Posts

Showing posts with the label BHAKTHAVATSALAM

BHAKTHAVATSALAMபக்தவத்சலம் பிறந்த நாள்: 1897அக்டோபர் 9

Image
BHAKTHAVATSALAM  பக்தவத்சலம் பிறந்த நாள்  1897 அக்டோபர் 9   பக்தவத்சலம் பிறந்த நாள்: 09.10.1897 மிகவும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட தலைவர்களுள் பக்தவத்சலமும் ஒருவர். தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம். பக்தவத்சலம் பிறந்தது புரட்டாசி உத்திரட்டாதியில். 90 ஆண்டுகள் வாழ்ந்தவரோடு இறுதி 13 ஆண்டுகள் எனக்குப் பழக்கமுண்டு. அது எனக்கு மீண்டும் ஒரு பல்கலைக்கழகத்தில் படித்தது போலாயிற்று. அன்றைய தலைவர்களோடு இன்றைய தலைவர்களை வைத்துப் பார்த்தால், பகல் சுருங்கி இரவு கவிந்ததாகத் தெரியும். பக்தவத்சலம் தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலுமே நல்ல புலமையையும் தத்துவத்தில் ஆழ்ந்த ஈடுபாட்டை யும் கொண்டிருந்தார். “எனது தமிழாசிரியர் உ. வே. சாமிநாத ஐயர். ஆங்கில ஆசிரியர் ஹென்றி ஸ்டோன். சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் எனது தர்க்கப் பேராசிரியர்” என்பார். மிகவும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டவர் முன்னாள் மத்திய அமைச்சர் ஓ.வி. அளகேசன் 1978-ல் பக்தவத்சலத்துக்குப் பிறந்த நாள் வாழ்த்துச் செய்தி ஒன்று அனுப்பியிருந்தார். அந்தச் செய்தியில், “பொதுவாழ்விலும் இருந்துகொண்டு தூய்மையாகவும் இருக்க முடியும்...