ACTRESS PRATHIYUSHA RAPED AND MURDERED BY HER LOVER AND HIS ASSOCIATES




ACTRESS PRATHIYUSHA RAPED AND MURDERED BY HER LOVER AND HIS ASSOCIATES

நடிகை பிரதியுஷா பலாத்காரம் செய்து கொலை : 15 ஆண்டுக்கு பின் தாய் புகார்

.பிரதியுஷா தற்கொலை செய்யவில்லை. அவளை பலாத்காரம் செய்து கொலை செய்துவிட்டனர் என்று நடிகை பிரதியுஷாவின் அம்மா திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.

தமிழில் ‘மனுநீதி’, ‘தவசி’, ‘சவுண்ட் பார்ட்டி’ என சில படங்களில் ஹீரோயினாக நடித்தவர், பிரதியுஷா. நடிகை பிரதியுஷா தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் கடந்த 2002ம் ஆண்டு தன் காதலருடன் தற்கொலை செய்துகொண்டார். ஆனால் உயிருக்குப் போராடிய காதலன் பிழைத்துவிட்டார். இந்த வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் பிரதியுஷாவின் அம்மா ஹைதராபாத்தில் பேட்டியளித்துள்ளார்.

அதில் ‘‘என் மகள் தற்கொலை செய்யவில்லை. விஷமும் குடிக்கவில்லை. அவளை நண்பர்கள் பாலியல் பலாத்காரம் செய்து கொன்றுவிட்டு அவளின் வாயில் விஷத்தை தடவி நாடகத்தை நடத்தியுள்ளனர். அதற்கான காயங்கள், நகக் கீரல்கள் அவளின் உடல் முழுவதும் காணப்பட்டது. ஆனால் என் மகள் தற்கொலை செய்துகொண்டாள் என வழக்கை முடித்துவிடுவார்கள். குற்றவாளிகள் விடுதலையாவார்கள். ஆண்டவன் அவர்களை தண்டிப்பான். 15 வருடமாக தீர்ப்பு கிடைக்கும் என போராடிவரும் எனக்கு யாருடைய ஆதரவும் இல்லை’’ என பிரதியுஷாவின் அம்மா கதறி அழுதுள்ளார்.


சென்னை : தமிழில் முரளியுடன் ‘மனுநீதி', பிரபுவுடன் ‘சூப்பர் குடும்பம்', விஜயகாந்த்துடன் ‘தவசி', சத்யராஜுடன் ‘சவுண்ட் பார்ட்டி' உள்பட பல படங்களில் ஹீரோயினாக நடித்தவர் பிரதியுஷா. தவிர, தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ளார்.  இவர் தனது குடும்பத்துடன் ஐதராபாத்தில் வசித்து வந்தார். கடந்த 2002ம் ஆண்டு பிரதியுஷா மர்மமான முறையில் மரணம் அடைந்தார். தனது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலன் சித்தார்த் என்பவருடன் சேர்ந்து விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டது. இந்த சம்பவத்தில் சித்தார்த் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். இதுகுறித்து கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. இன்னும் விசாரணை முடியவில்லை.

இந்நிலையில், பிரதியுஷாவின் தாயார் சரோஜினி நேற்று முன்தினம் அளித்த பேட்டியில் சரமாரியாக குற்றம் சாட்டியுள்ளார்.  அவர் கூறியிருப்பதாவது:

என் மகள் விஷம் குடித்து சாகவில்லை. அவளை சில பேர் பலாத்காரம் செய்து வாயில் வலுக்கட்டாயமாக விஷம் ஊற்றி சாகடித்து இருக்கின்றனர். அவளது கழுத்தில் நகக்கீறல்கள் இருந்தன. அது மறைக்கப்பட்டு இருக்கிறது. பாய் பிரண்ட் என்று சொல்லப்பட்டவர், தன் உதட்டில் விஷத்தை தடவிக்கொண்டு, மயக்கம் அடைந்தது போல் நடித்து இருக்கிறார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் விடுதலை ஆகலாம். ஆனால், எனக்கு ஏற்பட்ட மன வலியும், ஆண்டவனும் அவர்களை நிச்சயம் தண்டிக்கும்.

இந்த சம்பவத்தால் என் மகன் மனநிலை பாதித்து இருக்கிறான். அந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் அவன் மீளவில்லை. இதுவரை போலீசார் ஒரே ஒரு ஆதாரத்தைக்கூட சேகரிக்கவில்லை. என் மகள் அணிந்திருந்த உடையையும் என்னிடம் கொடுக்கவில்லை. சம்பவம் நடந்து 15 வருடங்கள் ஆகிறது. யாருமே எனக்கு ஆதரவு தெரிவித்து குரல் கொடுக்கவில்லை. நான் தனியாக நீதி கேட்டு போராடிக் கொண்டிருக்கிறேன். இவ்வாறு சரோஜினி மனக்குமுறலுடன் கூறினார்.

Comments

Popular posts from this blog

DACOITS OF CHAMBAL

List of Muhammad's Wives and Concubines

MAHARANI SITADEVI OF BARODA the "Indian Wallis Simpson" INTERESTING LIFE STORY OF HER