WORLD FIRST BIRTH CONTROL BILLS RELEASED 1960 MAY 11 IN USA
WORLD FIRST BIRTH CONTROL BILLS RELEASED 1960 MAY 11 IN USA பெண்களின் சாதனைக்கு பக்கபலமாக மாறிய கருத்தடை மாத்திரைகள்! 18 ஏப்ரல் 2017 கருத்தடை மாத்திரைகள் உருவானது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES கருத்தடை மாத்திரைகளால் பெரிய அளவிலான சமூக மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இந்த மாற்றங்களை ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் உணர்வதோடு, அது மறுக்க முடியாத உண்மையாகவும் உள்ளது.அமெரிக்காவில், குழந்தை பிறப்பை கட்டுப்படுத்த விஞ்ஞானிகள் கருத்தடை மாத்திரைகளை கண்டுபிடிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலரும், பாலியல் கல்வியாளருமான மார்கரெட் சாங்கர் கேட்டுக்கொண்டார். ஆண்களுக்கு சரிநிகரான அதிகாரத்தை பெண்களும் பெற, பெண்களுக்கு சமூக சுதந்திரமும், பாலியல் சுதந்திரமும் தேவை என்பது சாங்கரின் திண்ணமான எண்ணமாக இருந்தது.கருத்தடை மாத்திரைகள் சமூகப் புரட்சியை ஏற்படுத்தியதோடு, இருபதாம் நூற்றாண்டில் மிகப்பெரிய பொருளாதார மாற்றத்தையும் ஏற்படுத்தியது. கவனமற்ற உடலுறவால் கருவுறுவது பெண்களுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருந்தது. இந்த பிரச்சனையை சமாளிக்க, காதலர்கள் காலங்காலமாக பல்வேறு வித்தியாசமான உபாயங்களை கடைபிடித்து வந்தனர...