KADAVOOR JAMEEN -DINDIGUL DISTRICT MOUNTAIN PLACE
KADAVOOR JAMEEN -DINDIGUL DISTRICT MOUNTAIN PLACE "கடவூர் ஜமீனின் ஆளுகையில் இருந்த மலையைப் பற்றி யாருக்குத் தெரியும்?" - ஒரு மலையேறும் கரூர்க்காரரின் கதை! இருபது வருடங்களுக்கு முன்பு, எங்கள் பதினெட்டு ஊர்களிலும் டி.வி-யோ, தியேட்டரோ இல்லை. அதனால், 'ஒளியும் ஒலியும்' பார்ப்பதற்காக 500 அடி மலையேறி அந்தப் பக்கம் இருக்கும் திண்டுக்கல் மாவட்டத்துக்குப் படையெடுப்போம். மலையும் மலை சார்ந்த இடங்களையும் சுற்றிப் பார்க்காதவர்கள் யார்தான் இருக்க முடியும்? அவற்றை எத்தனை முறை பார்த்தாலும் எவருக்கும் சலிப்பு ஏற்படாது என்பது உண்மைதான். அதனால்தான் பலரும் சுற்றுலாத்தலம் சம்பந்தப்பட்ட மலைக்குன்றுகளில் மலையேற்றம் காண்கின்றனர். அப்படியான கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு மலைப் பகுதிக்குத்தான் அனுபவம் வாய்ந்த தெற்கு அய்யம்பாளையத்தைச் சேர்ந்த முத்துசாமி என்பவரோடும் பாலா என்ற இளைஞரோடும் பயணித்தோம்... "இந்த மலை, கரூர் மாவட்டம், கடவூர் அருகே மாவட்ட எல்லையாக உள்ள தெற்கு அய்யம்பாளையம் உள்ளிட்ட 18 ஊர்களைச் சுற்றி காம்பஸை வைத்து வரைந்ததுபோல் வட்டவடிவில் உள்ளது. இதை தெற்கு, வடக்கு, மேற்கு, கிழக்க...