Showing posts with label RAMASAMY. Show all posts
Showing posts with label RAMASAMY. Show all posts

Wednesday, 26 May 2021

TRAFFIC RAMASAMY ,AN ACTIVIST OF SOCIAL REFORMATION

 



TRAFFIC RAMASAMY ,AN ACTIVIST OF SOCIAL REFORMATION


டிராஃபிக் ராமசாமி அவர்கள் எழுதிய  ‘ஒன் மேன் ஆர்மி‘ நூலில் இருந்து…………





1949 ஆம் ஆண்டு. எனக்கு அப்போது வயது 14. நான் 10 ஆம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தேன். அம்மா என்னை அரிசி எடுத்து வருவதற்காக சென்னையில் இருந்து காஞ்சிபுரம் அனுப்பி இருந்தார். நான் காஞ்சிபுரத் தில் இருந்து 10 கிலோ அரிசியை எடுத்துக் கொண்டு பஸ்ஸில் வந்தேன். அதற்கான அனுமதியையும் பெற்று இருந்தேன்.


அப்போதையக் காலத்தில் குறிப்பிட்ட எடைக்கு மேல் அரிசி மற்றும் நெல்லை அனுமதி இல்லாமல் வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப் பட்டிருந்தது. (அப்போது சென்னையில் இருந்து காஞ்சி புரத்துக்கு பஸ் கட்டணம் 1 ரூபாய் 25 காசுகள்)


சென்னையை நோக்கி வந்துகொண்டு இருந்தது பஸ். ஆற்காடு செக்போஸ்ட்டில் வந்தபோது பஸ்ஸை நிறுத்தி அவரவர் கைகளில் இருந்தப் பொருட்களை அதிகாரிகள் பரிசோதனை செய்துகொண்டு இருந்தனர். என்னைப் பரிசோதித்த ஓர் அதிகாரி என் மடியில் இருந்த அரிசிப் பையைப் பார்த்துவிட்டு, ‘பத்து கிலோ அரிசியைக் கொண்டு செல்ல அனுமதி வாங்கி இருக்கிறாயா?’ என்றார். நான் அனுமதி வாங்கிய விவரத்தைச் சொன்னேன்.


ஆனாலும், அந்த தாசில்தார் நான் கொண்டுவந்த அரிசிப் பையைப் பிடுங்கிக் கொண்டார். நான் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவர் அரிசிப் பையைக் கொடுக்கவில்லை. ‘எங்கள் வயலில் விளைந்த அரிசி இது. பத்து கிலோ எடுத்துச் செல்ல உரிய அனுமதி வாங்கி இருக்கிறேன். அப்படியும் நீங்கள் ஏன் தடுக்கிறீர்கள்?’ எனக் குரலை உயர்த்தி நியாயம் கேட்டேன். அதில், அந்த தாசில்தாருக்கு கடுமையான கோபம் வந்துவிட்டது. ‘என்னிடமே நியாயம் பேசுகிறாயா? உன்னால் முடிந்ததைச் செய்துகொள். அரிசியைத் தர முடியாது. மீறிப் பேசினால் போலீஸுக்குத் தகவல் சொல்ல வேண்டி இருக்கும்!’ என மிரட்டி அனுப்பிவிட்டார்.




எங்கள் குடும்பத்தில் அப்போது 11 பிள்ளைகள். நான் கொண்டுபோகும் அரிசியில்தான் சாப்பாடு செய்ய வேண்டிய நிலை. சில நேரங்களில் அப்பா ஓவர் டியூட்டி பார்த்தாலும் பார்ப்பார். வெறும் கையோடு போனால் அம்மா என்ன செய்வாள்? பலவித வேதனைகளும் மனதைக் குழப்ப, அரிசிப் பையை இழந்துவிட்டு வீட்டுக்கு வந்தேன்.


தாசில்தார் அரிசிப் பையைப் பிடுங்கிக்கொண்ட விஷயத்தைச் சொன்னேன். சொல்லும்போதே எனக்கு அழுகை பொங்கியது. அப்போது வீட்டுக்கு வந்த என் தந்தை, ‘சரி, விடு. அதிகாரிகள் ஏதோ தவறான அரிசின்னு நினைச்சுப் பிடிச்சிருப்பாங்க. அதை விட்டுத்தள்ளு. நான் கடைக்குப்போய் அரிசி வாங்கி வருகிறேன்’ என எனக்கு ஆறுதல் சொல்லிக் கிளம்பிவிட்டார்.


ஆனால், என்னால் என்னை சமாதானம் செய்துகொள்ள முடியவில்லை. ‘ஏதோ ஓரளவுக்கு சமாளித்துக் கொள்ளும் குடும்பம் என்பதால் சிக்கல் இல்லாமல் போய்விட்டது. இதேபோல் ஒரு அன்றாடங்காய்ச்சியின் குடும்பத்துக்கு நேர்ந்து இருந்தால் என்னாகி இருக்கும்?’ என்கிற எண்ணம் அன்று முழுக்க என்னைத் தூங்கவிடவில்லை. தவறாக நடந்துகொள்வது எத்தகையக் கண்டனத்துக்கு உரியதோ... அதேபோல்தான் தவறைத் தட்டிக் கேட்காமல் அலட்சியம் காட்டுவதும். அந்த ஆவேசம் எனக்குள் அடங்காதத் தீயாகத் தகிக்கத் தொடங்கியது.


‘ஒரு தனி நபர் ஓர் ஊரிலிருந்து அடுத்த ஊருக்கு எத்தனை கிலோ அரிசியை எடுத்துச் செல்லலாம்? அதற்கு யாரிடம் அனுமதி பெற வேண்டும்?’ என்கிற விவரங்களை எல்லாம் மறுபடியும் படித்துப் பார்த்து தெரிந்துகொண்டேன். சட்டப்படி நான் 10 கிலோ அரிசியைக் கொண்டு வந்ததில் எந்தத் தவறும் இல்லை என்கிற நிறைவு எனக்கு நிம்மதியைக் கொடுத்தது. நியாயமாக நடந்தும் அரிசியைப் பறித்துக்கொண்ட அந்த தாசில்தாரை நிச்சயம் சும்மா விடக்கூடாது என்கிற ஆவேசமும் எனக்குள் அடங்கிவிடவில்லை.


‘எப்போதடா விடியும்?’ எனப் புரண்டு புரண்டுப் படுத்தேன். காலையில் எழுந்த உடன் தபால் ஆபீஸுக்குப் போனேன். மூன்று பைசாவுக்கு ஒரு போஸ்ட் கார்ட் வாங்கினேன். எனக்கு நடந்த அநீதியை அப்படியே எழுதி அப்போதையக் காஞ்சிபுரம் கலெக்டருக்கு அனுப்பினேன். ‘நிச்சயம் எனக்கான நியாயம் கிடைக்கும்’ என்கிற நம்பிக்கையோடு பள்ளிக்கூடம் சென்று விட்டேன்.





நான்கு நாட்கள் கழித்து, ஆற்காடு சிக்னலில் என் அரிசியைப் பிடுங்கி வைத்துக்கொண்ட அதே தாசில்தார் எங்கள் வீட்டுக்கு முன், கையில் அரிசிப் பையோடு நின்றுகொண்டு இருந்தார். நான் அவரை பார்க்காதது போல் வீட்டுக்குள் சென்றுவிட்டேன். ‘தம்பி... தம்பி...’ என்றபடியே பதறிய அவர், மாவட்ட ஆட்சியர் தன்னை சஸ்பெண்ட் செய்துவிட்டதாகக் கூறினார்.


‘‘உங்களோட அரிசிப்பை ஒரு அரிசிகூடக் குறையாமல் இதோ இருக்கு. நடந்தது தவறுதான். என்னைவிட எத்தனையோ வயசு சின்னப் பையனான உங்ககிட்ட மனசு வருந்தி மன்னிப்புக் கேட்டுக்கிறேன்’’ என்றார் கண்ணீரோடு.


அரிசிப் பையை என்னிடம் கொடுத்து, ‘‘நடந்த சம்பவத்தை மறந்து என்னை மன்னிச்சிட்டதா நீங்க ஒரு கடிதம் கொடுத்தாத்தான் மறுபடியும் நான் தாசில்தார் உத்தியோகம் பார்க்க முடியும். தயவு பண்ணி என்னை மன்னிச்சிட்டதா ஒரு கடிதம் எழுதிக் கொடுங்க தம்பி’’ என அவர் இரு கைகளையும் உயர்த்திக் கும்பிட்டபடி சொல்ல... எனக்கே ஒரு மாதிரியாகிவிட்டது.


இது என் நியாயத்துக்கான வெற்றி என சத்தம் போட்டுக் கத்த வேண்டும்போல் இருந்தது.


வயதில் சிறுவனாக இருந்தாலும், எனக்கு நடந்த அநீதியை யாருடைய துணையும் இல்லாமல் என்னால் தட்டிக் கேட்க முடியும். அதற்கான நியாயத்தைப் பெற முடியும் என்கிற துணிச்சல் எனக்குள் முதல் முறையாகப் பூத்தது. யாரையும் அழவைத்து ரசிக்கும் குரூரம் எனக்கு ஒருபோதும் இருந்தது இல்லை. அதனால், ‘நடந்த தவறை தாசில்தார் ஒப்புக்கொண்டார். என் அரிசிப் பையையும் முறைப்படி திருப்பிக் கொடுத்தார். இனி இதுபோல் அவர் யாரிடமும் நடந்துகொள்ள மாட்டார் என நம்புகிறேன். திருந்திய மனநிலையில் இருக்கும் இவரை சஸ்பெண்ட் நடவடிக்கையில் இருந்து விடுவித்து உரிய பணியில் அமர வைக்கலாம்!’ எனக் கடிதம் எழுதிக் கொடுத்து அனுப்பினேன்.


அறிந்தோ அறியாமலோ தவறு நிகழ்ந்துவிடுகிறது. அதன் பாதிப்பு அறிந்து ஒருவர் மன்னிப்புக் கேட்கும்போது, தவறைத் திருத்திக்கொள்ளும் வாய்ப்பாக அவரை மன்னிப்பதில் தவறே இல்லை.


மன்னிப்புதான் மனிதகுலத்தின் மைய விளக்கு. அது தரும் சுடரில்தான் இந்தப் பூமிப் பந்து சுற்றுகிறது. தவறு செய்தவர்களைத் திருந்தச் செய்வது மட்டுமே நம் கடமை.


14 வயதில் ஒரு தாசில்தாரையே சஸ்பெண்ட் ஆக வைத்திருக்கிறேன் என்றால், நியாயத்தின் அடிப்படை யில் என்னால் எதையும் தைரியமாகச் செய்ய முடியும் என்கிற நம்பிக்கை அப்போதுதான் பிறந்தது. மனதுக் குள் புது வெள்ளம் பாய்ந்ததுபோல் ஓர் உற்சாகம். ஒரு சிறு எறும்பு யானையின் காதுக்குள் புகுந்து யானையைக் குப்புற சாய்த்தது போன்ற நிறைவு.


மூன்று பைசா போஸ்ட் கார்டில் எழுதப்பட்ட விஷயத்தை அக்கறையோடு படித்து, உரியபடி விசாரித்து, தவறு செய்த அதிகாரி மீது நடவடிக்கை எடுத்த அந்தக் கலெக்டர்தான் ‘அநியாயமாக நடக்கும் எதையும் தட்டிக் கேட்கலாம்’ என்கிற துணிச்சலை எனக்குள் வார்த்தவர்.

Wednesday, 14 October 2020

SIR ARCOT RAMASAMY MUDALIYAR , FIRST POLITICIAN BORN 1887 OCTOBER 14

 

SIR ARCOT RAMASAMY MUDALIYAR ,

FIRST POLITICIAN BORN 1887 OCTOBER 14



திவான் பகதூர் சர் ஆற்காடு இராமசாமி முதலியார்[1][2] (1887–1976) ஓர் இந்திய வழக்கறிஞரும் அரசியல்வாதியும் இராசதந்திரியும் ஆவார். இவர் நீதிக்கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவர். இந்திய விடுதலைக்கு முன்னும் பின்னும் இந்திய அரசாங்கத்தில் நிருவாகம், ஆட்சி சார்ந்த பல பதவிகளை வகித்தவர்

வாழ்க்கைக் குறிப்பு[மூலத்தைத் தொகு]
இராமசாமி முதலியார் 1887இல் தென்னாற்காட்டில் ஒரு வசதி படைத்த அகமுடையார் குடும்பத்தில் பிறந்தார். இவரும் ஆற்காடு லட்சுமணசாமி முதலியாரும் இரட்டையர்கள் ஆவர்.[3] இவர் கர்னூலிலுள்ள முனிசிப்பல் உயர்நிலைப் பள்ளியில் படித்தார்.[3] சென்னை கிருத்துவக் கல்லூரியில் இளங்கலைப் பட்டமும் சென்னை சட்டக் கல்லூரியில் சட்டமும் பயின்றார். சட்டப்படிப்பு முடிந்தபின், அரசியலில் ஈடுபடுவதற்கு முன்பு வழக்குரைஞராகப் பணியாற்றினார். 1920இல் சென்னை சட்ட மன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] 1920–1926; 1931–1934 காலகட்டங்களில் சட்ட மன்ற உறுப்பினராக இருந்த ராமசாமி முதலியார் 1934இல் இடம்பெற்ற சென்னை மாகாணச் சட்டமன்றத் தேர்தலில், எஸ். சத்தியமூர்த்தியிடம் தோற்றுப் போனார்.

நீதிக்கட்சி[மூலத்தைத் தொகு]
இராமசாமி முதலியார், நீதிக்கட்சி ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்தே (1917) கட்சியில் இருந்தவர். நீதிக்கட்சியின் பொதுச்செயலாளராகப் பொறுப்பு வகித்தார்.[4] சூலை 1918இல் இராமசாமி முதலியார், மருத்துவர் டி. எம். நாயர், கூர்ம வெங்கட ரெட்டி நாயுடு ஆகிய மூவரடங்கிய குழு ஒன்று இங்கிலாந்து சென்று நீதிக்கட்சி சார்பில் வகுப்புவாரியான பிரதிநிதித்துவத்தை வலியுறுத்தி அதற்கான சான்றுகளைப் பிரித்தானிய நாடாளுமன்றச் சீர்திருத்தச் செயற்குழு முன் சமர்ப்பித்தது.[5] இவர் நீதிக்கட்சியில் படிப்படியாக முன்னேறி அக்கட்சியின் மூளையென்று கருதப்படும் அளவுக்கு உயர்ந்தார்[6]. இந்தியாவில் வெவ்வேறு பகுதிகளிலும் உள்ள பிராமணர் அல்லாதோரை ஒன்றிணைக்கவும் அவர்களையும் உள்ளடக்கி மாநாடுகளை நடத்தவும் முயற்சிகள் மேற்கொண்டார்.[6] இவர் ஒரு சிறந்த பேச்சாளர். இவரது பேச்சுக்கள் ஊக்கம் மிக்கவையாக அமைந்திருந்தன.[6]

நவம்பர் 8, 1926இல் நடைபெற்ற சென்னை சட்டமன்றத் தேர்தலில் நீதிக்கட்சி 98இற்கு 21 இடங்களை மட்டுமே பிடித்து மிகப் பெரிய தோல்வியைத் தழுவியது.[7] தோல்வியடைந்தவர்களில் முதலியாரும் ஒருவர். தற்காலிகமாக அரசியலில் இருந்து ஓய்வு பெற்று பி. என். ராமன் பிள்ளைக்குப் பதில் நீதிக்கட்சியின் ஜஸ்டிஸ் செய்தித் தாளின் பொறுப்பை ஏற்று நடத்தினார்.[6] இவரது மேற்பார்வையின் கீழ் அச்செய்தித் தாள் பிரபலமடைந்து அதன் விற்பனையும் அதிகமானது.[6] மார்ச் 1, 1929இல் இவரும் நீதிக்கட்சியின் மற்றொரு முக்கியத் தலைவருமான சர் ஏ. டி. பன்னீர்செல்வமும் நீதிக்கட்சி சார்பில் கோரிக்கைகளை சைமன் குழு முன் வைத்தனர்.[6] இவர் 1928 முதல் 1930 வரை சென்னை நகர மேயராகப் பணிபுரிந்தார். 1935இல் அரசின் வரித்துறையில் நியமிக்கப்பட்டதால் ஜஸ்டிஸ் செய்தித் தாளின் ஆசிரியர் பொறுப்பிலிருந்து விலகினார்.[6] இவர் பிரித்தானிய அரசின் இந்தியத்துறை அமைச்சரின் செயற்குழு உறுப்பினராகவும் இருந்தார். பெப்ரவரி 25, 1937இல் பக்கிங்ஹாம் அரண்மனையில் இவருக்கு சர் பட்டம் வழங்கப்பட்டது.[8][9]


அனைத்திந்தியப் பிராமணரல்லாதோர் இயக்கம்[மூலத்தைத் தொகு]
இராமசாமி முதலியாருக்கு ஷாகு மகாராஜுடனும் மகாராட்டிரப் பிராமணரல்லாதோர் கூட்டத் தலைவர்களோடும் மற்ற வட இந்தியப் பிராமணரல்லாதோர் கூட்டத் தலைவர்களோடும் நட்புமுறையிலான நல்ல உறவு இருந்தது. ராமசாமி முதலியார் இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளிலும் உள்ள பிராமணரல்லாதோர் அமைப்புகளின் தலைவர்களை ஒருங்கிணைப்பதிலும் அவர்களுக்கான மாநாடுகள் நடத்துவதற்கும் உதவினார்.[10] திசம்பர் 18, 1922இல் சதாராவில் இரண்டாம் இராஜாராமின் தலைமையில் நடந்த பிராமணரல்லாதோர் மாநாட்டில் இவரும் பங்கேற்றார்.[10] திசம்பர் 26, 1924இல் பெல்காமில் நடந்த அனைத்திந்தியப் பிராமணரல்லாதோர் மாநாட்டில் கலந்து கொண்டு இவர் ஆற்றிய சொற்பொழிவு அனைவராலும் பாராட்டிப் பேசப்பட்டது. பெப்ரவரி 8, 1925இல் நடந்த ஏழாவது பிராமணரல்லாதோர் மாநாட்டில் கலந்து கொண்டு பிராமணரல்லாதவர்களிடம் இருக்க வேண்டிய ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்திப் பேசினார்.[10][11]

1925இல் சர் பி. டி. தியாகராய செட்டியின் மறைவுக்குப்பின் ஷாகு மஹாராஜின் சத்ய ஷோதக் சமாஜையும் நீதிக்கட்சியையும் இணைக்கும் பாலமாக இருந்தவர் முதலியார் ஒருவர் மட்டுமே. திசம்பர் 19, 1925இல் சென்னை விக்டோரியா மண்டபத்தில் அனைத்திந்தியப் பிராமணரல்லாதோர் மாநாடு நடத்த பனகல் அரசருக்குத் துணை புரிந்தார். திசம்பர் 26, 1925இல் இரண்டாவதாக மறுபடியும் ஒரு மாநாட்டை அமராவதியில் நடத்தினார். அது இரு தொடர்களாக நடந்தது. முதல் கூட்டத்தொடருக்குக் கோலாப்பூர் மகாராசாவும் இரண்டாவது தொடருக்குப் பனகல் அரசரும் தலைமை தாங்கினர்.

இரண்டாவது தொடரில் முதலியார் பேசியது:-


“ பிராமணரல்லாதோர் இயக்கத்தினைப் பற்றி நான் விளக்க வேண்டிய கட்டத்தை அது தாண்டிவிட்டது. அதன் செயல்பாடுகள் பம்பாயிலிருந்து சென்னை வரையும் விந்திய மலையிலிருந்து கன்னியாகுமரி வரையும் பரவியுள்ளன. நாடு முழுவதும் அதன் கொள்கைகள் பரவிய மின்னல் வேகமும் வீச்சுமே இயக்கத்தின் நிலையை விளக்கிவிடும். ”
முதலியாரின் பேச்சைத் தி இந்து நாளிதழ், பிற மாகாணத்தில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற அவரது விருப்பம் இந்த அளவுக்கு அவரது கற்பனையைத் தூண்டியிருக்கிறது என விமர்சனம் செய்தது.

போர்க்கால அமைச்சரவையில்[மூலத்தைத் தொகு]
1939இல் இரண்டாம் உலகப்போர் மூண்டபோது இராமசாமி முதலியார், வைசிராயின் செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.[12][13] ஜூன் 1942ல் அவருக்கு கே. சி. எசு. ஐ (KCSI) பட்டம் வழங்கப்பட்டது. சூலை 1942இல் பிரித்தானியப் பிரதம மந்திரி வின்ஸ்டன் சர்ச்சிலின் போர்க்கால அமைச்சரவைக்கு நியமிக்கப்பட்ட இரு இந்தியரில் இவரும் ஒருவர். பிரித்தானியரின் ஆட்சிக்குட்பட்ட மற்றப் பகுதிகளின் பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்டிருந்த உரிமைகளும் சலுகைகளும் இவர்களுக்கும் சமமாக வழங்கப்பட்டிருந்த்து.[12][13]

ஐக்கிய நாடுகள் பொருளாதார, சமூக மன்றத் (ECOSOC) தலைவராக[மூலத்தைத் தொகு]
1945இல் ஏப்ரல் 25 முதல் சூன் 26 வரை சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் அவையின் மாநாட்டில் இந்தியப் பிரதிநிதியாக முதலியார் கலந்து கொண்டார். அங்கு பொருளாதார, சமுதாயப் பிரச்சினைகளைப் பற்றி விவாதித்த செயற்குழுக் கூட்டதிற்குத் தலைமை தாங்கினார்.[14] சனவரி 23, 1946 அன்று சர்ச் ஹவுஸ், இலண்டனில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொருளாதார, சமூக மன்றக் கூட்டத்தில் மன்றத்தின் முதல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[15][16] முதலியாரின் தலைமையில் பெப்ரவரி 1946இல் நடந்த மன்றக் கூட்டத்தில் பன்னாட்டுச் சுகாதார மாநாடு ஒன்று நடத்தப்படவேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.[17] சூன் 19, 1946இல் பன்னாட்டுச் சுகாதார மாநாடு நடந்தது. அதனை முதலியார் தொடங்கி வைத்தார். அம்மாநாட்டிற்றான் உலக சுகாதார அமைப்பு (WHO) உருவானது. அவ்வமைப்பின் சட்டதிட்டங்கள் விவாதிக்கப்பட்டு 61 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.[18] பொருளாதார, சமூக மன்றத் தலைவராக ஓராண்டு பணிபுரிந்து பின் பணிக்காலம் முடிவடைந்ததால் இந்தியாவுக்குத் திரும்பி மைசூரின் முதலமைச்சராகப் (திவான்) பதவியேற்றார்.[19] மைசூர் மகாராஜா ஜயச்சாமராஜ வாடியாருக்கு சுதந்திர இந்தியாவுடன் இணைய வேண்டாமென ஆலோசனை கூறினார்.[20][21].

Image may contain: 1 person

SUNDARA RAMASAMY ,WRITER BORN 1931 MAY 30 -2005 OCTOBER 14

 

SUNDARA RAMASAMY ,WRITER BORN 

1931 MAY 30 -2005 OCTOBER 14




.சுந்தர ராமசாமி, (மே 30, 1931 - அக்டோபர் 14, 2005) நவீனத் தமிழ் இலக்கியத்தின் மிகச் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர். இவர் ஒரு நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், கவிஞர் எனப் பல இலக்கியவினங்களில் ஆளுமை பெற்றிருந்தார். பசுவய்யா என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதியவர். நவீனத் தமிழ் இலக்கியத்தில், தமிழ் மொழியினை பல்வேறு தளங்களுக்குக் கொண்டு சென்றார். மார்க்சியக் கண்ணோட்டத்தில் தொடங்கிய இவர் எழுத்துக்கள் (தண்ணீர், பொறுக்கி வர்க்கம்) இறுதியாக பட்டறிவுத் திறனாய்வு சார்ந்த உய்யநிலை நடப்பியல் (Empiricist Critical Realism) நோக்கில் (ஜகதி) கால்கொண்டன எனலாம். இடைபட்ட காலத்தில் புத்தியலின் (Modernism) பலவெளிகளை படைத்தாலும் அவ்வப்போது வியன்புனைவிலும் (இருக்கைகள் போன்றன) திளைத்துள்ளார்.


இவர், நாகர்கோவில் அருகே உள்ளே தழுவிய மகாதேவர் கோவில் என்ற கிராமத்தில் பிறந்தார். தன் இளைய பருவத்தில்,தொ.மு.சி.ரகுநாதனிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். தொ.மு.சி-யினால் மார்க்ஸிய தத்துவங்களிலும் ஈர்க்கப்பட்டவராகவும் இருந்தார். பிறகு தொ.மு.சி ஆசிரியராக இருந்த சாந்தி என்ற இதழில் எழுதத் தொடங்கினார்.1953 ஆம் ஆண்டு ’சாந்தி’ பத்திரிக்கையில் இவர் எழுதிய ’தண்ணீர்’ கதைக்கு முதல் பரிசு கிடைத்தது


இலக்கியச் செல்வாக்குகள்

இவர் சமூக சீர்திருத்தவாதிகளான காந்தி, பெரியார் ஈவெரா, அரவிந்தர், இராமகிருஷ்ண பரம அம்சர், இராம் மனோகர் லோகியா, ஜேசி குமரப்பா, ஜே கிருஷ்ணமூர்த்தி, தமிழ் இலக்கியத்தில் புத்துணர்திறனைப் புகுத்திய புதுமைப்பித்தன் எனப் பலரது நூல்களின் தாக்கத்துக்கு ஆட்பட்டுள்ளார். மேலும் மலையாள இலக்கியச் சுடரான எம். கோவிந்தனை 1957இல் தொடர்பு கொண்டு தொடர்ந்து அவரது நண்பராக கடைசிவரை விளங்கியுள்ளார்.. 1950களில் பொதுவுடைமைத் தோழரான ப. ஜீவானந்தம் அவர்களைச் சந்தித்துள்ளார். அதனால் இவருக்கு மார்க்சியத் தத்துவத் தாக்கம் ஏற்பட்டது. தொ.மு.சி. ரகுநாதன் ஆசிரியராகவிருந்து வெளியிட்ட சாந்தி இதழில் அவரது இலக்கியத் தொடர்பு உருவானது. மேலும் அவர் சரஸ்வதி இதழில் ஆசிரியக் குழு உறுப்பினராகியதும் எழுத்தாளராக வளர உதவியது.[1]




படைப்புகள்

நாவல்

ஒரு புளியமரத்தின் கதை (1966)

ஜே.ஜே. சில குறிப்புகள் (1981)

குழந்தைகள் பெண்கள் ஆண்கள் (1998)

சிறுகதைகள்

சுந்தர ராமசாமி சிறுகதைகள் முழு தொகுப்பு (2006)

விமர்சனம்/கட்டுரைகள்/மற்றவை

ந.பிச்சமூர்த்தியின் கலை: மரபும் மனிதநேயமும் (1991)

ஆளுமைகள் மதிப்பீடுகள் (2004)

காற்றில் கரைந்த பேரோசை

விரிவும் ஆழமும் தேடி

தமிழகத்தில் கல்வி: வே.வசந்தி தேவியுடன் ஒர் உரையாடல் (2000)

இறந்த காலம் பெற்ற உயிர்

இதம் தந்த வரிகள் (2002)

இவை என் உரைகள் (2003)

வானகமே இளவெயிலே மரச்செறிவே (2004)

வாழ்க சந்தேகங்கள் (2004)

புதுமைப்பித்தன்: மரபை மீறும் ஆவேசம்(2006)

புதுமைப்பித்தன் கதைகள் சுரா குறிப்பேடு (2005)

மூன்று நாடகங்கள் (2006)

வாழும் கணங்கள் (2005)

கவிதை

சுந்தர ராமசாமி கவிதைகள் முழு தொகுப்பு (2005)

மொழிபெயர்ப்பு

செம்மீன் - தகழி சங்கரப்பிள்ளை(1962)

தோட்டியின் மகன்(புதினம்) - தகழி சங்கரப்பிள்ளை(2000)

தொலைவிலிருக்கும் கவிதைகள்(2004)

நினைவோடைகள்

க.நா.சுப்ரமண்யம் (2003)

சி.சு. செல்லப்பா (2003)

கிருஷ்ணன் நம்பி (2003)

ஜீவா (2003)

பிரமிள் (2005)

ஜி.நாகராஜன் (2006)

தி.ஜானகிராமன் (2006)

கு.அழகிரிசாமி.

சிறுகதைகள் பட்டியல்

சிறுகதைகள் இதழ் வருடம்

1.முதலும் முடிவும் புதுமைப்பித்தன் மலர் 1951

2.தண்ணீர் சாந்தி 1953

3.அக்கரை சீமையில் சாந்தி 1953

4.பொறுக்கி வர்க்கம் சாந்தி 1953

5.உணவும் உணர்வும் 1955

6.கோவில் காளையும் உழவு மாடும் சாந்தி 1955

7.கைக்குழந்தை சரஸ்வதி 1957

8.அகம் சரஸ்வதி 1957

9.அடைக்கலம் சரஸ்வதி 1958

10.செங்கமலமும் ஒரு சோப்பும் சரஸ்வதி 1958

11.பிரசாதம் சரஸ்வதி 1958

12.சன்னல் சரஸ்வதி 1958

13.லவ்வு சரஸ்வதி 1958

14.ஸ்டாம்பு ஆல்பம் சரஸ்வதி 1958

15.கிடாரி சரஸ்வதி ஆண்டு மலர் 1959

16.சீதைமார்க் சீயக்காய்த்தூள் தாமரை பொங்கல் மலர் 1959

17.ஒன்றும் புரியவில்லை கல்கி தீபாவளி மலர் 1960

18.வாழ்வும் வசந்தமும் நவசக்தி வார இதழ் 1960

19.ரயில் தண்டவாளத்தில் ஓடும் கல்கி தீபாவளி மலர் 1961

20.மெய்க்காதல் கல்கி 1961

21.மெய்+பொய்=மெய் எழுத்து 1962

22.எங்கள் டீச்சர் கல்கி தீபாவளி மலர் 1962

23.பக்த துளசி இலக்கிய வட்டம் 1964

24.ஒரு நாய், ஒரு சிறுவன், ஒரு பாம்பு இலக்கிய வட்டம் 1964

25.தயக்கம் சுதேசமித்திரன் தீபாவளி மலர் 1964

26.லீலை கல்கி 1964

27.தற்கொலை கதிர் 1965

28.முட்டைக்காரி தீபம் 1965

29.திரைகள் ஆயிரம் தீபம் ஆண்டுமலர் 1966

30.இல்லாத ஒன்று கல்கி வெள்ளிவிழா ஆண்டுமலர் 1966

31.காலிப்பெட்டி உமா

32.அழைப்பு ஞானரதம் 1973

33.போதை சதங்கை 1973

34.பல்லக்குத் தூக்கிகள் ஞானரதம் 1973

35.வாசனை ஞானரதம் 1973

36.அலைகள் கொல்லிப்பாவை 1976

37.ரத்னாபாயின் ஆங்கிலம் அக் 1976

38.குரங்குகள் யாத்ரா 1978

39.ஓவியம் யாத்ரா 1979

40.பள்ளம் சுவடு 1979

41.கொந்தளிப்பு மீட்சி 1985

42.ஆத்மாராம் சோயித்ராம் 1985

43.மீறல் இனி 1986

44.இரண்டு முகங்கள் வீடு 1986

45.வழி கொல்லிப்பாவை 1986

46.கோலம் கொல்லிப்பாவை 1987

47.பக்கத்தில் வந்த அப்பா புதுயுகம் 1987

48.எதிர்கொள்ளல் காலச்சுவடு 1988

49.காணாமல் போனது காலச்சுவடு 1989

50.விகாசம் இந்தியா டுடே 1990

51.காகங்கள் காலச்சுவடு ஆண்டுமலர் 1991

52.மேல்பார்வை இந்திய டுடே இலக்கிய ஆண்டுமலர் 1994-1995

53.பட்டுவாடா காலச்சுவடு 1995

54.நாடார் சார் தினமணி பொங்கல் மலர் 1996

55.நெருக்கடி சதங்கை 1996

56.இருக்கைகள் காலச்சுவடு 1997

57.டால்ஸ்டாய் தாத்தாவின் கதை தினமணி தீபாவளி மலர் 1999

58.மயில் ஆனந்த விகடன் பவழவிழா மலர் 2002

59.பையை வைத்துவிட்டு போன மாமி 2003

60.தனுவும் நிஷாவும் காலம் 2004

61.களிப்பு 2004

62.நண்பர் ஜி.எம் காலச்சுவடு 2004

63.ஒரு ஸ்டோரியின் கதை காலச்சுவடு 2004

64.கூடி வந்த கணங்கள் 2004

65.கதவுகளும் ஜன்னல்களும் புதியபார்வை 2004

66.மறியா தாமுவுக்கு எழுதிய கடிதம் 2004

67.அந்த ஐந்து நிமிடங்கள் 2004

68.ஈசல்கள் 2004

69.கிட்னி 2004

70.பிள்ளை கெடுத்தாள் விளை காலச்சுவடு 2005

71.கொசு, மூட்டை, பேன் புதியபார்வை 2005

72.ஜகதி காலம் 2005

சுந்தர ராமசாமி பெற்ற விருதுகள்

இவர் கீழ்வரும் விருதுகளைப் பெற்றார்.[2]


குமரன் ஆசான் நினைவு விருது

இயல்விருது தமிழ் இலக்கியத் தோட்டம் 2001இல் வாழ்நாள் சாதனைக்காகப் பெற்றார்.[3]

கதா சூடாமணி விருது (2004)[1]

சுந்தர ராமசாமி பெயரிலான விருதுகள்

தமிழ்க் கணிமைக்கான விருது

தமிழ்க் கணிமை, தகவல் நுட்பம் துறைகளுக்கான பங்களிப்புகளைக் கௌரவிக்கும் முகமாக சுந்தர ராமசாமி தமிழ்க் கணிமை விருது ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது. கனடாவின் தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பினால் நிர்வகிக்கப்படும் இந்த விருது காலச்சுவடு அறக்கட்டளையின் பணவுதவியுடன் வழங்கப்படுகிறது. இலக்கியத் தோட்டம் நடத்தும் வருடாந்திர இயல் விருது வழங்கும் விழாவில் இவ்விருதைப் பெறுபவருக்கு ஆயிரம் கனேடிய டாலர்களும் விருதுப் பட்டயமும் வழங்கப்படும். இவ்விருதைப் பெறுபவர் சுயேச்சையான பன்னாட்டு நடுவர் குழுவால் தெரிந்தெடுக்கப்படுகிறார்.


இளம் படைப்பாளர் விருது

சுந்தர ராமசாமி நினைவாக ஆண்டுதோறும் இளம் படைப்பாளி ஒருவருக்கு நெய்தல் இலக்கிய அமைப்பு சுந்தர ராமசாமி விருது அளித்து வருகிறது. இலக்கியத்தின் ஏதேனும் ஒரு வகைமையிலோ ஒன்றுக்கு மேற்பட்ட வகைமைகளிலோ முக்கியமான பங்களித்து வரும் இளம் படைப்பாளி ஒருவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. நாற்பது வயதுக்கு உட்பட்டவர்கள் இவ்விருதுக்குப் பரிசீலிக்கப்படுவார்கள். படைப்புத் துறையில் தொடர்ந்து தீவிரமாக இயங்கிவருபவர்களாக அவர்கள் இருப்பது அவசியம். விருதில் பாராட்டுப் பத்திரமும், பத்தாயிரம் ரூபாய் ரொக்கப்பரிசும் அடங்கும்.

No photo description available.

Saturday, 6 June 2020

PULIMOOTTAI RAMASAMY COMEDY ACTOR


PULIMOOTTAI RAMASAMY COMEDY ACTOR


கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் குருகுலத்திலிருந்து வரப்பெற்ற நடிகர்களுள் இவரும் ஒருவர். பெரிய உருவம்.  ஆனால் குழந்தைத்தனமான முகம் கொண்டவர். மனம் போல் மாங்கல்யம், நாடோடி மன்னன் [1958], மருத நாட்டு இளவரசி [1950], கடவுளைக் கண்டேன், மோகன சுந்தரம் [1951], சின்னத்துரை [1952], துளிவிஷம் [1954], காவேரி [1955], பெரிய இடத்துப் பெண் [1962], எங்க வீட்டுப் பெண், சக்கரவர்த்தித் திருமகள், கூண்டுக்கிளி போன்ற 50-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ள பழம்பெரும் நகைச்சுவை நடிகர்.



நாடோடி மன்னனில் எம்.ஜி.ஆர். ”தூங்காதே தம்பி தூங்காதே நீ சோம்பேறி என்ற பெயர் வாங்காதே என்று பாடுவாரே….” அது சிறைக்காவலராக தூங்கித் தூங்கி விழுந்து நடித்திருக்கும் கொட்டாப்புளி ஜெயராமனைப் பார்த்துத்தான். மோகனசுந்தரம் படத்தில் தலைமைக் காவலராக நடித்திருப்பார். எனினும் இவரது நடிப்பிற்குத் தீனி போடும் கதாபாத்திரமாக இது இல்லை. எங்க வீட்டுப் பெண் படத்தில் கொட்டாப்புளி ஜெயராமன் சிறிய கதாபாத்திரத்தில் வருவார். சக்கரவர்த்தி திருமகள் படத்தில் கலைவாணரின் முட்டாள்  சீடனாக வரும் இவர் கலைவாணர், நான் போடும் ஒரு கோடு ஒன்றை அழிக்காமல் சிறிதாக்க வேண்டும் என்பார். அதற்கென்ன அதை விடப் பெரிய கோடு ஒன்றைப் பக்கத்தில் போட்டால் போதும் என்று கலைவாணரையே அசர வைத்துவிடுவார்.

இன்றைய விரசமான நகைச்சுவையைப் போலல்லாது இயற்கையாக நகைச்சுவையை வழங்கிய நகைச்சுவை நடிகர்களுள் இவரும் ஒருவர்.



இவர் நடித்த மேலும் சில படங்கள்:

டணால் கே.ஏ.தங்கவேலு கதாநாயகனாக நடித்தப் படமான “நான் கண்ட சொர்க்கம்”, ரமபையின் காதல் (அல்லது) யத்பவிஷ்யன் [1940] ,தங்கமலை ரகசியம் [1957] , தேவகன்யா (1943) , மனோன்மணி [1942], மணமகள் [1951], ஜெனோவா [1953], ரத்தக்கண்ணீர் [1956], அமரதீபம் [1956], பொம்மை [1964], நடு இரவில் [1970], இருவர் உள்ளம் [1963], ஆயிரம் ரூபாய் [1964], பராசக்தி [1952], தெனாலி ராமன் [1956], பிரஹ்லாதா [1939], குடும்ப விளக்கு [1956], பந்தபாசம் [1962], சுதர்ஸன் [1951]

”பிரஹ்லாதா” 1939 படத்தில் கொட்டாப்புளி ஜெயராமன்

கலைவாணரின், 'அசோகா பிலிம்சின்' தயாரிப்புகளில் நடிக்கவும், பங்கு பெறவும், பலதுறை கலைஞர்கள் அவருக்கு தேவைப்பட்டனர். அதை அறிந்து, பலர் கோவையில் ஆர்வத்தோடு கூடினர். அப்படி, கலைவாணரின் கலைக்கூடத்தில் இடம் பெற்றோர் தாம், உடுமலை நாராயணகவி, புளிமூட்டை ராமசாமி, ஆழ்வார் குப்புசாமி, காக்கா ராதாகிருஷ்ணன், சி.எஸ்.பாண்டியன் மற்றும் கொட்டாப்புளி ஜெயராமன் ஆகியோர்.
ராமசாமிக்கு, புளிமூட்டை என்ற அடைமொழியை சூட்டியவர் கலைவாணர். அதற்கு முன், அவர் ராமசாமியாகத் தான் இருந்தார். அவரது உருவமும், அதற்கேற்ற கம்பீரமான சாரீரமும், கலைவாணரை கவர்ந்திருந்தன. அத்துடன், அவர் சமையல் செய்வதிலும், நிபுணராக இருந்தார். ராமசாமி பேசும் போது, அவருடைய அங்கங்கள் குழைவதையும், முகத்தில், நெளிவு சுழிவுகள் விழுவதையும் கவனித்த கலைவாணர், நடிகர் குழுவில், அவருக்கு இடம் அளித்தார்; சமையலை விட்டு, அவர் சங்கீதம் பாடப் போனார்!
கலைவாணர் தயாரித்த, அலிபாபாவும் 40 திருடர்களும் என்ற படத்தில் (எம்.ஜி.ஆர்., நடித்த படம் அல்ல) ராமசாமிக்கு, திருடன் வேடம். கதை அமைப்பின் படி, கள்வர் கூட்டத்தில் சிக்கிய கலைவாணர், ராமசாமியை தேடுவார்; இக்காட்சியில் நடிக்கும் போது, ராமசாமியை தேடிய கலைவாணர், அருகில் இருந்தவனிடம், 'எங்கே அந்தப் புளிமூட்டை...' என்று வேடிக்கையாகக் கேட்பார்.
இதைக் கேட்டவுடன், சிரித்தபடியே, கட்டிலுக்கு அடியிலிருந்து, பருத்த மேனியை கஷ்டப்பட்டு, விடுவித்தபடி வெளியே வருவார், ராமசாமி. அப்படத்திலிருந்து தான் அவருக்கு, 'புளிமூட்டை' எனும் பெயர் வந்தது.
அதற்கு பின், புளிமூட்டை ராமசாமிக்கு, நிறைய படங்களில் வாய்ப்பளித்தார் கலைவாணர். 'கிந்தனார்' காலட்சேபத்தில், கலைவாணரோடு சேர்ந்து, பின்பாட்டுப் பாடி வந்தார். கலைவாணரிடம், புளிமூட்டைக்கு, கடைசி வரை குறையாத பக்தி இருந்தது.
புளிமூட்டை என்பதைப் போல, வேறு சில நடிகர்களுக்கும், பொருத்தமான பெயர்களைச் சூட்டியுள்ளார், கலைவாணர். நாடக வாத்தியாரும், பழம் பெரும் நடிகருமான, டி.பி.பொன்னுசாமி பிள்ளைக்கு, 'யதார்த்தம்' பொன்னுசாமி என்று பெயர் சூட்டியவர் கலைவாணர் தான்.
மனோன்மணி படத்தில், மதுரத்திற்கு தந்தையாக நடித்திருந்த பொன்னுசாமி, ஒரு காட்சியில், எருமை மாட்டின் கழுத்தில் கயிற்றைக் கட்டி, தெருவில் இழுத்து வருவார். மாட்டுக்கு பின், பிச்சைக்காரன் வேடத்தில் வந்த கலைவாணர், மெல்ல மாட்டை அவிழ்த்து, தம் கழுத்தை, கயிற்றிலே பிணைத்துக் கொள்வார்.
திரும்பிப் பார்த்த பொன்னுசாமி, வியப்போடு நிற்பார். அப்போது, என்.எஸ்.கிருஷ்ணன்,
மாடாய் இருந்த நானே
மனுஷனாய் மாறிட்டேனே
மாயம் ஒண்ணுமில்லை யதார்த்தம்...
- என்று பாடுவார்.
இப்படத்தில் தான், பொன்னுச்சாமி பிள்ளைக்கு, 'யதார்த்தம்' பொன்னுச்சாமி என்று நாமகரணத்தை சூட்டினார், கலைவாணர். அத்துடன், தன் நாடகக் குழுவுக்கும், 'யதார்த்தம்' என்றே பெயர் வைத்தார்.
கலைவாணரின் நாடகக் குழுவில் இடம் பெற்றிருந்த நடிகர் ஆழ்வார் குப்புசாமிக்கும், 'ஆழ்வார்' என்று பெயரிட்டவர் கலைவாணரே!
ஜுபிடர் பிக்சர்ஸ் தயாரித்த, கண்ணகி என்ற படத்தில், கிருஷ்ண பரமாத்மாவின் பக்தையாக நடித்திருப்பார் மதுரம். அவரின், வெறித்தனமான பக்தியை தணிக்கும் காட்சியில், கிருஷ்ண பரமாத்மா வேடத்தில் வருவார், என்.எஸ்.கிருஷ்ணன். அவரிடம், 'நீங்கள் ஏறி வரும் கருடாழ்வார் எங்கே...' என்று கேட்பார் மதுரம். அதே சமயத்தில், கருடாழ்வார் போல், இறக்கைகளை அசைத்து, பறவை கத்துவது போல், 'கீகீ' என்று கத்தியபடி வருவார், குப்புசாமி. உடனே, கிருஷ்ண வேடதாரியான கலைவாணர், குப்புசாமியைப் பார்த்து, 'ஏ ஆழ்வாரு...' என்று அழைக்க, அன்று முதல், அவர் ஆழ்வாரானார்.
கலைவாணரின் கருணையால், பல படங்களில் நடித்திருந்த ஆழ்வார் குப்புசாமி, கலைவாணரிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்.
ஒருசமயம், மணமகள் படத்தில், தாம் எதிர்பார்த்த வேடம் தராமல், சிறிய வேடம் தரப்பட்டதற்காக, உரிமையோடு கலைவாணரிடம் கோபித்து, கிளம்பிச் சென்றார், குப்புசாமி. அருகில் இருந்தவர்கள், 'கலைவாணரிடம், ஆழ்வார் இப்படி பேசலாமா...' என்று மனம் வருந்தினர்.
ஆனால், கலைவாணரோ சிரித்து, 'நீங்க ஏன் வேதனை படுறீங்க... நம்ப ஆழ்வார் என்னிடம் கோபித்துக் கொள்ளாமல் வேறு யாரிடம் கோபித்துக் கொள்வான்...' என்றார். கலைவாணரின் பெருந்தன்மை, அவர்களை மெய் சிலிர்க்கச் செய்தது.
வருவாயை எதிர்பார்க்காமல், தம் அபிமான நடிகர்களுக்காக அடிக்கடி நாடகங்களிலும் நடித்து வந்தார் கலைவாணர். 'படப்பிடிப்பு இல்லாத நாட்களில், நாடகத்தின் மூலம் கிடைக்கும் ஊதியம் அவர்களுக்கு உதவியாக இருக்கட்டுமே...' என்ற எண்ணத்தோடு தான், நாடகங்களை நடத்தி வந்தார்.
ஒருசமயம், மேலூரில் என்.எஸ்.கே., நாடக குழுவின் நாடகம் நடைபெறவிருந்தது. கலைவாணரின் நீண்ட நாள் நண்பரான சிங்காரம் பிள்ளை என்பவர் தான், அந்த ஊரில் நாடகம் நடத்த, ஏற்பாடு செய்திருந்தார். நாடகத்தில் நடிக்க கலைவாணர், மதுரம் மற்றும் நாடகக் குழுவைச் சார்ந்த நடிக, நடிகையர் மேலூருக்குச் சென்றிருந்தனர்.
நாடகம் முடிந்து, சென்னைக்கு திரும்புவதற்காக, கலைவாணர், மதுரம் மற்றும் நாடகக் குழுவினர் காரில் ஏற, பரபரப்பு அடைந்தார் மதுரம். காரணம், நாடகம் நடத்தியவர், சென்னையில் முன்பணம் தந்தது போக, மீதி பணத்தை கொடுக்காதது தான்.
'அவரிடம் சென்று பாக்கிப் பணத்தை யார் கேட்பது... அவ்விதம் கேட்பது கலைவாணருக்குப் பிடிக்காதே...' என்று நினைத்த மதுரத்திற்கு, தமக்கும், கலைவாணருக்கும் ஊதியம் கிடைக்கா விட்டாலும் பரவாயில்லை. இதையே நம்பியிருக்கும் மற்ற நடிகர்களுக்கு பணம் கொடுத்தாக வேண்டுமே என்ற தவிப்புடன் இருந்தார், மதுரம்.
ஆனால், அதைப் பற்றி சிறிதும் கவலை இல்லாமல், வெள்ளி வெற்றிலைப் பெட்டி சகிதம், காரில் ஏறி உட்கார்ந்தார், கலைவாணர். அப்போது, இரண்டு ரோஜாப் பூ மாலைகளோடு, காரை நோக்கி ஓடி வந்தார் சிங்காரம்பிள்ளை.
கலைவாணருக்கும், மதுரத்திற்கும் மாலைகளை சூட்டியவர், பணத்தை மதுரத்திடம் நீட்டினார். அதைப் பெற்றுக் கொண்ட மதுரம், நிம்மதிப் பெருமூச்சு விட்டார். அவரிடமிருந்து விடைப்பெற்று, 10கி.மீ., தூரம் கடந்த பின், கையிலிருந்த பணத்தை எண்ணிப் பார்த்தார் மதுரம். 700 ரூபாய்க்கு பதில், 500 ரூபாய் இருந்தது. அதனால், டிரைவரிடம், 'காரை, மேலூருக்கு திருப்பு; 'கான்ட்ராக்ட்' பேசிய தொகையிலிருந்து, 200 ரூபாய் குறைகிறது. அதை, அவரிடம் வசூல் செய்தாக வேண்டும்...' என்றார், மதுரம்.
பயணம் புறப்பட்டு விட்டால், இடையில், காரை நிறுத்துவது கலைவாணருக்கு பிடிக்காது. அதனால், டிரைவர் சிறிது தயங்கி, காரின் வேகத்தை குறைத்தாரே தவிர, நிறுத்தவில்லை.
மீண்டும் மதுரம், 'என்ன, நான் சொல்றது கேட்கலையா... காரை மேலூருக்கு திருப்பு; அவரிடம் பணத்தை வாங்காமல் விடக்கூடாது...' என்றார் கோபமாக!
அதுவரை கண்களை மூடி சிந்தனையில் ஆழ்ந்திருந்த கலைவாணர், மதுரத்தின் குரல் கேட்டு, 'எதுக்கு மேலூருக்கு வண்டிய திருப்பச் சொல்றே...' என்று கேட்டார். கொடுக்க வேண்டிய பணத்தில் இருந்து, சிங்காரம்பிள்ளை, 200 ரூபாய் குறைவாகப் கொடுத்திருப்பதாக சொன்னார், மதுரம்.
உடனே, 'பணத்தை அவர் குறைத்துக் கொடுத்தார் என்பதற்கு என்ன ஆதாரம்... நீ, பணத்தை எண்ணும் போது, சில நோட்டுக்கள் காற்றில் பறந்து போயிருக்கலாமே...' என்றார் கலைவாணர்.
'என்னய்யா நீங்க... இந்த நேரத்தில், 'தமாஷ்' செய்கிறீர்... கையில மூடி வைத்திருக்கும் பணத்த, காற்று எப்படி அடிச்சுட்டுப் போகும்... உங்க சிநேகிதர் பணம் கொண்டு வர தாமதிக்கும் போதே, இப்படி தான் நடக்கும்ன்னு நினைச்சேன்...' என்று முணுமுணுப்போடு சொல்லி, 'காரை மேலூருக்குத் திருப்பச் சொல்லய்யா...' என்றார்.
'இந்தாம்மா, காரைத் திருப்பி பயனில்ல; அந்த மனிதர், கார் கிளம்புகிற நேரத்தில் ஓடி வந்து, அவசரமாக மாலைகளைப் போட்டு, அதே வேகத்தில பணத்தை உன் கையில் திணித்த போதே யூகிக்க வேணாமா... அவரிடம் பணப் பற்றாக்குறைன்னு! விட்டுத் தள்ளு... இப்ப, மேலூருக்கு போனால் மட்டும் அவர், மீதி பணத்தை கொடுத்துடவா போறார்... நம்மைக் கண்டவுடன் கைகளை பிசைந்து, முகத்தை சோகமாக வைத்து, ஏதாவது சொல்லப் போறார்... அதையெல்லாம் பாத்துட்டு திரும்பணும்ன்னு ஆசையா...' என்று, கான்ட்ராக்ட்காரரின் நிலைமையை புரிந்து, மதுரத்திடம் எடுத்துக் கூறியவர், அதுவரை மெதுவாக சென்று கொண்டிருந்த காரை, வேகமாகக் ஓட்டச் சொன்னார்.

Friday, 15 May 2020

PULIMOOTTAI RAMASAMY ,COMEDY ACTOR BORN 1912-MAY 15



PULIMOOTTAI RAMASAMY ,
COMEDY ACTOR BORN 1912-MAY 15


புளிமூட்டை ராமசாமி (மே 15, 1912 - ) எனப் பரவலாக அறியப்பட்ட டி. ஆர். ராமசுவாமி ஐயர் தமிழ் நாடகத், திரைப்பட நகைச்சுவை நடிகராவார்.[1]

இவரது இயற்பெயர் தூத்துக்குடி இராமசுவாமி ஐயர்.[2] என். எஸ். கிருஷ்ணன் குழுவினருடன் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.[1] 1941 ஆம் ஆண்டில் வெளிவந்த அலிபாபாவும் நாற்பது திருடர்களும் திரைப்படத்தில் நடிக்கும் போது என். எஸ். கிருஷ்ணன் இவரை "புளிமூட்டை" என்றே அழைத்து வந்தார். இதனால் இவர் "புளிமூட்டை ராமசாமி'" என்றே பிரபலமாக அழைக்கப்பட்டார்.[3]

ராமசாமி முதலில் டி.கே.எஸ். நாடகக்கம்பனியில் சேர்ந்து நடித்துக் கொண்டிருந்தார். கம்பனி கலைக்கப்பட்டதும், தனது சொந்த ஊரான தூத்துக்குடிக்குச் சென்று அங்கேயே திருமணமும் செய்து கோவில் ஒன்றில் பட்டர் வேலையில் சேர்ந்தார். சில மாதங்களில் மனைவி இறந்து விடவே, அவரது தந்தை மகனுக்கு இரண்டாவது திருமணம் செய்துவைத்தார். பின்னர் என். எஸ். கிருஷ்ணனின் நாடகக் கம்பனியில் சேர்ந்தார்.[4]

புளிமூட்டை ராமசாமி அய்யர்
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் தன்னுடன் நாடகத்தில் நடித்த பல நடிகர், நடிகைகளுக்கும் தொழிலாளர்களுக்கும் தமது சொந்தப்படங்களில் வாய்ப்புக்கொடுத்தார்.   கலைஞர்கள் அனைவருக்கும் இருக்க இடம், சாப்பாடு கொடுத்து அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தார்.  

மாதந்தோறும் அவர்களுக்குச் சம்பளமும் கொடுத்து வந்தார்.  இது தவிர, கலைஞர்களின் பிற பணத் தேவைகளுக்கும் உதவி செய்து வந்தார் கலைவாணர்.  புளிமூட்டை ராமசாமி, ரி.எஸ்.துரைராஜ், எஸ்.என்.லட்சுமி, காக்கா ராதாகிருஷ்ணன் என்று ஒரு நட்சத்திரப் பட்டாளமே இருந்தது.  பாடல்கள் எழுதுவதற்கு உடுமலை நாராயணகவிராயர், கதை விவாதத்திற்கு வில்லிசைவேந்தர் சுப்பு ஆறுமுகம் உட்பட ஒரு பெருங்கூட்டமே இருந்தது கலைவாணரின் கலைக்கூடத்தில். ரி.கே.எஸ். நாடகக்குழுவில் இருந்து வந்தவர் ராமசாமி.  அக்குழு கலைக்கப்பட்டதும் தனது சொந்த ஊர் தூத்துக்குடிக்குச் சென்றுவிட்டார். அங்கே தாயின் வற்புறுத்தலால் திருமணம் செய்துகொண்டு, கோவிலில் பட்டர் வேலையில் சேர்ந்துவிட்டார். சில மாதங்களில் ராமசாமியின் மனைவி இறந்துவிட்டார். இதனால் மனவேதனை அடைந்த ராமசாமி, மீண்டும் நாடக வாழ்க்கைக்கே திரும்பிவிடலாம் என்று இருந்தார்.  இது ராமசாமியின் தந்தைக்குப் பிடிக்கவில்லை. மகன் மீண்டும் நாடக வாழ்க்கைக்குப் போகாத அளவிற்கு, இரண்டாவது திருமணம் செய்துவைத்துவிட்டார். இரண்டாவது மனைவியுடன் ஒரு நாள் தூத்துக்குடியில் ஓடிக்கொண்டிருந்த கலைவாணர் நடித்த படத்திற்குச் சென்றார். படம் முடிந்து வெளியே வந்ததும் ராமசாமியிடம், ‘‘இந்த கிருஷ்ணன்தான் உங்க சினேகிதராச்சே. நீங்க இரண்டு பேரும் ரி.கே.எஸ்.நாடகக்குழுவில்  இருந்தேளே? அவரைப்போய் பார்த்தால் ஏதேனும் விமோசனம் ஏற்படாதா?’’ என்று கேட்டார் மனைவி.
மனைவியின் ஆலோசனையின் படி, கலைவாணரைப் பார்க்கப் புறப்பட்டார் ராமசாமி.  அப்போது கலைவாணர் ‘’நவீன விக்கிரமாதித்தன்’’ படம் தயாரித்துக்கொண்டிருந்தார். ராமசாமி தெருவில் வருவதைக் கவனித்துவிட்ட கலைவாணர், தெருவாசலுக்கே ஓடிப்போய் கட்டிப்பிடித்து நலம் விசாரித்தார்.  ‘‘அசோகா பிலிம் கம்பெனின்னு நீங்க ஒரு கம்பெனியை ஆரம்பிச்சிருக்கேளாமே? அடியேன் இப்போது எந்த ஜோலியும் இல்லாது அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கிறேன். உங்க கம்பெனியில் அடுக்களையில் ஒரு சமையல்காரர் வேலை கொடுத்தாக்கூட போதும்’’ என்று கண் கலங்கியபடி சொன்னார் ராமசாமி. ராமசாமி இப்படி சொன்னதும் கலைவாணருக்குக் கண்கள் கலங்கியது. ‘’என்னாப்பா… நீயும் ஒரு நடிகர், நானும் ஒரு நடிகன்.  அப்படி இருக்கும்போது நீ மட்டும் சமையல் வேலை ஏனப்பா செய்யணும்?  நீயும் என் கம்பெனியிலே நடிகனாகவே இரு’’ என்று கூறினார் கலைவாணர்.  ராமசாமி
சமையலிலும் நிபுணர். இது கலைவாணருக்குத் தெரியும்.  ஆனாலும், அவரை மதித்து நடிக்கும் வாய்ப்பை வழங்கினார். ராமசாமியின் உருவம் பெரியது.  அதற்கு ஏற்றார் போல் குரலும் கம்பீரமாக இருக்கும்.  ராமசாமி பேசும்போது அவரது அங்கங்கள் ஆடும்.  இது கலைவாணருக்குப் பிடிக்கும்.  அதற்காகவே அவருக்கு நல்ல நல்ல கதாபாத்திரங்கள் தருவார். கலைவாணர் தயாரித்த ‘‘அலிபாபாவும் நாற்பது திருடர்களும்’’ திரைப்படத்தில் ராமசாமிக்குத் திருடன் வேடம்.  ஒரு நாள் படப்பிடிப்பில் திருடனுக்குரிய ஒப்பனையோடு ராமசாமி நடித்துக்கொண்டிருந்தார். கதை அமைப்பின்படி திருடர் கூட்டத்தில் சிக்கிய கலைவாணர், ராமசாமியைத் தேடினார். அவரைக் காணவில்லையே என்று அருகில் இருந்த  நடிகரிடம், ‘’ எங்கே அந்தப் புளிமூட்டை’’ என்று சிரித்துக்கொண்டே கேட்டார்.   அப்போது
ராமசாமியும் இதோ இருக்கிறேன் என்று சிரித்துக்கொண்டே, கட்டிலுக்கு அடியில் இருந்து வெகு சிரமப்பட்டு தனது உடம்பை வளைத்து வெளியே வந்தார்.  கலைவாணர் அன்று அந்தக்காட்சிக்காக வேடிக்கையாக புளிமூட்டை என்று சொன்னதை பலரும் வேடிக்கையாக அடிக்கடி சொல்லி வந்தார்கள்.   அதிலிருந்து ராமசாமியின் பெயரே ‘’புளிமூட்டை ராமசாமி’’ என்று நிலைத்து, அதுவே அவரைப் பிரபலப்படுத்திவிட்டது.



.

1953-இல் வெளிவந்த வெற்றிச் சித்திரமான “மதன மோகினி”யில் ஒரு காட்சி. அங்கமுத்து சேவற்கோழி ஒன்றைத் திருடன் ஒருவன் திருடிச் செல்லும் போது அதைப் பெருமையாக பாடிக்கொண்டே செல்வார். அப்போது ஒரு மண்டபத்திலிருந்து இதைக் கவனித்து வரும் வி.எம்.ஏழுமலை , புளிமூட்டை ராமசாமியும் அவனை மடக்கி நீ சொல்வதெல்லாம் உண்மைதானே என கேட்க, அதற்கு எதற்கெடுத்தாலும் “இது அப்பவே தெரியுமே” என அடிக்கடி கூறும் ஏழுமலை நான் சொல்லல உலகத்துல எவ்வளவோ அதிசயங்கள் எல்லாம் நடக்கும். அதுல இதுவும் ஒண்ணு என சொல்ல., அதக் கேட்டுப் பாத்துருவோம் என புளி மூட்டையும் சொல்ல, சேவல் திருடியவன் தங்க முட்டையைப் பத்தித்தான கேக்கப்போறீங்க என்பார். தினம் ஒரு முட்டையிடும் என்றும் கூற , புளிமூட்டை  அவன் கையிலிருக்கும் சேவலை, இத வெலைக்குக் கொடுக்கிறீங்களா என கேட்பார்..ஆகாங்…. இத வெலைக்குக் கொடுக்கறதுல்ல.  வேணா வாடகைக்குத் தரேன் என்று அதற்கு வாரத்திற்கு 100 வராகன்கள் என கேட்பார். அட போயா என்பார் புளிமூட்டை ராமசாமி. அதற்கு வி.எம்.எழுமலை அடப் பொறு அண்ணே அவசரப் படாதேண்ணே , தங்கமுட்டை விடுதில்ல. மூஞ்சியைப் பாத்தா தெரியல்ல. அது சாதாரண கோழியில்ல. தங்கமுட்டை நாளைக்கு ரெண்டொண்ணு விழும். அப்படீன்னா கணக்குப் பாரு.  ஆறு நாலும் பத்து, நாலும் ஆறும் பத்து என்பார், கேட்டேன். உன் கணக்குல மண்ணள்ளிப் போட என்பார் புளிமூட்டை. அட இருக்கட்டும் விடண்ணே அத வாங்கு என்பார் ஏழுமலை. ஆனால் கையில பணமில்லையே என்பார் புளிமூட்டை. “இது அப்பவே தெரியுமே” என்பார் ஏழுமலை. உடனே இருவரும் தத்தமது கரங்களில் அணிந்திருந்த காப்புக்களைக் கொடுத்து அச்சேவலை வாங்கிவிடுவர். வெளியில் தெரியாமல் கொண்டு செல்லவேண்டுமென கொடுத்தவர் கூறிவிடுவார். இவர்களும் அது போலவே மறைத்துக் கொண்டு செல்வர். அப்போது எதிரே சேவலைத் தேடி உரிமையாளரான அங்கமுத்து வர இவர்கள் மறைக்க துணிக்குள்ளிருந்து சேவல் ஒலியெழுப்ப அகப்பட்டுவிடுவர் இருவரும். அப்போது இருவரும் இது பொன் முட்டையிடும் கோழி. அதனால் ஒருவரிடம் விலை கொடுத்து வாங்கி வருகிறோம் என்பர். அதற்கு அங்கமுத்து அது சரி பொன் முட்டையிடுவதிருக்கட்டும். எங்கேயாவது சேவல் முட்டையிடுமாடா சேவலத் திருடி மறைச்சிகிட்டாடா போறீங்க என கேட்க இருவரும் ஓட்டம்பிடிப்பர்.  இக்காட்சி மிகவும் சுவாரஸியமாக இருக்கும்.

கண்ணகி [1942], மனோன்மணி [1943], மங்கம்மா சபதம் [1943], பார்த்துஹரி [1944], ஹரிதாஸ் [1944], பிரபாவதி [1944], தெய்வ நீதி [1947], தன அமராவதி [1947], ராஜகுமாரி [1947], அபிமன்யு [1948], மோகினி [1948], மருதநாட்டு இளவரசி [1948] , விசித்திர வனிதா [1948], கிருஷ்ண பக்தி [1948], பாரிஜாதம், கன்னியின் காதலி [1949], வனசுந்தரி [1951], மணமகள் [1951],  சர்வாதிகாரி [1951], மதன மோகினி [1953], நல்ல தங்கை  [1955] , எல்லோரும் வாழ வேண்டும் [1962] போன்ற 100-க்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்துள்ளார்.

நடித்த திரைப்படங்கள்
அலிபாபாவும் நாற்பது திருடர்களும் (1941)
கண்ணகி (1942)
குபேர குசேலா (1943)[5]
மனோன்மணி (1943)
ஹரிதாஸ் (1944)
பிரபாவதி (1944)
தெய்வ நீதி (1947)
தன அமராவதி (1947)
ராஜகுமாரி (1947)
அபிமன்யு (1948)
மோகினி (1948)
மருதநாட்டு இளவரசி (1948)
விசித்ர வனிதா (1948)
பில்ஹணா (1948)
கன்னியின் காதலி (1949)
பாரிஜாதம் (1950)
வனசுந்தரி (1951)
மணமகள் (1951)
சர்வாதிகாரி (1951)
குமாரி (1952)
மதன மோகினி (1953)
நல்ல தங்கை (1955)

Saturday, 4 January 2020

VASUMATHI RAMASAMY WRITER BORN 1917 APRIL 21-JANUARY 4,2004


VASUMATHI RAMASAMY WRITER 
BORN 1917 APRIL 21-JANUARY 4,2004


வசுமதி இராமசாமி (21 ஏப்ரல் 1917 - 4 சனவரி 2004) இந்தியப் பெண் எழுத்தாளர் வரிசையில் குறிப்பிடப்பட வேண்டியவர். சமூக சேவையாளர். சென்னை அகில இந்திய வானொலியின் முதல் ஒலிபரப்பாளர்களுள் ஒருவர். இதழாசிரியராக இருந்தவர். காந்தியை நேரடியாகச் சந்தித்து, அவரிடம் சமூக சேவைக்கான பயிற்சி பெற்றவர். மகாத்மா தென்னிந்தியா வந்தபோது, அவர் சென்ற இடமெல்லாம் தானும் சென்றவர். தமிழ் எழுத்தாளரான அவர், ஆங்கிலத்திலும் எழுத வல்லவராக இருந்தார். அம்புஜம்மாள், எம்.எஸ்.சுப்புலட்சுமி ஆகியோர் பற்றிய அவரது ஆங்கிலக் கட்டுரைகள் குறிப்பிடத்தக்கவை. மூதறிஞர் ராஜாஜியால் பாராட்டப்பட்ட எழுத்தாளர். படிப்புக்கு வயது தடையல்ல என்ற கருத்துடைய இவர், எழுபது வயதில் திறந்தவெளிப் பல்கலைக் கழக பட்ட வகுப்பில் சேர்ந்து படித்தவர்.


குடும்பம்
12 வயதில் திருமணம் ஆன வசுமதியின் கணவர் இராமசாமி முன்னணி வழக்கறிஞர். சுதந்திரப் போராட்ட வீரர். மனைவியின் எழுத்தார்வத்துக்கு உறுதுணையாக இருந்தவர். 62 ஆண்டுகள் மகிழ்ச்சியான இல்லறம் நடத்தினார். "அசோக் லேலண்ட்' நிர்வாக இயக்குநர் சேசசாயி இவரது புதல்வர். தவிர, இசை வல்லுநரான விஜயலட்சுமி ராஜசுந்தரம், சமுக சேவகி சுகந்தா சுதர்சனம் ஆகிய இருவரும் புதல்விகள்.

எழுத்தாளர் லட்சுமி, குகப்ரியை, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, லட்சுமி கிருஷ்ணமூர்த்தி, சரோஜினி வரதப்பன் ஆகியோரின் நெருங்கிய தோழியாக இருந்தவர்.

எழுத்தாக்கம்

வை. மு. கோதைநாயகி ஆசிரியையாக இருந்து நடத்திய ஜகன்மோகினி இதழில் வசுமதி ராமசாமியின் படைப்புகள் நிறைய வெளிவந்தன. தினமணிக் கதிர், கல்கி, விகடன், சுதேசமித்திரன், பாரததேவி, சின்ன அண்ணாமலையின் வெள்ளிமணி முதலிய பல இதழ்களில் தொடர்ந்து எழுதினார். இந்தியா, பாகிஸ்தான், காஷ்மீர்ப் போர்ப் பின்னணியை வைத்து இவர் எழுதிய நாவலான "காப்டன் கல்யாணம்', சமகாலச் சரித்திர நாவல் என்ற வகையில் கல்கியின் "அலை ஓசை' போலவே குறிப்பிடத்தகுந்த இன்னொரு படைப்பு.

கொத்தமங்கலம் சுப்புவின் "தில்லானா மோகனாம்பாள்' விகடனில் வெளிவந்த அதே காலகட்டத்தில், வசுமதி ராமசாமியின் "காப்டன் கல்யாணமும்' விகடனில் வந்தது. "தில்லானா மோகனாம்பாள் வந்த நேரத்திலேயே என் நாவலும் வந்ததில் எனக்கு மகிழ்ச்சி உண்டு. அதைப் படிப்பவர்கள் எல்லாம் என் எழுத்தையும் படிப்பார்கள் இல்லையா?" என்று எந்தப் பொறாமையும் இல்லாமல் அவர் சொல்லி மகிழ்ந்ததுண்டு. கல்கி எழுத்துகளின் தீவிர ரசிகை. தம் எழுத்தில் தென்படும் மெல்லிய நகைச்சுவைக்குக் கல்கிதான் தமது ஆசான் என்று குறிப்பிடுவார். "தேவியின் கடிதங்கள்" என்ற இவரது நூலுக்கு அணிந்துரை வழங்கியவர் ராஜாஜிதான்.

படைப்புகள்
வசுமதி நூற்றுக்கணக்கான சிறுகதைகளும் நான்கு புதினங்களையும் எழுதியுள்ளார். அவை பல்வேறு தமிழ் இதழ்களில் வெளிவந்துள்ளன.

தேவியின் கடிதங்கள்
சிறுகதைகள்
காப்டன் கல்யாணம்
காவிரியுடன் கலந்த காதல்
சந்தனச் சிமிழ்
பார்வதியின் நினைவில்
பனித்திரை
ராஜக்கா
வாழ்க்கை வரலற்றுகள்
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, எஸ்.அம்புஜம்மாள் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றையும் எழுதியுள்ளார்.

பரிசுக்கதை
இன்று ஐநூறு மாதக் கூட்டங்களை ஒரு மாதம் கூட விட்டுவிடாமல் தொடர்ந்து நடத்தி வெற்றி கண்டிருக்கும் "இலக்கியச் சிந்தனை' அமைப்பின் முதல் கூட்டத்தில் இவரது "சிவன் சொத்து' என்ற கதையைப் பரிசுக் கதையாகத் தேர்ந்தெடுத்தவர் அகிலன்.

இதழாசிரியர்
"ஈசன் அருள்பெற்ற இளங்கன்றுகள்' என்ற ஆன்மிக நூலின் ஆசிரியராகவும், பாரத தேவி, ராஜ்ய லட்சுமி போன்ற பெண் முன்னேற்றத்துக்கான இதழ்களின் ஆசிரியராகவும் இருந்தார்.

சமூக சேவை
காந்தியை நேரடியாகச் சந்தித்து, அவரிடம் சமூக சேவைக்கான பயிற்சி பெற்றவர். மகாத்மா தென்னிந்தியா வந்தபோது, அவர் சென்ற இடமெல்லாம் தானும் சென்றார். முத்துலட்சுமி ரெட்டி, துர்காபாய் தேஷ்முக், ருக்மிணி லட்சுமிபதி, அம்புஜம்மாள் உள்ளிட்ட பலருடன் இவர் கொண்ட நட்பு இவரைச் சமூக சேவை செய்யத் தூண்டியது. அன்னிபெசன்ட் நிறுவிய "இந்திய மாதர் சங்கம்' என்ற, எழுபதுக்கும் மேற்பட்ட கிளைகள் கொண்ட அமைப்பை ஈடுபாட்டோடு நடத்திவந்தார். இந்திய மாதர் சங்கத்தில், தற்போது அரிய நூல்களைக் கொண்ட நூலகம் ஒன்று வசுமதி ராமசாமி பெயரில் நடத்தப்படுகிறது.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள "சீனிவாச காந்தி நிலைய'த்தை அம்புஜம்மாள், சரோஜினி வரதப்பன் ஆகியோரோடு சேர்ந்து உருவாக்கினார்கள். சுமார் 20 ஆண்டு காலம் அதன் செயலாளராக இயங்கினார். சீனிவாச காந்தி நிலையத்தில் காந்தியின் அஸ்தி வைக்கப்பட்டு, அதன்மேல் துளசிமாடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையத்தின் சிறப்பை உணர்ந்து ஔவை தி. க. சண்முகம் இலவசமாக நாடகம் நடத்தி நிதி திரட்டிக் கொடுத்தார். அடையாறு புற்றுநோய் மருத்துவமனை, எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை போன்றவற்றின் உருவாக்கத்திலும் ஸ்த்ரீசேவா மந்திர், ஔவை இல்லம், பால மந்திர் முதலிய பல சேவை நிறுவனங்களின் உருவாக்கத்திலும் இவரது பங்களிப்பு உண்டு.

லால்பகதூர் சாஸ்திரியிடம் போர் நிதியாக அக்காலத்திலேயே 500 பவுன் திரட்டிக் கொடுத்தவர். ராஜாஜியிடம் மூன்று ஆண்டுகள் உபநிடதமும் கற்றார். காஞ்சி முனிவர் பரமாச்சாரியார் கட்டளைப்படி, "ஸ்ரீகற்பகாம்பாள் திருவருள் சங்கம்' என்ற அமைப்பை நிறுவி ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு மாங்கல்ய தானம் என்ற வகையில் தங்கத் தாலி அளித்துவந்தார். இத்தொண்டு இவரது மகளால் இன்றும் தொடர்கிறது.

மறைவு
வசுமதி இராமசாமி ஜனவரி 4, 2004-ஆம் ஆண்டு தனது 86 ஆம் வயதில் மறைந்தார்.

வசுமதி ராமசாமி

தமிழின் சிறந்த பெண் எழுத்தாளர், பேச்சாளர், இதழாசிரியர், சமூக சேவகி என பன்முகத்தன்மை கொண்டவர் எழுத்தாளர் வசுமதி ராமசாமி. காந்தியை நேரடியாகச் சந்தித்து, அவரிடம் சமூக சேவைக்கான பயிற்சிப் பெற்ற சுதந்திர போராட்ட வீராங்கனையான இவர், சென்னை அகில இந்திய வானொலியின் ஆரம்பகட்ட பேச்சாளர்களுள் ஒருவரும் கூட. இப்படி மேலும் பல பெருமைகளுக்குச் சொந்தக்காரரான வசுமதி ராமசாமி பற்றிய சிறுகுறிப்புடன் அவர் மகள் மற்றும் எழுத்தாளர் திருப்பூர் கிருஷ்ணன் ஆகியோர் அவர் குறித்து நம்மோடு பகிர்ந்து கொண்ட சில நினைவுகளும் இங்கே… தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் 1917ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிறந்தவர் வசுமதி. 12 வயதிலேயே இவருக்குத் திருமணம் ஆனது.

கணவர் ராமசாமி வழக்கறிஞர். கணவரின் குடும்பம் முழுவதுமே சுதந்திரப் போராட்டத்தில் மட்டுமல்லாது இலக்கியத்திலும் ஈடுபாடு கொண்டவர்களாக இருந்தனர். இவருக்கும் இலக்கிய ஆர்வமும், சுதந்திரப் போராட்ட உணர்வும் ஏற்பட இவரது கணவர் வீடு மிகப்பெரிய காரணமாக இருந்தது. வாசிப்பார்வமும், கள அனுபவ அறிவும் சேர்ந்து வசுமதியை எழுத வைத்தது எனலாம்.

இவரது முதல் சிறுகதை ‘பிள்ளையார் சுழி’, ‘ஜகன் மோகினி' பத்திரிகையில் வெளிவந்தது. அதன் பின் வசுமதி நூற்றுக்கணக்கான சிறுகதைகளும், கட்டுரைகளும், விமர்சனங்களும் எழுதினார். நான்கு புதினங்களையும் எழுதியுள்ளார். அவை பல்வேறு தமிழ் இதழ்களில் வெளிவந்துள்ளன. ‘காவிரியுடன் கலந்த காதல்', ‘சந்தனச் சிமிழ்', ‘பார்வதியின் நினைவில்', ‘பனித்திரை', ‘ராஜக்கா' ஆகி யவை இவருடைய சிறுகதைத் தொகுப்புகள். இவர் ‘ஈசன் அருள்பெற்ற இளங்கன்றுகள்' என்ற ஆன்மிக நூலின் ஆசிரியரும் கூட.

தமிழ் எழுத்தாளரான இவர், ஆங்கிலத்திலும் எழுத வல்லவராக இருந்தார். எழுத்துப் பணிக்குச் சமமாக சமூக சேவையிலும் முழுமை யாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். துணிச்சலான மனம் கொண்டவர். அதே சமயம் வயது வித்தியாசம் பாராமல் அனைவரிடமும் அன்பாக இருந்தவர். சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தி இளைஞர்களின் உந்து சக்தியாய் இருந்தவர்.
இத்தனை உழைப்பிற்கு இடையிலும் குடும்பத்தையும் நல்ல முறையில் நிர்வகித்தார் வசுமதி. இவரது கணவர் ராமசாமி மனைவியின் எழுத்தார்வத்துக்கு பெரும் உறுதுணையாக இருந்தார். ‘அசோக் லேலண்ட்' நிர்வாக இயக்குநர் சேஷசாயி இவரது புதல்வர்.

தவிர, இசை வல்லுநரான விஜயலட்சுமி ராஜசுந்தரம், சமூக சேவகி சுகந்தா சுதர்சனம் ஆகிய இருவரும் இவரது மகள்கள். வசுமதி ராமசாமி ஜனவரி 4, 2004ம் ஆண்டு தனது 86ம் வயதில் மறைந்தார். இந்திய மாதர் சங்கத்தில், தற்போதும் அரிய நூல்களைக் கொண்ட நூலகம் ஒன்று வசுமதி ராமசாமி பெயரில் நடத்தப்படுகிறது. ஜன சேவாமணி, ஸ்திரி ரத்னா போன்ற பல விருதுகளை வென்ற வசுமதி, தம்மால் பயன்பெற்ற ஏழைப் பெண்கள் உள்ளங்களையும் இலக்கிய ரசிகர்கள் உள்ளங்களையும் வென்று அவர் தம் மனங்களில் இன்றும் நிலையாக வாழ்கிறார்.

திருப்பூர் கிருஷ்ணன்
‘‘வசுமதி  அவர்களை பல முறை பார்த்து பேசி இருக்கிறேன். ஓர் எழுத்தாளர் என்பதை விடவும் அதிகமாக ஒரு சமூக சேவகியாகிப் பரிமாணம் கொண்டு வாழ்ந்தவர். வை.மு. கோதைநாயகி அம்மாள் ஆசிரியையாக இருந்து நடத்திய ‘ஜகன் மோகினி’ இதழில் வசுமதி ராமசாமியின் படைப்புகள் நிறைய வெளிவந்தன. கல்கி, விகடன், சுதேசமித்திரன், பாரததேவி, தினமணிக் கதிர் மற்றும் சின்ன அண்ணாமலை நடத்திய வெள்ளிமணி முதலிய பல இதழ்கள் இவரது எழுத்துக்களை விரும்பி வெளியிட்டன. அம்புஜம்மாள், எம்.எஸ்.சுப்புலட்சுமி ஆகியோர் பற்றி மணிமணியான ஆங்கிலக் கட்டுரைகள் பலவற்றை எழுதி இருக்கிறார்.

அவர் எழுதிய காலத்தில் அவர் எழுத்து பலரால் கொண்டாடப்பட்டுப் பெரும் புகழடைந்தது என்பது, ஒரு வரலாற்று உண்மை. இந்திய, பாகிஸ்தான், காஷ்மீர்ப் போர்ப் பின்னணியை வைத்து வசுமதி ராமசாமி எழுதிய நாவலான ‘காப்டன் கல்யாணம்', சமகாலச் சரித்திர நாவல் என்ற வகையில் குறிப்பிடத்தக்க ஒன்று. கொத்தமங்கலம் சுப்புவின் ‘தில்லானா மோகனாம்பாள்' விகடனில் வெளி வந்த அதே கால கட்டத்தில், வசுமதி ராமசாமியின் ‘காப்டன் கல்யாணமும்' விகடனில் வந்தது.

‘‘ ‘தில்லானா மோக னாம்பாள்' வந்த நேரத்திலேயே என் நாவலும் வந்ததில் எனக்கு மகிழ்ச்சி உண்டு. நானும் தில்லானா மோகனாம்பாளின் ரசிகை தான். அதைப் படிப்பவர்கள் எல்லாம் என் எழுத்தையும் படிப்பார்கள் இல்லையா?'' என்று அவர் சொன்னார். உள்ளத்தால் பண்பட்ட உன்னதமான எழுத்தாளரால் தான் இப்படி பேச முடியும். ‘கேப்டன் கல்யாணம்’ மறுபதிப்பாக வந்தபோது அதற்கு முன்னுரை எழுதி இருக்கிறேன். எழுத்தாளர் லட்சுமி, குகப்ரியை, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, அம்புஜம்மாள் ஆகியோரின் நெருங்கிய தோழியாக இருந்தவர்.

இவரை ஓர் எழுத்தாளராக உருவாக்கியதில் இவரது ஆதர்ச எழுத்தாளரான கல்கிக்குப் பெரும் பங்கு உண்டு. கல்கியின் மெல்லிய நகைச்சுவை இவரது எழுத்திலும் உண்டு. காந்தியை நேரடியாகச் சந்தித்து, அவரிடம் சமூகச் சேவைக்கான பயிற்சி பெற்ற சில பெண்களில் முக்கியமானவர் வசுமதி. காந்தி தென்னிந்தியா வந்தபோது, அவர் சென்ற இடமெல்லாம் தானும் சென்றவர். வாழ்நாள் முழுதும் காந்தி வழியில் தொடர்ந்து நடந்துகொண்டே இருந்தவரும்கூட. தேசத்தலைவர்கள் பலருடன் நெருங்கி பழகும் வாய்ப்பு பெற்றவர். லால்பகதூர் சாஸ்திரியிடம் யுத்த நிதியாக அந்தக் காலத்திலேயே 500 பவுன் திரட்டிக் கொடுத்தவர். அப்போது அந்த சாதனை பலராலும் வியந்து பேசப்பட்டது.

பிரபல சமூக சேவகிகளான முத்துலட்சுமி ரெட்டி, துர்காபாய் தேஷ்முக், ருக்மிணி லட்சுமிபதி, அம்புஜம்மாள் போன்றோரிடம் இவர் கொண்ட ஆழ்ந்த நட்பு இவரையும் சமூக சேவகி ஆக்கியது. அன்னிபெசன்ட் நிறுவிய ‘அனைத்திந்திய மாதர் சங்கம்' என்ற  எழுபதுக்கும் மேற்பட்ட கிளைகள் கொண்ட மாபெரும் அமைப்பை நிர்வகித்து நடத்திவந்தார்.சீனிவாச நிலையத்தில் இன்றும் வசுமதி அம்மாவின் படம் உள்ளது.

தமது மாதர் சங்கத்தின் மூலம் ஏராளமான ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு இலவசமாகத் தங்கத் தாலி அளித்து வந்தார். (அந்தச் சங்கத்தைத் தற்போது வசுமதி ராமசாமியின் புதல்வி சுகந்தா சுதர்சனம் நிர்வகிக்கிறார். இலவசத் தங்கத் தாலி வழங்குவதும் தொடர்கிறது.) காந்தி ஜெயந்தி அன்று காந்தி குறித்து வானொலி நேரலையில் வசுமதி அவர்களை பேசச் சொல்லி இருந்தார்கள். அவர்கள் பேசுவது மற்றவர்களுக்குக் கேட்கிறது. ஏதோ கருவி கோளாறு காரணமாக வசுமதிக்கு வானொலியில் இருந்து எதுவும் கேட்கவில்லை.

அது அவருக்குப் புரிந்தது. அதனால் எப்படியும் காந்தி பற்றி தானே பேச வேண்டும் என பத்து நிமிடங்களுக்கு தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார். நிகழ்ச்சி வெற்றிகரமாக முடிந்தது. ‘ஒருவேளை நீங்கள் பேசுவதும் மற்றவர்களுக்குக் கேட்காமல் போய் இருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?’ என நான் கேட்டேன். ‘அதனால் என்ன? மற்றவர்களுக்கு கேட்கிறதா என்றெல்லாம் எனக்கு அப்போது தெரியவில்லை. ஆனால் மற்றவர்களுக்கு கேட்டாலும் சரி கேட்காவிட்டாலும் சரி காந்தி பற்றி மனதார ஒரு பத்து நிமிடம் எனக்கு நானே பேசியதாக இருக்கட்டும் என நினைத்துப் பேசினேன்’ என்றார். அவரது இந்த பதில் என்னை வியக்க வைத்தது.

வசுமதியின் கணவர் ராமசாமி முன்னணி வழக்கறிஞர். இசையறிஞர். சுதந்திரப் போராட்ட வீரர். அவருடன் வசுமதி 62 ஆண்டுகள் மகிழ்ச்சியான இல்லறம் நடத்தினார். வசுமதி அவர்கள் உடல்நலமில்லாமல் பேஸ்மேக்கர் வைத்திருந்த சமயத்திலும் வை.மு. கோதைநாயகி குறித்து பேச கேட்டதற்கு உடனே பேசினார். ஒரு பிள்ளை, இரண்டு பெண்கள், மூன்று பேரன்கள், மூன்று பேத்திகள் என 86 வயது வரை நிறை வாழ்வு வாழ்ந்தவர் வசுமதி.’’

சுகந்தா சுதர்சனம் (வசுமதி ராமசாமியின் மகள்)
‘‘அம்மா எப்போதும் காலை நேரங்களில்தான் எழுதுவார். கணக்குப் பிள்ளைகள் பயன்படுத்தும் சின்ன மேஜையில் தரையில் அமர்ந்து எழுதுவார். அதில் எந்த அடித்தல் திருத்தலும் இருக்காது. அவரது கையெழுத்தும் அழகாக இருக்கும். ஒரு நோட் புக்கில் எழுதுவார். அதனை தனக்காக வைத்துக்கொள்வார். இதழ்களுக்கு அனுப்ப அவரே இன்னொரு பிரதி எடுப்பார். அக்கா விஜயலட்சுமியின் கையெழுத்தும் நன்றாக இருக்கும்.  அதனால் அவள் வளர்ந்த பிறகு அம்மா சொல்ல சொல்ல அக்கா கதை, கட்டுரைகளை எழுதுவாள்.

அப்பா எப்போதும் அம்மாவிடம் நட்பாக  இருப்பார். அம்மாவின் எழுத்துக்கு உறுதுணையாக இருப்பார். அம்மாவின் கதைகளுக்கு ஏதாவது தகவல்கள் தேவைப்பட்டாலும் அப்பா சேகரித்துத் தருவார். நூலகத்தில் இருந்து புத்தகங்கள் கொண்டு வந்து தருவார். சில சமயம் அம்மா, அப்பாவிடம் கதைகள் குறித்து ஆலோசிப்பதுண்டு. என் அம்மாவின் உடன் பிறந்த சகோதரரும் அம்மாவின் எழுத்துக்கு உறுதுணையாக இருந்தார். அம்மா நிறைய கட்டுரைகள் கதைகள் எழுதி இருக்கிறார். ‘இலக்கியச் சிந்தனை' அமைப்பு ஆரம்பித்தபோது நடந்த முதல் போட்டியில் அம்மாவின் ‘சிவன் சொத்து' என்ற கதை முதல் பரிசு பெற்றது. அந்த கதையைத் தேர்ந்தெடுத்தவர் அகிலன். ‘பாரத தேவி’, ‘ராஜ்ய லஷ்மி’ போன்ற இதழ்களுக்கும் அம்மா ஆசிரியராக இருந்தார். அம்மா சிறந்த எழுத்தாளர் மட்டுமல்ல, சிறந்த பேச்சாளரும் கூட. நகைச்சுவை உணர்வோடு பேசக்கூடியவர்.

அம்மாவின் அப்பா மிராசுதார். அம்மாவின் மாமனார் அதாவது என் அப்பா வழி தாத்தா நாடாளுமன்ற உறுப்பினராக‌ இருந்தவர். பிரிட்டிஷ் காலத்தில் தனக்கு வந்த நீதிபதி பதவியையும் நிராகரித்து ராஜினாமா செய்தவர். வசதியானவராக இருந்தபோதும் அம்மா யாரையும் புண்படுத்தும்படி பேசமாட்டார். ஆனால் சொல்ல வந்த தன் கருத்தை எப்போதும் அழுத்தம் திருத்தமாக சொல்லக்கூடியவர். நா.பார்த்தசாரதி அவர்களின் ‘குறிஞ்சிமலர்’ மிகவும் பிரசித்திப் பெற்ற நாவல். அதற்கு அம்மா தான் அணிந்துரை எழுத வேண்டும் என்று நா. பா. கேட்டுக் கொண்டார்.

‘தேவியின் கடிதங்கள்’ என்ற கட்டுரை கல்கியில் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் அம்மா அதனை முடித்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தார். ஆனால் அதைத் தொடர வேண்டும் என்று ராஜாஜி விரும்பியதால் அம்மா 64 வாரங்கள் தொடர்ந்து எழுதினார். அதில் பல விஷயங்களை பற்றி விரிவாக எழுதினார். ‘தேவியின் கடிதங்கள்' என்ற இந்த நூலுக்கு அணிந்துரை வழங்கினார் ராஜாஜி. ‘கேப்டன் கல்யாணமும்', ‘தேவி யின் கடிதங்கள்' இரண்டும் கிட்டதட்ட ஒரே காலகட்டத்தில் வெளிவந்து கொண்டிருந்தன.

ஆனந்த விகடனின் வெள்ளிவிழா ஆண்டின்போது நடைபெற்ற சிறுகதை, நாவல் போட்டிகளுக்கு மு.வ. போன்ற பெரிய ஆட்கள் நடுவர்களாக இருந்தனர். நடுவர்களில் ஒருவராக அம்மாவும் இருந்தார். பெட்டி பெட்டியாக போட்டிக்கான கதைகள் வரும். யார் எழுதியது என்ற தகவல் எதுவும் இருக்காது. சிவப்பு பென்சில் அதில் வைத்து அனுப்புவார்கள். நடுவர்கள் எல்லாருக்கும் கதைகளை அனுப்புவார்கள். அம்மா அவற்றை பொறுமையாக அமர்ந்து படித்து தேர்ந்தெடுப்பார். அந்தப் போட்டியில் அனைத்து நீதிபதிகளும் ஒன்று கூடி ஆலோசித்து ஜகச்சிற்பியன் மற்றும் ராஜம் கிருஷ்ணனுக்கு நாவலுக்கான பரிசுகளை வழங்கினார்கள்.

வானொலியில் அம்மா 40 வருடங்கள் தொடர்ந்து நிறைய நிகழ்ச்சிகள் செய்திருக்கிறார். அதில் பெரும்பாலானவை நேரலை நிகழ்ச்சிகள்தான். அம்மா வானொலி நாடகங்களும் எழுதி இருக்கிறார். அம்மாவின் வானொலி நாடகங்கள் ரொம்ப நன்றாக இருக்கும். ‘மங்கள் மாளிகை’ என்ற ஒரு தொடர் நாடகத்தை குடும்பக் கட்டுப்பாட்டு விளம்பரத்திற்காக அரசாங்கம் ஏற்பாடு செய்திருந்தது. அதில் தொடர்ந்து பல எழுத்தாளர்கள் பங்கேற்றனர். அதில் அம்மாவும் பங்கேற்றார்.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மற்றும் எஸ்.அம்புஜம்மாள் ஆகியோரின் நூற்றாண்டின்போது அவர்கள் இருவரின் வாழ்க்கை வரலாற்றையும் அம்மா புத்தகமாக எழுதியுள்ளார். முத்துலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை முன்னாள் அமைச்சர் நெடுஞ்செழியன் வெளியிட்டார். அம்புஜம்மாளின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை முன்னாள் காங்கிரஸ் தலைவர் மூப்பனார் வெளியிட்டார். பத்திரிகை மற்றும் பதிப்பகத்தைச் சேர்ந்தவர்கள் வந்தால் அம்மா எங்களிடம் ‘நீங்கள் சின்னப் பிள்ளைகள் தானே உள்ளே போங்கள்’ என்று சொல்ல மாட்டார். எங்களையும் உடன் உட்கார வைத்துக்கொண்டுதான் பேசுவார். அவர்கள் பேசும் இலக்கிய விஷயங்களை நாங்களும் கேட்டுக்கொண்டிருப்போம்.

அம்மா எழுபது வயதில், வயதான காலத்தில் பி.ஏ. வரலாறு சென்னை பல்கலைக்கழகத்தின் திறந்தவெளிப்பட்ட வகுப்பில் சேர்ந்து படித்தார். உறவினர் அல்லது தெரிந்த பெண்களுக்கு ஏதாவது பிரச்னை என்றால் வீட்டிற்குள் முடங்கிக் கிடக்காமல் மேலே படி, வேலைக்குப் போ என உந்துதல் கொடுப்பார். உற்சாகப்படுத்துவார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ‘சீனிவாச காந்தி நிலைய'த்தை அம்புஜம்மாள், சரோஜினி வரதப்பன் ஆகியோரோடு சேர்ந்து உருவாக்கினார். சுமார் 20 ஆண்டு காலம் அதன் செயலாளராக இயங்கினார்.

சீனிவாச காந்தி நிலையத்தில் காந்தியின் அஸ்தி வைக்கப்பட்டு, அதன்மேல் துளசிமாடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து ஔவை டி.கே.சண்முகம் இலவசமாக நாடகம் நடத்தி நிதி திரட்டிக் கொடுத்தார். அடையாறு புற்றுநோய் மருத்துவமனை, எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை போன்றவற்றின் உருவாக்கத்திலும் ஸ்த்ரீசேவா மந்திர், ஔவை இல்லம், பால மந்திர் முதலிய பல சேவை நிறுவனங்களின் உருவாக்கத்திலும் அம்மாவின் பங்களிப்பு உண்டு.

புற்றுநோய் மருத்துவமனையின் ஆரம்ப காலங்களில் அம்மா நிதி திரட்டி கொடுத்திருக்கிறார். சென்ற ஆண்டு அம்மாவின் நூற்றாண்டு கொண்டாடப்பட்டது. அப்போது ‘அமுத சுரபி’ இதழில் அம்மா நினைவாக‌ குறுநாவல் போட்டி வைத்தார்கள். அதில் இறுதிகட்ட நீதிபதிகளாக சிவசங்கரியும் நானும் இருந்து கதைகளை தேர்ந்தெடுத்தோம். அம்மாவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஓர் ஆவணப்படம் ஒன்று எடுக்கப்பட்டது. அதில்  என் தம்பி  அம்மாவின் சாதனைகள் குறித்துப் பேசி இருப்பார்.

- ஸ்ரீதேவி மோகன்
படங்கள்: ஆர்.கோபால்
ஓவியம்: ஸ்யாம்