HITLER COMMITED SUICIDE ALONG WITH HER WIFE EVA BRAUN
HITLER COMMITED SUICIDE ALONG WITH HER WIFE EVA BRAUN ஹிட்லரின் மரணச் செய்தியை உலகத்திற்கு பிபிசி அறிவித்தது எப்படி? 1945ஆம் ஆண்டு மே ஒன்றாம் தேதி மாலை. லண்டன் மேற்கில் இருந்து 40 மைல்கள் தொலைவில் உள்ள ரீடிங் பகுதியில் தன் பணியில் இருந்தார் கார்ல் லேமான். பெர்லினை சோவியத் படைகள் சூழ்ந்துவிட, ஜெர்மனி உடனான போரும் அதன் இறுதி நிலைகளை அடைந்தது.24 வயதான கார்ல், ஜெர்மனி அரசின் ரேடியோ ஒலிபரப்பை கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது, ஒரு முக்கியமான அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாகவும் அதற்கு தயாராக இருக்குமாறும் ரேடியோவில் கூறப்பட்டது."ஹிட்லர் இறந்துவிட்டார் என்று அறிவித்தபோது புனிதமான இசை இசைக்கப்பட்டது" என்று கார்ல் நினைவு கூர்ந்தார். "ரஷ்ய கம்யூனிச முறையான போல்ஸேவிசத்தை எதிர்த்து ஹிட்லர் போராடி வீழ்ந்தார் என்று சோகமாக அறிவிக்கப்பட்டது" என்கிறார் அவர்.யூதர்களை அதிகளவில் நாஜிக்கள் துன்புறுத்த, அவர்களிடம் இருந்து தப்பிக்க ஜெர்மனியில் இருந்து பிரிட்டனுக்கு கார்லும் அவரது சகோதரரும் அனுப்பி வைக்கப்பட்டனர். அவரது தந்தை ஜெர்மனி நாட்டு யூதராவார். "என் வாழ்வை சீரழித்த ஹிட்லரின் ம...