BJP VS ADMK




BJP VS ADMK


நீங்கள் ராமன் பெயரை சொல்லிக் கொண்டு ரத யாத்திரை நடத்திக் கொண்டிருந்தபோது...
நாங்கள் கள்ளிப்பாலிடமிருந்து, பெண் குழந்தைகளை தொட்டில் குழந்தை திட்டங்கள் மூலம் காப்பாற்றியிருந்தோம்.
நீங்கள் மத கலவரத்தில் முனைப்பாய் இருந்தபோது....
நாங்கள் ஐடி பார்க்குகளையும் ஆட்டோமொபைல் தொழிற்சாலைகளையும் உருவாக்கியிருந்தோம்!
நீங்கள் மாட்டுக்கறி வைத்திருந்ததாக சொல்லி அங்கு அப்பாவிகளை கொலை செய்து கொண்டிருந்தபோது.....
இங்கு நாங்கள் அம்மா உணவகங்களை அமைத்து அனைவருக்கும் வயிறார உணவு பரிமாறியிருந்தோம்‌.
கோமியமே அருமருந்து, அதை வைத்து சகல நோய்களையும் தீர்க்க முடியும் என நீங்கள் பேசிக் கொண்டிருந்தபோது.....
இங்கு நாங்கள் மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக்கல்லூரி கட்டியிருந்தோம்!

நீங்கள் ஹஜ் மானியத்தை நிறுத்தியபோது.....
நாங்கள் ஹஜ் மானியத்தோடு சேர்த்து ஜெருசலேம் புனித பயணத்திற்கும், கைலாச யாத்திரைக்கும் மானியங்களை வழங்கியிருந்தோம்!
நீங்கள் வடக்கே பள்ளிக்கூடங்களை கோசாலைகளாக மாற்றிக் கொண்டிருந்தபோது.....
நாங்கள் எங்கள் மாணவச் செல்வங்களுக்கு மடிக்கணினிகளை கொடுத்திருந்தோம்!
இதுபோல் இன்னும் நிறைய பட்டியலிடலாம்
ஏனென்றால், நீங்கள் வேறு, நாங்கள் வேறு!
உங்கள் சித்தாந்தம் மனு நீதி,
எங்கள் சித்தாந்தமோ சமூக நீதி!
உங்களால் எப்போதும் ஒடுக்கப்பட்ட, எளிய மக்களின் பக்கம் நிற்கவே முடியாது.
அதுவரை நீங்கள் எந்த வேஷம் போட்டுக்கொண்டு எங்களிடம் வந்தாலும் #இந்த_தமிழ்_மண்_உங்களை_நம்பாது!

Comments

Popular posts from this blog

DACOITS OF CHAMBAL

PARAVAS OF TAMILNADU

MAHARANI SITADEVI OF BARODA the "Indian Wallis Simpson" INTERESTING LIFE STORY OF HER