PRITHVI - MISSILE பிருத்வி என ஏன் இந்தியா தன் ஏவுகனைக்கு பெயர் சூட்டியது என்று தெரியுமா..?

 

PRITHVI - MISSILE

பிருத்வி என ஏன் இந்தியா
தன் ஏவுகனைக்கு பெயர் சூட்டியது
என்று தெரியுமா..?

பிரித்வி எனும்
காயத்தின் வடு இந்தியாவின் வரலாற்றில் ஒளிந்திருக்கின்றது.
இன்றும் வீரசிவாஜிக்கு அடுத்தபடி கொண்டாடபடும் வீரவரலாறு அது
அன்று கங்கையாலும் சிந்துவாலும் செல்வ செழிப்பில் மிதந்த இந்தியா மேல் ஆப்கானிய கொள்ளையர்களுக்கு கண் இருந்தது,
அடிக்கடி கொள்ளையிட வருவர், கொள்ளை அடித்துவிட்டு ஓடிவிடுவர்
இங்கு இருந்து ஆளும் தைரியமும் ஆசையும் அவர்களுக்கு இல்லை, ராஜ்புத் வீர இனமும் இன்னும் பல இந்திய குழுக்களும் அவர்களுக்கான பதிலடியினை கொடுத்து கொண்டே இருந்தன‌
அலெக்ஸாண்டரை போரஸ் விரட்டியது போல முகமது பின் காசிம் எனும் அரபு தளபதியின் படைகளை பாபா ராவல் எனும் இந்து மன்னன் எல்லையிலே விரட்டினான், அப்பொழுது அவன் பாதுகாப்புக்காக கட்டிய ஊர்தான் இன்றைய ராவல்பிண்டி
யாரோ யாரோ வருவார்கள் அந்நாளில் அடிபட்டு ஓடுவார்கள் அல்லது கிடைத்ததை சுருட்டி தலைதெறிக்க ஓடிவிடுவார்கள்
ஆப்கனின் கஸ்னி அல்லது கஜினி ஊரின் மன்னன் முகமது எனும் கஜினி முகமது கூட அப்படி கொள்ளை அடித்துவிட்டு ஓடியவனே தவிர மாவீரன் அல்ல‌
17 முறையில் சிலமுறை வென்ற கஜினி தன் நாட்டில் மிகபெரும் அரசை ஸ்தாபித்தான் அவன் வம்சத்தை பின்னாளில் விரட்டி ஆட்சியினை கைபற்றினான் கோரி முகமது
அதாவது அந்த ஊரில் ஏகபட்ட முகமதுகள், கஜினியினை ஆண்டவன் கஜினி முகமது, கோரி எனும் ஊரினை ஆண்டவன் கோரி முகமது
கோரி முகமது
அவன் கஜினி பாணியில் இந்தியாவினை தாக்க திட்டமிட்ட பொழுது இங்கு அவனுக்கு பெரும் சவால் இருந்தது
அந்த சவாலின் பெயர் பிரித்வி ராஜன்,
இன்றைய டெல்லி, ஆஜ்மீர் பகுதிகளின் ராஜா அவன், 20 வயதிலே அரியணை ஏறினான், மாவீரனும் அழகனுமாய் இருந்தான் கூடவே அரசனுக்குள்ள அறிவும் ஏராளம் இருந்தது
வட இந்தியா முழுக்க
அவனுக்கு பெரும் செல்வாக்கும் இருந்தது
கிபி 1191ம் ஆண்டு , இந்தியா மேல் முதன்முறையாக படையெடுத்தான் கோரி முகமது
ஆப்கனை அடக்கி வெற்றி கொண்ட கோரி டெல்லி நோக்கி வந்தான், அவனை அரியானாவின் தராய் அருகே எதிர்கொண்டான் பிரித்விராஜன்
மிக கடுமையான யுத்தம் அது, வில்வித்தை முதல் வாள்வீச்சு வரை மிக பெரும் வீரம் காட்டி நின்ற பிரித்விராஜன் முன்னால் கோரியால் நிற்க முடியவில்லை
ஆப்கனை அடக்கிய கோரி முகமது பிரித்வி முன்னால் திணறினான்,
ஒரு கட்டத்தில் கோரி முகமதுவினை வளைத்துபிடித்தான் பிரித்வி
அன்றே கோரியின் தலையினை சீவியிருந்தால் இந்திய வரலாறே மாறியிருக்கும், ஆனால் உயிர்பிச்சை அளித்து அவனை ஆப்கனுக்கு விரட்டினான் பிரித்வி
அடிபட்ட பாம்பாக ஆப்கன் திரும்பிய கோரி அவமானத்தில் நொந்தான், பெரும் படை திரட்டி மறுபடியும் டில்லி நோக்கி வந்தான்
இம்முறை வலுவான குதிரைபடையோடு வந்தான் கோரி, பிரித்விராஜனிடம் யானைபடை வலுவாக இருந்தது என்பதால் அரபு குதிரைகள் சகிதம் வலுவாக வந்தான் கோரி
இம்முறை கோரியினை விடவே கூடாது என முடிவு செய்த பிரித்வி பல மன்னர்களை திரட்டினான்,
அப்படியே மாமன் ஜெயசந்திரனிடமும் உதவி கேட்டான்
ஜெய்சந்திரனோ பகைமையினால் உதவ மறுத்தான், உதவ சென்றவர்களையும் தடுத்தான் ஆயினும் களம் கண்டான் பிரித்வி
உதவ மறுத்ததோடு இல்லாமல் கோரிக்கு ஆதரவான காரியங்களை செய்தான் ஜெயசந்திரன்
தன் இருபெரும் எதிரிகளை தனியாக சந்தித்தான் பிரித்வி,
போரில் மாவீரம் காட்டி நின்ற பிரித்வியினை கோரியினால் வெல்ல முடியவில்லை, ஆயினும் அவன் திரட்டி வந்த பெரும்படை அவனுக்கு பலமாக களத்துக்கு வந்து கொண்டே இருந்தது , யுத்தம் நீடித்தது
யுத்த நெறிகளை மீறி காட்டுமிராண்டிதனமான போரில் ஈடுபட்ட கோரி, நள்ளிரவில் பாசறையில் புகுந்து பிரித்வியினை பிடித்தான்,
துரோகத்தால் வீழ்த்தபட்டான்
பிரித்வி ராஜன்
கடந்த முறை தனக்கு உயிர்பிச்சை அளித்தவன் என்ற நன்றி கூட இல்லாமல் அவனின் கண்களை குருடாக்கினான் கோரி
பலசாலி அகபட்டால் உடனே அவனை குருடனாக்கி அவனை தடுமாற வைத்து ரசித்து பழிவாங்கும் கொடூர பழக்கம் அன்று அரேபியாவிலும் ஆப்கனிலும் இருந்தது
குருடனான பிரித்வியினை அடிக்கடி சபையில் நிறுத்தி அவமானபடுத்தி விளையாடுவது அவனுக்கு வழக்கமாயிற்று
"ஒரு நாள் நீதான் பெரும் வில்லாளி ஆயிற்றே?
இப்பொழுது வில்லும் அம்பும் கொடுத்தால் சரியாக அடிப்பாயா?"
என நகையாடினான் கோரி
தன்னால் ஒலிவரும் இலக்கினை துல்லியமாக தாக்கமுடியும் என்றான் பிரித்வி ராஜன்
அரை போதையில் இருந்த கோரி, அவன் கையில் வில்லை கொடுத்து, இப்பொழுது மணி ஒலிக்கும் அதுதான் இலக்கு நீ அதை சரியாக அடிக்க வேண்டும் என உத்தரவிட்டதுதான் தாமதம்
மிக சரியாக கோரியின் மேல் அம்பை செலுத்தினான் பிரித்வி
ஆம், ஓய்வு என்பதாலும் பிரித்வி குருடன் என்பதாலும் கவச உடை இன்றி உத்தரவிட்ட கோரியினை, அவன் குரல் வந்த திசை நோக்கி மிக சரியாக அம்புவிட்டு கொன்றான் பிரித்வி
அதன் பின்பு பிரித்வி கொல்லபடுகின்றான்,
அவனுக்கு வயது 24
24 வயதிற்குள் மங்கா புகழ்பெற்றவன் பிரித்வி, கோரி முகமதுவினை முதலில் ஓட அடித்தவன் அவனே
இந்தியரிடையே ஒற்றுமை இருந்தால் இரண்டாம் முறையும் அவனால் வென்றிருக்க முடியும், துரோகமும் பிரித்வியினை சாய்த்தது
துரோகத்தால் வீழ்த்தபட்டான்
மாவீரன் பிரித்வி,
இன்றும் வட இந்தியாவின் கிராமிய பாடல்களில் அவன் கதையும் காவியமும் உண்டு
ஆப்கானிய கொடூர மன்னர்களை மாவீரனாக எதிர்கொண்ட அவனின் பெயரை இந்தியா தன் ஏவுகனைக்கு சூட்டியது
ஆம் இந்தியா தன் ஏவுகனைக்கு "பிரித்வி " என‌ அவன் பெயரையே சூட்டியது
இதை கவனித்த பாகிஸ்தான் அவசரமாக சீனாவிடமிருந்து ஏவுகனை வாங்கிய பாகிஸ்தான் அதற்கு "கோரி" என பெயரிட்டு வைத்திருக்கின்றது
900 ஆண்டுகளை கடந்தாலும் கோரியும் பிரித்வியும் இன்றும் ஏவுகனைகளாக எதிர் எதிரே நிற்கின்றார்கள்
நிச்சயம் பிரித்வி இனி தோற்கமாட்டான், காரணம் அன்று அவனுக்கு துரோகம் செய்ய‌ பலர் இருந்தனர்.
இன்று மொத்த இந்தியாவும்
அவனுக்கு ஆதரவாய் இருகின்றது
பிரித்வி மேம்படுத்தபட்டு பாகிஸ்தானின் எந்த மூலையினையும் அணுகுண்டோடு தாக்கும் அளவு வலிமையானதாக இந்தியாவின் பாதுகாப்பாக நிற்கின்றது
அதில் பிரித்விராஜன் வாழ்ந்துகொண்டே இருக்கின்றான், உண்மையான வீரன் ஒரு காலமும் அழிவதே இல்லை

Comments

Popular posts from this blog

DACOITS OF CHAMBAL

List of Muhammad's Wives and Concubines

MAHARANI SITADEVI OF BARODA the "Indian Wallis Simpson" INTERESTING LIFE STORY OF HER