Monday 18 April 2022

PLAY BACK SINGER Y.SWARNA V.KUMAR BIOGRAPHY

 


PLAY BACK SINGER 

 Y.SWARNA V.KUMAR BIOGRAPHY

ஒய்.சுவர்ணா [பின்னணிப் பாடகி]

இவர் பிரபல தமிழ் இசையமைப்பாளர் அமரர் வி.குமார் அவர்களின் மனைவி ஆவார். இவர் அன்றைய ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர். இவரது சகோதரி எடவெல்லி ரமாவின் குச்சிப்பிடி நடனத்திற்குப் பின் பாட்டு பாடிக்கொண்டிருந்தவர் வி.குமார் திரைப்படங்களுக்குப் பின்னணி இசையமைக்கத் துவங்கிய காலத்தில் அவரிடம் பாடுவதற்கு சந்தர்ப்பம் கேட்டுவந்தார். இவர்கள் இருவருக்கும் இருந்த இசை ஆர்வம் இவ்விரு மனங்களையும் ஒன்றாக இணைத்தது. இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவரை பின்னணிப்பாடகியாக அறிமுகம் செய்தது வி.குமார்தான். “புத்திசாலிகள்” என்ற படத்தில்தான் இவர் முதன் முதலாக பின்னணிப் பாடகியானார்.

இவர்களது மகன் சுரேஷ்குமார் சென்னையில் பொறியியல் படித்துவிட்டு அமெரிக்காவில் பணியாற்றுகிறார். இறந்துபோன தன் தந்தை வி.குமார் பணியாற்றிய திரையுலகத்தை அறவே வெறுக்கிறவர். ஒரு காலத்தில் படு பிஸியாக இருந்த தன் கணவரை சில திரை உலக அன்பர்களும், சின்னத்திரை நண்பர்களும் நடத்திய விதம் சுவர்ணாவைப் பதைபதைக்க வைத்துவிட்டது. வி.குமார் 7.1.1996 அன்று காலமான பின், நிஜ உலகின் பல வசீகர முகங்களைக் கண்டிருக்கிறது அவர் குடும்பம். புயல் அடித்து உடைந்த துடுப்புடன் கரையில் ஒதுங்கிய நிலைமை. ஆதலால் இத்தமிழ்த் திரையுலகின் மீது வெறுப்பு கொண்ட சுவர்ணா பாடுவதை நிறுத்திவிட்டு தனது மகனுடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார்.

இவர் பாடிய படங்கள் மற்றும் பாடல்கள்:

  1. ’புத்திசாலிகள்’. மாமியாருக்கு கல்யாணம் மாலை நேரம்
  2. ’புத்திசாலிகள்’. எஸ்.வி.பொன்னுசாமி, கே.ஜமுனாராணியுடன் இணைந்து ஆட்டுக்கு வாலை அளந்து வச்சவன் புத்திசாலி
  3. ’எதிர் நீச்சல்’ எஸ்.சி.கிருஷ்ணனுடன் இணைந்து சேதி கேட்டோ சேதி கேட்டோ
  4. ‘நல்ல பெண்மணி’ கே.ஜே.யேசுதாசுடன் இணைந்து இனங்களிலே என்ன இனம்
  5. ‘இரு கோடுகள்’ ரி.எம்.எஸ்-ஏ.எல்.ராகவனுடன் இணைந்து பாப்பா பாட்டு பாடிய பாரதி நான் தானே
  6. ‘உனக்கும் எனக்கும்’ தாகம் அது பருவத்தில் ஒரு வகை ராகம்
  7. ‘எல்லோரும் நல்லவரே’ எஸ்.பி.பியுடன் இணைந்து ஏம்மா கண்ணு மாமா பொண்ணு எனைப் பார்த்ததும்
  8. ’ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு’ எஸ்.பி.பியுடன் இணைந்து கண்ணெல்லாம் உன் வண்ணம் நெஞ்செல்லாம் உன் எண்ணம்
  9. ’சிங்கப்பூர் சீமான்’ ஜமுனாராணியுடன் இணைந்து தொட்டுப்பார் உடற்கட்டு பார்
  10. ‘மக்கள் குரல்’ ரெங்கா ரெங்கையா போறது எங்கையா
  11. ’தூண்டில் மீன்’ பி.ஜெயசந்திரனுடன் என்னோடு என்னென்னவோ ரகசியம்                       பாடல்கள் விவரம் இன்னும் சேர்க்கப்படும்.

15.12.1982 மற்றும் 15.9.1999 சினிமா எக்ஸ்பிரஸ் இதழ்களிலிருந்து விவரங்கள் திரட்டப்பட்டது.

No comments:

Post a Comment