M.R.RADHA
எம்.ஆர்.ராதா நடித்த ரத்தக்கண்ணீரை எல்லோருக்கும் தெரியும். எம்.ஆர்.ஆர் வாசு, ராதாரவி இருவரும் ரத்தக்கண்ணீர் நாடகத்தில் எம்.ஆர்.ராதா பாத்திரத்தை நடித்து மேடையேற்றியிருக்கிறார்கள். ரத்தக்கண்ணீர் நாடகம் முழுக்க முழுக்க பெண்கள் நடித்து மேடையேற்றப்பட்டிருக்கிறது. ராதா நடித்த வேடத்தில் பி.எஸ் சீதாலட்சுமி நடித்திருந்திருக்கிறார். அவர் நடிப்பை பார்த்த ராதா பிரமித்துப்போய் சீதாலட்சுமியிடம் சொல்லியிருக்கிறார் “ சீதா, என்னையே நான் இந்த நாடகத்தில் பார்த்தேன்.” எம்.ஜி.ஆர் நாடகங்களிலும் நடித்தவர். சிவாஜி நாடகங்களிலும் நடித்தவர். வீர பாண்டிய கட்டபொம்மன் நாடகத்தில் சீதாலட்சுமி “வெள்ளையம்மா” ரோலில் நடித்தவர். படத்தில் பத்மினி வெள்ளையம்மாவாக நடித்தார். 'வெள்ளையம்மா, வந்துதுடியம்மா ஒன் காளைக்கு ஆபத்து.' உதயசூரியன் நாடகத்தில் மு.கருணாநிதியுடன் நடித்திருக்கிறார். அவர் பழம்பெரும் நடிகை பி.எஸ். சீதாலட்சுமியென்றாலும் 1960களில் தான் மிகவும் பிரபலம். தனுஷ் நடித்த ’சீடன்’ வரை நடித்திருக்கிறார். அப்போது சுந்தரிபாய், சி.கே.சரஸ்வதி போன்றவர்கள் போல வில்லி நடிப்பில் தனித்துவம் காட்டியவர்...