Monday 11 April 2022

T.S.S.RAJAN FREEDOM FIGHTER 1880 -1953

T.S.S.RAJAN 

FREEDOM FIGHTER 1880 -1953

மருத்துவர் தி. சே. சௌ. ராஜன் 1937-39ல் சென்னை மாகாணத்தின் அமைச்சராகப் பணியாற்றியவர், இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றுப் பலமுறை சிறை சென்றிருக்கிறார். அப்படிச் சிறைக்குச் சென்றபோதெல்லாம் ஒவ்வொருமுறையும், 'எனக்குச் சமையலறையில் ஏதாவது வேலை கொடுங்கள்' என்றுதான் கேட்பாராம். அங்கு எந்தப் பணி கொடுத்தாலும் ஆர்வத்துடன் செய்வாராம்.ஒருமுறை, இவரிடம் ராஜாஜி விளையாட்டாகக் கேட்கிறார், 'நீங்கள் ஏன் எப்போதும் சிறையில் சமையலறை வேலையையே விரும்பிக் கேட்கிறீர்கள்?' இந்தக் கேள்விக்கு ராஜன் சொல்லும் பதில் மிகச் சுவையானது.

'1909ல் நான் லண்டனில் படித்துக்கொண்டிருந்தபோது அங்கு ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தோம். அதற்குக் காந்தியைத் தலைமை தாங்க அழைத்திருந்தோம். அவரும் அதற்கு ஒப்புக்கொண்டார்.' 'விழா நாளன்று மதியம் சுமார் 2 மணியளவில் நாங்கள் சமையல் வேலைகளைத் தொடங்கினோம். சிறிது நேரம் கழித்து, எங்களுக்கு அறிமுகமில்லாத ஒருவர் அங்கு வந்தார். பாத்திரம் தேய்ப்பது, காய்கறிகளைக் கழுவித் தூய்மைப்படுத்துவது என்று எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு சுறுசுறுப்பாகச் செய்தார்.'

'நெடுநேரம் கழித்து, வ. வே. சு. ஐயர் அங்கு வந்தார். அதன்பிறகுதான் இவ்வளவு நேரம் எங்களுக்கு சமையலில் உதவிக்கொண்டிருந்தவர் அன்றைய விழாவின் தலைவர் காந்தி என்று நாங்கள் தெரிந்துகொண்டோம்.''அதன்பிறகும் காந்தி வேலை செய்வதை நிறுத்தவில்லை. விழா தொடங்குவதற்குச் சிறிது நேரம் முன்புவரை எல்லாத் தன்னார்வலர்களுடனும் சேர்ந்து உழைத்தார். அதன்பிறகு, தலைவர் இருக்கையில் சென்று அமர்ந்தார்.'

'அன்றைய விழாவில் காந்தி என்ன பேசினார் என்பதுகூட இப்போது எனக்கு நினைவில்லை. ஆனால், அவர் செய்தது பளிச்சென்று நினைவிருக்கிறது. அதனால்தான் ஒவ்வொரு சிறையிலும் நான் சமையலறைப் பணிகளை விரும்பிக் கேட்டுச் செய்கிறேனோ?'

திருவேங்கிமலை சேஷ செளந்தர ராஜன் (iruvengimalai Sesha Sundara Rajan, டி. எஸ். எஸ். ராஜன், 1880–1953) ஒரு தமிழக அரசியல்வாதி, மருத்துவர் மற்றும் இந்திய விடுதலைப் போராட்ட வீரர். 1937-39 காலகட்டத்தில் சென்னை மாகாணத்தின் அமைச்சராக இருமுறை பணியாற்றியவர்.

வாழ்க்கைக் குறிப்பு

சீரங்கத்தில் வடகலை ஐய்யங்கார் சாதியில் பிறந்த ராஜன், திருச்சி புனித வளனார் கல்லூரியில் கல்வி கற்றார். சென்னை ராயபுரம் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்று பட்டம் பெற்றார்.[1] பர்மாவுக்கு குடிப்யெர்ந்து[1] ரங்கூன் நகரில் மருத்துவராகப் பணியாற்றினார்.[2] 1907ல் இங்கிலாந்து சென்று மருத்துவ மேல்படிப்பு படித்து ஃப். ஆர். சி. எஸ் பட்டம் பெற்றார்.[1][3] பர்மாவில் பல ஆண்டுகள் மருத்துவப் பணியாற்றிய பின்னர் இந்தியா திரும்பி “ராஜன் மருத்துவமனை” என்ற பெயரில் தனி மருத்துவமனை தொடங்கினார்.[1]

ராஜாஜியுடன் ஏற்பட்ட நட்பினால் இந்தியத் தேசியக் காங்கிரசில் இணைந்தார் ராஜன். ரௌலட் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களில் பங்கு கொண்டு சிறை சென்றார். 1920-22ல் கிலாபத் ஒருங்கிணைப்பு குழுவில் உறுப்பினராக இருந்தார். உப்பு சத்தியாகிரகத்தில் பங்கேற்றுப் பதினெட்டு மாதங்கள் சிறை தண்டை பெற்றார். இந்தியத் தேசியக் காங்கிரசில் தேசிய அளவிலும் மாநில அளவிலும் பொதுச் செயலாளர், தலைவர், மாநிலச் செயலாளர் என பல பதவிகளை வகித்தார். 1934-36ல் மத்திய சட்டமன்ற உறுப்பினராகப் பணியற்றினார். 1937 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று சென்னை மாகாண சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ராஜாஜி தலைமையிலான அமைச்சரவையில் பொதுச் சுகாதாரத் துறை அமைச்சராகப் பணியாற்றினார். 1939ல் இரண்டாம் உலகப் போரில் இந்தியா ஈடுபடுத்தப்படுவதை கண்டித்து காங்கிரசு அமைச்சரவைகள் அனைத்தும் பதவி விலகின. 1946 தேர்தலில் காங்கிரசு வெற்றி பெற்று மீண்டும் பதவியேற்ற போது த. பிரகாசத்தின் அமைச்சரவையில் உணவு மற்றும் பொதுச் சுகாதாரத்துறை அமைச்சரானார். அடுத்த ஐந்தாண்டுகளில் மோட்டார் வாகனத் துறை, தொழிலாளர் நலம், இந்து அறநிலையத்துறை போன்ற பல துறைகளுக்கு அமைச்சராக இருந்தார். 1953ல் மரணமடைந்தார். வ. வே. சு. ஐயர் பற்றிய ஒரு நூலையும், “நினைவு அலைகள்" என்ற தன் வரலாற்று நூலையும் எழுதியுள்ளார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

No comments:

Post a Comment