Posts

Showing posts from October, 2021

WHERE IS MRS.M.G.R

Image
  WHERE IS MRS.M.G.R "எங்கே மிஸஸ் எம்ஜிஆர்" என கேட்டபடியே விரைவாக நடந்து வந்தார் இந்திரா காந்தி. அது சென்னை அப்போலோ மருத்துவமனை. அக்டோபர் 1984. திடீரென ஏற்பட்ட உடல் நலக் குறைவால், அப்போலோ மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தார் எம்.ஜி.ஆர். அவரை பார்ப்பதற்காக டெல்லியிலிருந்து தனி விமானத்தில் சென்னைக்கு விரைந்து வந்திருந்தார் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி. எம்.ஜி.ஆரைப் பார்க்க யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. ஆனால் இந்திரா காந்தி அப்போலோ மருத்துவ மனைக்கு வந்தவுடன் நேரடியாக சென்று கண்ணாடிக் கதவு வழியாக எம்.ஜி.ஆரைப் பார்க்க அனுமதிக்கப்பட்டார். ஐ.சி.யூ.வில் அந்த ஆபத்தான நிலையில் எம்ஜிஆரை பார்த்தவுடன் இந்திரா காந்தியின் வாயிலிருந்து அவரையும் அறியாமல் வந்த வார்த்தைகள் : "இஸ் தட் எம்ஜிஆர் ? ஓ மை காட் ... ஐ காண்ட் பிலீவ் இட்..." அருகில் இருந்த ஜானகி அம்மையாரின் கைகளைப் பிடித்துக் கொண்டு இந்திரா காந்தி சொன்னாராம் : “கவலைப்படாதீர்கள். இவரை காப்பாற்றுவது இந்த நாட்டின் கடமை. என்னுடைய கடமை.” இப்படி சொன்னதோடு நிறுத்திக் கொள்ளாமல் உடனடியாக செயலிலும் ...

HISTORY OF CEYLON TEA

Image
  HISTORY  OF CEYLON TEA சிலோன் டீ’ வரலாறும் சிறிமா-சாஸ்திரி உடன்படிக்கையின் 55 வருடங்களும்! இன்றும் கூட தேவையை பூர்த்தி செய்து கொள்ளும் வகையில் பொருளாதாரத்தில் மேம்பட்டவர்களாக மலையகத் தமிழர்கள் இல்லை! History of Ceylon tea, Indian Tamils, Sirima – Shastri pact : 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தென்னிந்தியா முழுவதும் நில உடமை தொடர்பான சட்டங்களில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது. ராயத்துவரி அமலாக்கப்பட்டது. இங்கிலாந்தின் வளர்ச்சிக்காகவும், ஐரோப்பிய சந்தைகளுக்காகவும் நம்முடைய நிலங்கள் அவர்களுக்கான மூலப்பொருட்களை உற்பத்தி செய்தது. ஐரோப்பிய சந்தைகளில் பெரிதும் ஆதிக்கம் செலுத்த துவங்கிய பிரிட்டிஷ் தங்களின் காலனி நாடுகளில் அமைக்கப்பட்டிருக்கும் தோட்டங்களில் வேலைக்காக ஆட்களை சேர்க்கும் முடிவுக்கு வந்தது. சந்தைகள் விரிவடையும் போது உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு நிறைய நிலங்களும், அதற்கேற்ற உழைப்பும் ஆங்கிலேயர்களுக்கு தேவைப்பட்டது. உணவுக்கு வழியில்லாத சூழலாலும், சொந்த நிலமற்ற கையறு நிலையிலும் லட்சக்கணக்கான மக்கள் திண்டாடிக் கொண்டிருந்தனர். மக்களின் சூழ்நிலையை ஆங்கிலேயர்கள் நன்றாக பயன்பட...

vijayakumari actress

Image
  vijayakumari actress நானாக இருக்கவே விரும்புகிறேன்! நான் ஒருசில படங்கள்ல பாவாடை, தாவணி போட்டு நடிச்சேன். பிறகு முழுக்கவே புடவைதான். மாடர்ன் உடைகள் பயன்படுத்தினதேயில்லை. 1950-1975 வரை முன்னணி ஹீரோக்கள் எல்லோருடனும் ஜோடியா நடிச்சேன். 150 படங்களுக்குமேல நடிச்சிருப்பேன். 1980-களில் ரஜினி, பிரபுனு பல ஹீரோக்களுக்கும் அம்மாவா நடிச்சேன். 1960-களில் எங்க வீட்டில் 15-க்கும் மேற்பட்ட நாய்களை வளர்த்தோம். அப்போ தேனாம்பேட்டையில் எங்க வீடு. விடியற்காலை எழுந்து, மெரினா பீச்சுக்கு வாக்கிங் போவேன். அப்போதும் சரி... இப்போதும் சரி... வீட்டு வேலைகளை நானே செய்வது வழக்கம். நடிகைங்கிற பிம்பம் என் நிஜ வாழ்க்கையில் வந்ததில்லை. பகட்டான தோரணையுடன் இருந்ததில்லை. என் இயல்பான குணங்களுடன், நான் நானாக இருக்கவே விரும்புகிறேன். கடைசியாக, `காதல் சடுகுடு' படத்தில் நடிச்சேன். பிறகு சினிமாவை விட்டு விலகி, தனிமை வாழ்க்கையில் அடைக்கலம் ஆகிட்டேன். பெரும்பாலும் வெளி நிகழ்ச்சிகளுக்கும் போவதில்லை. என் பிள்ளை ரவிக்குமார் குடும்பத்தினர் மற்றும் சொந்தக்காரங்க அடிக்கடி என்னை வந்து பார்ப்பாங்க. மத்தபடி, டி.வி பார்க்கிறதுதான் என்...