Posts

Showing posts with the label HOW TO GET VOTE

HOW TO GET VOTE FROM SHORT CUT WITHOUT WEARS AND TEARS RAJINIKANTH

Image
HOW TO GET VOTE FROM  SHORT CUT WITHOUT WEARS AND TEARS RAJINIKANTH ஊடகங்களே வியக்கிற ஊடக ஒளிதான் நம்ம ரங்கராஜ் பாண்டே! ஐயோ பாவம். அவரது பேரறிவும் பெரு முதிர்ச்சியும் ஒரு ரசிகன் லெவலிலேயே நின்று விட்டதுதான் அண்மைகால சோகம்! ரஜினி ரசிகர் மன்ற நிகழ்ச்சி ஒன்றில், தேர்தல் வந்தால் ரசிகர்கள் எப்படியெல்லாம் உஷாராக இருக்க வேண்டும் என்று வகுப்பு எடுக்கிற அளவுக்கு ‘ரங்கராஜ் அலைஸ் சோ பாண்டே’ ஆகியிருந்தார் அவர். ஒருமுறை சாணக்யா சேனலில் பேசியவர், ‘ரஜினி மனைவி லதா மீது எனக்கு தெரிஞ்சு பெரிசா வழக்குகள் இல்ல. ஏதோ வாடகை பாக்கின்னு ஒரு இஷ்யூ வந்திச்சு. அவ்ளோதான்’ என்று கோரைப்பாயை சுருட்டி கோட்டு பாக்கெட்டுக்குள் வைத்தார். அப்படியொரு அப்பாவி அவர். லதா ரஜினி மீது ‘சுல்தான் தி வாரியர்’ படத்திற்காக வாங்கிய கடனை திருப்பி தராத விஷயத்தில், பண மோசடி வழக்கு ஒன்று தொடரப்பட்டு இன்றளவும் தீர்க்கப்படாமலிருப்பது தேர்ந்த பத்திரிகையாளரான ரங்கராஜ் பாண்டேவுக்கு தெரியாமலிருந்திருக்காது. பட்… நேர்த்திக்கடன் அப்படி பேச வைத்திருக்கும்! மாவட்ட செயலாளர்களிடம் ரஜினி பேசியதென்ன? என்று சமீபத்தில் சாணக்யாவி...