Kuladeivam V.R.Rajagopal
(ஏப்ரல் 22, 1931 - அக்டோபர் 30, 1992)
”குலதெய்வம்” வி.ஆர்.ராஜகோபால்
தமிழ்த்திரையுலகில் பிரபலமான நகைச்சுவை நடிகர். இவரை ’சின்னக்கலைவாணர்’ என்றும் அழைப்பதுண்டு. 1956-இல் வெளிவந்த ஏவி.எம்மின் ”குலதெய்வம்” படத்தில் அறிமுகமானார். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களுடன் நாடக்குழுவில் இருந்தவர். சித்தி, அவர் எனக்கே சொந்தம், சபாஷ் மீனா, ராஜா ராணி, திலகம், மன்னாதி மன்னன், குறவஞ்சி, எல்லைக்கோடு, நத்தையில் முத்து, நல்லதம்பி, கருந்தேழ் கண்ணாயிரம், இதோ எந்தன் தெய்வம், அருணோதயம், காவேரி, தாயே உனக்காக, ஆரத்தி எடுங்கடி, களத்தூர் கண்ணம்மா, காவல் தெய்வம், திருடாதே, வாழ வைத்த தெய்வம், கப்பலோட்டிய தமிழன், எங்கிருந்தோ வந்தாள் போன்ற 200-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். இடைக்காலத்தில் படங்கள் குறைந்திருந்த காலத்தில் இவருக்கு மறுவாழ்வளித்தவர் இயக்குநர் கே.பாக்கியராஜ். அவரது பெரும்பாலான படங்களில் நடிக்க வாய்ப்பளித்தார்.
இவர் 30.10.1992 அன்று மாரடைப்பால் மரணமடைந்தார்.
இவரது சிறப்புக்கும் ஆற்றலுக்கும் சில எடுத்துக்காட்டுகள்:-
ஒரு காலத்தில் பிரபலமாக விளங்கிய நகைச்சுவை நடிகர் குலதெய்வம் ராஜகோபால் ஒரு சமயம் அறந்தாங்கியில் தொடர்ந்து நாடகம் போட்டபோது தங்கியிருந்த வீட்டின் சொந்தக்காரருக்குப் பல மாதங்களாக வாடகை கொடுக்கவில்லை. கண்டித்துக் கேட்டும் அவருக்கு பாக்கி வந்தபாடில்லை. ஒரு நாள் இரவோடு இரவாக அடுத்த ஊருக்கு ‘டேரா’ தூக்கிவிட்டார்கள். அடுத்த நாள் காலையில் வீட்டில் யாருமில்லாததைப் பார்த்த வீட்டுக்காரர் அதிர்ச்சியுற்று, விஷயத்தை அறிந்து அடுத்த ஊருக்கு ஓடினார். அவரைக் கண்டதும் அனைவரும் பயந்துவிட்டனர். அவரோ அமைதியாக ஏனய்யா! சொல்லாமல் கொள்ளாமல் ஓடி வந்தீர்கள்?. தொலைஞ்சி போங்க. ஆனா சுவத்திலே பட்டையா நாமத்தைப் போட்டுட்டு விளக்கை ஏத்தி வச்சுட்டுப் போயிருக்கீங்களே! நான் என்ன செத்தாப் போயிட்டேன்!” என்று கேட்டார். அதைக் கேட்டு அங்கிருந்த மனோரமா திருதிருவென விழித்தார்.
அடுத்து……..
‘கலைமணி நாடகக் குழு திருநெல்வேலி மாவட்டம், வடக்கன் குளத்தில் நாடகம் போட ஒத்துக்கொண்டனர். ‘சர்வாதிகாரி’ நாடகத்தை ‘நீதியின் வெற்றி’ என்ற பெயரில் நடிக்க ஏற்பாடு நடந்தது. குலதெய்வம் ராஜகோபால் கோஷ்டி அங்கு வந்து இறங்கிய பிறகுதான் தெரிந்தது. இசைக்குழுவில் ஒரே ஒரு ஆர்மோனியக்காரர் மட்டும்தான் வந்திருந்தார். நடிகர்கள் ஒரு சிலர் தான் வந்திருந்தார்கள். சர்வாதிகாரி நாடகமோ போடமுடியாது. பார்த்தார் குலதெய்வம் ராஜகோபால். கூடியிருந்தவர்களோ கிருத்தவர்கள். உடனே நாடகத்தின் சில காட்சிகளைத் தொடுத்து கிருத்தவ நாடகமாகப் போட்டு பாராட்டும் பெற்று ஊர் திரும்பினார்.
மேற்சொன்ன இரு நிகழ்வுகளையும் சினிமா எக்ஸ்பிரஸ் இதழுக்காக வழங்கியவரே சின்னக் கலைவாணர் குலதெய்வம் ராஜகோபால்.
12.8.1983 சினிமா எக்ஸ்பிரஸ் இதழிலிருந்து திரட்டப்பட்டது.
குலதெய்வம் ராஜகோபால் என அழைக்கப்படும் வீ. ஆர். ராஜகோபால் (ஏப்ரல் 22, 1931 - அக்டோபர் 30, 1992) இந்தியத் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் கதாநாயகனாகவும், இரண்டாவது கதாநாயகனாகவும், பின்னர், நகைச்சுவை, வில்லன், மற்றும் குணசித்திர வேடங்களிலும் நூற்றிற்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். நாடகம், வில்லுப்பாட்டு, வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் நடத்தி "சின்னக் கலைவாணர்" என அழைக்கப்பட்டார்.[1]
வாழ்க்கைக் குறிப்பு[தொகு]
இவர் தமிழ்நாட்டில் உள்ள சிவகங்கை மாவட்டத்தில் அருகே உள்ள கண்டரமாணிக்கம் என்ற ஊரில் பிறந்தார். கோவில் கிராமீய பாகவதர், கட்டிட மேஸ்திரி, வீராச்சாமி நாயுடு - தெய்வானை அம்மாள் ஆகியோருக்கு 22-04-1931.இல் பிறந்தார். இவரது ஒரே தம்பி ,வீ. ஆர். நடராஜன் ஆவார். மேடை கதா காலேட்சப பாகவதர் ஜெகன்நாதன் - கண்ணம்மா ஆகியோரின் மகள் கோகிலாம்பாள் என்ற கோகிலாம்பிகையை மணந்தார். இவர்களுக்கு நான்கு புதல்வர்கள்: சௌந்தரபாண்டியன், ஸ்ரீகாந்தன், சம்பத்குமார், செல்வமணி. இவர்களில் கடைசி இருவர், சம்பத்செல்வம் என்ற பெயரில், இசையமைப்பாளர்களாக, பல திரைப்படங்களுக்கு இசையமைத்தார்கள். சிறு வயதிலேயே நாடகங்களில் ஈடுபாடு கொண்ட ராஜகோபால் பாவைக்கூத்து, நையாண்டி மேளம், ஒத்து நாயனம் ,நடனம் ஆட்டம் பாட்டம், பொம்மலாட்டம், தேவராட்டம், கரகாட்டம், கட்டக்கால் ஆட்டம், ஊசி நடனம், பாசி நடனம், பபூஃன் நகைச்சுவை ,ஆகியவற்றைக் கற்று தெருக்கூத்து நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார். 12-வது வயதில் பள்ளத்தூர் வைரம் அருணாச்சலம் செட்டியாரின் பாய்ஸ் நாடக கம்பெனியில் சேர்ந்தார். பின்னர் மதுரையில் அன்று பிரபலமாக இருந்த கலைமணி நாடகக் குழுவில் சேர்ந்து நடித்தார். பின்னர்...கலைவாணர் என். எஸ். கிருஷ்ணனின் நாடகக் குழுவில் சேர்ந்து நடித்து வந்தார். 1956.க்குப் பிறகு, குலதெய்வம் படத்தில் கதாநாயகனாக நடித்ததின் வெற்றிக்குப் பிறகு, சொந்தமாக குலதெய்வம் நாடக மன்றம் அமைத்து, வளம் பெற்ற வாழ்வு, கலியுகக் கண்ணன், நீதியின் வெற்றி, நால்வர், நண்பன், புத்திசாலி, ஹலோ மை டார்லிங், போன்ற பல நாடகங்களை, சொந்தமாக நடத்திப் பெரும் புகழ் பெற்றார்.[1]
திரைப்படங்களில்[தொகு]
1954 ஆம் ஆண்டில் வெளிவந்த நல்லகாலம் திரைப்படம், ராஜகோபால் நடித்து வெளிவந்த முதல் திரைப்படம் ஆகும். தொடர்ந்து எம். கே. தியாகராஜ பாகவதர் இயக்கி நடித்த புது வாழ்வு திரைப்படத்தில் நடித்தார். பிறகு, எம். கே. ராதாவுடன் "குடும்பவிளக்கு" திரைப்படத்தில் நடித்தார்.[1] 1956 ஆம் ஆண்டில் வெளிவந்த ஏவிஎம்மின் குலதெய்வம் திரைப்படத்தில் நான்கு கதாநாயகர்களில் ஒருவராக நடித்தார். இப்படத்தில் இவரின் சிறப்பு நடிப்புக்காக "குலதெய்வம்" என்ற பெயரும் இவரது பெயருடன் சேர்ந்து, பெருமை பெற்றது. அன்றில் இருந்து இவர் "குலதெய்வம் ராஜகோபால்" என அழைக்கப்பட்டார்.[2]
நூற்றுக்கு மேற்பட்ட படங்களில் நடித்த இவர், டி. ஆர். மகாலிங்கத்தை கதாநாயகனாக நடிக்க வைத்து, கலைமகள் பிக்சர்ஸ் சார்பாக, "பண்ணையார் மகன்", "கனவு பலித்ததம்மா" ,ஆகிய இரண்டு திரைப்படங்களை, கே. வி. மகாதேவன் இசையில், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல் வரிகளில், லட்சக் கணக்கில் பெரும்பணம் முதலீடு செய்து, கடனாளி ஆகி, படங்களும் முழுவதும் முடிந்தும், திரையிட முடியாமல், பெரும் இழப்பை சந்தித்தார். பல ஆண்டுகள் நடிப்புத் துறையில் இருந்து விலகி இருந்தார். பின்பு, வில்லுப்பாட்டுக்கலையை, கையிலெடுத்து, மீனாட்சி கல்யாணம், ஐயப்பன் சரிதம், திருமுருகன் ஆறுபடை சரிதம், மகாகணபதி சரிதம், இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் வரலாறு, கலைவாணர் வரலாறு, காத்தவராயன் கதை, முனீஸ்வரன் கதை, ஐயனார் கதை, அகோர வீரபத்திரர் கதை, கருப்பர் கதை, காலபைரவர் கதை உள்பட பல வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளை நடத்தி, தனது குடும்பத்தைக் காப்பாற்றினார். பின்னர் விசுவுடன் புயல் கடந்த பூமி, வீடு மனைவி மக்கள் ,வாய்ச்சொல்லில் வீரனடி, பெண்மணி அவள் கண்மணி ஆகிய திரைப்படங்களிலும், டி. ராஜேந்தரின் எங்க வீட்டு வேலன், கே. பாக்கியராஜின் எங்க சின்ன ராசா, பவுனு பவுனுதான், ஆராரோ ஆரிரரோ தாவணிக் கனவுகள் , ஆகிய படங்களில் நடித்தார்.
நடித்த திரைப்படங்களின் பட்டியல்[தொகு]
குலதெய்வம் ராஜகோபால் நடித்த திரைப்படங்களின் பட்டியல் (அகர வரிசையில்):
- அபலை அஞ்சுகம்
- அருணோதயம்
- அருள் தரும் அய்யப்பன்
- அல்லி பெற்ற பிள்ளை
- அவர் எனக்கே சொந்தம்
- அவளுக்கு நிகர் அவளே
- அன்னை அபிராமி
- அன்னையின் ஆணை
- ஆரத்தி எடுங்கடி
- ஆராரோ ஆரிரரோ
- ஆளுக்கொரு ஆசை
- இரத்தத் திலகம்
- இல்லறமே நல்லறம்
- இளைய தலைமுறை
- ஈரமான ரோஜாவே
- உத்தமி பெற்ற ரத்தினம்
- எங்க சின்ன ராசா
- எங்க வீட்டு வேலன்
- எங்கள் குலதேவி
- எங்கள் செல்வி
- எங்கிருந்தோ வந்தாள்
- எல்லைக்கோடு
- எல்லோரும் இந்நாட்டு மன்னர்
- எல்லோரும் வாழவேண்டும்
- ஒரே சாட்சி
- கண்ணின் மணிகள்
- கண்ணில் தெரியும் கதைகள்
- கர்ணன்
- கருந்தேள் கண்ணாயிரம்
- கரையெல்லாம் செண்பகப்பூ
- கரையைத் தொடாத அலைகள்
- கல்யாணிக்கு கல்யாணம்
- களத்தூர் கண்ணம்மா
- கனவு பலித்ததம்மா
- காட்டு மல்லிகை
- காவல் தெய்வம்
- காவல் பறவைகள்
- கிரகப் பிரவேசம்
- குடும்ப கௌரவம்
- குடும்பவிளக்கு
- குலதெய்வம்
- குழந்தைகள் கண்ட குடியரசு
- குறவஞ்சி
- கொங்கு நாட்டு தங்கம்
- கோமதியின் காதலன்
- ஸ்ரீவள்ளி.
- சந்திரோதயம்
- சபாஷ் மாப்பிளே
- சபாஷ் மீனா
- சரணம் அய்யப்பா
- சித்தி
- சுகமான சுமைகள்
- செங்கோட்டை சிங்கம்
- தங்கப்பதுமை
- தலை கொடுத்தான் தம்பி
- தழுவாத கைகள்
- தாய் சொல்லை தட்டாதே
- தாயா தாரமா
- தாயே உனக்காக
- தாவணிக் கனவுகள்
- திருடி
- திலகம்
- தெய்வாம்சம்
- தேடி வந்த செல்வம்
- நத்தையில் முத்து
- நல்லகாலம் பொறந்தாச்சு
- நல்லகாலம்
- நாகநந்தினி
- நாலு வேலி நிலம்
- நான் பேச நினைப்பதெல்லாம்
- நான் வளர்த்த தங்கை
- நிஜங்கள்
- நீ உள்ளவரை
- நீ சிரித்தால் தீபாவளி
- பஞ்ச கல்யாணி
- பண்ணையார் மகன்
- பயணம்
- பவுனு பவுனுதான்
- பாட்டு வாத்தியார்
- பாடும் வானம்பாடி
- பாலைவனப் பறவைகள்
- பிராயச்சித்தம்
- பிரசிடெண்ட் பஞ்சாட்சரம்
- பிரார்த்தனை
- புது வாழ்வு
- புயல் கடந்த பூமி
- பெண்கள் வீட்டின் கண்கள்
- பெண்மணி அவள் கண்மணி
- பெரிய மனிதன்
- பொய் சாட்சி
- மகாலட்சுமி
- மல்லிய மங்கலம்
- மன்னாதி மன்னன்
- மாடப்புறா
- மாமியார் வீடு
- முத்தம்மா
- முதல் தேதி
- யானைப்பாகன்
- ரங்கோன் ராதா
- ராஜமகுடம்
- ராஜா மலயசிம்மன்
- ராஜா ராணி
- ரோஷக்காரி
- வடிவுக்கு வளைகாப்பு
- வரந்தருவாள் வக்ரகாளி
- வாய்ச்சொல்லில் வீரனடி
- வாயாடி
- வாயில்லா பூச்சி
- வாழவைத்த தெய்வம்
- வில்லுப்பாட்டுக்காரன்
- வீடு மனைவி மக்கள்
- வீரபாண்டிய கட்டபொம்மன்
- ஜீவ பூமி
வில்லுப்பாட்டுக் கலைஞராக[தொகு]
1977-இல், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பாக, "கலைமாமணி" பட்டம் பெற்று, ராஜகோபால் சிறந்த வில்லுப்பாட்டுக் கலைஞராகவும் புகழ் பெற்றிருந்தார். "ஐயப்பன் சரித்திரம்," "ஆறுபடைவீடு முருகன் பெருமை," "காவல்தெய்வம் ஐயனார் கதை, "காவல்தெய்வம் முனீஸ்வரன் கதை," காவல் தெய்வம் அகோர வீரபத்திரர் கதை, காவல்தெய்வம் கருப்புச்சாமி கதை, அமாவாசை மயானக்கொள்ளை சுடுகாட்டு சிவலிங்கம் கதை, நல்லதங்காள் கதை, ஆறு அண்ணன்மார் அருக்காணி தங்கை, போன்ற பல வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளை மேடையேற்றினார். கலைவாணர் என். எஸ். கிருஷ்ணனின் வாழ்க்கை வரலாற்றையும் வில்லுப்பாட்டாகத் தயாரித்து வழங்கினார். இதன் சிறப்பாக, டி. ஏ. மதுரம் இவருக்கு, "சின்னக் கலைவாணர்" என்ற பட்டத்தை, 1960.இல், வழங்கினார்.[1]
No comments:
Post a Comment