Saturday 22 August 2020

BIRTH OF CAPITAL OF TAMILNADU



BIRTH OF CAPITAL OF TAMILNADU 

..மெட்ராஸும் பூடூச்சு...
மெட்ராஸ் பாஷையும் பூடூச்சுப்பா!

அறுபதுகளிலோ.. எழுபதுகளிலோ மெட்ராஸுக்கு முதன்முதலாக வந்த இளைஞரைக் கவரும் விஷயம் மெட்ராஸ் பாஷை. திருவல்லிக்கேணி 'மேன்சனில்' ஒரு வாரம் தங்கிவிட்டு ஊருக்குப் போனால், கூடவே மெட்ராஸ் பாஷையும் ஒட்டிக்கொள்ளும்.

ஊருக்குப் போனதும், "இன்னாப்பா, ஒத்துப்பா, கஸ்மாலம், பேமானி, கய்தே" என்று சென்னையில் தான் கற்றுக்கொண்ட மெட்ராஸ் பாஷையை நண்பர்களிடம் பேசும்போது பயன்படுத்துவது வழக்கம். காலம்காலமாக தான் பழகிய உள்ளூர் பாஷைக்கு அவன் திரும்ப சில வாரங்கள் பிடிக்கும். அப்படி ஒரு மயக்கம் மெட்ராஸ் பாஷையின் மீது ஏற்படுவதுண்டு.

செங்கல்பட்டுக்கு அந்தப் பக்கம் இருப்பவர்களுக்கு, மெட்ராஸ் என்றாலே ஒரு மயக்கம் இருந்தது. மெட்ராஸுக்குப் போய் வந்தவர்களுக்கு ஒரு தனி மரியாதையே இருக்கும்.

எல்.ஐ.சி. கட்டிடம், சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன், மியூசியம், மிருகக்காட்சிசாலை, மெரீனா கடற்கரை என்று மெட்ராஸில் அநேக சுவாரஸ்யங்கள்... அதையெல்லாம் பார்த்து விட்டுப் போய், தன் பயண அனுபவங்களை நண்பர்களிடம் சொல்வதில் ஒரு தனி சுகம். அதைக் கேட்பதில் நண்பர்களுக்கும் ஒரு சுகம்.

அதெல்லாம் அந்தக் காலம். இன்றைக்கு சென்னை என்றால், அதில் பெரிய சுவாரஸ்யம் இல்லை. அரசியல் கட்சிகள் நடத்தும் பேரணிகளை வாய்ப்பாகக் கொண்டே அநேகர் சென்னைக்கு வந்து போய் விட்டனர். வீட்டுக்கொரு இன்ஜினீயர் என தலைநகரை நோக்கி பலரும் படையெடுத்து வர, ஹை-டெக் நகரமாக ஷாப்பிங் மால்களும், கார்ப்பரேட் நிறுவனங்களுமாக சென்னை பிரமிக்க வைக்கின்ற போதிலும், சென்னையின் மூலை முடுக்குகளை சினிமா, டி.வி. மூலம் இருந்த இடத்தில் இருந்தே பார்த்து விட்டதும் காரணங்களாக இருக்கின்றன.

'அனுபவி ராஜா அனுபவி' திரைப்படத்தில், தூத்துக்குடியில் பிறந்த நாகேஷ் சென்னைக்கு வந்து, 'மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்' என்று பாடிக் கொண்டு வருவார். அண்ணா சாலையில், கடற்கரையில், குடிசை மாற்று வாரிய வீடுகளுக்கு அருகில் என்று ஜனக்கூட்டம் குறைவாய் உள்ள மெட்ராஸில் ஓடி ஓடிப் பாடுவார். அந்த மெட்ராஸ் இப்போது அடையாளமே தெரியாமல் மாறிவிட்டது.

மெட்ராஸ் என்பது சென்னை ஆகிவிட்டது. 'யூனிவர் சிட்டி ஆஃப் மெட்ராஸ்' மணிரத்னத்தின் 'மெட்ராஸ் டாக்கீஸ்', 'மெட்ராஸ் ஹைகோர்ட்' போன்ற சில பெயர்களில்தான் 'மெட்ராஸ்' இன்னமும் ஒட்டிக் கொண்டிருக்கிறது.

'சென்னை வந்த ஒருவரின் பர்ஸ் எந்த இடத்தில் காணாமல் போகிறதோ, அந்த இடத்தை உத்தரவாதமாக மூர் மார்க்கெட் என்று சொல்லிவிடலாம்' என்று நகைச்சுவையாகச் சொல்வார்கள். அந்த மூர் மார்க்கெட் இப்போது இல்லை. கொத்தவால்சாவடி மார்க்கெட்டும், திருவள்ளுவர் பஸ் ஸ்டாண்டும், கோயேம்பேடுக்கு குடிபோய் விட, அந்தப் பகுதியில் 'ஐகோர்ட்' மட்டும் தனியாக நின்று கொண்டிருக்கிறது.

மக்கள் நெரிசலும், வாகனங்களின் பெருக்கமும் சென்னையின் முகத்தை நிறையவே மாற்றிவிட்டன. அண்ணாசாலையில் இருந்த பல தியேட்டர்கள் வர்த்தக வளாகங்களாக மாறி போய் விட்டன.

1980 களில் ரெண்டு ரூபாய் தொண்ணூறு காசு டிக்கெட்டில் தேவி பாரடைசில் படம் பார்த்தவர்கள், இன்று தொலைக்காட்சிப் பெட்டிகளின் முன்பு முடங்கிவிட்டார்கள்.


சென்னையை விட்டு சொல்லிக் கொள்ளாமல் போய்விட்ட அநேக விஷயங்களைப் போலவே, மெட்ராஸ் பாஷையும் சொல்லாமல் கொள்ளாமல் போய்க்கொண்டிருக்கிறது. நடிகர் சந்திரபாபு தொடங்கி நாகேஷ், லூஸ்மோகன், கமல்ஹாசன் உள்பட பலரும் சினிமா கதாபாத்திரங்களின் வாயிலாக பேசிய மெட்ராஸ் பாஷை, இப்போது வட சென்னையில் மட்டுமே அவ்வப்போது காதில் விழுகிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு வந்த 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படமும், 'மெட்ராஸ்' படமும் நடப்பு சாட்சிகளாக இருக்கின்றன.

முப்பது லட்சம் பேராக இருந்த சென்னையின் மக்கள் தொகை, ஒரு கோடியை விரைவில் தொடப் போகிறது. தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து குடியேறிய மக்கள் எண்ணிக்கை, சென்னையின் 'பூர்வ குடிகளின்' எண்ணிக்கையை விட பல மடங்கு அதிகரித்துவிட்டது. தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும், வந்த மக்களின் எண்ணிக்கை கணிசமான அளவு உயர்ந்து போனதால், பேச்சுத்தமிழில் தனது அடையாளத்தை இழந்து போனது மெட்ராஸ் பாஷை.

சென்னைவாசிகள் பயன்படுத்திய சரித்திரப் புகழ்பெற்ற வார்த்தைகள் எல்லாம் கிழக்கே விரிந்து கிடக்கும் வங்கக் கடலில் இன்னும் சில காலத்தில் மூழ்கிப் போகும்.
No photo description available.



ஆகஸ்டு 22, 2017 அன்று சென்னைக்கு378-379 வயதாகிறது. பல்வேறு வசதிகளும், ஆச்சரியங்களும் உயிர்த் துடிப்பும் நிறைந்த சென்னை பிறந்து வளர்ந்த கதையை நாம் பார்க்கலாம்.

375 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாள் மாலையில் பிரான்ஸிஸ் டே என்னும் ஆங்கிலேயன் கப்பலில் வந்து மைலாப்பூர்க் கரையில் இறங்கினான். அவன் கண்களுக்குத் தெரிந்த கடற்கரை மணல் பரப்பு அவனை மிகவும் கவர்ந்தது. தான் வந்த வேலை முடிந்து விட்டது என்று டே முடிவு கட்டினான்.

370 ஆண்டுகளுக்கு முன்பு கோரமண்டல் கடற்கரை என்ற பெயர் பெற்ற வங்கக் கடலின் கரையோரம் மதராஸப்பட்டினம் என்ற பெயரில் சின்னஞ்சிறு கிராமமாக இருந்தது. சென்னை, மைலாப்பூர், எழும்பூர், திருவல்லிக்கேணி, திருவான்மியூர், திருவொற்றியூர் என்று பல்வேறு சிறுசிறு கிராமங்களாகவும், சிறு சிறு குறு நகர்களாகவும் காணப்பட்டது. அந்தக் கால் சென்னைப் பட்டினம், புதர்கள், காடுகள் மரங்கள் சூழ்ந்த இந்த ஊர்களுக்கு இடையே கூவம், அடையாறு போன்ற ஆறுகள் ஓடின.

Higginbotham’s Bookstore
higginbothams
Aerial View of Marina Beach
Marina-Beach
Mount Road
Mount-Road
Esplanade during busy hour
Old-Esplanade
Madras Central Station
Central-Station
Egmore Station Exterior
Chennai-Egmore-Railway-Station
Egmore Station Interior
Egmore-Station-Interior
Egmore Station Waiting Room
Egmore-Station-Waiting-Room1
Old Mosque of Madras
Chennai-Old-Mosque
Old High Court of Madras
Chennai-Old-High-Court
Spencer’s Departmental Store
Spencers
The Old Esplanade
Esplanade
The Madras Ford Showroom
Chennai-Ford-Show-Room-1917
Bank of Madras
Bank-of-Madras1
The Map of Madras 1909
Chennai-City-Map-1909
இந்தச் சென்னைப்பட்டினம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வாசனை திரவியம் மற்றும் ஜவுளி வியாபாரத்தில் கொடிகட்டிப் பறந்தது. போர்ச்சுகீசியர்களின் வருகைக்குப் பிறகே அது வளர்ச்சி அடையத் தொடங்கியது. கி.பி.1552ஆம் ஆண்டில் போர்ச்சுக்கீசியர்கள் சாந்தோமில் குடியேறி வியாபாரம் செய்தனர்.

சென்னைப் பட்டினத்தில் விலை உயர்ந்த ஜவுளி மூலப்பொருட்கள் கிடைத்தன. இதைக் குறிவைத்து இங்கு கால் பதிக்க ஆங்கிலேயர்கள் திட்டமிட்டனர். இதற்காக கிழக்கிந்திய கம்பெனி, பிரான்சிஸ் டே, ஆன்ட்ரு கோகன் ஆகிய இரண்டு அதிகாரிகளைச் சென்னைப் பட்டினத்திற்கு அனுப்பி வைத்தது. வணிக மையம் கட்டுவதற்காகச் சென்னைப் பட்டினத்தில் இடம் பார்க்க வேண்டிய பொறுப்பு டேக்கு அளிக்கப்ப்டடது.
கம்பெனியின் வியாபாரத்திற்காக ஒரு நல்ல இடத்தைத் தேடி டே பயணித்தபோது மைலாப்பூர் பற்றிக் கேள்விப்பட்டான். மைலாப்பூர் போர்ச்சுக்கீசியர்களின் வியாபார மையமாக இருந்தது. அதன் அருகிலேயே தங்கள் வியாபார மையம் அமைய வேண்டும் என டே முடிவு செய்தான்.

அப்படி அவன் வரும்போதுதான் மைலாப்பூரின் அழகில் மயங்கி நின்றான். மைலாப்பூர் மட்டுமல்ல மதராஸ் முழுவதுமே அவன் கண்களுக்குக்கு கவர்ச்சி மிகுந்த ஒரு பெண்ணைப் போலக் காட்சியளித்தது என்று, ‘சென்னையின் கதை’ எனும் நூலை 1921ல் எழுதிய கிளின் பார்லோ குறிப்பிடுகிறார். இதுதான் கம்பெனிக்கு ஏற்ற இடம் என்று அவன் முடிவு செய்தான்.
நினைத்தாலே மூக்கைப் பிடித்துக்கொள்ளும் அளவுக்கு நாற்றம் பிடுங்கும் கூவம் நதி, 370 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தது தெரியுமா? பிரான்ஸிஸ் டேக்கு மதராஸ் பிடித்துப்போனதற்குக் காரணமே கூவம் நதிதான் என்கிறார் பார்லோ. அந்தக் காலத்தில் இந்த நதிக்குத் திருவல்லிக்கேணி ஆறு என்ற பெயரும் உண்டு. அந்த ஆற்றை அவன் கண்ட சமயம் குளிர்காலம். ஆற்று நீர் கரை புரண்டு ஓடிக்கொண்டிருந்தது.

அந்தக் காலத்தில் கூவம் நதி சுத்தமான தண்ணீர் ஓடும் நதியாக இருந்தது. சென்னை மக்கள் அதில் குளித்து விட்டுத்தான் தங்கள் தினசரி வேலையைத் தொடங்குவார்கள். வள்ளல் பச்சையப்பா முதலியார் தினமும் கூவம் நதியில் ஆசை தீரக் குளித்ததை எழுதி வைத்துள்ளார். அவர் வாழ்ந்த காலம் 1754 முதல் 1794.
வங்கக் கடலை ஒட்டி மைலாப்பூருக்கு அருகே உள்ள பகுதியை வாங்க வேண்டும் என்று டே தீர்மானித்தான். அப்பகுதியை ஆண்டுவந்த நாயக்க மன்னர்களிடம் பேச்சு வார்த்தையைத் தொடங்கினான். ஆனால் நாயக்க மன்னரால் தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாது. விஜயநகரப் பேரரசின் பிரதிநிதியான சந்திரகிரி மன்னனுக்கு நாயக்க மன்னர்கள் கப்பம் கட்டி வந்தார்கள். எனவே இந்த நில பேரத்துக்கு சந்திரகிரி மன்னரின் ஒப்புதல் தேவைப்பட்டது.

பிரான்ஸில் டே சந்திரகிரி மன்னரைப் பார்த்து பேசினான். தான் விரும்பிய இடத்தை விலை கொடுத்து வாங்கினான். இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது 1639ம் ஆண்டு ஆகஸ்டு 22 ம் நாள். சென்னையில் இடம் வாங்குவதற்காகப் போடப்பட்ட இந்த வணிக ஒப்பந்தம் பின்னாளில் இந்திய மண்ணில் ஆங்கிலேய ஆட்சி உதயமாகக் காரணமாக அமைந்தது என்று பார்லோ குறிப்பிடுகிறார். ஆங்கிலேயர் ஆட்சி சந்திரகிரியில் கருவாகி, மதராஸப்ப்ட்டினத்தில் உருவாகிப் பிறகு இந்திய மண்ணில் பிறந்தது என்கிறார் இவர்.

ஆங்கிலேயர்கள் சென்னைப் பட்டினத்தை நவீன வசதிகள் கொண்ட நகரமாக உருவாக்கும் முயற்சியைத் தொடங்கினார்கள். லண்டனில் தாங்கள் அனுபவித்தும் வரும் சகல வசதிகளும் இங்கே கிடைக்க வேண்டும் என்பதற்கான காரியங்களைத் தொடங்கினார்கள். டேயும் அவனது மேலதிகாரியான ஆண்ட்ரு கோகனும் சேர்ந்து மதராஸில் வளர்ச்சிப் பணிகளைத் தொடங்கினார்கள். இதன் காரணமாக சென்னை நகரம் மிகக்குறுகிய காலத்தில் வளர்ச்சி அடைந்தது. கிழக்கிந்திய கம்பெனியின் வணிக மையத்தையும், செயிண்ட் ஜார்ஜ் கோட்டையையும் கட்டினார்கள். இப்படித்தான் இன்று நாம் பார்க்கும் சென்னை நகரம் உருவாகியது இதனால்தான் சென்னையில் ஆங்கிலேயர்கள் இடம் வாங்கிய ஆகஸ்ட் 22ஐ சென்னையின் பிறந்த நாளாகக் கொண்டாடி வருகிறோம்.

பாதுகாப்பை கருத்தில் கொண்டு செயிண்ட் ஜார்ஜ் கோட்டையைச் சுற்றிலும் சுற்றுச் சுவர் கட்டப்பட்டது. வணிக வளாகம் கட்டப்பட்டதால் ஐரோப்பியர்கள் நிறையப்பேர் வந்தனர். அவர்கள் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையைச் சுற்றிலும் வீடு கட்டிக் குடியேறினர். அந்தப் பகுதி வெள்ளைப் பட்டினம் என்று அழைக்கப்ப்டடது. அதற்கு வெளிப்புறப் பகுதியில் ஆந்திராவில் இருந்து வந்த ஏராளமான நெசவாளர்கள் குடியேறினர். இது கறுப்புப் பட்டினம் என்று அழைக்கப்பட்டது. இந்தப் பகுதிதான் பின்னர் ஜார்ஜ் டவுன் ஆனது.

இந்த இடத்தை மையமாகக் கொண்டு தொடங்கிய ஆங்கிலேயர்களின் வர்த்தகம் செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்கு வடக்கே உள்ள பகுதி சென்னைப் பட்டினம் என்றும், தெற்குப் பகுதி மதராஸப்பட்டினம் என்றும் அழைக்கப்பட்டது. இந்த இரண்டு பட்டினங்களையும் ஒன்று சேர்த்து ஆங்கிலேயர்கள் மதராஸப்பட்டினம் என்றும், தமிழர்கள் சென்னைப் பட்டினம் என்றும் அழைத்தனர். விரைவிலேயே சென்னைப் பட்டினம் முழுவதும் கிழக்கிந்தியக் கம்பெனியின் வசமாயிற்று. தங்கள் படை பலத்தாலும், பண பலத்தாலும் தந்திரமான முயற்சிகளாலும் ஆங்கிலேயர்கள் இதைச் சாதித்தார்கள்.

இந்தியாவில் ஆங்கிலேயர்கள் காலூன்றுவதற்கு முக்கியமான களமாகச் சென்னை அமைந்திருந்தது.
1653ல் சென்னைப்பட்டினம் சென்னை மாகாணமாக மாறியது. அதன் பின்னர் 1702ல் முகலாயர்களாலும், 1741ல் மராட்டியர்களாலும் அது தாக்குதலுக்கு உள்ளானது. 1746ம் ஆண்டு பிரெஞ்சுக்காரர்கள் கைவசமானது.

பின்னர் ஆங்கிலேயர்களின் கைக்குப் போனது. 1758ல் மீண்டும் பிரெஞ்சுக்காரர்கள் கைப்பற்றினர். ஆனால், இரண்டு மாதங்களிலேயே ஆங்கிலேயர்கள் சென்னையைத் திரும்பவும் மீட்டனர். அன்று முதல் 1947ம் ஆண்டு வரை சென்னை மாகாணம் ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. சுதந்திரத்திற்குப் பின், சென்னை மாகானம் 1968ம் ஆண்டு தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மெட்ராஸ் என்று இருந்த பெயர் 1997ம் ஆண்டு சென்னை என்று மாற்றப்பட்டது.

30 ஆயிரம் மக்கள் தொகையுடன் உருவான சென்னை நகரின் மக்கள் தொகை தற்போது ஒரு கோடியைத் தாண்டி விட்டது. சென்னை நகரின் பரப்பும் விரிவடைந்துகொண்டே போகிறது. சென்னைக்கு பிறந்த நாள் விழா எடுக்க வேண்டும் என்பதற்கு வரலாற்று ஆய்வாளர் எஸ்.முத்தையா 2004ம் ஆண்டு முன்முயற்சி எடுத்தார். அதற்குப் பலரும் உறுதுணையாக நின்றார்கள்.

புத்தக வெளியீட்டாளர் வின்சென்ட் டிசோஸா, பத்திரிக்கையாளர் சசி நாயர் ஆகியோர் அவர்களில் முக்கியமானவர்கள். 2004ம் ஆண்டு முதல் சென்னை பிறந்த தினம் கொண்டாடப்படுகிறது.

.My fascination for Madras dates back from my childhood seventy years ago.

In 1935, as a boy of seven living with my grandparents in Ariyalur, then a small village, I had the first glimpse of the great city, when grandfather took me there during X-Mas holidays to my aunt’s house at Purasawakkam

At Egmore railway station I felt I was transported to a fancy land of electric trains, taxis, and coaches. There were no auto or cycle rickshaws at that time only hand pulled rickshaws and jutkas.

A jutka, carrying four of us and luggage took us to Purasawalkam and the fare was only then annas.

Purasawakkam was my first acquaintance of Madras. Nearby Vepery was mainly a colony of Anglo Indians. There were many bakeries and confectioneries (notable among them was “Paldona” Shopping centre). Crowded Thana Street, Tram from Vepery to Central, Roxy Theatre showing only English pictures, were the important landmarks of the area. There were twin theatres Lakshmi & Saraswathi in the Perambur Barracks Road where my cousin and I saw “Nallathangal” movie in Lakshmi Talkies. Gala exhibition usually held during X-Mas season drew large crowds at SIAA grounds near Moore Market.

Tram services in those days were very popular and I felt funny when I found invariably all the drivers and conductors of the trams sported big “namams” on their foreheads. Both eco-friendly and absolutely accident free in the slow moving trams one could easily board or get off anywhere from the moving tram. In fact I remember a joke that appeared in the front cover o Ananda Vikatan making fun of the slow moving trams. Two men were conversing. One of them declined to accompany the other in the tram. He preferred to walk the distance as he wanted to go quickly. A four anna season ticket enabled anyone to travel in any tram, any route for the whole day.

In those days there were very few city bus routes. Purasawakkam was served only by two routes – Mount Road to Kellys and Triplicane to Kellys operated by private companies City Motor Service Ltd., P.T.Ltd.,

In my subsequent visits to Madras till today, the following events are deeply cherished in my memory.

In 1946, Mahatma Gandhi visited Madras to inaugurate the Silver Jubilee celebrations of The Hindi Prachar Sabha in T.Nagar. I had the treat fortune to sit quite near him and hear his speeches. I also attended his evening prayer meeting at Vijayaraghavachariar Road ground.

When Mahatma was camping at The Hindi Prachar Sabha, a cabinet that was led by Clement Atlee of the British Labour Party (who afterwards succeeded Winston Churchill as Prime Minister) and Sir Stafford Cripps met him and discussed the formation of prospective Indian Government. Subsequent events led to the partition, and the birth of Pakistan which caused deep anguish resulting in the boycott of Gandhi at the mid night birth of Free India.

I also attended a huge public meeting addressed by Pandit Jawaharlal Nehru in the Island Grounds presided over by Omandur Ramasamy Reddiar the then Prime Minister (as Chief Minister was called then) of Madras Province. I was thrilled to watch Nehru easily jumping up the stage while Reddiar was struggling up the steps. I remember Nehru saying then “I hear shouts of Hyderabad from you. It will soon be annexed” Hyderabad State was then offering resistance to join the Indian Union.


I also attended Avadi Congress presided over by U.N. Dhaber. Special buses plied between Egmore and Avadi and the fare was eight annas. Thousands of people sat in the hot sun and listened with rapt silence the speeches delivered by our leaders Nehru, Kamaraj etc., from the magnificent stage put up by S.S. Vasan.

Young Queen Elizabeth II drove in an open car in her magnificent attire and I was one of the great crowds of people who lined on both sides of the beach road to witness the grand spectacle. A life size rangoli of the Queen in different colours by a local lady was the talk of the town for many a day.

In 1950, as a student of Teachers Training College, Saidapet, I was assigned to take mathematics lessons to students of Ramakrishna Mission High School, T. Nagar. Anna Subramanya Iyer was the Head Master then. One of the classes I taught was V Form ‘E’, where our Tennis pride R. Krishnan was a student. A humble boy and already the National Champion, told me about his practice under his father in the Park Town Tennis Courts.

T. Nagar was a purely residential area. I used to go and stay with my aunt in her rented portion of a house in South Usman Road. There was a well and a surrounding garden full of flower shrubs and plantain trees. Now the house is gone along with all other houses in South Usman Road. A huge textile showroom has replaced it. Buses 9, 10, 11, 12, 13 started from Siva Vishnu Temple. There was no T. Nagar bus stand at that time.

In Mount Road Roundtana (where Anna Statue stands now) there was a public car park and a basement of toilet rooms for public convenience. The nearby Elphinstone Theatre patronized by college students has also vanished now.

A huge score board was operated on the balcony of the Hindu Office during cricket matches between India and other countries played in various cities of India. Crowd watched the live score board being operated ball by ball. Whenever wickets fell or runs scored there was uproar from the watching crowd.

In 1950 Commonwealth Cricket Team comprising of eminent players from Australia, West Indies, England played a Test match against an Indian XI which was skippered by Vijay Merchant with players as Mushtaq Ali, Phadkar at Chepauk Cricket ground. Indian cricketers were billeted in various houses of rich business men. Mushtaq Ali and Phadekar were staying in Mohammed Ibrahim’s house in Greams Road, then a remote distant place from Egmore. Along with two of my friends I met them. They were cordial and obliged with their autographs. Mushtaq Ali scored a brilliant century in the match.

Recollecting and masticating the incidents of my younger days, I yearn for the never-to-come back old Madras, of trams crisscrossing the city symbolizing and reflecting the unhurried, calm, simple, and contented life of the people, who were quite happy and peaceful without mobile phones or modern gadgets which mainly make men mechanical, devoid of even basic human values such as kindness, sympathy, co-operation and cordiality.
.
When trams on rails dominated Chennai roads

They moved at a maximum speed of just 7 kmph but the trams that ran in the city for 67 years left behind many pleasant memories. Photo: The Hindu Archives

Run by the Madras Electricity System (MES), trams on rails dominated Chennai roads back then and remained a convenient mode of transport for office-goers

They moved like giant snails, at their own pace. But when life itself was leisurely paced, trams in Chennai — the service came to a stop in 1953 — did not seem as if they belonged to the Jurassic age.

They travelled at a maximum speed of 7 kmph but have left behind pleasant memories of a time when every inch of city roads was not occupied by vehicles.

“I would not call the journeys thrilling. But travel in a slow-moving tram, seated by the windows, offered me excellent sightseeing opportunities. At one anna (1/16th of a rupee), they were ideal for a pleasant journey,” said writer and Sahitya Akademi winner Ashokamitran.

Run by the Madras Electricity System (MES), trams on rails dominated Chennai roads back then and remained a convenient mode of transport for office-goers.

“People from Mylapore travelled in trams to reach the High Court and other parts of the city. They boarded and detrained as they pleased, as trams moved very slowly,” said Mr. Ashokamitran.

A strike by workers who demanded wage revision led to a lockout. Subsequently, Chief Minister C. Rajagopalachari favoured the idea of ending the service, bringing the curtains down on 67 years of its run. “But the rails embedded on roads continued to remind Chennaiites of the tram days. For many years, they were not removed as they cost a fortune,” said Mr. Ashokamitran, who arrived in Chennai in 1953 to settle down permanently on an invitation from S.S. Vasan, owner of Gemini Studios.

But as the son of a railway employee entitled to a railway pass, Mr. Ashokamitran visited the city as early as in 1938 and enjoyed tram journeys to cinemas.

“I clearly remember travelling by a tram to Odeon theatre. It was here I watched ‘Mangamma Sabatham’ and ‘Nandanar,” he said.

S.A. Govindaraj too vividly recalls the high-pitch noise emanated by the vehicle when the driver changed gears and the ringing of a bell warning careless pedestrians.

“There were two types of trams. The big one was about 50-ft-long and the small, 35 ft. Inside, there were wooden benches on both sides and 60 passengers could sit on them. A total of 200 commuters could conveniently travel in trams,” said the 78-year-old Govindaraj, who once had two tickets in his possession.

One ticket was in English and the other in Tamil. Mr. Govindaraj sold them to a collector three months ago.

The tram ran on electricity and had a rod with a small wheel on it, said Mr. Govindaraj. “The wheel was turned by the overhead electric lines as the tram moved. When the vehicle travelled in the opposite direction, the conductor would pull the line by a rope to place it on the wheel,” he said.

Travelling by trams was very cheap, said Mr. Govindaraj, who travelled from Central to Luz Corner. “Even then, many passengers would not buy tickets and weeklies would carry cartoons lampooning ticketless travellers,” he said

.

No comments:

Post a Comment