WILLIAM SHAKESPEARE BORN
1564 APRIL 23 - 1616 APRIL 23
வில்லியம் சேக்சுபியர் (திருமுழுக்கு: 26 ஏப்ரல் 1564 - இறப்பு: 23 ஏப்ரல் 1616)[a] ஒரு ஆங்கிலக் கவிஞரும் நாடக ஆசிரியருமாவார். ஆங்கில மொழியின் மிகப்பெரும் எழுத்தாளர் என்றும் உலகின் மிகப் புகழ்வாய்ந்த நாடக ஆசிரியர் என்றும் இவர் குறிப்பிடப்படுகிறார்.[1] அநேக சந்தர்ப்பங்களில் இங்கிலாந்தின் தேசியக் கவிஞர் என்றும் இவர் அழைக்கப்படுகிறார். வாழும் அவரது படைப்புகளில் 38 நாடகங்கள்,[b] 154 செய்யுள் வரிசைகள், இரண்டு நெடும் விவரிப்பு கவிதைகள், மற்றும் பல பிற கவிதைகள் அடங்கும். அவரது நாடகங்கள் உலகில் ஒவ்வொரு பெரிய மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. வருடந்தோறும் வேறு எந்த ஒரு நாடகாசிரியரின் நாடகங்களை விடவும் அதிகமாக நடத்தப்படுகிறது.[2]
ஸ்ட்ராட்ஃபோர்டு-அபான்-அவான் என்கிற இடத்தில் தான் சேக்சுபியர் பிறந்தார், வளர்ந்தார். 18 வயதில், அவர் ஆனி ஹதாவேயை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள்: சுசானா, மற்றும் இரட்டையர்களான ஹேம்னட் மற்றும் ஜூடித்.1585 மற்றும் 1592 ஆம் ஆண்டுகளுக்கு இடையே, லண்டனில் ஒரு நடிகர், எழுத்தாளர் மற்றும் லார்டு சாம்பர்ளின்'ஸ் மென் என்ற நாடக நிறுவனத்தின் பங்குதார் என வெற்றிகரமாகத் தன் வாழ்க்கையைத் துவங்கினார். இந்த நாடக நிறுவனம் பின்னாளில் கிங்'ஸ் மென் நாடக நிறுவனம் என்று ஆனது. 1613 ஆம் ஆண்டு வாக்கில் அவர் ஸ்ட்ராட்போர்டில் ஓய்வுற்றதாக கருதப்படுகிறது. மூன்று வருடங்களுக்குப் பின் அங்கு அவர் மரணமெய்தினார். சேக்சுபியரின் அந்தரங்க வாழ்க்கை குறித்த சில பதிவுகளே பிழைத்திருக்கின்றன. எனவே அவரது உடல் தோற்றம், பாலின விருப்பம், மத நம்பிக்கைகள், மற்றும் அவரது படைப்புகளாகக் கூறப்படுவன மற்றவர்களால் எழுதப்பட்டதா போன்ற விடயங்களில் குறிப்பிடத்தக்க அளவு ஊகங்கள் நிலவுகின்றன.[3]
சேக்சுபியர் தனது அறியப்பட்ட படைப்புகளில் அநேகமானவற்றை 1589 மற்றும் 1613 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் தான் உருவாக்கினார்.[4][c] அவரது ஆரம்ப நாடகங்கள் முக்கியமாக நகைச்சுவை மற்றும் வரலாறுகள் என பல பிரிவுகளைத் தொட்டது. பின் சுமார் 1608 வரை அவர் துன்பியல் நாடகங்களை பிரதானமாக எழுதினார். ஹேம்லட் , கிங் லியர் , மற்றும் மெகாபெத் ஆகிய ஆங்கில மொழியின் மிகச் சிறந்த படைப்புகளாகக் கருதப்படும் சிலவும் இதில் அடங்கும். தனது இறுதிக் காலகட்ட சமயத்தில், அவர் துன்பியல்நகைச்சுவைகளை எழுதினார். இவை அரிய நிகழ்வுகளுடனான வீரக் காதல் காவியங்கள் என்றும் கூறலாம். மற்ற நாடகாசிரியர்களுடனும் இணைந்து பணியாற்றினார். அவரது நாடகங்களில் பலவும் அவரது ஆயுள்காலத்தில் பல்வேறு தரம் மற்றும் துல்லியங்களுடனான பதிப்புகளில் வெளியானது. 1623 ஆம் ஆண்டில், அவரது முன்னாள் நாடக அரங்க சகாக்களில் இருவர் ஃபர்ஸ்ட் ஃபோலியோ என்னும் அவரது நாடகப் படைப்புகளின் தொகுப்பை வெளியிட்டனர். இதில் இப்போது சேக்சுபியரது படைப்புகள் என்று அறியப்படும் நாடகப் படைப்புகளில் இரண்டைத் தவிர மற்ற அனைத்தும் அடங்கியிருந்தது.
சேக்சுபியர் தனது காலத்திலேயே மதிப்புமிகுந்த கவிஞராகவும் நாடக ஆசிரியராகவும் இருந்தார். எனினும் பத்தொன்பதாவது நூற்றாண்டின் இறுதி வரை அவரது மதிப்பு இன்றைய உயரத்தில் இருக்கவில்லை. குறிப்பாக காதல்வீரக் காவியங்கள் சேக்சுபியரின் திறமையைப் போற்றின. விக்டோரியா காலத்தவர்கள் சேக்சுபியரை மரியாதையுடன் புகழ்ந்து போற்றினர்.[5] இருபதாம் நூற்றாண்டில் அவரது படைப்புகள் பல்வேறு இயக்கங்கள் மூலமும் எடுத்தாளப் பெற்றன. அவரது நாடகங்கள் இன்று மிகவும் புகழ்மிக்கவையாக திகழ்வதோடு, உலகெங்கிலும் பன்முக கலாச்சார மற்றும் அரசியல் பொருளில் தொடர்ந்து படிக்கப்பட்டும், மறுபுரிதல் கொள்ளப்பட்டும் வருகின்றன.
வாழ்க்கை[தொகு]
ஆரம்பகால வாழ்க்கை[தொகு]
வெற்றிகரமான கையுறை உற்பத்தியாளராகவும் அரசியல்மன்ற உறுப்பினராகவும் திகழ்ந்த ஜான் சேக்சுபியருக்கும், செல்வமிகுந்த நில அதிபரின் மகளான மேரி ஆர்டனுக்கும் மகனாக வில்லியம் சேக்சுபியர் பிறந்தார்.[6] அவரது உண்மையான பிறந்த தேதி அறியப்பட முடியவில்லை. ஆனால் மரபுவழியாக 23, ஏப்ரல், செயின்ட் ஜார்ஜ் தினத்தன்று கொண்டாடப்படுகிறது.[7] சேக்சுபியர் 23 ஏப்ரல் 1616 அன்று இறந்தார்.[8] எட்டு குழந்தைகளில் மூன்றாவதாகப் பிறந்த அவர் பிழைத்திருந்தவர்களில் மூத்தவராகத் திகழ்ந்தார்.[9]
அவர் வாழ்ந்த காலத்திற்கான பதிவேடுகள் எதுவும் இல்லை என்றாலும் கூட, தனது வீட்டில் இருந்து கால் மைல் தூரத்தில் இருந்த 1553 ஆம் ஆண்டின் பட்டியலிடப்பட்ட இலவசப் பள்ளிகளில்[10] ஒன்றான ஸ்ட்ராட்போர்டில் இருக்கும் [[கிங் எட்வர்ட் VI பள்ளியில் [11] சேக்சுபியர் கல்வி பெற்றார் என்பதை பெரும்பாலான வாழ்க்கை வரலாற்று ஆசிரியர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். எலிசபெத் காலத்தில் இலக்கண பள்ளிகள் தரத்தில் வேறுபட்டதாக இருந்தன. ஆனால் பாடத்திட்டம் சட்டத்தின் மூலம் இங்கிலாந்து முழுவதும் வரையறுக்கப்பட்டதாக இருந்தது.[12] பள்ளியானது லத்தீன் இலக்கணம் மற்றும் செவ்வியலில் தீவிரக் கல்வியை வழங்கியிருக்க வேண்டும்.
18 வயதில், சேக்சுபியர் 26 வயதான ஆன் ஹேதாவே திருமணம் செய்து கொண்டார்.வார்செஸ்டர் டயாசிஸ் திருச்சபை மன்றம் திருமண உரிமத்தை 27 நவம்பர் 1582 அன்று வழங்கியது. ஹதாவேயின் அண்டைவீட்டார் இருவர் உத்தரவாத பிணையை அளித்ததை தொடர்ந்து திருமணத்திற்கு ஏதும் தடை இருக்கவில்லை.[13] தம்பதிகள் திருமண ஏற்பாட்டினை சற்று துரிதமாக நடத்தியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.[14] ஆனியின் கர்ப்பம் இதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். திருமணம் முடிந்த ஆறு மாதங்களில், அவர் சுசானா எனும் பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.[15] சுமார் இரண்டு வருடங்கள் கழித்து இரட்டைக் குழந்தைகளாக மகன் ஹேம்னெட்டும் மகள் ஜூடித்தும் பிறந்தனர்.[16] ஹேம்னெட் புரியாத காரணங்களால் 11 வயதில் இறந்து போனான்.[17]
இரட்டைக் குழந்தைகள் பிறந்தபின், 1592 ஆம் ஆண்டில் லண்டன் நாடக அரங்கின் ஒரு பாகமாக அவர் அறியப்படும் காலம் வரை சேக்சுபியர் குறித்த வரலாற்று குறிப்புகள் குறைவாகவே உள்ளன. இந்த இடைவெளியின் காரணமாக, 1585 மற்றும் 1592 ஆண்டுகளுக்கு இடையிலான காலத்தை சேக்சுபியரின் "தொலைந்த காலம்" என்று அறிஞர்கள் குறிப்பிடப்படுகின்றனர்.[18] இந்த காலகட்டம் குறித்து எழுத முற்படும் வாழ்க்கைவரலாற்று ஆசிரியர்கள் பல உறுதிப்படாத கதைகளைக் கூறுகிறார்கள். மான்வேட்டையாடியதற்கான தண்டனையில் இருந்து தப்பிக்க நகரில் இருந்து சேக்சுபியர் லண்டனுக்கு தப்பி ஓடியதாக ஸ்ட்ராட்போர்டு மேதை ஒருவர் நினைவுகூர்ந்ததை சேக்சுபியரின் வாழ்க்கைவரலாற்றை முதலில் எழுதிய ஆசிரியரான நிகோலஸ் ரோவ் தெரிவிக்கிறார்.[19] சேக்சுபியர் லண்டனில் இருந்த நாடக புரவலர்களை மனதில் கொண்டு தனது நாடக வாழ்க்கையை துவங்கினார் என்று மற்றொரு பதினெட்டாம் நூற்றாண்டு கதை கூறுகிறது.[20] சேக்சுபியர் ஒரு கிராம பள்ளிவாத்தியாராக இருந்தார் என்று ஜான் ஆப்ரி தெரிவித்தார்.[21] லங்காஷயரைச் சேர்ந்த அலெக்ஸாண்டர் ஹவ்டன் என்னும் கத்தோலிக்க நிலப்பிரபு சேக்சுபியரை பள்ளியாசிரியராக பணியமர்த்தியிருக்கலாம் என்று சில இருபதாம் நூற்றாண்டு அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலப்பிரபு தனது உயிலில் "வில்லியம் ஷேக் ஷாஃப்டெ" என்று ஒரு பெயரைக் குறிப்பிட்டிருந்தார்.[22] சேக்சுபியரின் மரணத்திற்கு பிந்தைய வாய்வழிச் செய்திகளைத் தவிர்த்து இத்தகைய கதைகளை உறுதிப்படுத்த எந்த ஆதாரமும் இல்லை.[23]
இலண்டனும் நாடக வாழ்க்கையும்[தொகு]
சேக்சுபியர் எப்போது எழுதத் துவங்கினார் என்று துல்லியமாகத் தெரியவில்லை. ஆனால் சமகாலத்திய குறிப்புகளும் நாடக நிகழ்ச்சிகளின் பதிவுகளும் அவரது பல நாடகங்கள் லண்டன் அரங்கில் 1592 ஆம் ஆண்டில் நிகழ்ந்திருக்கலாம் எனக் காட்டுகின்றன.[24] அப்போது நாடக ஆசிரியரான ராபர்ட் கிரீன் சேக்சுபியரை பின்வரும் வகையில் அவமதித்துப் பேசும் அளவுக்கு சேக்சுபியர் லண்டனில் போதுமான அளவு அறியப்பட்டவராயிருந்தார்:
இந்த வார்த்தைகளின் துல்லியமான பொருளில் அறிஞர்கள் வேறுபடுகிறார்கள்.[26] ஆனால் கிறிஸ்டோபர் மர்லோ, தாமஸ் நஷெ மற்றும் கிரீனும் போன்ற பல்கலைக்கழக கல்வி பெற்ற எழுத்தாளர்கள் அளவுக்கு தன்னை உயர்த்தி நிறுத்திக் கொள்ள சேக்சுபியர் தனது தகுதிக்கு மீறி முயற்சிப்பதாக கிரீன் குற்றம் சாட்டுகிறார் என்பதை மட்டும் அநேகமானோர் ஒப்புக் கொள்கின்றனர்.[27][28]
கிரீனின் தாக்குதல் தான் நாடக வாழ்க்கையில் சேக்சுபியர் குறித்த முதல் பதிவு பெற்ற குறிப்பாகும். அவரது தொழில்வாழ்க்கை கிரீனது கருத்துகளுக்கு கொஞ்சம் முன்னால் 1580களின் மத்தியில் ஏதோ ஒரு சமயத்தில் துவங்கியிருக்க வேண்டும் என்று வாழ்க்கைவரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.[29] 1594 ஆம் ஆண்டு முதல், சேக்சுபியரின் நாடகங்கள் லார்டு சாம்பர்லெய்ன்'ஸ் மென் குழுவினால் மட்டுமே நடத்தப்பட்டன. இது சேக்சுபியர் உள்ளிட்ட ஒரு குழுவினர் பங்குபெற்று நடத்தி வந்த ஒரு நிறுவனமாகும். இது விரைவில் லண்டனின் முன்னணி நாடக நிறுவனமானது.[30] 1603 ஆம் ஆண்டில் ராணி எலிசபெத்தின் மறைவுக்குப் பிறகு, புதிய மன்னரான முதலாம் ஜேம்ஸ் இந்நிறுவனத்திற்கு அரச உரிமத்தை வழங்கி, அதன் பெயரையும் கிங்'ஸ் மென் என்பதாக மாற்றினார்.[31]
1599 ஆம் ஆண்டில், நிறுவன உறுப்பினர்களின் ஒரு கூட்டணி தேம்ஸ் நதியின் தெற்குக் கரையில் தங்களது சொந்த நாடக அரங்கைக் கட்டியது. இதனை அவர்கள் குளோப் என்று அழைத்தனர். 1608 ஆம் ஆண்டில், இந்த கூட்டணி பிளாக்ஃபிரையர்ஸ் உள் அரங்கத்தையும் கைவசமாக்கியது. சேக்சுபியரின் சொத்து வாங்கல்கள் மற்றும் முதலீடுகள் குறித்த பதிவுகள் நிறுவனம் அவரை ஒரு பணக்காரராக்கி இருப்பதை சுட்டிக் காட்டுகின்றன.[32] 1597 ஆம் ஆண்டில், ஸ்ட்ராட்ஃபோர்டில் இரண்டாவது மிகப்பெரிய வீடான நியூ ப்ளேஸை அவர் வாங்கினார். 1605 ஆம் ஆண்டில், ஸ்ட்ராட்ஃபோர்டு திருச்சபை வருவாய் பங்கில்அவர் முதலீடு செய்தார்.[33]
1594 ஆம் ஆண்டு முதல் சேக்சுபியரின் சில நாடகங்கள் குவார்டோ பதிப்புகளாக வெளியாகின. 1598 வாக்கில், அவரது பெயர் விற்பனை அம்சமாக மாறி முகப்பு பக்கங்களில் தோன்றத் துவங்கியிருந்தது.[34] நாடக ஆசிரியராக வெற்றி பெற்ற பிறகு சேக்சுபியர் தனது சொந்த நாடகங்கள் மற்றும் பிறரது நாடகங்களில் நடிப்பதைத் தொடர்ந்தார். பென் ஜான்சன் படைப்பு களின் 1616 ஆம் ஆண்டு பதிப்பு எவரி மேன் இன் ஹிஸ் ஹியூமர் (1598) மற்றும் செஜானஸ், அவரது வீழ்ச்சி (1603) ஆகிய நாடகங்களின் நடித்தவர் பட்டியலில் சேக்சுபியரின் பெயரைக் குறிப்பிடுகிறது.[35] 1605 ஆம் ஆண்டின் ஜான்சன்'ஸ் வோல்போன் நடிகர் பட்டியலில் அவர் பெயர் இல்லாதிருப்பது, அவரது நடிப்பு வாழ்க்கை முடிவை நெருங்கியதன் அடையாளம் என்று சில அறிஞர்கள் எடுத்துக் கூறுகின்றனர்.[36] ஆயினும், 1623 ஆம் ஆண்டின் தி ஃபர்ஸ்ட் ஃபோலியோ சேக்சுபியரை "இந்த அனைத்து நாடகங்களின் பிரதான நடிகர்களில்" ஒருவர் என்று பட்டியலிடுகிறது. இவற்றில் சில வோல்போனுக்கு பிறகு தான் முதன்முறையாக அரங்கேற்றப்பட்டவை, ஆயினும் அவர் ஏற்ற பாத்திரங்கள் என்ன என்பது நமக்கு உறுதிபடத் தெரியவில்லை.[37][38] 1709 ஆம் ஆண்டில், சேக்சுபியர் ஹேம்லெட்டின் அப்பாவின் ஆவி பாத்திரத்தை ஏற்றதாக ஒரு கூற்றும் பிறந்தது.[39] அவர் அஸ் யூ லைக் இட் நாடகத்தில் ஆதாம் வேடமும் ஹென்றி V நாடகத்தில் கோரஸ் வேடமும் கூட ஏற்றிருக்கிறார் என்பதாக பிந்தைய கூற்றுகள் கூறி வந்தன,[40] ஆனால் இந்த தகவல்களின் மூலங்கள் குறித்து அறிஞர்கள் சந்தேகம் கொள்கிறார்கள்.[41]
சேக்சுபியர் தனது தொழில் வாழ்க்கையின் போது தனது காலத்தை லண்டன் மற்றும் ஸ்ட்ராட்ஃபோர்டுக்கு இடையில் பிரித்துக் கொண்டார். 1596 ஆம் ஆண்டில், அவர் ஸ்ட்ராட்ஃபோர்டில் தனது குடும்ப இல்லமான நியூ ப்ளேஸை வாங்குவதற்கு ஒரு வருடம் முன்னதாக, தேம்ஸ் நதிக்கரையின் வடக்குப் பகுதியில் வசித்து வந்தார்.[42] 1599 வாக்கில், நதியைக் கடந்து சவுத்வார்க்கிற்கு நகர்ந்தார். அவரது நிறுவனம் அந்த ஆண்டில் அங்கு குளோப் தியேட்டரை கட்டியிருந்தது.[43] 1604 வாக்கில், அவர் மீண்டும் நதியின் தெற்கில் சென்று விட்டார். அங்கே அவர் கிறிஸ்டோபர் மவுண்ட்ஜாய் எனும் பெண்களின் தலையலங்காரங்கள் தயாரிப்பாளரான பிரெஞ்சு ஹயூக்னாட்டிடம் வாடகைக்கு அறைகளை அமர்த்திக் கொண்டார்.[44]
பிந்தைய வருடங்களும் இறப்பும்[தொகு]
சேக்சுபியர் தான் இறப்பதற்கு சில வருடங்களுக்கு முன்னதாக ஸ்ட்ராட்போர்டில் ஓய்வுற்றார் என்பதான கருத்தினை முதல்முதலில் வாழ்க்கைவரலாற்று ஆசிரியர் ரோவ் குறிப்பிட்டார்.[45] ஆனால் அனைத்து வேலைகளில் இருந்தும் ஓய்வு என்பது அந்த சமயத்தில் சாதாரண நிகழ்வு அல்ல.[46] சேக்சுபியர் தொடர்ந்து லண்டனுக்கு பயணம் செய்து கொண்டிருந்தார்.[45] 1612 ஆம் ஆண்டில் மவுண்ட்ஜாயின் மகளான மேரியின் திருமணம் குறித்த நீதிமன்ற வழக்கில் அவர் ஒரு சாட்சியாக அழைக்கப்பட்டார்.[47][48] 1614 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து தனது மருமகனான ஜான் ஹால் உடன் பல வாரங்கள் லண்டனில் இருந்தார்.[49]
1606-1607 காலத்துக்குப் பிறகு, சேக்சுபியர் சில நாடகங்கள் மட்டுமே எழுதினார். 1613 காலத்துக்கு பிந்தையவற்றில் எதுவும் அவர் எழுதியதாகத் தெரியவில்லை.[50] அவரது கடைசி மூன்று நாடகங்கள் கூட்டுமுயற்சிகளாக இருந்தன. அநேகமாக கிங்'ஸ் மென் குழுவுக்கு குழு நாடக ஆசிரியராக அவருக்கு பின் வந்த ஜான் பிளட்சர்,[51] உடன் சேர்ந்து உருவாக்கியதாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.[52]
சேக்சுபியர் 23 ஏப்ரல் 1616[53] அன்று இறந்தார். அவருக்கு ஒரு மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருந்தனர். சுசானா ஜான் ஹால் என்னும் ஒரு மருத்துவரைத் திருமணம் செய்து கொண்டார்.[54] ஜூடித் சேக்சுபியர் இறப்பதற்கு இரண்டு மாதங்கள் முன்னதாக தாமஸ் குவினி என்னும் தேறல் விற்பவரை திருமணம் செய்து கொண்டார்.[55]
தனது உயிலில், சேக்சுபியர் தனது பெரிய மலைத்தோட்டத்தின் பெரும்பகுதியை தனது மூத்த மகளான சுசான்னாவுக்கு எழுதி வைத்தார்.[56] அதன் வாசகங்கள் அதனை சுசானா தனது "உடல்வழியான முதல் மகனுக்கு" வழங்க வேண்டும் என்று தெரிவித்தன.[57] குவினிஸ்க்கு மூன்று குழந்தைகள். அனைவருமே திருமணமாகாமலேயே இறந்து விட்டனர்.[58] ஹால்ஸுக்கு எலிசபெத் என்னும் ஒரு பிள்ளை இருந்தார். இவர் இருமுறை திருமணம் செய்தும் குழந்தை எதுவும் இன்றி 1670 ஆம் ஆண்டில் இறந்து, சேக்சுபியரின் நேரடி வாரிசு வரிசையை முடித்து வைத்தார்.[59] சேக்சுபியரின் உயில் அவரது மனைவி ஆனி குறித்து குறைவான இடங்களிலேயே குறிப்பிடுகிறது. அவருக்கு அநேகமாக அவரது தேயிலைத் தோட்டத்தில் மூன்றில் ஒரு பகுதி தானாக சென்று சேர்ந்திருக்க வேண்டும். ஆயினும் அவருக்கு "எனது இரண்டாவது சிறந்த படுக்கை"யை விட்டுச் செல்வதாக சேக்சுபியர் குறிப்பிட்டிருந்தார், சேக்சுபியரின் இந்த உயில்வாசகம் நிறைய ஊகங்களுக்கு இட்டுச் செல்கிறது.[60] சில அறிஞர்கள் இது ஆனியை அவமதிக்கும் வகையில் எழுதப்பட்டது என்கிறார்கள். மற்றவர்கள் இரண்டாவது சிறந்த படுக்கை என்பது திருமண படுக்கை என்பதாக இருக்க வேண்டும். எனவே முக்கியத்துவத்தில் செறிவானதாக இருக்க வேண்டும் என்று கருதுகின்றனர்.[61]
இறந்த இரண்டு நாட்களுக்குப் பின் சேக்சுபியர் புதைக்கப்பட்டார்.[62] அவரது கல்லறையில் இருக்கும் கல்லில் அவரது எலும்புகளை நகர்த்துவதற்கு எதிரான சாபம் பொறிக்கப்பட்டுள்ளது:
1623 ஆம் ஆண்டுக்கு முந்தைய ஒரு காலத்தில், அவரது நினைவாக வடக்கு சுவரில் நினைவுச்சின்னம் ஒன்று எழுப்பப்பட்டது. அதில் அவரது பாதி உருவம் எழுதிக் கொண்டிருப்பது போல் இருந்தது. அதில் பொறிக்கப்பட்டிருக்கும் தகடு அவரை நெஸ்டர், சாக்ரடீஸ், மற்றும் வர்ஜில் உடன் ஒப்பிடுகிறது.[63][64]
சேக்சுபியர் உலகெங்கிலும் உள்ள பல்வேறு சிலைகள் மற்றும் நினைவகங்களில் போற்றப்படுகிறார்.
நாடகங்கள்[தொகு]
சேக்சுபியரின் எழுத்து வாழ்க்கையில் அறிஞர்கள் அடிக்கடி நான்கு காலகட்டங்களைக் குறிப்பிடுகின்றனர்.[65] 1590களின் மத்தியகாலம் வரை, ரோமானிய மற்றும் இத்தாலிய மாதிரிகளின் பாதிப்புடனான நகைச்சுவை நாடகங்களையும், காலக்கிரம மரபிலான வரலாற்று நாடகங்களையும் தான் அவர் பிரதானமாக எழுதினார் என்று பரவலாக நம்பப்படுகிறது. அவரது இரண்டாவது காலகட்டம் சுமார் 1595 வாக்கில் ரோமியோ ஜூலியட் என்னும் துன்பியல் நாடகத்துடன் தொடங்கி 1599 ஆம் ஆண்டில் ஜூலியஸ் சீசர் என்னும் துன்பியல் நாடகத்துடன் முடிந்தது. இந்த காலகட்டத்தின் போது தான், அவர் அவரின் மிகப்பெரும் படைப்புகளாகக் கருதப்படும் மிகப்பெரும் நகைச்சுவைகள் மற்றும் வரலாறுகளை எழுதினார். சுமார் 1600 ஆம் ஆண்டுக் காலம் தொடங்கி சுமார் 1608 ஆம் ஆண்டுக் காலம் வரையிலும், தனது "துன்பியல் காலகட்ட"த்தில் சேக்சுபியர் பெரும்பாலும் துன்பியலையே எழுதினார். சுமார் 1608 ஆம் ஆண்டுக் காலம் முதல் 1613 ஆம் ஆண்டுக் காலம் வரை துன்பியல்நகைச்சுவைகளை அவர் பிரதானமாக எழுதினார்.
சேக்சுபியரின் முதல் பதிவு செய்த படைப்புகள் ரிச்சர்டு III மற்றும் ஹென்றி VI படைப்பின் மூன்று பாகங்கள் ஆகும். இது 1590களின் ஆரம்பத்தில் வரலாற்று நாடகம் வழக்கத்தில் இருந்த ஒரு காலகட்ட சமயத்தில் எழுதப்பட்டதாகும். சேக்சுபியரின் நாடகங்கள் தேதி குறிப்பிட சிரமமானவை. ஆனால்[66] டைடஸ் ஆன்ட்ரோனிகஸ் , தி காமெடி ஆஃப் எரர்ஸ் , தி டேமிங் ஆஃப் தி ஷ்ரூ மற்றும் டூ ஜென்டில்மென் ஆஃப் வெரோனா ஆகிய நாடகங்களும் சேக்சுபியரின் ஆரம்ப காலத்தை சேர்ந்தவையாகவே இருக்க வேண்டும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன.[67] அவரது முதல் வரலாற்று படைப்புகள் [68] பலவீனமான அல்லது ஊழல் ஆட்சியின் சீரழிவான விளைவுகளை நாடகப்படுத்துகின்றன. இவை ட்யூடர் வம்ச மூலங்களை நியாயப்படுத்துவதாக அமைந்திருந்ததாக பொருள்கொள்ளப்படுகிறது.[69] ஆரம்ப நாடகங்கள் பிற எலிசபெத் நாடக ஆசிரியர்கள், குறிப்பாக தாமஸ் கிட் மற்றும் கிறிஸ்டோபர் மர்லோ ஆகியோர், மற்றும் மத்தியகால நாடகங்களின் மரபுகள் மற்றும் செனகாவின் நாடகங்கள் ஆகியவற்றில் இருந்தான பாதிப்புகளைக் கொண்டிருந்தன.[70] தி காமெடி ஆஃப் எரர்ஸ் நாடகமும் செவ்வியல் மாதிரிகளை அடிப்படையாகக் கொண்டிருந்தது.[71] இரண்டு நண்பர்கள் பாலியல் பலாத்காரத்திற்கு ஒப்புதலளிப்பது போல் தோன்றக் கூடிய டூ ஜென்டில்மென் ஆஃப் வெரோனா போலவே,[72] ஒரு ஆணால் ஒரு பெண்ணின் சுயாதீனமான மனம் முடக்கப்படுவதை சொல்லும் ஷ்ரூ வின் கதையும் சில சமயங்களில் நவீன கால விமர்சகர்களையும் இயக்குநர்களையும் பாதிக்கிறது.[73]
சேக்சுபியரின் ஆரம்ப கால செவ்வியல் மற்றும் இத்தாலிய வகை நகைச்சுவை நாடகங்கள், 1590களின் மத்தியில் அவரது மிகப்பெரும் நகைச்சுவைக் காதல் காவிய சூழல்வகைக்கு வழிவிட்டது.[74][75] தி மெர்ச்சன்ட் ஆஃப் வெனிஸ் , வஞ்சகமான யூத வட்டிக்கடைக்காரரான ஷைலாக்கின் சித்தரிப்பை கொண்டிருந்தது. இது எலிசபெத்திய பார்வைகளைப் பிரதிபலித்தது ஆனால் நவீனகால பார்வையாளர்களுக்கு இது அவமதிப்பான சித்தரிப்பாக தோன்றலாம்.[76] மச் அடூ அபவுட் நத்திங் கின் நகைச்சுவை மற்றும் வார்த்தை வசனம்,[77] அஸ் யூ லைக் இட் டின் மனதை மயக்கும் கிராம அமைப்பு, மற்றும் ட்வெல்த் நைட் டின் உயிரோட்டமான ஆனந்தம் ஆகியவை சேக்சுபியரின் பெரும் நகைச்சுவை நாடக வரிசையை நிறைவு செய்கின்றன.[78] ஏறக்குறைய முழுமையாக செய்யுள் கொண்டே எழுதப்பட்ட கவிதைவயமான ரிச்சர்டு II க்கு பிறகு, சேக்சுபியர் 1590களின் பிற்பகுதியில் வரலாறுகளில் ஹென்றி IV, பகுதிகள் 1 மற்றும் 2 , மற்றும் ஹென்றி V ஆகிய உரை நகைச்சுவையை அறிமுகம் செய்தார். நகைச்சுவை காட்சிகளுக்கும் தீவிர காட்சிகளுக்கும் இடையில், உரை மற்றும் கவிதைக்கு இடையில் என அவர் நுட்பமாக திருப்பக் கூடியவர் என்பதால் அவரது பாத்திரங்கள் கூடுதல் சிக்கலானவையாகவும் நுட்பமானவையாகவும் இருந்தன. அத்துடன் அவரது முதிர்ந்த படைப்பின் விவரிப்பில் பன்முகத்தன்மையையும் இருந்தது.[79] இந்த காலகட்டத்தின் தொடக்கமும் முடிவுமாய் இரண்டு துன்பியல் நாடகங்கள் இருந்தன. ரோமியோ ஜூலியட் நாடகம் பாலியல் எண்ணம் செறிந்த பருவகால வயது, காதல் மற்றும் மரணம் இவற்றினாலான புகழ்பெற்ற காதல் வீரத் துன்பியல் நாடகம் ஆகும்;[80] மற்றும் ஜூலியஸ் சீசர் - இது சர் தாமஸ் நார்த் 1579 ஆம் ஆண்டில் எழுதிய புளூடார்க்கின் பேரலல் லைவ்ஸ் மொழிபெயர்ப்பை அடிப்படையாகக் கொண்டது - ஒரு புதிய வகை நாடகத்தை அறிமுகம் செய்தது.[81] சேக்சுபியர் குறித்த ஆராய்ச்சி அறிஞரான ஜேம்ஸ் ஷப்ரியோ கூற்றுப்படி, ஜூலியஸ் சீசரில் "அரசியல், பாத்திரப்படைப்பு, உள்முகப்பார்வை, சமகால நிகழ்வுகள், இன்னும் எழுதுவதில் சேக்சுபியரின் சொந்த பிரதிபலிப்புகள் இவற்றின் வெவ்வேறு பரிமாணங்களும் ஒன்றுடன் ஒன்று பின்னிக் கொண்டிருந்தன".[82]
சேக்சுபியரின் "துன்பியல் காலகட்டம்" சுமார் 1600 தொடங்கி 1608 வரை நீடித்தது,[d] மெஷர் ஃபார் மெஷர் , டிராய்லஸ் மற்றும் கிரெசிடா , மற்றும் ஆல்'ஸ் வெல் தேட் என்ட்ஸ் வெல் ஆகிய "பிரச்சினை நாடகங்கள்" என்பனவற்றையும் அவர் இதே காலத்தில் எழுதினார்.[83] சேக்சுபியரின் மகத்தான துன்பியல்கள் தான் அவரது கலையின் உச்சத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாக பல விமர்சகர்கள் கருதுகின்றனர். முதலாவதன் நாயகன் ஹேம்லெட் தான் வேறு எந்த சேக்சுபியர் பாத்திரத்தை விடவும் அதிகமாக விவாதிக்கப்பட்ட ஒரு பாத்திரப் படைப்பு. குறிப்பாக "இப்படி இருப்பதா அல்லது வேண்டாமா; அது தான் கேள்வி" என்று தனக்குத் தானே அவன் கூறி கொள்ளும் மனவொலி மிகப் பிரபலமானது.[84] தனக்குத்தானே மருகிக் கொள்ளும் ஹேம்லெட் - தயக்கம் தான் இவனது மரணத் தவறு - போலல்லாமல் அடுத்து வந்த துன்பியல்களின் நாயகன்களான, ஓதெல்லோ மற்றும் கிங் லியர், அவசர முடிவுகளின் தவறுகளால் மாட்டிக் கொண்டார்கள்.[85] சேக்சுபியரின் துன்பியல்களின் கதைக்களம் பெரும்பாலும் இத்தகைய மரணத் தவறுகள் அல்லது பிழைகளின் மீது தொங்குகின்றன. இவை ஒழுங்கைப் புரட்டுவதுடன் நாயகனையும் அவன் நேசிப்பவர்களையும் சீரழிக்கின்றன.[86] ஓதெல்லோ வில், தன்னை நேசிக்கும் அப்பாவி மனைவியை தான் கொலை செய்யும் அளவுக்கு ஓதெல்லோவின் பாலியல் பொறாமையுணர்வை வில்லன் லகோ தூண்டிவிடுகிறான்.[87] கிங் லியரில் , பழைய ராஜா தனது அதிகாரங்களைத் துறப்பது என்னும் துன்பியல் தவறை செய்து விடுகிறார். இது அவரது மகளின் கொலைக்கும் கிளவ்செஸ்டர் இயர்ல் சித்திரவதை செய்யப்பட்டு குருடாக்கப்படுவதற்கும் இட்டுச் செல்லும் நிகழ்வுகளுக்குத் துவக்கமளிக்கிறது. விமர்சகரான ஃபிராங்க் கெர்மோடேயின் கூற்றுப்படி, "இந்த நாடகம் தனது நல்ல பாத்திரங்களுக்கும் சரி தனது பார்வையாளர்களுக்கும் சரி கொடூரத்தில் இருந்து எந்த நிவாரணமும் அளிப்பதில்லை.[88] சேக்சுபியரின் துன்பியல் நாடகமான மக்பெத் தில்,[89] கட்டுப்படுத்தமுடியாத ஆசை மெகாபெத் மற்றும் அவரது மனைவியான லேடி மக்பெத்தை, உரிமையுள்ள அரசரைக் கொன்று அவரது மகுடத்தை அபகரிக்கத் தூண்டுகிறது. பதிலுக்கு அவர்களது சொந்த குற்ற உணர்ச்சியே அவர்களை சீரழிக்கிறது.[90] இந்த நாடகத்தில், துன்பியல் கட்டமைப்புக்கு ஒரு அமானுடக் கூறினை சேக்சுபியர் சேர்க்கிறார். அவரது இறுதிப் பெரும் துன்பியல்களான, அந்தோனி கிளியோபாட்ரா மற்றும் கோரியாலானஸ் , ஆகியவை சேக்சுபியரின் மிகச்சிறந்த கவிதைகளில் சிலவற்றைக் கொண்டிருக்கின்றன. இவை தான் அவரது மிகவும் வெற்றிகரமான துன்பியல்களாக கவிஞர் மற்றும் விமர்சகரான டி.எஸ்.எலியட் கருதினார்.[91]
தனது இறுதிக் காலகட்டத்தில் சேக்சுபியர் சிம்பிலைன் , தி வின்டர்'ஸ் டேல் மற்றும் தி டெம்பஸ்ட் ஆகிய மூன்று பெரும் நாடகங்களையும் அத்துடன் கூட்டுப்படைப்பான பெரிகிள்ஸ், பிரின்ஸ் ஆஃப் டயர் நாடகத்தையும் நிறைவு செய்தார்.[92] சேக்சுபியர் தன் பங்குக்கு வாழ்க்கையை அமைதியாகப் பார்க்கத் தொடங்கியிருந்ததற்கு இந்த நாடகங்களின் மனோநிலை மாற்றம் ஒரு சான்று என்று சில வர்ணனையாளர்கள் குறிப்பிடுகிறார்கள். ஆனால் அது அந்நாளின் நாடக அரங்கு பாணியை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்துபவையாகவும் இருந்திருக்கலாம்.[93] அதற்குப் பின்னும் ஹென்றி VIII மற்றும் தி டூ நோபிள் கின்ஸ்மென் ஆகிய இரண்டு நாடகங்களில் சேக்சுபியர் அநேகமாக ஜான் ஃபிளெட்சர் என்கிற நாடகாசிரியருடன் இணைந்து பணியாற்றினார்.[94]
நாடக நிகழ்ச்சிகள்[தொகு]
சேக்சுபியர் தனது ஆரம்ப நாடகங்களை எந்த நிறுவனங்களுக்காக எழுதினார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. டைடஸ் ஆன்ட்ரோனிகஸின் 1594 ஆம் ஆண்டுப் பதிப்பின் முகப்புப் பக்கம் இந்த நாடகம் மூன்று வெவ்வேறு நாடகக்குழுக்களால் அரங்கேற்றப்பட்டதை வெளிப்படுத்துகிறது.[95] 1592-3 பிளேக் பாதிப்புகளுக்குப் பிறகு, சேக்சுபியரின் நாடகங்கள் தேம்ஸின் வடக்கில் ஷோர்டிச்சில் உள்ள தி கர்டெயின் அரங்கில் அவரது சொந்த நிறுவனத்தாலேயே நடத்தப்பட்டன.[96] ஹென்றி IV நாடகத்தை அங்கு காண லண்டன்வாசிகள் இந்நாடகங்களுக்கு கூட்டம் கூட்டமாய் திரண்டனர்.[97] இந்த நிறுவனம் இடமுதலாளியுடன் மோதலுக்கு பிறகு, தி தியேட்டர் அரங்கை மூடிவிட்டு அதன் பலகைகளைக் கொண்டே குளோப் திரையரங்கைக் கட்டியது. தேம்ஸின் தெற்குக் கரையில் சவுத்வார்க்கில் கட்டப்பட்டதான இந்த நாடக அரங்கு தான் நடிகர்களுக்காக நடிகர்களால் எழுப்பப்பட்ட முதல் நாடக அரங்காகும்.[98] 1599 ஆம் ஆண்டின் வசந்த காலத்தில் குளோப் திரையரங்கு திறக்கப்பட்டது. அதில் அரங்கேற்றப்பட்ட முதல் நாடகங்களில் ஒன்று ஜூலியஸ் சீசர் ஆகும். 1599 ஆம் ஆண்டுக்குப் பிந்தைய சேக்சுபியரின் மகத்தான நாடகங்களில் பலவும் குளோப் திரையரங்கிற்காக எழுதப்பட்டவையே. ஹேம்லெட் , ஓதெல்லோ மற்றும் கிங் லியர் ஆகிய நாடகங்களும் இதில் அடங்கும்.[99]
லார்டு சாம்பர்ளின்'ஸ் மென் என்பது 1603 ஆம் ஆண்டில் கிங்'ஸ் மென் என்பதாக பெயர்மாற்றம் கண்டபின், புதிய அரசரான ஜேம்ஸ் உடன் அவர்கள் ஒரு சிறப்பான உறவுக்குள் நுழைந்தனர். நாடக நிகழ்ச்சிப் பதிவுகள் தெளிவின்றியே இருக்கின்றன எனினும், நவம்பர் 1, 1604 மற்றும் அக்டோபர் 31, 1605 ஆகிய காலத்துக்கு இடையே அவையில் சேக்சுபியரின் நாடகங்களில் ஏழு நடத்திக் காட்டப்பட்டதாய் தெரிகிறது. தி மெர்ச்சென்ட் ஆஃப் வெனிஸின் இரு நிகழ்ச்சிகளும் இதில் அடங்கும்.[100] 1608 ஆம் ஆண்டுக்குப் பிறகு, குளிர்காலத்தில் அவர்கள் பிளாக்ஃபிரையர்ஸ் உள்ளரங்கில் நிகழ்ச்சிகள் நடத்தினர். கோடைகாலத்தின் போது குளோப் திரையரங்கில் நடத்தினர்.[101] ஆடம்பரமான மேடையமைப்புகளுடனான ஜேகோபியன் வகை உள்புற அமைவு, விரிவான நாடக சாதனங்களை அறிமுகப்படுத்துவதற்கு சேக்சுபியரை அனுமதித்தது. உதாரணமாக, சிம்பிலைனில் ஜூபிடர் கழுகில் அமர்ந்து இடி மற்றும் மின்னல் மீது இறங்குகிறார். அவர் ஒரு மின்னலைத் தூக்கியெறிகிறார். பேய்கள் மண்டியிடுகின்றன.[102]
பிரபலமான ரிச்சர்டு புர்பேஜ், வில்லியம் கெம்பெ, ஹென்றி கோன்டெல் மற்றும் ஜான் ஹெமிங்ஸ் ஆகியோர் சேக்சுபியர் நிறுவன நடிகர்களில் நன்கறியப்பட்டவர்கள் ஆவர். ரிச்சர்டு III , ஹேம்லட், ஓதெல்லோ மற்றும் கிங் லியர் உள்ளிட்ட சேக்சுபியரின் நாடகங்கள் பலவற்றின் முதல் நிகழ்ச்சிகளில் முன்னணிப் பாத்திரத்தை புர்பேஜ் தான் ஏற்றார்.[103] பிரபலமான நகைச்சுவை நடிகரான வில் கெம்பெ ரோமியோ ஜூலியட் டில் பீட்டர் எனும் வேலைக்காரன் வேடமும் மச் அடூ எபவுட் நத்திங் நாடகத்தில் டாக்பெரி பாத்திரமும் ஏற்றார்.[104] பதினாறாம் நூற்றாண்டின் திருப்பவாக்கில் அவர் இடத்தில் ராபர்ட் ஆர்மின் இடம்பெற்றார்.[105] ஹென்றி VIII "செழுமை மற்றும் கொண்டாட்டத்தின் பல அசாதாரண சூழ்நிலைகள் கொண்டு அமைக்கப்பட்டிருந்ததாக" 1613 ஆம் ஆண்டில் சர் ஹென்றி வோட்டன் பதிவு செய்தார்.[106] ஆயினும் 29 ஜூன் அன்று, ஒரு ரவை குளோப் அரங்கின் கூரையை தீக்கிரையாக்கி நாடக அரங்கை தரைமட்டமாக்கியது. சேக்சுபியரின் நாடகம் ஒன்றை துல்லியமான தேதியுடன் குறிப்பிடும் ஒரு நிகழ்வாகும் இது.[106]
மூலஉரை[தொகு]
1623 ஆம் ஆண்டில், கிங்'ஸ் மென் குழுவில் சேக்சுபியரின் நண்பர்களாக இருந்த ஜான் ஹெமிங்க்ஸ் மற்றும் ஹென்றி கோன்டெல் ஆகிய இருவரும் ஃபர்ஸ்ட் ஃபோலியோ என்னும் சேக்சுபியர் நாடகத் தொகுப்பை வெளியிட்டனர். இது 36 மூல உரைகளைக் கொண்டது.[107] பல நாடகங்கள் ஏற்கனவே குவார்டோ - காகிதம் இருமுறை மடிக்கப்பட்டு நான்கு இதழ்களாக ஆக்கப்பட்டு உருவாக்கப்படும் புத்தகங்கள் - பதிப்புகளில் தோன்றியிருந்தன.[108] சேக்சுபியர் இந்த பதிப்புகளுக்கு ஒப்புதலளித்தற்கு எந்த ஆதாரமுமில்லை. இதனை ஃபர்ஸ்ட் ஃபோலியோ "திருடப்பட்ட அதிகாரப்பூர்வமற்ற நகல்கள்" என்று விவரிக்கிறது.[109] ஆல்பிரட் போலார்டு சிலவற்றை "மோசமான குவார்டோக்கள்" என்று குறிப்பிட்டார்.[110] ஒரு நாடகத்தின் பல்வேறு பதிப்புகள் வாழ்ந்தாலும் கூட, ஒவ்வொன்றும் மற்றொன்றில் இருந்து வேறுபடுவதாய் இருக்கிறது. நகலெடுப்பது அல்லது அச்செடுப்பதிலான பிழைகளில் இருந்து, நடிகர்கள் அல்லது பார்வையாளர் உறுப்பினர்களிடமிருந்தான குறிப்புகளில் இருந்து, அல்லது சேக்சுபியரின் சொந்த தாள்களில் இருந்தே கூட இந்த வேறுபாடுகள் தோன்றியிருக்கலாம்.[111][112]
கவிதைகள்[தொகு]
1593 மற்றும் 1594 ஆம் ஆண்டில், பிளேக் நோய் பரவியதன் காரணமாக நாடக அரங்குகள் எல்லாம் மூடப்பட்டபோது, காமக் கருப்பொருளுடனான வீனஸ் அன் அடோனிஸ் மற்றும் தி ரேப் ஆஃப் லுக்ரிஸ் ஆகிய இரண்டு விவரிப்பு கவிதைகளை சேக்சுபியர் வெளியிட்டார். வீனஸ் அன் அடோனிஸில் , அப்பாவியான அடோனிஸ் வீனஸின் பாலியல் முன்னேற்றங்களை நிராகரிக்கிறார். தி ரேப் ஆஃப் லுக்ரிஸில் , கற்புடை மனைவியான லுக்ரிஸ் காமம் கொண்ட டர்குவினால் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார்.[113] ஓவிடின் கற்பனைக் கவிதைக் கதை களின் பாதிப்பில்,[114] இந்த கவிதைகள் கட்டுப்படுத்த முடியாத காமத்தினால் விளையும் குற்ற உணர்வையும் அறவியல் குழப்பத்தையும் காட்டுகின்றன.[115] இரண்டுமே பிரபலமானதோடு, சேக்சுபியரின் வாழ்நாள் காலத்திலேயே மறுபிரசுரம் செய்யப்பட்டன. மூன்றாவது விவரிப்பு கவிதையான, எ லவர்' ஸ் கம்ப்ளெயின்ட் டில் ஒரு இளம் பெண் தான் பாலியல் ஆசைக்கு தூண்டப்படுவது குறித்து புலம்புகிறாள். இது 1609 ஆம் ஆண்டில் செய்யுள் கவிதை வடிவில் முதல் பதிப்பு அச்சிடப்பட்டது. அநேக அறிஞர்கள் இப்போது சேக்சுபியர் தான் எ லவர்'ஸ் கம்ப்ளெயின்ட் எழுதினார் என ஒப்புக் கொள்கிறார்கள்.[116] 1599 ஆம் ஆண்டில் 138 மற்றும் 144 செய்யுள்களின் இரண்டு ஆரம்ப வரைவுகள் சேக்சுபியரின் அனுமதியின்றி அவரது பெயரைப் போட்டு தி பாசனெட் பில்கிரிமில் தோன்றின.[117]
செய்யுள் கவிதைகள்[தொகு]
செய்யுள் கவிதை கள் தான் அச்சிலேறிய சேக்சுபியரின் நாடகமல்லாத படைப்புகளில் இறுதியானவை. 154 செய்யுள் கவிதைகளில் ஒவ்வொன்றும் எப்போது தொகுக்கப்பட்டவை என்பதை அறிஞர்களால் உறுதியாகக் கூற முடியவில்லை. ஆனால் தனிப்பட்ட வாசகர்களுக்காக தனது தொழில் வாழ்க்கைக் காலம் முழுவதும் சேக்சுபியர் செய்யுள் கவிதைகளை எழுதினார் என்பதை ஆதாரங்கள் வெளிப்படுத்துகின்றன.[118] உரிய அனுமதியின்றி இரண்டு செய்யுள் கவிதைகள் 1599 தி பாஸனேட் பில்கிரிம் படைப்பில் தோன்றி விடுவதற்கு முன்பே, சேக்சுபியரின் "தனிப்பட்ட நண்பர்களுக்கான செய்யுள் கவிதைகள்" குறித்து பிரான்சிஸ் மெரிஸ் 1598 ஆம் ஆண்டில் குறிப்பு வெளியிட்டிருக்கிறார்.[119] வெளியிடப்பட்ட தொகுப்பு சேக்சுபியர் விரும்பிய வரிசையில் அமைந்தது என்பதை குறைவான ஆய்வாளர்களே நம்புகின்றனர்.[120] அவர் இரண்டு வேறுபாடான வரிசைகளை திட்டமிட்டதாகத் தோன்றுகிறது. கருப்பு நிற தோற்றத்துடனான திருமணமான பெண் ஒருவரின் கட்டுப்படுத்த முடியாத காமம் குறித்த (தி "டார்க் லேடி") என்கிற ஒரு படைப்பையும், இன்னொன்று ஒரு சிவப்பான இளம் ஆணின் மோதலுக்குட்படும் காதல் குறித்த (தி "ஃபேர் யூத்") என்னும் படைப்பையும் அவர் உருவாக்கினார். இந்த பாத்திரங்கள் உண்மையான தனிநபர்களைக் குறிக்கிறதா, அல்லது "நான்" என்று அவர்களைக் குறிப்பிடும் தொனியில், சேக்சுபியர் தன்னைத் தானே பிரதிநிதித்துவப்படுத்துகிறாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் இந்த செய்யுள்கள் கொண்டு "சேக்சுபியர் தனது இதயத்தைத் திறந்தார்" என்று வேர்ட்ஸ்வொர்த் நம்பினார்.[121][122] காதல், பாலியல் நேசம், புனருற்பத்தி, மரணம் மற்றும் காலம் ஆகியவற்றின் மீதான ஆழமான தியானம் என்பதாக இந்த செய்யுள் கவிதைகளை விமர்சர்கள் புகழ்கிறார்கள்.[123]
நடை[தொகு]
சேக்சுபியரின் முதல் நாடகங்கள் அன்றைய நாளின் வழக்கமான நடையில் இருந்தன.[124] கவிதை நீண்ட, சில சமயங்களில் விரிவான உருவகம் மற்றும் கற்பனைப் புனைவுகளை சார்ந்திருந்தது. மொழி பல சமயங்களில் ஆரவாரமானதாக இருந்தது - நடிகர்கள் பேசுவதைக் காட்டிலும் முழக்கமிடும் வகையானதாக. உதாரணமாக, டைடஸ் ஆன்ட்ரோனிகஸின் மகத்தான வசனங்கள் தான் இயக்கத்தை தூக்கி நிறுத்துகின்றன என்று சில விமர்சகர்கள் கருதுகிறார்கள்.[125]
ஆயினும், விரைவில் மரபான நடையை தனது சொந்த நோக்கங்களுக்கேற்ப மாற்றினார் சேக்சுபியர். ரிச்சர்டு III நாடகத்தில் ஆரம்பத்தில் வரும் மனவொலி தனது வேர்களை மத்தியகால நாடகத்தின் வைஸின் சுய பிரகடனத்தில் கொண்டுள்ளது. அதே சமயத்தில், ரிச்சர்டின் தெளிவான சுய விழிப்புணர்வு சேக்சுபியரின் முதிர்ச்சியான நாடகங்களின் மனவொலிகளில் இருந்து எடுத்துக் கொள்ளப் பார்க்கின்றன.[126] மரபான நடையில் இருந்து சுதந்திர நடைக்கான மாற்றத்தை அடையாளப்படுத்துவதாக எந்த ஒரு ஒற்றை நாடகத்தையும் குறிப்பிட முடியாது. தனது தொழில்வாழ்க்கை முழுவதிலும் சேக்சுபியர் இந்த இரண்டையும் இணைத்துப் பயன்படுத்தினார். ரோமியோ ஜூலியட் தான் நடைகளை இணைப்பதற்கு மிகச் சிறந்த உதாரணமாகும்.[127] 1590களின் மத்தியிலான ரோமியோ ஜூலியட் , ரிச்சர்டு II , மற்றும் எ மிட்சம்மர் நைட்'ஸ் ட்ரீம் ஆகியவற்றின் சமயத்தில், சேக்சுபியர் கூடுதல் இயல்பான கவிதைகளை எழுதத் துவங்கியிருந்தார். தனது உருவகங்கள் மற்றும் பிம்பங்களை அதிகமாக தனது நாடகத்தின் தேவைகளுக்கேற்ற வகையில் அவர் மேம்படுத்தி வந்தார்.
ஹேம்லெட் நாடகத்துக்குப் பின் சேக்சுபியர் தனது கவிதை நடையை மேலும் மாற்றினார். இந்த நடை கூடுதல் துரிதமானதாகவும் பன்முகப்பட்டதாகவும், அத்துடன் கட்டுமானத்தில் வழக்கமானதாக இல்லாமல் அபூர்வமாகத் தான் திருப்பமுடைய நீள்வட்ட வடிவம் கொண்டதாகவும் இருந்ததாக இலக்கிய விமர்சகரான ஏ.சி.பிராட்லி விவரிக்கிறார்.[128] தனது தொழில்வாழ்க்கையின் கடைசிக் கட்டத்தில், இந்த விளைவுகளைச் சாதிக்க பல்வேறு நுட்பங்களை சேக்சுபியர் கையாண்டார். இரண்டாம் அடி கடந்தும் நீளும் வாக்கியம், ஒழுங்கற்ற நிறுத்தங்களும் புள்ளிகளும், மற்றும் வாக்கிய அமைப்பு மற்றும் நீளத்தில் அதிகமான மாறுபாடுகள் ஆகியவை இதில் அடங்கும்.[129]
சேக்சுபியரின் கவிதை மேதாவிலாசத்தில் நாடக அரங்கு குறித்த நடைமுறை உணர்வும் சேர்ந்திருந்தது.[130] அந்த காலத்தின் அனைத்து நாடக ஆசிரியர்களையும் போலவே, பெட்ரார்க் மற்றும் ஹோலின்ஷெட் ஆகிய மூலங்களில் இருந்து கதைகளை நாடகவயமாக்கினார்.[131] ஒவ்வொரு கதைக்களத்திலும் பல்வேறு ஆர்வ மையங்கள் உருவாகுமாறு மாற்றியமைத்த அவர், பார்வையாளர்களுக்கு ஒரு விவரிப்பின் அதிகப்பட்ச சாத்தியமான பக்கங்களைக் காட்டினார். ஒரு சேக்சுபியர் நாடகம், மொழிபெயர்ப்பு, வெட்டல், மற்றும் பரவலான பொருள்கொள்ளலிலும் நாடகத்தின் மையக்கருவுக்கு எந்த இழப்பும் இன்றி இருக்க முடிந்தது இந்த வடிவமைப்பின் வலிமையாக அமைந்தது.[132] சேக்சுபியரின் தேர்ச்சி வளர்ச்சி பெற்றபோது, அவர் தனது பாத்திரங்களுக்கு தெளிவான கூடுதல் பன்முகத்தன்மையுடனான ஊக்குவிப்புகளையும் வசனங்களின் தெளிவான வடிவங்களையும் கொடுக்க முடிந்தது. ஆயினும், தனது பிற்கால நாடகங்களில் அவரது ஆரம்ப கால நடையின் அம்சங்களைப் பாதுகாத்தார். தனது பிற்கால காதல்காவியங்களில் அவர் கூடுதல் செயற்கைப்பட்ட ஒரு நடைக்குத் திட்டமிட்டு திரும்பினார்.[133][e]
பாதிப்பு[தொகு]
சேக்சுபியரின் படைப்புகள் பின்னாளில் நாடகம் மற்றும் இலக்கியத்தில் நீடித்த படிமத்தை உருவாக்கியது. குறிப்பாக, பாத்திரப்படைப்பு, கதைக்களம், மொழி ஆகியவற்றின் நாடக வகைத் திறனை அவர் விரிவுபடுத்தினார்.[134] உதாரணமாக, ரோமியோ ஜூலியட் வரையில், காதல்காவியம் என்பது துன்பியலுக்கு உகந்தவையாகக் கருதப்படவில்லை.[135] மனவொலிகள் முக்கியமாக பாத்திரங்கள் அல்லது நிகழ்வுகள் குறித்த தகவல்களை வெளிப்படுத்தவே முக்கியமாக பயன்படுத்தப்பட்டு வந்தன; ஆனால் சேக்சுபியர் அவற்றை பாத்திரங்களின் மனதை ஆராய பயன்படுத்தினார்.[136] அவரது படைப்புகள் பிந்தையநாள் கவிதைகளை பெருமளவு பாதித்தது.காதல்காவியக் கவிஞர்கள் சேக்சுபியர் வகை செய்யுள் நாடகங்களுக்கு புத்துயிரூட்ட முயன்றனர். ஆயினும் அது அவ்வளவு வெற்றி பெறவில்லை. கொலிரிட்ஜ் முதல் டெனிசன் வரையான அனைத்து ஆங்கில கவிதை நாடகங்களுமே "சேக்சுபியர் கதைக்கருக்களின் மெல்லிய வேறுபட்ட வடிவங்களே" என்று விமர்சகர் ஜார்ஜ் ஸ்டெயினர் விவரித்தார்.[137]
தாமஸ் ஹார்டி, வில்லியம் ஃபால்க்னர், மற்றும் சார்லஸ் டிக்கன்ஸ் ஆகிய புதின எழுத்தாளர்களையும் சேக்சுபியர் பாதித்தார். டிக்கன்ஸ் அடிக்கடி சேக்சுபியரை மேற்கோளிடுவார். அவரது படைப்புகளின் தலைப்புகளில் 25 சேக்சுபியரின் படைப்புகளில் இருந்து எடுக்கப்பட்டதாகும். அமெரிக்க புதின ஆசிரியரான ஹெர்மன் மெல்விலின் மனவொலிகளில் அதிகமானவை சேக்சுபியருக்குக் கடன்பட்டவையாகும்; மோபி-டிக் கில் வரும் அவரது கேப்டன் அஹாப் பாத்திரம் சேக்சுபியரின் கிங் லியர் பாதிப்பில் உருவான தீரமிகுந்த நாயகன் ஆவார்.[138] 20,000 இசைத் துண்டுகளை சேக்சுபியரின் படைப்புகளுக்கு தொடர்புபடுத்தி அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்.[139] சேக்சுபியர் பல ஓவியர்களுக்கும் முன்மாதிரியாகத் திகழ்ந்திருக்கிறார். வில்லியம் ப்ளேக்கின் நண்பரான சுவிட்சர்லாந்து நாட்டின் ஹென்றி ஃபுயுஸ்லி என்னும் கலைஞர் மெகாபத் தை ஜெர்மனில் மொழிபெயர்க்கவும் சென்றார்.[140] மனோவியல் ஆய்வு நிபுணரான சிக்மன்ட் பிராய்டு சேக்சுபியர் மனோதத்துவம் என்ற ஒன்றை, குறிப்பாக மனித இயல்பு குறித்த அவரது தத்துவங்களுக்கு, ஹேம்லட்டில் இருந்து வரைந்தார்.
சேக்சுபியரது நாளில், ஆங்கில இலக்கணமும் உச்சரிப்பும் இப்போதை விடவும் குறைந்த தரநிர்ணயத்துடன் இருந்தன. அவரது ஆங்கில பயன்பாடு நவீன ஆங்கிலத்தை வடிவமைக்க உதவின.[141] சாமுவேல் ஜான்சன் தனது எ டிக்சனரி ஆஃப் தி இங்கிலீஷ் லாங்க்வேஜ் புத்தகத்தில் வேறு எந்த ஆசிரியரை விடவும் அதிகமான அளவில் சேக்சுபியரை மேற்கோள் காட்டுகிறார்.[142] "with bated breath (மெர்ச்சென்ட் ஆஃப் வெனிஸ் ) மற்றும் "a foregone conclusion" (ஓதெல்லோ ) ஆகிய சொற்றொடர்கள் அன்றாட ஆங்கிலப் பேச்சில் தங்களது இடத்தைப் பிடித்தன.[143]
விமர்சன மரியாதை[தொகு]
தன் வாழ்நாள் காலத்தில் சேக்சுபியர் ஒருபோதும் போற்றப்பட்டதில்லை. ஆனால் அவருடைய பங்கு புகழ் அவருக்கு கிடைத்தது.[144] 1598 ஆம் ஆண்டில் மதகுருவும் எழுத்தாளருமான ஃபிரான்சிஸ் மெரெஸ் ஆங்கில எழுத்தாளர்களின் குழு ஒன்றில் சேக்சுபியர் தான் நகைச்சுவை, துன்பியல் இரண்டிலும் "மிகவும் சிறந்த" எழுத்தாளர் எனத் தனிப்படுத்திக் காட்டினார்.[145] கேம்பிரிட்ஜ் செயின்ட் ஜான் கல்லூரியில் நாடக ஆசிரியர்கள் அவரை சாசர், கோவர் மற்றும் ஸ்பென்ஸர் ஆகியோருடன் வகையிட்டனர்.[146] ஃபர்ஸ்ட் ஃபோலியோவில், பென் ஜான்சன் சேக்சுபியரை "காலத்தின் ஆன்மா" என்று அழைத்தார். முன்பொரு முறை இன்னொரு இடத்தில் "சேக்சுபியருக்கு கலை அவசியமாயிருக்கிறது" என்று அவர் ஏளனமாய் குறிப்பிட்டிருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.[147]
1660 ஆம் ஆண்டில் முடியாட்சியின் மீட்டமைவுக்கும் பதினேழாம் நூற்றாண்டின் நிறைவுக்கும் இடையே, செவ்வியல் சிந்தனைகள் உபயோகத்தில் இருந்தன. இதன் விளைவாய், அக்காலத்தின் விமர்சகர்கள் அதிகமாக சேக்சுபியரை ஜான் ஃபிளட்சர் மற்றும் பென் ஜான்சனுக்கு கீழாகத் தான் மதிப்பிட்டனர்.[148] உதாரணமாக, துன்பியலுடன் நகைச்சுவையைக் கலப்பதற்காக தாமஸ் ரைமர் சேக்சுபியரைக் கண்டித்தார். ஆயினும், கவிஞரும் விமர்சகருமான ஜான் டிரைடன் சேக்சுபியரை உயர்வாக மதித்தார். ஜான்சன் பற்றி அவர் கூறும் போது, "ஜான்சனை நான் போற்றுகிறேன், ஆனால் சேக்சுபியரை நான் நேசிக்கிறேன்" என்றார்.[149] பல தசாப்தங்களுக்கு, ரைமரின் பார்வை தான் கோலோச்சியது. ஆனால் பதினெட்டாம் நூற்றாண்டு காலத்தில், சேக்சுபியரின் சொந்த கருப்பொருள் பக்கம் திரும்பிய விமர்சகர்கள், அதனை அவரது இயற்கையான மேதாவித்தனம் என்பதாக வர்ணித்தனர். அவரது படைப்பின் மீதான அறிஞர் பதிப்புகள் தொடர்ந்து நிகழ்ந்தது. குறிப்பாக சாமுவேல் ஜான்சனினது பதிப்பு 1765 ஆம் ஆண்டிலும், எட்மண்ட் மலோனினது பதிப்பு 1790 ஆம் ஆண்டிலும் வெளிவந்து அவரது அதிகரித்த மரியாதைக்கு மேலும் வலு சேர்த்தன.[150] 1800 ஆம் ஆண்டு வாக்கில், அவர் உறுதிப்பட தேசியக் கவிஞராய் போற்றுதலுக்குள்ளானார்.[151] பதினெட்டு மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில், அவரது புகழ் வெளிநாடுகளிலும் பரவியது. அவருக்காக குரல்கொடுத்தவர்களில் வால்டேர், கோயத், ஸ்டென்தால் மற்றும் விக்டர் ஹியூகோ ஆகிய எழுத்தாளர்களும் அடங்குவர்.[152]
காதல்காவிய சகாப்த காலத்தில், சேக்சுபியர் கவிஞரும் இலக்கிய தத்துவாசிரியருமான சாமுவேல் டெய்லர் கொலிரிட்ஜால் போற்றப்பட்டார். விமர்சகரான ஆகஸ்ட் வில்ஹெம் ஸ்க்லெகல் அவரது நாடகங்களை ஜெர்மன் காதல்காவிய பொருளில் மொழிபெயர்த்தார்.[153] பத்தொன்பதாம் நூற்றாண்டில், சேக்சுபியரின் மேதாவித்தனத்திற்கான புகழ் போற்றலின் எல்லையைத் தொட்டது.[154] "மன்னர் சேக்சுபியர்" என்று 1840 ஆம் ஆண்டில் கட்டுரையாசிரியரான தாமஸ் கார்லைல் எழுதினார்.[155] விக்டோரியா காலத்தவர்கள் அவரது நாடகங்களை பிரம்மாண்டமான அளவில் ஆடம்பர அதிசயங்களாகத் தயாரித்தனர்.[156] நாடக ஆசிரியரும் விமர்சகருமான ஜார்ஜ் பெர்னார்ட் ஷா சேக்சுபியரை தொழும் மரபினை கிண்டல் செய்தார். இப்சென் நாடகங்களின் புதிய இயல்புவாதம் சேக்சுபியரை காலத்திற்கொவ்வாததாக்கியிருப்பதாக அவர் தெரிவித்தார்.[157]
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் கலைகளில் நவீனத்துவ புரட்சியானது, சேக்சுபியரை ஒதுக்கவில்லை. மாறாக, அவரது படைப்புகளை கலைப் பரிசோதனையின் சேவையில் பட்டியலிட்டனர். ஜெர்மனியின் வெளிப்பாட்டுவாதிகளும் மாஸ்கோவின் எதிர்காலவாதிகளும் அவரது நாடகங்களின் தயாரிப்புகளை நிறுவினர். மார்க்சிய நாடக ஆசிரியரும் இயக்குநருமான பெர்டொல்ட் பிரெச்ட் சேக்சுபியரின் பாதிப்பில் ஒரு காவிய அரங்கை வடிவமைத்தார். கவிஞரும் விமர்சகருமான டி.எஸ்.எலியட் ஷாவுக்கு எதிராக வாதிடுகையில், சேக்சுபியரின் "அடிப்படைதன்மை" தான் உண்மையில் அவரை மிகவும் நவீனமாக்குவதாகக் கூறினார்.[158] எலியட், ஜி. வில்சன் நைட் மற்றும் புதிய விமர்சனவாத பள்ளி உடன் இணைந்து, சேக்சுபியரின் படிமங்களை நெருக்கமாக கற்கும் ஒரு இயக்கத்திற்கு தலைமையேற்றனர். 1950களில், புதிய விமர்சனவாத அணுகுமுறைகளின் ஒரு அலை நவீனத்துவத்தை இடம்பெயர்த்து சேக்சுபியரின் "பின்-நவீனத்துவ" ஆய்வுகளுக்கு பாதையமைத்துக் கொடுத்தது.[159] எண்பதுகளின் வாக்கில், சேக்சுபியர் ஆய்வுகள் என்பவை கட்டமைப்புவாதம், பெண்ணியம், ஆப்பிரிக்க அமெரிக்க ஆய்வுகள், மற்றும் விந்தை ஆய்வுகளுக்கு திறந்துபட்டதாக இருந்தன.[160]
சேக்சுபியர் குறித்த ஊகங்கள்[தொகு]
படைப்பு குறித்த ஊகங்கள்[தொகு]
சேக்சுபியர் இறந்து சுமார் 150 வருடங்களுக்கு பிறகு, அவரினுடைய சில படைப்புகள் குறித்த சந்தேகங்கள் எழத் துவங்கின.[161] ஃபிரான்சிஸ் பேகான், கிறிஸ்டோபர் மர்லோ, மற்றும் எட்வர்டு டீ வெரெ, தி யர்ல் ஆஃப் ஆக்ஸ்போர்டு ஆகியோர் உண்மைப் படைப்பாளிகளாய்க் கருதப்பட்டனர்.[162] கல்வியியலாளர் மட்டங்களில் அனைத்து மாற்று எழுத்தாளர்களுமே உலகளவில் நிராகரிக்கப்படுகின்றனர் என்றாலும், இந்த விஷயத்தில் வெகுஜன மக்களின் ஆர்வம், குறிப்பாக ஆக்ஸ்போர்டுவாத சித்தாந்தம் 21 ஆம் நூற்றாண்டிலும் தொடர்கிறது.[163]
மதம்[தொகு]
கத்தோலிக்கத்தை பின்பற்றுவது சட்டவிரோதமாக இருந்த ஒரு காலத்தில், சேக்சுபியரின் குடும்ப உறுப்பினர்கள் கத்தோலிக்கர்களாக இருந்தனர் என்று சில அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.[164] சேக்சுபியரின் தாயான, மேரி ஆர்டன், நிச்சயமாக ஒரு தயாள உள்ளமுடைய கத்தோலிக்க குடும்பத்தில் தான் பிறந்தார். உறுதியான ஆதாரமாக ஜான் சேக்சுபியர் கையெழுத்திட்ட கத்தோலிக்க விசுவாச வாக்குமூலத்தை குறிப்பிடலாம். இது 1757 ஆம் ஆண்டில் ஹென்லி தெருவில் இருந்த அவரது முன்னாள் வீட்டின் தூணில் காணப்பட்டது. ஆயினும், இப்போது இந்த ஆவணம் தொலைந்து விட்டது என்பதோடு அதன் உண்மைத்தன்மையிலும் அறிஞர்கள் வேறுபடுகிறார்கள்.[165] 1591 ஆம் ஆண்டில், "கடன் நடைமுறைக்கான பயத்தால்" ஜான் தேவாலயத்திற்கு வரவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இது ஒரு பொதுவான கத்தோலிக்க நடைமுறையாகும்.[166] 1606 ஆம் ஆண்டில், ஸ்ட்ராட்போர்டில் நடந்த ஈஸ்டர் கூட்டத்தில் பங்குபெறத் தவறியோர் பட்டியலில் வில்லியமின் பெண் சுசானா பெயர் இருந்தது.[166] சேக்சுபியரின் நாடகங்களில் கத்தோலிக்கவாதத்திற்கு ஆதரவான எதிரான இரண்டுக்கான ஆதாரங்களையும் அறிஞர்கள் காண்கிறார்கள். ஆனால் உண்மை இருவழியிலும் நிரூபிக்க சாத்தியமானதாய் இல்லை.[167]
பாலியல் விருப்பம்[தொகு]
சேக்சுபியரின் பாலியல் விருப்பம் குறித்த சில விவரங்களே அறியக் கிடக்கின்றன. 18 வயதில், அவர் கர்ப்பமாக இருந்த 26 வயது ஆனி ஹதாவேயைத் திருமணம் செய்தார். அதன்பின் ஆறு மாதத்தில் அவர்களது முதலாவது குழந்தையான சுசானா, 26 மே 1583 அன்று பிறந்தது. ஆயினும், சேக்சுபியருக்கு ஒரு இளம் ஆண் மீது இருந்த காதலுக்கு ஆதாரமாக சேக்சுபியரின் செய்யுள் கவிதைகளை பல நூற்றாண்டுகளாக வாசகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அதே பத்திகளை தீவிரமான நட்பின் வெளிப்பாடே தவிர பாலியல் நேசம் அல்ல என்று மற்றவர்கள் பார்க்கிறார்கள்.[168] அதே சமயத்தில் திருமணமான ஒரு பெண்ணைக் குறித்து எழுதப்பட்ட "டார்க் லேடி" எனப்படும் இருபத்தியாறு செய்யுள் கவிதைகள் அவரது எதிர்பாலின உறவுகளுக்கான ஆதாரமாக கொள்ளப்படுகின்றன.[169]
தோற்றச் சித்திரம்[தொகு]
சேக்சுபியரின் உடல் தோற்றம் குறித்த எந்த எழுத்துரீதியான விவரிப்பும் இல்லை. அத்துடன் அவர் ஒரு தோற்றச் சித்திரத்தை வரைய ஏற்பாடு செய்ததற்கும் எந்த ஆதாரமும் இல்லை. எனவே அவரை நன்கு ஒத்திருப்பதாக பென் ஜான்சன் ஒப்புதலளித்ததான[170] ட்ரோஷவுட் கல்வெட்டும், அவரது ஸ்ட்ராட்போர்டு நினைவுச்சின்னமும் அவரது தோற்றம் குறித்த சிறந்த சான்றாக இருக்கின்றன. பதினெட்டாம் நூற்றாண்டு முதல், அதிகாரப்பூர்வமான சேக்சுபியர் தோற்றச்சித்திரங்களுக்கான ஆர்வம் மிகுதியாய் இருந்தது. பல போலியான சித்திரங்கள், அதேபோல் தவறான சித்தரிப்புகள், மறுதீட்டல், மற்ற மனிதர்களின் சித்திரங்கள் மீது பெயர் மாற்றி எழுதுதல் ஆகிய போக்கிற்கும் இந்த தேவை இட்டுச் சென்றது.[171][172]
படைப்புகளின் பட்டியல்கள்[தொகு]
நாடகங்களின் வகைப்படுத்தல்[தொகு]
சேக்சுபியரின் படைப்புகளில் ஃபர்ஸ்ட் ஃபோலியோவில் அச்சிடப்பட்ட 36 நாடகங்கள் அடங்கும். அவை நகைச்சுவை, வரலாறுகள் மற்றும் துன்பியல் ஆகிய அவற்றின் வகைப்படுத்தலின் படி கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.[173] சேக்சுபியர் தன் பெயரிலுள்ள நாடகங்களின் ஒவ்வொரு வார்த்தையையும் அவர் எழுதவில்லை. பல காட்சிகள் அந்த காலகட்டத்தில் ஒரு பொதுவான நடைமுறையாக இருந்த, கூட்டுழைப்பின் அடையாளங்களைக் காட்டின.[174] ஃபர்ஸ்ட் ஃபோலியோவில் இடம்பெறாத, தி டூ நோபிள் கின்ஸ்மென் மற்றும் பெரிகிள்ஸ், பிரின்ஸ் ஆஃப் டைர் ஆகியவை இப்போது படைப்புகளின் பாகமாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. இவற்றில் சேக்சுபியரின் பங்களிப்பு பெரிய அளவில் இருந்தது என்பதை அறிஞர்கள் ஒப்புக்கொண்டார்கள்.[175] ஃபர்ஸ்ட் ஃபோலியோவில் கவிதைப் படைப்பு எதுவும் இடம்பெறவில்லை.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், எட்வர்டு டவ்டன் பிந்தைய நகைச்சுவைகளில் நான்கினை "காதல்காவியங்கள்" என்று வகைப்படுத்தினார். பல அறிஞர்கள் அவற்றை "துன்பியல்நகைச்சுவை"யினதாக வகைப்படுத்த விரும்பினாலும், அவரது வகைப்பாடு தான் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.[176] 1896 ஆம் ஆண்டில் ஆல்'ஸ் வெல் தேட் என்ட்ஸ் வெல், மெஷர் ஃபார் மெஷர், டிராய்லஸ் அன் கிரெஸிடா மற்றும் ஹேம்லெட் ஆகிய நான்கு நாடகங்களை "பிரச்சினை நாடகங்கள்" என்ற பதத்தை கொண்டு பிரடெரிக் எஸ்.போஸ் விவரித்தார்.[177] நாடகங்கள் கருப்பொருள் மற்றும் தொனியில் ஒற்றைத்தன்மையனவாய் இருப்பதால் அவற்றை உறுதிப்பட நகைச்சுவைகள் என்றோ துன்பியல் என்றோ வரையறுக்க முடியாது" என்று அவர் எழுதினார். எனவே இன்றைய நாடக அரங்கத்தில் இருந்து வசதியான ஒரு பதத்தை இரவல் பெற்று, அவற்றை மொத்தமாக சேக்சுபியரின் பிரச்சினை நாடகங்களாக வகைப்படுத்தலாம்.[178][179] பிற பிரச்சினை நாடகங்கள் கீழே ஒரு ‡ குறியினால் அடையாளமிடப்பட்டுள்ளன.
சேக்சுபியரால் ஒரு பகுதி பங்களிப்பை மட்டுமே பெற்றிருப்பதாக நம்பப்படும் நாடகங்கள் கீழே ஒரு † குறி மூலம் குறியிடப்பட்டுள்ளன. சில சமயங்களில் அவர் எழுதியதாகக் குறிப்பிடப்படும் பிற படைப்புகள் உறுதிப்படுத்தப்படாத படைப்புகள் என்பதின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment