Saturday 29 August 2020

INDIAN NATIONAL SPORTS DAY AUGUST 29





இந்திய தேசிய விளையாட்டு நாள் august 29
(Indian National Sports Day),

இந்தியாவின் சிறந்த ஹாக்கி வீரராக திகழ்ந்த தியான் சந்த்தைப் பெருமைப்படுத்தும் விதமாக அவரது பிறந்த நாளான ஆகத்து 29இல் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. இந்நாளின் முக்கிய நோக்கமானது நாட்டு மக்களிடம் ஆரோக்கியமான வாழ்க்கையை ஊக்குவிப்பதாகும். தேசிய விளையாட்டு நாளில் குடியரசுத் தலைவரால், விளையாட்டுகளில் சாதனை படைத்த வீரர்களுக்கு ராஜிவ் காந்தி கேல் ரத்னா, அர்ஜூனா, மற்றும் துரோணாச்சாரியார் போன்ற விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன. 2012 இல் முதன் முதலாக இந்திய அரசு, தியான் சந்த் பிறந்த நாளான ஆகஸ்ட் 29ஆம் நாளை, தேசிய விளையாட்டு நாளாக அறிவித்தது.[1][

கத்தார் தேசிய விளையாட்டு நாள்[மூலத்தைத் தொகு]
கத்தார் நாட்டில் தேசிய விளையாட்டு நாள் ஆண்டுதோறும் பெப்ரவரி மாதத்தின் இரண்டாம் செவ்வாய்க்கிழமையில் கொண்டாடப்படுகிறது. இந்நாள் ஒரு பொது விடுமுறை நாளும் ஆகும்.[4] முதலாவது தேசிய விளையாட்டு நாள் 2012 ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது.[5][6]

சப்பான் தேசிய விளையாட்டு நாள்[மூலத்தைத் தொகு]
யப்பான், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் இரண்டாவது திங்களன்று, "சுகாதாரம் மற்றும் விளையாட்டு நாள்" (体育の日 Tai-iku no Hi?) என இருநாட்களை ஒரே நாளில் கொண்டாடுகிறது. இதன் நோக்கம் ஒரு ஆரோக்கியமான மனம் மற்றும் உடல் உறுதி மற்றும் ஒரு செயலில் வாழ்க்கையை விளையாட்டு ஊக்கமளிப்பதாகும். சப்பான் தேசிய விளையாட்டு நாள், 1964இல் டோக்கியோ ஒலிம்பிக் தொடக்க நாளில் குறிக்கப்பட்டு, 1966ஆம் ஆண்டு முதல் விடுமுறையுடன் அனுசரிக்கப்பட்டு வருகிறது. மேலும், ஆசியாவில் நடைப்பெற்ற முதலாவது ஒலிம்பிக்கின் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 10இல் தேசிய விடுமுறை அறிவிக்கப்படுகிறது.2000ஆம் ஆண்டில், ஜப்பான் பொது விடுமுறையளித்து 'ஹேப்பி திங்கள்' முறையை செயல்படுத்தியது.[7]

மலேசிய தேசிய விளையாட்டு நாள்[மூலத்தைத் தொகு]
மலேசியா தேசிய விளையாட்டு நாள் (மலாய்: அரி சுகன் நெகரா (Hari Sukan Negara) எனும் இந்நாளை, 2015ஆம் ஆண்டுமுதல், அக்டோபர் மாதம் இரண்டாவது சனிக்கிழமையில் ஆண்டுதோறும் நடைபெறுகிறது. தேசிய விளையாட்டு நாள், தன் மக்களிடம் ஒரு ஆரோக்கியமான வாழ்க்கையை ஊக்குவிக்கும் முக்கிய நோக்கமாக கொண்ட விடுமுறையாகும் என மலேசியா அறிவித்தது.[8]

ஹாக்கி வாழும் வரை தயான் சந்தும் வாழ்வார்

தியான் சந்த் (Dhyan Chand, இந்தி: ध्यान चंद); பிறப்பு: அலகாபாத்தில் ஆகத்து 29, 1905 – இறப்பு:திசம்பர் 3, 1979), எக்காலத்தும் சிறந்த வளைதடிப்பந்தாட்ட விளையாட்டுக்காரராக கருதப்படும்[1] ஓர் இந்திய வளைதடிப் பந்தாட்ட விளையாட்டு வீரர். 1928 ஆம் ஆண்டு ஆம்ஸ்டர்டமிலும் 1932ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சலசிலும் 1936ஆம் ஆண்டு பெர்லினிலும் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுக்களில் தங்கப் பதக்கம் பெற்ற இந்திய அணியில் பங்கேற்றிருந்தார். பெர்லின் ஒலிம்பிக்சில் அணித்தலைவராகவும் இருந்தார்.


சிறப்பு நிகழ்வுகள்[மூலத்தைத் தொகு]
ஒருமுறை வளைதடிப் பந்தாட்டமொன்றில் என்ன முயன்றும் தியான் சந்தினால் கோல் அடிக்க முடியவில்லை; பலமுறை தவறியபின்னர் தியான் சந்த் நடுவரிடம் இரு கோல் வலைகளுக்கும் இடையே உள்ள தூரம் சரியில்லை என்று முறையிட்டார். அளவெடுத்துப் பார்த்தபோது பன்னாட்டு விதிகளின்படி இடைத்தூரம் சரியாக இல்லை என்றறிந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.[2]
1936 ஒலிம்பிக் விளையாட்டுக்களில் முதல் ஆட்டத்திற்கு பிறகு தியான் சந்தின் மயக்கவைக்கும் வளைதடி கைவண்ணம் பிற ஆட்டக்களங்களிலிருந்தும் கூட்டத்தை ஈர்த்தது. செருமன் நாளிதழ் ஒன்று 'ஒலிம்பிக் வளாகத்தில் இப்போது மாயவித்தையும் நடக்கிறது ' என்று தலைப்புச் செய்தி இட்டது. அடுத்தநாள் பெர்லின் முழுவதும் இந்திய மாயவித்தைக்காரர் தியான் சந்தின் செயல்களைக் காண வளைதடிப் பந்தாட்ட அரங்கத்திற்கு வருக என சுவரொட்டிகள் எழுந்தன.[2]
1936 பெர்லின் ஒலிம்பிக்கில் அவரது ஆட்டத்தைக் கண்டு அடோல்ஃப் ஹிட்லர் பிரித்தானிய இந்திய படைத்துறையில் மேஜராக இருந்த தியான் சந்திற்கு செருமன் குடியுரிமை வழங்கி கேனலாகவும் பதவி உயர்வு தர முன்வந்தார். (இதனை தியான் சந்த் மறுத்து விட்டார்).[2][3]
ஹாலந்தில் அவரது வளைதடியில் காந்தம் ஏதேனும் உள்ளதா என அறிய தடியை உடைத்து பரிசோதித்தனர்.[2]
ஆஸ்திரியாவின் வியன்னாவில் அவரை கௌரவிக்கும் விதமாக நான்கு கைகளுடனும் நான்கு வளைதடிகளுடனும் ஓர் சிலையை அமைத்தனர்.[4]

வாழ்க்கை வரலாறு[மூலத்தைத் தொகு]
தியான் சந்த் குறித்த சுயசரிதை "கோல்" சென்னையின் ஸ்போர்ட்ஸ் & பேஸ்டைம் பதிப்பகத்தால் 1952ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.[5]

பத்ம பூசண் விருது[மூலத்தைத் தொகு]
1956 ஆம் ஆண்டு தமது 42 வது வயதில் பத்ம பூசண் விருது பெற்றார்.[6]

பாரத் ரத்னா[மூலத்தைத் தொகு]
இந்தியாவின் உயரிய குடியுரிமை விருதான பாரத் ரத்னா 2014 வரை விளையாட்டுவீரர்களுக்கு கொடுக்கப்படவில்லை. உள்துறை அமைச்சு விதிகளை மாற்றியமைத்து விளையாட்டு வீரர்களுக்கு பாரத் ரத்னா வழங்க முடிவு செய்யுமானால் முதல் விருது தியான் சந்த்திற்கு வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது[7]. இதனிடையே மத்திய பிரதேச அரசு அவர் நினைவாக அருங்காட்சியகம் ஒன்று திறக்க முடிவு செய்துள்ளது.[8]

பாரத ரத்னா விதிமுறைகள் தளர்த்தப்பட்டு ’பாரத ரத்னா’ விருது மட்டையடி விளையாட்டு வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கப்பட்டது. தமது பெயரில் விருது வழங்கப்படும் தியான் சந்திற்கு ’பாரத ரத்னா’ விருது வழங்கப்படாதது பாரத ரத்னா விருதின் தேர்வு முறை குறித்த விமர்சனங்களை ஏற்படுத்தியது.[9]

Image may contain: 2 people

No comments:

Post a Comment