T.G.LINGAPPA ,MUSIC DIRECTOR BORN 1927 AUGUST 22 - 2000 FERUARY 5
T.G.LINGAPPA ,MUSIC DIRECTOR BORN 1927 AUGUST 22 - 2000 FERUARY 5 டி. ஜி. லிங்கப்பா என பரவலாக அறியப்பட்ட திருச்சிராப்பள்ளி கோவிந்தராஜுலு லிங்கப்பா (22 ஆகத்து 1927 – 5 பிப்ரவரி 2000) பழம்பெரும் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். தமிழ், கன்னடம், தெலுங்கு மொழித் திரைப்படங்களுக்கு இவர் இசையமைத்தார்.[1][2][3] ஜி. கோவிந்தராஜுலு நாயுடு இவரின் தந்தையாவார்.திரு கோவிந்தராஜுலு நாயுடு (எம்.ஜி.ஆர்-வைஜெயந்தி மாலா நடித்த பாக்தாத் திருடன் படத்தின் இசையமைப்பாளர்) என்ற பிரபல சையமைப்பாளருக்கு மகனாக பிறந்த லிங்கப்பா ஒரு சிறந்த இசையமைப்பா ளரானார் என்றால் அது மிகையில்லை. இசையரசி திருமதி பி.சுசீலாவிற்கு மிகவும் புகழ் தேடி தந்த “அமுதைப்பொழியும் நிலவே” தங்கமலை ரகசியம் பாடல் இவரது இசையமைப்பே. திருச்சியில் வசித்து வந்தபோது அங்கே எம்.கே.டி, கே.பி.சுந்தராம்பாள் போன்றவர்களுக்கு இசையமைத்து பயிற்சி அளித்தவர் லிங்கப்பாவின் தந்தை. பல வாத்திய கருவிகள் வாசிப்பதில் வல்லுனர் லிங்கப்பா. பல பட நிறுவனங்களில் பணியாற்றினார். மார்டன் தியேட்டர்ஸ் போன்ற பிரம்மாண்ட நிறுவனத்தில் கே.வி.மகாதேவன் மற்றும் பாப்பாவுடன...