THE GREAT TRAIN ROBBERY OF GOLD 1855 MAY 22
THE GREAT TRAIN ROBBERY OF GOLD 1855 MAY 22 .ஓடும் ரயிலில் நடந்த தங்க கொள்ளை, 22 மே 1855 தமிழகத்தில் முதல் முறையாக ஓடும் ரயிலில் கொள்ளை நடந்துவிட்டதாம், ஊடகங்கள் பொங்குகின்றன, ஆனால் உலகில் என்ன நடந்திருக்கின்றது? உலகின் மிக பிரபலமான கொள்ளை இன்றுவரை இங்கிலாந்தில் நடந்த ஓடும் ரயிலில் நடந்த தங்க கொள்ளை, 22 மே 1855ல் நடந்த பிரமாண்ட கொள்ளை அதுஒரு கொள்ளை எப்படி அடிக்கபடவேண்டும் , எப்படி திட்டமிட வேண்டும் என்பதற்கு இன்றுவரை அகராதியாக திகழும் சம்பவம் அது. அதாவது ரயிலின் ஒரு பெட்டியில் தங்கம் கொண்டு செல்லபடும், ரயில் புறப்பட 5 நிமிடம் முன்னால்தான் காவலோடு ஏற்படும், சீல் வைக்கபட்டு ரயில் கிளம்பும், இறங்குமிடமும் கடும் காவல் ரயில் நிற்காது, ஒரே வீக்னஸ் பயணிகள் ரயிலின் ஒரு பெட்டியில் இது இணைக்கபட்டிருக்கும்அதன் லாக்கரில் 4 சாவிகள் வசதி உண்டு, பிரமாண்ட லாக்கர் அது, உருவாக்கவே 2 வருடம் ஆனது. உடைப்பதோ, தூக்குவதோ சாத்தியமே இல்லை.சாவிகள் இன்றி திறக்கமுடியாது, 4 சாவிகளும் ஒரே நேரத்தில் செலுத்தபடவேண்டும். ஒரு சேர 4 அதிகாரிகள் திறப்பார்கள், தங்கம் நிரப்பபட்டு சீல்...