானாக சுற்றி அச்சேறி அவருக்கே வந்தது ,
ஆம் , ஒருபக்கம் அண்ணா ஒரு ஊர்வலம் நடத்த சொன்னால் ஊரையே கொழுத்திவிட்டு சிறையில் இருக்கின்றான் தம்பி என அதிர்ந்திருந்தார்
இன்னொரு பக்கம் தான் கலவரத்தை தடுக்க கருணாநிதியினை வெளியேவிட சொன்னால் இப்படி செய்திகள் வருகின்றதேன தலையில் கைவைத்தபடி அமர்ந்திருந்தார் பக்தவச்சலம்.
தன் கனபாடி கோஷ்டிகளுடன் "பாளையங்கோட்டை சிறையினிலே பாம்புகள் பல்லிகள் நடுவினிலே" என பாடல் ஒலித்தபடி அண்ணாவினை நோக்கி ஆசீவாங்க சென்றுகொண்டிருந்தார் கருணாநிதி
பாம்புகள் பல்லிகள் நடுவினிலே என பாடல் பிறந்த கதை இதுதான்..
(டால்மியாபுரம் என சிமென்ட் ஆலை குடியிருப்புக்கு கொடிபிடித்து பலரை போராட்டம் என கொன்ற கருணாநிதியின் குடும்பம் இன்று எத்தனை சிமென்ட் ஆலைகளில் பிடியினை வைத்திருகின்றது என்பது தலைசுற்ற வைக்கும் விஷயம்
டால்மியா பெயரில் ஏன் நகரம் என்றனர், பின் அண்ணா நகர், கலைஞர் நகர் தமிழகமெல்லாம் வந்தது தெரியாததல்ல‌
இந்திக்காக 100 பேரை கொன்ற திமுக 1995க்கு பின் 15 வருடம் டெல்லியில் அமர்ந்து மற்றவர்கள் இந்தி பேசுவதை காதார கேட்டு ரசித்தது
இதெல்லாம் திராவிட புரட்சியன்றி வேறல்ல‌ )
நன்றி Stanley Rajan.
Image may contain: 1 person, standing and outdoor

No comments:

Post a Comment