Sunday 3 April 2022

THUCHALAI 101 TH DAUGHTER OF THIRUTHARASHTRA

 



மகாபாரதத்தில் கௌரவர்களின் 101-வது மகள் துச்சலையின் சோகக் கதை தெரியுமா?




மகாபாரதத்தில் பாண்டவர்களுக்கும் - கௌரவர்களுக்கும் இடையே போர் நடைபெற்றது. அதில் கௌரவர்களின் மூத்தவரான துரியோதனன் உட்பட 100 சகோதரர்கள் திருதராஷ்டிராருக்கும், காந்தாரி தம்பதிக்கு பிறந்தனர் என்ற கதை அனைவருக்கும் தெரியும். அவர்களுக்கு 101வதாக பிறந்த ஒரே ஒரே பெண் குழந்தை தான் துச்சலை. துச்சலை குறித்து பெரிதளவில் யாரும் கேள்விப் பட்டிருக்க மாட்டார்கள்.

100 சகோதரர்கள் இருந்தும் பாசம் கிடைக்காத துச்சலையின் சோகக் கதையை இங்கு பார்ப்போம்.

100 கௌரவர் சகோதரர்களும், 5பாண்டவர்கள் சகோதரர்களாக இருந்தும் சகோதர பாசம் கிடைக்காமலேயே தனிமையில் வாழக்கூடிய நிலை இருந்தது. கெளராவர்களுக்கோ பாண்டவர்களை அழிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது. இதனால் துச்சலை குறித்து எந்த கவலையும் இல்லாமல் இருந்தனர்.

கௌரவர்கள் நூறு பேர்... அவர்களின் பெயர்கள்

இதனால் தன் சிறுவயதிலிருந்தே தனிமையிலேயே இருக்க வேண்டிய நிலை இருந்தது. துச்சலை திருமணமாகாமல் இருந்த காலம் வரையிலாவது பாசம் கிடைக்காமல் தனிமையில் இருந்தாலும் அஸ்தினாபுரத்தில் நல்ல சுகபோகத்தையும், இன்பங்களையும் அனுபவித்து வந்தார்.

துச்சலைக்கு திருமண வயது வந்ததும் சிந்து ராஜன் ஜெயத்ரதனுக்கு மணமுடித்து வைத்தனர். சிறுவயதில் கிடைத்த இன்பம், நிம்மதி கூட ஜெயத்ரதனை திருமணம் செய்த பின் துச்சலைக்கு கிடைக்கவில்லை. ஏனென்றால் ஜயத்ரதன் பல பெண்களுடன் அதீத நாட்டம் கொண்டவனாக இருந்தான். அதனால் துச்சலையுடன் இருக்கும் நேரத்தை விட, எப்போதும் அந்தபுரத்தில் இருப்பதையே விரும்பினார். இருப்பினும் துச்சலை தன் கணவன் மீது அன்புடன் கவனித்துக் கொண்டிருந்தாள்.

மகாபாரதத்தில் நீங்கள் அறியாத பல அற்புதமான கதாபாத்திரங்களின் கதைகள்..

பாண்டவர்கள் சூதாட்டத்தில் நாட்டை இழந்து வனவாசம் சென்ற போது, காட்டில் தனித்து இருந்த திரெளபதியை ஜெயத்ரதன் கடத்தி சென்றான். இதனால் கோபமடைந்த பாண்டவர்கள் ஜயத்ரதனை சிறைபிடித்து அவனுக்கு மொட்டை அடித்து தண்டித்து அனுப்பினர். பாண்டவர்கள் துச்சலையை சகோதரியாக பார்த்ததால், அவளை விதவை ஆக்கக் கூடாது என நினைத்து ஜெயத்ரதனை கொல்லாமல் விரட்டி அடித்தனர்.

குருக்ஷேத்திர போரின் போது துரியோதனனுக்கு ஆதரவாக நின்ற ஜெயத்ரதன். அதில் சிவபெருமான் அளித்த வரத்தின் உதவியால் அபிமன்யுவை அநியாயமாகக் கொன்றனர்.
அதனால் சபதம் போட்ட அர்ஜுனன் 14ம் நாள் போரில் ஜெயத்ரதனின் தலையை துண்டித்து கொன்றார். அதோடு துச்சலையின் கனவும், ஆசையும் உடைந்தது.

அர்ஜூனனின் உயிரைக் காத்த சூரிய கிரகணம் - ஜெயத்ரதனை கொன்றது குறித்த புராண கதைகள் இதோ!

போருக்கு பின் ஆட்சியை கைப்பற்றிய பாண்டவர்கள், அசுவமேத யாகம் நடத்தினர். அப்போது அர்ஜுனன் சிந்து நாட்டின் மீது படையெடுத்துச் சென்றான். அங்கு துச்சலையின் மகன் சுரதாவும், பேரனும் அர்ஜுனனை எதிர்த்து கடுமையாக போர் புரிந்தனர்.

அப்போது துச்சலை தன் சகோதரி என்றும், அவரின் மகன் தான் சுரதா என அறிந்ததும் சிந்து நாட்டை அவர்களிடமே ஒப்படைத்துவிட்டார்.

இப்படி அரச குடும்பத்தில் பிறந்தாலும் துச்சலை கடைசி வரை பல இன்னல்களுக்கு இடையே தான் வாழ்ந்து வந்தார்.

No comments:

Post a Comment