Friday 14 August 2020

SUNIDHI CHAUHAN ,HINDI SINGER BORN 1983 AUGUST 14



SUNIDHI CHAUHAN ,HINDI SINGER 
BORN 1983 AUGUST 14



.சுனிதி சௌஹான் (Sunidhi chauhan, ஆகஸ்ட் 14, 1983) வணிக ரீதியான இந்தி மொழித் திரைப்படங்களில் பாடிவரும் முக்கிய பின்னணிப் பாடகர் ஆவார். சுனிதி ஷௌஹான் இந்தி, மராத்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், குஜராத்தி, அஸ்ஸாமி மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளில் 2,000 க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியிருக்கிறார். இவர் பதினான்கு முறை பிலிம்பேர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு அவற்றில் மூன்று முறை வென்றுள்ளார். மேலும் இரண்டு ஸ்டார் ஸ்க்ரீன் விருதுகளையும், இரண்டு ஐபா விருதுகளையும் மற்றும் ஒரு ஜீ சினி விருதையும் பெற்றுள்ளார்.சுனிதி சௌஹான் தம் திரைத்துறை பிரவேசத்தை சாஸ்த்ராவில் துவங்கினார்.
ஆரம்பகால வாழ்க்கை
சுனிதி ஷௌஹான் முதல் பாடலைத் தம் நான்காவது வயதில் பாடினார்.1996-ம் ஆண்டு "மெரி ஆவாஸ் சுனோ" என்கிற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தமது "ஐர க்ஹைர னது க்ஹைர" ஆல்பத்திற்காக வெற்றிபெற்றார். அது குழந்தைகளுக்கான ஆல்பமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதால் தன் அடையாளத்தை இழந்தது. இது பற்றி சுனிதி பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:


எனது முதல் பாடல் வெற்றியைத் தரவில்லை .மேற்கொண்டு பாடல்கள் பாட என் மனதைத் தயார்படுத்திக்கொண்டேன்

சுனிதி தம் முதல் பின்னணிப் பாடலை பாலிவுட் திரைப்படமான சாஸ்த்ரா-வில் பாடினார். தம் பத்தொன்பதாவது வயதிற்குள் 350 பாடல்களைப் பாடி முடித்திருந்தார்.

திருப்பமும்,பிற்காலத் தொழில்வாழ்க்கையும்
சுனிதி சௌஹான் தொழில்வாழ்வின் முதல் திருப்பம் மஸ்த் திரைப்படத்தில் "ருக்கி ருக்கி சி ஜிந்தகி" எனும் பாடலை பாடியதற்காக கிடைத்தது.விண்டோஸ் விஸ்டாவிற்காக சுனிதி சௌஹான் விஸ்டா பாடல் ஒன்றை பாடினார்.இப்பாடல் ஹிந்தி,ஆங்கிலம் என இரு மொழிகளில் தயாரானது. டிஸ்னி திரைப்படமான "ஹை ஸ்கூல் ம்யுசிகல்" எனும் திரைப்படத்தின் ஹிந்தி மொழி மாற்றத்தில் வனேசா ஆன் ஹுட்கன் பாடிய பாடலை பாடினார்.மேலும் அவர் ஆங்கிலப் பாடலான "ரீச் அவுட்"யும் பாடியிருக்கிறார். "Chhaliya" (Tashan), "Rock Mahi," "Lucky Boy," "Desi Girl" (Dostana), "Dance Pe Chance" (Rab Ne Bana Di Jodi), மற்றும் "Race Saanson Ki" (Race)(இந்த பாடலிற்காக "கேள்வினடோர் ஜிஆர்8! ப்லோ உமன் அவார்ட் 2009" வென்றார்.) ஆகிய பாடல்களால் 2008-ம் ஆண்டு சிறந்த ஆண்டாக கருதப்படுகிறது. இவரது உரத்த குரலால் இவர் "செவ்ரோலேட் GIMA (குளோபல் இந்தியன் மியூசிக் அவார்ட்ஸ்)" விருதினை சிறந்த நேரடி பெண் பாடகிக்காக பெற்றுள்ளார்.



ஏப்ரல் 2010 -ல் சௌஹான் இந்தியன் இடோல் 5 ல் ஒரு நடுவராக இருந்தார்.அனு மாலிக் மற்றும் சலீம் மெர்ச்சன்ட் ஆகியோர் மற்ற இரு நடுவர்களாவர்.மேலும் இந்தியன் இடோல் 6இலும் அவர் நடுவராக இருக்கிறார்.

சுனிதி சௌஹான் பிட்புல்,ஜான் லேடெந்து, கே'நான் மற்றும் அலிசியா கேய்ஸ் ஆகியோருடன் இணைந்து வெஸ்டேர்ன் யுனியன்-னின் உலக நலத்திற்கான நிதி திரட்டலுக்காக பாடியுள்ளார்.அவர் "கால் மீ" மற்றும் "வேலன்டைன்" ஆகிய இரு ஆங்கிலப் பாடல்களையும் பாடியுள்ளார்.அதற்கான பணத்தை மும்பையிலுள்ள உதவியற்ற பெண்களுக்கு அளித்துவிட்டார்.

திரைத்துறை
சுனிதி சௌஹான் அல்கா யாக்னிக் ,உதித் நாராயணன் மற்றும் சுக்விந்தர் சிங்க் (ஓம்காரா மற்றும் ஆஜா நச்சலே ஆகிய படங்களில்) ஆகியோருடன் இணைந்து பாடியுள்ளார்.அவர் பெரும்பாலும் சோனு நிகத்துடனே இணைந்து பாடியுள்ளார்.அவர் ஷ்ரேயா கோஷல்-க்கு போட்டியாளராக கருதப்படுகிறார்.பாகிஸ்தானி பாடகர் பாக்ஹிர் மெஹ்மூத்துடன் அவரின் ஆல்பம் மந்த்ராவிற்காக மெல்லிசை பாடல் ஒன்று பாடியுள்ளார்.மேலும் அவர் ஏந்ரிஃஉஎ இக்லேசியஸ்-உடன் இணைந்து "ஹார்ட்பீட் (இந்திய மிக்ஸ்)" எனும் பாடலையும் பாடியுள்ளார்.

அவர் ஜெய்தீப் சாஹ்னி, இர்ஷாத் கமில், குல்சார் , சமீர், பிரசூன் ஜோஷி, ச்வனாந்து கிர்கிரே, தி லேட் ஆனந்த் பாக்ஷி மற்றும் ஜாவேத் அக்தர் ஆகிய பாடலசிரியர்களுடனும்,வண்டேமடாராம் ஸ்ரீநிவாஸ், பப்பி லஹிரி, A. R. ரஹ்மான், இளையராஜா, யுவன், ஹிமேஷ் ரேஷம்மியா, அனு மாலிக், ஜடின் லலித், சங்கர்-இசான்-லாய், ப்ரிடம்,சக்ரபோர்ட்டி, ராஜேஷ் ரோஷன், நதீம்-சிரவண், ஆனந்த்-மிலிந்த், விஷால்-ஷேக்கார், M. M. கீரவாணி ஆகிய இசையமைப்பாளர்களுடனும் பணியாற்றியுள்ளார்.

சுனிதி சௌஹான் ஹிந்தி திரைத்துறையிலுள்ள முன்னணி நடிகைகளுக்கு பின்னணி குரல் கொடுக்கும் பாடகிகளுள் முக்கியமானவராவார்.அவர் மாதுரி தீட்சித், ஐஸ்வர்யா ராய்,பிரீத்தி சிந்தா, ராணி முகர்ஜி, கரீனா கபூர், பிபாசா பாசு, பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே, கொன்கொனா சென் ஷர்மா ஆகியோருக்கும் மற்றும் பலருக்கும் பின்னணி குரல் கொடுத்துள்ளார்.மேலும் அவர் முன்னாள் நடிகைகளான ரேகா ஆகியோரின் குரல்களுக்காகவும் பாடியுள்ளார்.அவரின் பின்னணி குரல் இருபெரும் முன்னணி நடிகைகளான கஜோல்க்காக பானா படத்திலும்,மாதுரி தீட்சித்க்காக ஆஜா நச்சலே படத்திலும் சிறப்பானதாக கருதப்படுகிறது.

2011 ம் ஆண்டு சுனிதி சௌஹான் உலக அளவிலான பாப் பாடல்கள் பாடும் முதல் இந்திய பெண்மணி எனும் சிறப்பை பெற்றார்.

சிறப்பு தோற்றம்

சுனிதி ஷௌஹான் மிஸ் இந்தியா போட்டியின் போது எடுக்கப்பட்டப் படம்
அக்டோபர் 2008 ம் ஆண்டு சுனிதி ஷௌஹான் ஸ்டார் வாய்ஸ் ஆப் இந்தியா நடத்திய பாடல் போட்டியில் இசையமைப்பாளர் அஷு துருவ் உடன் இணைந்து அவர்களின் படமான துரோணாவை ப்ரொமோட் செய்வதற்காக தோன்றினார். சுனிதி ஷௌஹான் இந்தியா ரேடியோ சிட்டி 91.1 பிம்பலையின் நியூ மார்னிங் ஷோ, ம்யுசிகல்-இ-அசாம்-க்காக சிறப்பு ஆர்.ஜேவாக பங்கேற்று குனால் கஞ்சவாலா, தலேர் மேஹெண்டி, சுக்விந்தர் , அட்னன் சமி மற்றும் குல்சார் ஆகியோரின் விருப்பங்களைப் பற்றி உரையாடினார்.

சுனிதி ஷௌஹான் பெமினா மிஸ் இந்தியா 2011 போட்டி மற்றும் X-பெக்டர் இந்தியாவில் தம் பாடலான "ஹார்ட்பீட்"-ஐ உலக அளவிலான பாப் ஸ்டார் ஏந்ரிஃஉஎ இக்லேசியசின் ஆல்பமான ஐபோரியாவில் ப்ரொமோட் செய்வதற்காக மேடையேற்றம் நடத்தியுள்ளார்.

தனிவாழ்க்கை
சுனிதி ஷௌஹான் டெல்லியில் பிறந்தார்.அவரது தந்தை ஒரு நாடக கலைஞராதலால் அவரை இளம் வயதிலேயே இசைத்துறையில் சேர்த்துவிட்டார்.ஷௌஹானுக்கு சுநேஹா என்றொரு தங்கை உண்டு.

சுனிதி ஷௌஹான் "இன்றைய தினத்தின் மிக சிறந்த பாடகர்" என தம்மை நம்புவார்.தம் வெற்றிக்கு காரணம் தம் பெற்றோர்கள் மற்றும் துணை பாடகர் சோனு நிகம் என குறிப்பிடுகிறார்.சத்மா திரைப்படம்,ஜிம்னாஸ்டிக்ஸ் மற்றும் கிரிக்கெட் விளையாட்டுகள்,நடிகர் அக்ஷய் கன்னா,நடிகை மாதுரி தீட்சித் ஆகியவை அவரது விருப்பத் தேர்வுகளாக உள்ளன.அவர் மரியா கரே மற்றும் மைக்கல் ஜாக்சன் ஆகியோரை தம் முன்மாதிரிகளாக குறிப்பிடுகிறார்.அவர்களை போல் உலக புகழ் பெறுவதே ஷௌஹானின் லட்சியமாகும்.

சுனிதி ஷௌஹான் திரைத்துறையில் இடம்பெறுவதற்காக தம் எடையை 12 கிலோ வரை குறைத்தார்.ஒரு பேட்டியின்போது தாம் பாலிவுட் நடிகையாவது ஓர் இனிய கனவு என்று குறிப்பிட்டுள்ளார். இது பற்றி அவர் கூறியது:

எனக்கு நடிப்பதற்காக பல வாய்ப்புகள் வருகின்றன ஆனால் நான் பதட்டப்படவில்லை.என் ஆசைக்காக ஓரிரண்டு படங்கள் நடித்தால் போதும்.பாடுவதே என் வாழ்க்கை இன்னும் சிறப்பாக பாடுவதே என் குறிக்கோள்.

2002 -ம் ஆண்டில் ஷௌஹான் பாபி கான் என்பவரை மணந்து கொண்டார்.ஆனால் அந்த ஜோடி பிரிவுற்றது.ஏப்ரல் 27, 2012 ல் சுனிதி ஷௌஹான் தம் பால்ய நண்பரும்,இசையமைப்பாளருமான ஹிதேஷ் சோநிக்கை மணந்தார்.இத்திருமணத்திற்கு சக பாடகர்களான ஆஷா போஸ்லே, கவிதா கிருஷ்ணமுர்த்தி,ஸ்மிதா தாகேரே, அல்கா யாக்னிக், கொன்கொனா சென் ஷர்மா ஆகியோர் வந்திருந்தனர்.




Sunidhi Chauhan (pronounced [sʊnɪd̪iː tʃʰoːhən]; born 14 August 1983) is an Indian playback singer. Born in Delhi, she began performing in local gatherings at the age of 4 and made her career debut at the age of 12, with the film Shastra (1996). During the year, she won the first singing reality show titled Meri Awaz Suno and rose to prominence after recording "Ruki Ruki Si Zindagi" from Mast (1999). It won her Filmfare RD Burman Award for New Music Talent and was nominated for the Best Female Playback Singer.

Her second breakthrough was released in 2000, with the song "Mehboob Mere" from Fiza, for which she received another Filmfare nomination. Through her career, she performed mostly item songs and was described by the media as the "queen of item songs". Chauhan received her third Filmfare nomination with the song "Dhoom Machale" from Dhoom (2004) followed by two more nominations during the next year for "Kaisi Paheli" and "Deedar De" from Parineeta and Dus (2005)

In 2006, she was bestowed with her first Filmfare award for her rendition of the song "Beedi" from Omkara and further two nominations for "Soniye" from Aksar and "Aashiqui Main" from 36 China Town. The following year, she recorded the title song of Aaja Nachle (2007) and "Sajnaaji Vaari", both critically and commercially well received. Chauhan received her twelfth Filmfare nomination with "Chor Bazaari" of Love Aaj Kal (2009) preceded by "Dance Pe Chance" from Rab Ne Bana Di Jodi (2008). In 2010, she received her second Filmfare award with the item song "Sheila Ki Jawani" (2010) and was nominated for international styled carnival song "Udi" from Guzaarish (2010). The year marked her International singing debut, where she was featured in an alternate version of the song "Heartbeat" by Enrique Iglesias.
Apart from playback singing, Chauhan has appeared as a judge on several television reality shows and she also appears in music videos. Besides her career in music, she has also been involved in various charities and social causes. She has appeared four times in Forbes' Celebrity 100 of India (2012–2015).

No comments:

Post a Comment