Showing posts with label SOCIAL. Show all posts
Showing posts with label SOCIAL. Show all posts

Friday, 4 February 2022

ANNADURAI SEEDS SOCIAL INJUSTICE TO TAMILNADU

 

ANNADURAI SEEDS SOCIAL INJUSTICE TO TAMILNADU


அண்ணா -தமிழகத்தை குட்டிச்சுவர் ஆக்கிய கதை

அண்ணா நாமம் சொல்லும் ..ஜெ..



Courtesy Stanley Rajan

இன்றைய தமிழகம் நாசமாகி நிற்பதற்கெல்லாம், மாபெரும் சீரழிவில் இம்மாநிலம் சிக்கி இங்கு கோவில் முதல் அரசியல் வரை சரிந்து கிடப்பதற்கெல்லாம், இங்கு எல்லா இடத்திலும் ஊழலும் லஞ்சலாவண்யமும் பெருகி எல்லாமே எல்லை மீறி காண சகிக்கா அளவு சாக்கடையாக கிடப்பதற்கெல்லாம் அவர்தான் காரணம்


4 படம் நடிப்பதற்குள் அவனவன் முதல்வர் கனவில் அலைவதற்கும், தமிழக அரசியலுக்கு வர சினிமாதான் தகுதி என விதி எழுதியதற்கும் அவர்தான் காரணம்


அந்த சந்தர்ப்பவாதியின் குழறுபடியால், நிலையில்லா புத்திகொண்ட, எதிலுமே வெற்றிபெறாமல் மக்களை வீண் குழப்பத்திலும் பயத்திலும் ஆழ்த்தி, பொய் ஒன்றே தன் மூலதனமாக கொண்டு , நாளுக்கொரு பொய் வேளைக்கொரு வேடம் என இட்டு தமிழத்தை நாசக்கியது சாட்சாத் அவரேதான்


இன்றிருக்கும் பிழைப்புவாத பெரும் அரசியலை தொடங்கி வைத்ததும் அவர்தான்





காஞ்சிபுரம் நடராஜன் அண்ணாதுரை, அவரின் நினைவுநாளில் அவரின் மாபெரும் பொய்களையும், தன்னெஞ்சு அறிய அவர் மக்களுக்கு கொடுத்த மயக்க மருந்தையும், ஒரு சமூகத்தையே அவர் சீரழித்து மாபெரும் வீழ்ச்சிக்கு அடிகோலிய சோக வரலாற்றையும் பார்க்கலாம்


பிராமண எதிர்ப்பில் அண்ணா பேச எழுத வரும்பொழுது அவர் சொன்ன வசனம் "பிராமணர்கள் யாரையும் படிக்கவிட மாட்டார்கள்" என்பது


ஆனால் இதே அண்ணா இரண்டு எம்.ஏ படித்துவிட்டுத்தான் ராம்சாமியிடம் வந்தார், அப்படி படித்து வந்தபின்புதான் நெஞ்சார பொய் சொன்னார், எல்லாம் ராம்சாமி இடும் காசுக்கான மனசாட்சியினை விற்ற பொய்


பிராமணன் ஆடுமாடு மேய்க்க கைபர் போலன் கணவாய் வழியாய் வந்தான் என மனதறிந்து பொய் சொன்ன அண்ணா, ஆற்காடு நவாப் எனும் ஆப்கானிய வாரிசு பற்றி ஒருவார்த்தையும் சொன்னாரில்லை, உண்மையில்

ஆப்கானிய அரசர்களே அப்படி வந்து ஆண்டு கொண்டும் இருந்தனர்


பிராமணர் யாரையும் வாழவிடமாட்டார் என சொன்ன அண்ணா அக்காலத்திலே ராமசாமி நாயக்கன் கோடீஸ்வரனாக இருந்ததையும் அவர் காங்கிரஸ் தலைவராக இருந்தததையும் மறைத்தார்


அண்ணாவுக்கு பெரும் பலம் அவரின் எழுத்தும் பேச்சும், சந்தேகமில்லை


அதை கொண்டு இந்நாட்டின் சுதந்திரத்துக்கு பாடுபட்டாரா இல்லை தமிழைத்தான் வளர்த்தாரா என்றால் இல்லை முழுக்க முழுக்க இந்து எதிர்ப்பு இந்திய எதிர்ப்பு


தேர்ந்த தந்திரசாலியான அண்ணா ராம்சாமி முகாமில் தனக்கென ஒரு கூட்டத்தை சேர்த்தார், அக்காலத்தில் யாருமே கண்டுகொள்ளாத அந்த நாடக கும்பலைத்தான் போராளிகள் என வஞ்சகமாக மக்களிடம் திணித்தார் அண்ணா


அவரின் எழுத்தும் சிந்தனையும் கூட அவருடையது அல்ல கம்யூனிச ரஷ்யாவின் சமத்துவ கட்டுரைகளை கிறிஸ்தவ எதிர்ப்பு கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்த்து அதில் இந்து எதிர்ப்பு இந்திய எதிப்பு சரியாக கலந்து காப்பி அடித்து கொடுத்து கொண்டிருந்தார் அண்ணா


இதுதான அவரின் அறிவு


நிச்சயம் திராவிட நாடு என ஒன்று அமையாது என்பது அவருக்கு தெரியும், இல்லாத ஒரு கனவினை அதுவும் கன்னடனும் மலையாளியும் தெலுங்கனும் ஏற்காத ஒன்றை இங்கு அப்பாவி தமிழனிடம் சொல்லி வெள்ளையனுக்கு ஆதரவாக குழப்பம் விளைவித்தவர் அண்ணா


நாடு வெள்ளையனே வெளியேறு எனவும், நேதாஜி வழியில் டெல்லி சலோ என கிளம்பும் பொழுது இங்கு ராமனை குதர்க்கம் பேசியும், கம்பரசம் எழுதியும் இந்துமதத்தை சீண்டுவதிலே வெட்டியாக காலத்தை கடத்தி கொண்டிருந்தது அண்ணா கும்பல்


ஆம் இந்திய போராட்டம் பலவீனமாக என்னவெல்லாம் செய்யவேண்டுமோ அதையெல்லாம் சரியாக செய்தது

இந்தியாவுக்காக சிறைசென்ற காமராஜரும், ராஜாஜியும் இவர்கள் அரசியல் எதிரிகள் ஆனார்கள், நாட்டுக்காக சிறை சென்றவனை எதிர்த்து அரசியல் செய்தது இந்த தேசவிரோத கட்சி


இந்தியா சுதந்திரம் பெறும் நேரம் ராமசாமி தனிகட்சி தொடங்கவில்லை, அங்கு மணியம்மை வந்தபின் சொத்தும் இல்லை என்ற ஆத்திரத்தில் வெளிவந்து ஒரு கட்சி தொடங்கினார் அண்ணா


கிடைக்காத திராவிட நாட்டை பெறுவதாக ஒரு பொய், இந்துமதத்தை அடியோடு அழிக்க போவதாக அடுத்த பொய், தமிழை வாழவைக்கபோவதாக இன்னொரு பொய்


இந்த பொய்களில் மெல்ல பிராமண எதிர்ப்பை கைவிட்டு நயவஞ்சகமாக தமிழர் திராவிட நாடு என திரும்பினார் அண்ணா


அதற்கு தன் அபிமான கூத்தாடி கும்பலை சேர்த்து கொண்டார், கருணாநிதி அதற்கு தலைவராக விளங்கினார்

இன்றைய நாம்தமிழர் கூட்டம் செய்யும் அனைத்து காமெடிகளையும் அண்ணா செய்தார், ஆனாலும் இதையெல்லாம் கண்டித்த சம்பத் விலகினார்


சம்பத்தை பெரும் தலைவராக்கி இருக்க வேண்டிய காமராஜர் அவரை வளரவிடாமல் அமுக்கியே அழித்தது தமிழக சாபம்


அண்ணாவின் காமெடிகள் தொடர்ந்தன, ஆட்சியினை குறிவைத்து காய் நகர்த்தினார், கடவுள் இல்லை என்பது அகன்று "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என கடவுள் நம்பிக்கை வந்தது


தமிழனுக்காக உழைக்கின்றேன் என சொன்ன அண்ணா இலங்கையில் இருந்து இந்திய தமிழர் விரட்டபடும் பொழுது துரும்பையும் கிள்ளி போடவில்லை என்பது வரலாறு


திண்ணையில் படுத்தேனும் திராவிட நாடு காண்போம் என சவால்விட்ட அண்ணாவுக்கு, அது வெறும் கனவு என தூக்கி எறிய தயக்கமுமில்லை


இதுகாலமும் இதை சொல்லித்தானே மக்களை ஏமாற்றினோம் எனும் வருத்தமுமில்லை


இப்படி திராவிடநாட்டை காத்த அண்ணா பின் தமிழ்காக்க கிளம்பினார். இந்த் எதிர்ப்பு என அவர் செய்த அழிச்சாட்டியத்தில் தமிழகமே பற்றி எரிந்தது


காமரஜர் ஆட்சியில் தமிழகம் முன்னேறி வட இந்தியா பின்னடைந்து கிடக்க "வடக்கு வாழ்கின்றது" என வஞ்சகமாக பொய் சொன்னார் அண்ணா


சாதி ஒழிப்பேன் என்றவருக்கு முதுகுளத்தூர் கலவரம், கீழவெண்மணி கலவரத்தின் போது வாய்திறக்க மறுத்தது


சமத்துவம் காப்பேன் என கம்யூனிசம் வளராமல் செய்து திமுகவில் நடிகனும் முதலியாரும் மட்டும் வளரும்படி சமத்துவமும் செய்ய அவர் தவறவில்லை


1948 இந்தியா பாகிஸ்தான் போரின் பொழுது காங்கிரஸ் எதிர்ப்பு பேசிய அண்ணா, 1965ல் தேசம் மிகபெரிய போரை சந்தித்தபொழுது நடத்திய இந்தி எதிர்ப்பு போராட்டம் அவரெல்லாம் இந்தியனே அல்ல அந்நிய கைகூலி என்பதை அழகாக காட்டிற்று


தன்னை நம்பாமல் தன் கொள்கையினை நம்பாமல் ராமசந்திரன் எனும் நடிகனின் முகத்துக்குள் ஒளிந்து கொண்டுதான் தேர்தலுக்கு வந்தார்


ஆயிரம் சிக்கல் நாட்டில் இருக்க, சாஸ்திரி இறந்து அனுபவமில்லா இந்திரா ஆட்சியில் இருக்க தேசம் மிகபெரிய சிக்கலை எதிர்நோக்கும் நேரம் ராம்சந்தர் சுடபட்டதை காட்டி பிரச்சாரம் செய்த அயோக்கியதனம் கொஞ்சமல்ல‌


போர்காலம், அரிசி பஞ்சம், மழையின்மை, உலக நிலை என அரிசிவிலை உயர காரணம் ஆயிரம் இருக்க காமராஜர் மேல் பழிபோட்ட அந்த அயோக்கியதனம் கொஞ்சமல்ல‌


பண்பட்டவன் போல பேசிகொள்ளும் அண்ணா, கரடி ஒருவனை கட்டிபிடித்தே கொல்லும் என்பது போல் தந்திரத்தில் வல்லவராயிருந்தார்


தன் கட்சிக்காரனை ஒரு இடத்திலும் அவர் கண்டிக்கவே இல்லை, அநாகரீகமும் அசிங்க ஆபாச பேச்சுக்களும் திமுகவின் கலாச்சாரமானபொழுது மவுனமாக ரசித்தார், அதை பொறுமை எனவும் சொல்லிகொண்டார்


தன் கட்சிக்காரன் செய்யும் அடாவடியினை அத்துமீறலை ஒரு இடத்திலும் அவர் கண்டிக்கவில்லை மாறாக அனுமதித்தார்


மாபெரும் அறிவும் நாகரீகமும் தனிபெரும் சிறப்பும் கொண்ட தமிழகம் அண்ணாவின் வரவாலும் அவர் உருவாக்கிய சினிமா கும்பலாலும் நாசமாயிற்று


எல்லாம் கெடுத்து ஆட்சிக்கு வந்த அண்ணா பெரும் நாசகார கூட்டத்திடம் ஆட்சியினை கொடுத்துவிட்டு நோயில் வீழ்ந்தார்


சமத்துவ போராளியான அண்ணாவுக்கு பாட்டாளி நாடு சோவியத் யூனியன் , மக்கள் தாயகம் கியூபா எல்லாம் சிகிச்சை அளிக்க ஏன் மறுத்தன என்பதும், முதலாளித்துவ நாடான அமெரிக்கா ஏன் அவர் வாழவேண்டும் என விரும்பியது என்பதும் வரலாற்று மர்மங்கள்


எந்த நாட்டு பல்கலைகழகமும் முட்டாள்களின் தலைவன் அறிஞனாக இருக்கமுடியாது என சொன்னபொழுது அமெரிக்காவின் யேல் பல்கலைகழகம் அவரை அழைத்ததும் பெரும் மர்மம்


அண்ணா ஏதோ ஒரு நாட்டின் கைகூலி என்பது எக்காலமும் உள்ள சந்தேகம், அண்ணாவின் நடவடிக்கைகள் அதை மெய்பித்தன


தன்னை நம்பிய இரு தலைமுறைகளையே கெடுத்து தவறான வழிகாட்டி அவர்களை குழப்பத்தில் திருப்பிவிட்டு சென்றவர் அண்ணா, அந்த குழப்பமான கும்பல்தான் இப்பொழுது மேலும் குழப்பத்தை கூட்டி கொண்டிருக்கின்றது‌


இங்கு அவர் செய்ததெல்லாம் இந்தியாவுக்கும் அதன் ஒருமைபாட்டுக்கான எதிரான வேலை, தமிழனை இந்தியாவில் இருந்து பிரிக்கும் ஐந்தாம் படை வேலை


அவரும் கெடுத்து மீதி இருப்பதை கெடுக்க தன் அடிபொடிகளை விட்டுவிட்டு சென்றார்


அவை கருணாநிதி ராம்சந்தர் என அடுத்து கெடுத்தன, பின் ஜெயா சசிகலா என அதற்கு அடுத்து நாசமாக்கின‌


இப்பொழுது எடப்பாடி, ஸ்டாலின், உதயநிதி என அடுத்த தலைமுறை வந்திருக்கின்றது


சுருக்கமாக சொல்லலாம் தமிழக அரசியலில் பிழைப்புவாதத்தை தொடங்கி வைத்த பெருமகன் அண்ணா, அவராலே இங்கு எல்லாம் முழு நாசமாயிற்று


காமராஜரை சரித்து, தேசியத்தை சரித்து இங்கு என்னவெல்லாமோ நிகழ்ந்து மாநிலம் இவ்வளவு அலங்கோலமாக கிடக்க அவரே காரணம்


இங்கு கல்வி தனியார்மயம், மருத்துவம் தனியார் மயம், கொள்ளை கட்டணம், இன்னும் ஏகபட்ட முறைகேடுகள், கூடவே மிஷனரி அட்டகாசம், இந்துமத துவேஷம் என ஒவ்வொரு பக்கத்தையும் புரட்டுங்கள் அதில் அண்ணா தொடங்கி வைத்த அழிவு தெரியும்


இன்றைய விஜயண்ணா வரை நடிகர் கூட்டம் முதல்வர் ஆசை கொண்டு திரிவது இவராலே


அக்கம் பக்கம் கேரளா, கன்னடம், தெலுங்கரெல்லாம் இந்திபடித்து அகில இந்திய அளவில் பிரகாசிக்கும் பொழுது தமிழன் இந்தி படிக்காமல் பல வாய்ப்புக்களை இழந்தது இவராலே, ஆம் இன்று தமிழனால் அவன் நாட்டு பிரதமர் பேசுவதை கூட கேட்க முடியாது


ஆனால் மலையாளியும் கன்னடனும் தெலுங்கனும் அதை அழகாக புரிந்து கொள்கின்றான்

அண்ணா என்பவர் இங்கு பல சீர்கேடுகளை கொண்டுவந்த குழப்பவாதி , ஒரு கொள்கையாவது அவரிடம் நிலையாக இருந்ததா எதிலாவது வெற்றிபெற்றாரா என்றால் இல்லை


எல்லாமே குழப்பம், குழப்பிவிடுதல், அப்பாவி மக்களை இல்லா ஆபத்தை காட்டி பயமுறுத்துதல், அவனை இந்தியனாகவும் இந்துவாகவும் இருக்கவிடவே கூடாது என கங்கணம் கட்டி செயல்படுதல் என்பதுதான் அண்ணாவின் கொள்கை அன்றி வேறல்ல‌


அவரின் வாழ்வினை கவனியுங்கள்


முதலில் "மாபெரும் பிராமண எதிர்ப்பு " என்பது அவரின் கொள்கை, கொஞ்ச நாளில் அது மாறிற்று

பின்னர் "மாபெரும் இந்து எதிர்ப்பு " அதுவும் மாறிற்று


கொஞ்ச நாளில் "மாபெரும் திராவிட நாடு" அதுவும் கரைந்தது


கடைசியில் "மாபெரும் தமிழ் கனவு", அதாவது உருபபட்டதா என்றால் அவர் பக்கோடா வாங்க அனுப்பிய திமுக தலைவர் ஸ்டாலினே சாட்சி


ஆம் பிராமண எதிர்ப்பு எனும் பெயரில் இந்து எதிர்ப்பையும் , இந்து எதிர்ப்பு எனும் பெயரில் தமிழ் இலக்கியங்களையெல்லாம் வசைபாடிய தமிழர் குல எதிரி அண்ணாதுரை


வியக்கதகு கல்லணையும், தஞ்சை ஆலயம் கட்டிய தமிழனை, அன்றே கடல்தாண்டி முத்திரை பதித்த தமிழனை ஒன்றுமறியா மடையன் என பட்டம் கட்டியது அண்ணாதுரை


தான் சேர்த்து கொண்ட முட்டாள் கூட்டத்துக்காக தன்னை நம்பிய அடிமுட்டாள் கூட்டத்துக்காக தன்னை அறிஞன் என்ற அடிமுட்டாள் கூட்டத்துக்காக சினிமா மாயையினை கொண்டு ஒரு மாபெரும் இனத்தையே சீரழிய முனைந்தவர் அண்ணாதுரை


தன் வாழ்வில் தானும் குழம்பி தமிழகத்தையும் குழப்பி அதில் பிழைப்புவாதிகளெல்லாம் இந்து எதிர்ப்பு இந்திய எதிர்ப்பில் பிழைக்கலாம் என வழிகாட்டிவிட்டு சென்ற மாபெரும் குழப்பவாதி அவர்


அந்த விபரீத சிந்தனையாளருக்கு இந்திய திருநாட்டின் தமிழகத்தில் திரும்பும் இடமெல்லாம் நினைவகம் என்பதும் மூலை முடுக்கெல்லாம் அவன் பெயர் என்பதும் ஒரு மாபெரும் அறிவார்ந்த இனம் தன் நிலை அறியாது மயங்கியதற்கு பெரும் சாட்சி


ஒரு காலம் வரும், அன்று அண்ணாவின் பெயரும் அடையாளமும் துளியும் மிஞ்ஞ்சாது துடைத்தெறியபடும்

பொய்யும் புரட்டும் சொல்லி முட்டாள்களை சேர்த்து அப்பாவி மக்களை ஏமாற்றியவர் அவர் என ஒருநாள் அண்ணா இங்கு உணரபடுவார் அது நிச்சயம் நடக்கும்


அதுவரை அவர் பெயரும் இருக்கட்டும் அவரின் கொண்டாட்டங்களும் நடக்கட்டும்


ஆரம்பம் முதல் அண்ணாதுரைக்கு குழப்பமும் சந்தப்பவாதமும் இயல்பாய் வந்தன, முழு குழப்பவாதியாகவே இருந்தார், எதிலும் முழு கொள்கையோ கோட்பாடோ அவருக்கு இலை


அவர் எம்.ஏ படித்த இளைஞராக ஈ.வே.ராவின் கட்சியில் அண்ணா சேரும் போது (1935) நீதிகட்சிதான் மதராஸ் ராஜதானியில் ஆட்சியில் இருந்தது. இரண்டு வருடங்கள் கழித்து நடந்த தேர்தலில் காங்கிரசிடம் தோற்றது.


அதன் பின் சில வருடங்களில் (1944) ஈவேரா ஜஸ்டிஸ் கட்சியை திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றம் செய்து தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று முடிவெடுத்தார்.


இதிலிருந்துதான் அண்ணா ராம்சாமி மோதல் வெடித்தது, ஆட்சிக்கு வரவேண்டும் என முழுக்க காய் நகர்த்தினார் அண்ணாதுரை.


அண்ணாவும் அவர் தம்பிகளும் அடுத்த சில வருடங்களில் (1948) ராம்சாமியின் திருமணத்தை வசமாக பிடித்து காரணமாக்கி தனியே ஓடிவந்தார்கள்


அந்த காலகட்டம் கொடுமையானது, இரண்டாம் உலகபோரின் விளைவு தாங்கமுடியாமல் பிரிட்டனே அலறி அடித்து ஓடியிருந்தது, இந்தியா இரண்டாக உடைந்து பெரும் கலவர அழிவுகளில் சிக்கி இருந்தது, எங்கு காணினும் வறுமை உலகெல்லாம் போல இந்தியாவிலும் இருந்தது


அந்த அழிவுக்கு அமெரிக்கா மட்டுமே தப்பி இருந்தது, ஐரோப்பா கூட நொறுங்கி கிடந்தது


இப்படி திரும்பும் திசையெல்லாம் வறுமை, அழிவு என இருந்த காலங்களில் எல்லாவற்றுக்கும் காரணம் பிராமணன் என கிளம்பினார் அண்ணா


அன்றைய வறுமையும், அரசியல் குழப்பமும், நேருவின் ஒருமாதிரி அரசியலும் செய்தி ஊடகமோ இதர சாதனங்களோ இல்லா நிலையில் ஒரு வெறுப்பரசியலை தொடங்கினார் அண்ணா அடிப்படையில்


மக்களுக்கிடையே வெறுப்பைத் தூண்டி விட்டு அரசியலை மலினப் படுத்துவதே அந்த அரசியலின் வழி.


அதற்கு இந்திய தேசம், இந்து எதிர்ப்பு, பிராமண எதிர்ப்பு என பல விஷயங்களை எடுத்து வெறுப்பை விதைத்தார்


ஹிட்லரின் யூத வெறுப்பை போல இங்கு பிராமண விதைப்பினை விதைத்து ஹிட்லரை நியாமாக்கிய திருப்பணியெல்லாம் இனிதே செய்தார்


கம்பரசம் போன்ற இந்துவெறுப்பு இந்து இழிவு நூல்களெல்லாம் அவரால் வந்தன‌


இன்று காந்தி என திமுகவினர் புகழலாம் ஆனால் காந்தி பற்றி அண்ணா சொன்னது ஒன்றும் ரகசியமல்ல‌


“காந்தியார், ஒன்றும் கடவுள் அல்ல, மகானும் அல்ல, மகாத்மாவும் அல்ல. அவர் ஒரு காமாந்தக்காரர். சுசீலா நாயர்கள் சூழ வர, கோகில பென்கள் தோளிலே கை போட்டுக்கொண்டு நடந்து வரும் காந்தியை பார்த்தாயா, தம்பி”


“வெள்ளையனே வெளியேறு” போராட்டம் நடந்த போது அண்ணா சொன்ன வார்த்தைகள் காலத்தினால் மறக்க முடியாதது


“தம்பி, காந்தியாருக்கு பைத்தியம் பிடித்துவிட்டது. இவரைக் குணப்படுத்த இங்கிலாந்து தேசத்து வைத்தியர்கள் தேவை. வெள்ளையர்கள் வெளியேறினால், விஞ்ஞானமும் வெளியேறிவிடும். கார் ஓடாது, பஸ் ஓடாது, ரயில் ஓடாது, தந்தி கூட இருக்காது, ஏரோப்ளேன் இருக்காது. ஆல மரத்தையும், அரச மரத்தையும் சுற்றிக் கும்பிட்டு, பருந்தைக் கண்டால் கன்னத்தில் போட்டுக் கொள்ளத்தான் முடியும். நம் மக்களால் குண்டூசி கூட செய்ய முடியாது”.


அவரின் திராவிட நாடு கனவும் பேச்சும் பெரும் காமெடி திராவிட நாடு கோரிக்கை எழுப்பிய அண்ணாவுக்கே திராவிடம் என்பதின் பொருள் தெரியவில்லை. ஆந்திரம், கேரளம், கர்நாடகம், தமிழ்நாடு ஆகியவை உள்ளடங்கிய மதராஸ் ராஜதானியையே இவர் தனி நாடாக்க கேட்டுக் கொண்டிருந்தார். இவர் கேட்டது தமிழ் நாட்டுக்கு வெளியே மற்ற மாநிலங்களில் யாருக்கும் தெரியாது.


இந்தி எதிர்ப்பு கலவரம் பெரும் உயிர்பலியில் முடிய அது தன் கைதுக்கு வழிவகுக்கும் என அஞ்சிய அண்ணா சொன்னதுதான் அவரின் தலமைக்கு அழகு


“இந்தப் போராட்டத்துக்கும் எங்களுக்கும் தொடர்பு கிடையாது. 1965 ஜனவரி 26ஆம் நாளை துக்கநாளாகக் கடைபிடித்ததோடு எங்கள் போராட்டம் முடிந்து விட்டது” என்று அண்ணா அறிவித்து விட்டார்.


சிறை சென்ற பல தலைவர்கள் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்து வெளி வந்தனர் என்பதெல்லாம் இன்னொரு பக்கம்


. 1965ல் சீனப் போர் துவங்கிய போது, பிரிவினைவாதம் கோரும் தம் கட்சியை தடை செய்து தேர்தலில் போட்டியிட்டு பதவிக்கு வருவதில் மண்ணைப் போட்டு விடுவார்களோ என்று தனி திராவிட நாட்டுக் கொள்கையை குப்பையில் கிடத்தினார்.


ஈவேராவின் திராவிடர் கழகத்திலிருந்து கொள்கைக்காக வெளிவந்த பின்னால் தாய்க் கழகத்தின் கொள்கைகள் ஒவ்வொன்றையும் கழற்றி விட்டுக் கொண்டே இருந்தார். “ஒன்றே குலம். ஒருவனே தேவன்”, “ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்” போன்ற அண்ணாவின் பேச்சுக்களில் நாத்திகம் விடைபெற்றது


கற்பு என்ற ஒன்றே கிடையாது என்ற ராம்சாமியின் நிலைப்பாட்டிலிருந்து விலகி, கண்ணகி என்கிற கற்புக்கரசி கதாபாத்திரத்தை தாங்கிப் பிடிக்கத் துவங்கினார் அண்ணாதுரை.


1962 தேர்தலில் ராஜாஜியுடன் கூட்டு வைத்தபோது பார்ப்பனர் எதிர்ப்பும் கழன்றது. அதே தேர்தலில் ஓட்டுக்காக தன் பெயரை வாக்காளர் பட்டியலில் “அண்ணாதுரை முதலியார்” என்று பதிவு செய்ய முயன்றதில் சாதி ஒழிப்பும் சந்தர்ப்பத்துக்கு கழற்றி விடப் பட்டது. இப்படி எந்த கொள்கையிலுமே அண்ணா உறுதியாக இருந்ததில்லை.


அவரின் யேல் பல்கலைகழக விருதுக்கு கூட ஆதாரமில்லை எனும் சர்ச்சை வந்தது, அதே நேரம் பிரிட்டானியரின் ஆட்சியில் ஊழல்வாதி என தேடபட்ட அந்த யேல் பற்றிய குறிப்புகள் சென்னையில் இருந்து காணாமலும் போயின‌

அவரின் பெண்விடுதலை எப்படி இருந்தது என்பது ரகசியமல்ல‌


"அவள் ஒன்றும் படிதாண்டா பத்தினி அல்ல. நான் முற்றும் துறந்த முனிவன் அல்ல" என்பதோடு முடிக்கவில்லை அடுத்து ஒரு வரி சொன்னார்


"அவள் ஒரு பேனா மைக்கூடு அதை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் நானும் பயன்படுத்தினேன்”.


கண்ணியம் இல்லா மேடைபேச்சுக்கள் அவர்காலத்தில்தான் தமிழக மேடை ஏறின பின்னாளில் அக்கட்சி மேடைகளே ஆபாசமேடைகளாயிற்று


அண்ணாதுரையின் அரசு தான் லாட்டரி சீட்டுகளை அரசு செலவில் “விழுந்தால் வீட்டுக்கு, விழாவிட்டால் நாட்டுக்கு” என்று பிரச்சாரம் செய்து விற்றது. உழைப்பை மேடையில் பேச சொன்ன அண்ணா அதிர்ஷ்டத்தை நம்ப சொன்னபொழுது அவரின் பகுத்தறிவு முழ்க்க கழன்றிருந்தது


ஆச்சரியமாக அவர் காலத்துக்கு முன்பு எதெல்லாம் அதிகமில்லையோ அதெல்லாம் அவர் காலத்துக்கு பின் அதிகமானது.


சாதி ஒழிப்பு, கடவுள் மறுப்பு என்று எதையெல்லாம் எதிர்த்து கொள்கை முழக்கம் செய்தார்களோ, அதெல்லாம் நேர்மாறாக மிக அதிக வளர்ச்சி கண்டுள்ளது. சிறிய அரசாங்க பதவியிலிருந்து, மந்திரி பதவி வரை சாதி என்ன என்று தெரிந்த பிறகே பதவி ஒதுக்கப் படுகிறது. இட ஒதுக்கீடு, அதற்குள் இட ஒதுக்கீடு, அதனுள் உள் இட ஒதுக்கீடு என்று போய்க கொண்டிருக்கிறது.


திமுகவின் அசுரகுரு ஒருவன் காலமான நாளிது, இறந்தவரை பற்றி பேசுவது நாகரீகமாகாது எனினும் ஒரு இனத்தையே முட்டாளாக்கிய ஒருவரை பற்றி சொல்லாமல் விட்டால் அது அறம் ஆகாது


தமிழகம் உருப்பட முதல் அவசியம் அண்ணாதுரையினை அறவே புறக்கணிப்பது, ஆம் அந்த அசுரகுரு என்பவர்தான் இங்கு நடக்கும் எல்லா சீரழிவுக்கும் காரணகர்த்தா


அவரை துடைத்தெறியாமல் எதுவும் சாத்தியமில்லை


காங்கிரசை சரித்தால் இந்தியா உடையும் தான் நினைத்த கனவு நிறைவேறும் என திட்டமிட்டு செயலாற்றினார் அண்ணா, அவரின் தந்திர கணக்கும் பலித்தது, அவரை பின்பற்றி இந்தியா முழுக்க பிரிவினை கும்பல் எழும்ப காங்கிரஸ் சுருண்டது


இனி அண்ணா கனவுபடி இந்தியாவின் எதிர்காலம் அதோகதி என கவலை எழுந்த நேரம்தான், தெய்வம் பாஜக வடிவில் இங்கு பலம் பெற்றது


காங்கிரஸ் ஒழிந்தாலும் பாஜக மாபெரும் இரும்பு கட்சியாக இந்தியாவினை ஒருங்கிணைத்து கொண்டது


அதில் அண்ணா படுதோல்வி அடைந்து ஓடி கொண்டிருக்கின்றார், தலைதெறிக்க ஓடிகொண்டிருக்கின்றார் அப்படியே ஓடி மறைந்தே விடுவார் இது நிச்சயம் நடக்கும்


மற்றபடி நாம் தமிழர் சீமானுக்கும் அண்ணாவுக்கும் ஒரு வித்தியாசம் கூட கண்டறிய முடியாது


ஆனால் அன்று காலம் அண்ணாவுக்கு கைகொடுத்தது இனி துளியும் யாருக்கும் கொடுக்காது என்பதன்றி சொல்ல ஒன்றுமில்லை அவ்வகையில் ஆறுதல் கொள்ளலாம்


அண்ணாவின் தேசவிரோத இந்துவிரோத கொள்கையெல்லாம் அண்ணமலையால் நொறுங்கிகொண்டிருப்பது காலம் வகுத்த விதி


 Reply ·  Report Post


Wednesday, 26 May 2021

TRAFFIC RAMASAMY ,AN ACTIVIST OF SOCIAL REFORMATION

 



TRAFFIC RAMASAMY ,AN ACTIVIST OF SOCIAL REFORMATION


டிராஃபிக் ராமசாமி அவர்கள் எழுதிய  ‘ஒன் மேன் ஆர்மி‘ நூலில் இருந்து…………





1949 ஆம் ஆண்டு. எனக்கு அப்போது வயது 14. நான் 10 ஆம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தேன். அம்மா என்னை அரிசி எடுத்து வருவதற்காக சென்னையில் இருந்து காஞ்சிபுரம் அனுப்பி இருந்தார். நான் காஞ்சிபுரத் தில் இருந்து 10 கிலோ அரிசியை எடுத்துக் கொண்டு பஸ்ஸில் வந்தேன். அதற்கான அனுமதியையும் பெற்று இருந்தேன்.


அப்போதையக் காலத்தில் குறிப்பிட்ட எடைக்கு மேல் அரிசி மற்றும் நெல்லை அனுமதி இல்லாமல் வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப் பட்டிருந்தது. (அப்போது சென்னையில் இருந்து காஞ்சி புரத்துக்கு பஸ் கட்டணம் 1 ரூபாய் 25 காசுகள்)


சென்னையை நோக்கி வந்துகொண்டு இருந்தது பஸ். ஆற்காடு செக்போஸ்ட்டில் வந்தபோது பஸ்ஸை நிறுத்தி அவரவர் கைகளில் இருந்தப் பொருட்களை அதிகாரிகள் பரிசோதனை செய்துகொண்டு இருந்தனர். என்னைப் பரிசோதித்த ஓர் அதிகாரி என் மடியில் இருந்த அரிசிப் பையைப் பார்த்துவிட்டு, ‘பத்து கிலோ அரிசியைக் கொண்டு செல்ல அனுமதி வாங்கி இருக்கிறாயா?’ என்றார். நான் அனுமதி வாங்கிய விவரத்தைச் சொன்னேன்.


ஆனாலும், அந்த தாசில்தார் நான் கொண்டுவந்த அரிசிப் பையைப் பிடுங்கிக் கொண்டார். நான் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவர் அரிசிப் பையைக் கொடுக்கவில்லை. ‘எங்கள் வயலில் விளைந்த அரிசி இது. பத்து கிலோ எடுத்துச் செல்ல உரிய அனுமதி வாங்கி இருக்கிறேன். அப்படியும் நீங்கள் ஏன் தடுக்கிறீர்கள்?’ எனக் குரலை உயர்த்தி நியாயம் கேட்டேன். அதில், அந்த தாசில்தாருக்கு கடுமையான கோபம் வந்துவிட்டது. ‘என்னிடமே நியாயம் பேசுகிறாயா? உன்னால் முடிந்ததைச் செய்துகொள். அரிசியைத் தர முடியாது. மீறிப் பேசினால் போலீஸுக்குத் தகவல் சொல்ல வேண்டி இருக்கும்!’ என மிரட்டி அனுப்பிவிட்டார்.




எங்கள் குடும்பத்தில் அப்போது 11 பிள்ளைகள். நான் கொண்டுபோகும் அரிசியில்தான் சாப்பாடு செய்ய வேண்டிய நிலை. சில நேரங்களில் அப்பா ஓவர் டியூட்டி பார்த்தாலும் பார்ப்பார். வெறும் கையோடு போனால் அம்மா என்ன செய்வாள்? பலவித வேதனைகளும் மனதைக் குழப்ப, அரிசிப் பையை இழந்துவிட்டு வீட்டுக்கு வந்தேன்.


தாசில்தார் அரிசிப் பையைப் பிடுங்கிக்கொண்ட விஷயத்தைச் சொன்னேன். சொல்லும்போதே எனக்கு அழுகை பொங்கியது. அப்போது வீட்டுக்கு வந்த என் தந்தை, ‘சரி, விடு. அதிகாரிகள் ஏதோ தவறான அரிசின்னு நினைச்சுப் பிடிச்சிருப்பாங்க. அதை விட்டுத்தள்ளு. நான் கடைக்குப்போய் அரிசி வாங்கி வருகிறேன்’ என எனக்கு ஆறுதல் சொல்லிக் கிளம்பிவிட்டார்.


ஆனால், என்னால் என்னை சமாதானம் செய்துகொள்ள முடியவில்லை. ‘ஏதோ ஓரளவுக்கு சமாளித்துக் கொள்ளும் குடும்பம் என்பதால் சிக்கல் இல்லாமல் போய்விட்டது. இதேபோல் ஒரு அன்றாடங்காய்ச்சியின் குடும்பத்துக்கு நேர்ந்து இருந்தால் என்னாகி இருக்கும்?’ என்கிற எண்ணம் அன்று முழுக்க என்னைத் தூங்கவிடவில்லை. தவறாக நடந்துகொள்வது எத்தகையக் கண்டனத்துக்கு உரியதோ... அதேபோல்தான் தவறைத் தட்டிக் கேட்காமல் அலட்சியம் காட்டுவதும். அந்த ஆவேசம் எனக்குள் அடங்காதத் தீயாகத் தகிக்கத் தொடங்கியது.


‘ஒரு தனி நபர் ஓர் ஊரிலிருந்து அடுத்த ஊருக்கு எத்தனை கிலோ அரிசியை எடுத்துச் செல்லலாம்? அதற்கு யாரிடம் அனுமதி பெற வேண்டும்?’ என்கிற விவரங்களை எல்லாம் மறுபடியும் படித்துப் பார்த்து தெரிந்துகொண்டேன். சட்டப்படி நான் 10 கிலோ அரிசியைக் கொண்டு வந்ததில் எந்தத் தவறும் இல்லை என்கிற நிறைவு எனக்கு நிம்மதியைக் கொடுத்தது. நியாயமாக நடந்தும் அரிசியைப் பறித்துக்கொண்ட அந்த தாசில்தாரை நிச்சயம் சும்மா விடக்கூடாது என்கிற ஆவேசமும் எனக்குள் அடங்கிவிடவில்லை.


‘எப்போதடா விடியும்?’ எனப் புரண்டு புரண்டுப் படுத்தேன். காலையில் எழுந்த உடன் தபால் ஆபீஸுக்குப் போனேன். மூன்று பைசாவுக்கு ஒரு போஸ்ட் கார்ட் வாங்கினேன். எனக்கு நடந்த அநீதியை அப்படியே எழுதி அப்போதையக் காஞ்சிபுரம் கலெக்டருக்கு அனுப்பினேன். ‘நிச்சயம் எனக்கான நியாயம் கிடைக்கும்’ என்கிற நம்பிக்கையோடு பள்ளிக்கூடம் சென்று விட்டேன்.





நான்கு நாட்கள் கழித்து, ஆற்காடு சிக்னலில் என் அரிசியைப் பிடுங்கி வைத்துக்கொண்ட அதே தாசில்தார் எங்கள் வீட்டுக்கு முன், கையில் அரிசிப் பையோடு நின்றுகொண்டு இருந்தார். நான் அவரை பார்க்காதது போல் வீட்டுக்குள் சென்றுவிட்டேன். ‘தம்பி... தம்பி...’ என்றபடியே பதறிய அவர், மாவட்ட ஆட்சியர் தன்னை சஸ்பெண்ட் செய்துவிட்டதாகக் கூறினார்.


‘‘உங்களோட அரிசிப்பை ஒரு அரிசிகூடக் குறையாமல் இதோ இருக்கு. நடந்தது தவறுதான். என்னைவிட எத்தனையோ வயசு சின்னப் பையனான உங்ககிட்ட மனசு வருந்தி மன்னிப்புக் கேட்டுக்கிறேன்’’ என்றார் கண்ணீரோடு.


அரிசிப் பையை என்னிடம் கொடுத்து, ‘‘நடந்த சம்பவத்தை மறந்து என்னை மன்னிச்சிட்டதா நீங்க ஒரு கடிதம் கொடுத்தாத்தான் மறுபடியும் நான் தாசில்தார் உத்தியோகம் பார்க்க முடியும். தயவு பண்ணி என்னை மன்னிச்சிட்டதா ஒரு கடிதம் எழுதிக் கொடுங்க தம்பி’’ என அவர் இரு கைகளையும் உயர்த்திக் கும்பிட்டபடி சொல்ல... எனக்கே ஒரு மாதிரியாகிவிட்டது.


இது என் நியாயத்துக்கான வெற்றி என சத்தம் போட்டுக் கத்த வேண்டும்போல் இருந்தது.


வயதில் சிறுவனாக இருந்தாலும், எனக்கு நடந்த அநீதியை யாருடைய துணையும் இல்லாமல் என்னால் தட்டிக் கேட்க முடியும். அதற்கான நியாயத்தைப் பெற முடியும் என்கிற துணிச்சல் எனக்குள் முதல் முறையாகப் பூத்தது. யாரையும் அழவைத்து ரசிக்கும் குரூரம் எனக்கு ஒருபோதும் இருந்தது இல்லை. அதனால், ‘நடந்த தவறை தாசில்தார் ஒப்புக்கொண்டார். என் அரிசிப் பையையும் முறைப்படி திருப்பிக் கொடுத்தார். இனி இதுபோல் அவர் யாரிடமும் நடந்துகொள்ள மாட்டார் என நம்புகிறேன். திருந்திய மனநிலையில் இருக்கும் இவரை சஸ்பெண்ட் நடவடிக்கையில் இருந்து விடுவித்து உரிய பணியில் அமர வைக்கலாம்!’ எனக் கடிதம் எழுதிக் கொடுத்து அனுப்பினேன்.


அறிந்தோ அறியாமலோ தவறு நிகழ்ந்துவிடுகிறது. அதன் பாதிப்பு அறிந்து ஒருவர் மன்னிப்புக் கேட்கும்போது, தவறைத் திருத்திக்கொள்ளும் வாய்ப்பாக அவரை மன்னிப்பதில் தவறே இல்லை.


மன்னிப்புதான் மனிதகுலத்தின் மைய விளக்கு. அது தரும் சுடரில்தான் இந்தப் பூமிப் பந்து சுற்றுகிறது. தவறு செய்தவர்களைத் திருந்தச் செய்வது மட்டுமே நம் கடமை.


14 வயதில் ஒரு தாசில்தாரையே சஸ்பெண்ட் ஆக வைத்திருக்கிறேன் என்றால், நியாயத்தின் அடிப்படை யில் என்னால் எதையும் தைரியமாகச் செய்ய முடியும் என்கிற நம்பிக்கை அப்போதுதான் பிறந்தது. மனதுக் குள் புது வெள்ளம் பாய்ந்ததுபோல் ஓர் உற்சாகம். ஒரு சிறு எறும்பு யானையின் காதுக்குள் புகுந்து யானையைக் குப்புற சாய்த்தது போன்ற நிறைவு.


மூன்று பைசா போஸ்ட் கார்டில் எழுதப்பட்ட விஷயத்தை அக்கறையோடு படித்து, உரியபடி விசாரித்து, தவறு செய்த அதிகாரி மீது நடவடிக்கை எடுத்த அந்தக் கலெக்டர்தான் ‘அநியாயமாக நடக்கும் எதையும் தட்டிக் கேட்கலாம்’ என்கிற துணிச்சலை எனக்குள் வார்த்தவர்.

Saturday, 9 June 2018

CHARLES DICKENS , SOCIAL REVOLUTIONARY WRITER BORN 1812 FEBRUARY 7 - 1870 JUNE 9





CHARLES DICKENS ,
SOCIAL REVOLUTIONARY WRITER
BORN 1812 FEBRUARY 7 - 1870 JUNE 9




சார்லஸ் ஜான் ஹஃபாம் டிக்கென்ஸ் (Charles Dickens, 7 பெப்ரவரி 1812 - 9 ஜூன் 1870) விக்டோரியா காலத்தைச் சேர்ந்த மிகவும் புகழ் பெற்ற ஆங்கிலப் புதின எழுத்தாளர்களில் ஒருவரும், தீவிரமான சமூகப் பரப்புரையாளரும் ஆவார். மிகவும் வறியவராக வாழ்க்கையைத் தொடங்கியவர். அது அவரது எழுத்துக்களிலும் எதிரொலித்தது. இவரது டேவிட் காப்பர்ஃபீல்டு, ஆலிவர் டுவிஸ்ட் போன்ற புதினங்கள் (நாவல்கள்) உலகப் புகழ் பெற்றவை.

திறனாய்வாளர்களான ஜார்ஜ் கிஸ்ஸிங், ஜி. கே. செஸ்ட்டர்ட்டன் ஆகியோர், டிக்கென்சினது உரைநடைத் திறன், தனித்துவமான, திறமையான ஆளுமை கொண்ட பாத்திரங்களைத் தொடர்ச்சியாக உருவாக்கும் திறமை, அவரது ஆற்றமிக்க சமூக உணர்வு என்பவற்றுக்குச் சான்றளித்துள்ளனர். ஆனால், சக எழுத்தாளர்களான, ஜார்ஜ் ஹென்றி லூயிஸ், ஹென்றி ஜேம்ஸ், வெர்ஜீனியா வூல்ப் ஆகியோர், உணர்ச்சிவசப்பட்ட தன்மை, நம்பமுடியாத நிகழ்வுகள், இயற்கைக்கு மாறான பாத்திரப் படைப்புக்கள் என்பவற்றுக்காக அவரது ஆக்கங்களைக் குறை கூறியுள்ளனர்.

டிக்கென்சின் புதினங்களினதும், சிறுகதைகளினதும் புகழ் காரணமாக அவை தொடர்ச்சியாக அச்சேறி வருகின்றன. டிக்கென்சின் பல புதினங்கள் தொடக்கத்தில் சஞ்சிகை போன்றவற்றில் தொடராக வெளிவந்தவை. இது அக்காலத்தில் பெரிதும் விரும்பப்பட்ட ஒரு வடிவமாக இருந்தது. எனினும், அக்காலத்துத் தொடர்கதை எழுத்தாளர்கள் பலரைப்போல, டிக்கென்ஸ், வெளியிடத் தொடங்கு முன்னரே புதினம் முழுவதையும் எழுதி முடிப்பதில்லை. இவர், வெளிவரும் ஒழுங்கில் பகுதி பகுதியாகவே புதினங்களை எழுதினார். இந்த முறை, ஒவ்வொரு வெளியீட்டையும் வாசித்து முடித்ததும் அடுத்த வெளியீட்டை எதிர்பார்த்திருக்கும் ஆவலைத் தூண்டும்படி எழுத வசதியானது.


தாக்கங்கள்
ஹொனோரே டி பால்சாக், மிகுவேல் டி செர்வாண்டெஸ், விக்டர் ஹியூகோ, வாஷிங்டன் இர்விங், வில்லியம் ஷேக்ஸ்பியர்

ஆரம்ப வருடங்கள்

சார்லஸ் டிக்கின்ஸ் பிறந்த இடம், 393 வணிகச் சாலை, போர்ட்ஸ்மவுத்
photograph
2 ஆர்டனஸ் டெரேஸ், சாத்தம்,டிக்கின்ஸ் வாழ்ந்த வீடு 1817 – மே 1821[1]
சார்லஸ் ஜான் ஹூஃபாம் டிக்கின்ஸ், பிப்ரவரி 7, 1812 அன்று, 1 மைல் எண்ட் டெரேஸ் (இப்போது 393 வணிகச் சாலை), போர்ட்ஸியா தீவில் (போர்ட்ஸ்மவுத்), ஜான் டிக்கன்ஸ் (1785-1851) மற்றும் எலிசபெத் டிக்கன்ஸ் (née பாரோ, 1789-1863) ஆகியயோரின் எட்டு குழந்தைகளில் இரண்டாவது குழந்தையாக பிறந்தார். அவரது தந்தை கடற்படை அலுவலகத்தில் ஒரு எழுத்தராக இருந்தார் மற்றும் தற்காலிகமாக அந்த மாவட்டத்தில் இருந்தார். சார்லஸ் அவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக செயல்பட அவரது கடற்படை தலைவர் அவர்களைக் கிறிஸ்டோபர் ஹூஃபாம் கேட்டுக் கொண்டார். [2] கடற்படை தலைவர் பன்முகம் கொண்டவராக மேலாளராகவும் மற்றும் ஒரு நிறுவனத் தலைவராகவும் இருந்திருக்கிறார். ஹூஃபாம் பவுல் டொம்பாய்க்கு உத்வேகம் அளித்தாக கருதப்படுகிறது, இவர் டிக்கின்ஸின் பெயர்பெற்ற டொம்பாபே அண்ட் சன் (1848) இல் ஒரு கப்பல் நிறுவனத்தின் உரிமையாளர். [2]


1815 ஆம் ஆண்டு சனவரி மாதம் ஜான் டிக்கின்ஸ் லண்டனுக்குத் திரும்ப அழைக்கப்பட்டார், மேலும் அவரது குடும்பம் நோட்ஃபோக் தெரு, பிட்ஸ்ரோவியாவிற்கு மாற்றப்பட்டது. சார்லஸ்க்கு நான்கு வயது இருந்தபோது, அவரது குடும்பம் ஷெர்னெஸ்ஸிற்கு மாற்றப்பட்டனர், அங்கிருந்து சாத்தம், கென்ட் என்ற இடத்திற்குச் சென்றனர். சார்லஸ் அங்கு 11 வயது வரை கழித்தார். அவரது ஆரம்பகால வாழ்க்கையானது "மிகவும் சிறியதாகவும், எளிமையானதாகவும், குறிப்பாக ஒரு விசயத்தை பற்றிய பொறுப்புகளை எடுத்துக்கொள்ளும் பையனாக" இருந்திருக்கிறார். [3]

சார்லஸ் வெளிப்புறங்களிலும் தனது நேரத்தை செலவழித்தார் ஆனாலும் உற்சாகத்துடன் வாசித்தார், குறிப்பாக போக்கிரிகளின் துணிகர செயல்கள் அடங்கிய நாவல்களான டோபியாஸ் ஸ்மோல்ட் மற்றும் ஹென்றி ஃபீல்டிங், ராபின்சன் க்ரூஸோ மற்றும் கில் பிளஸ் ஆகியோரின் நாவல்களை வாசித்தார். அரேபிய நைட்ஸ் மற்றும் எலிசபெத் இன்ச்பால்ட்ஸின் சேகரிக்கப்பட்ட பெர்சஸ் ஆகியவற்றை அவர் மீண்டும் மீண்டும் வாசித்து மகிழ்ந்தார். [4] அவர் குழந்தை பருவத்தின் நினைவுகளை தக்கவைத்துக் கொண்டார், மக்களிடமும் சம்பவங்களிடமிருந்தும் ஒரு சிறந்த நினைவூட்டல் அவர் தனது எழுத்துக்களில் பயன்படுத்தினார். [5] அவரது தந்தை கடற்படை அலுவலகத்தில் ஒரு எழுத்தராக பணிபுரிந்த ஒரு சில ஆண்டுகளில் அவருக்கு தனிப்பட்ட கல்வியும், பிறகு வயதான பெண் நடத்திய பள்ளியில் பின்னர் சாத்தம்மில் வில்லியம் கில்ஸ் நடத்திய ஒரு பள்ளியில் பயின்றார். [6]

பத்திரிகை மற்றும் ஆரம்ப நாவல்கள்

1832 ஆம் ஆண்டில், 20 வயதில், டிக்கின்ஸ் ஆற்றல் மிக்கவராகவும் தன்னம்பிக்கையுடனும் இருந்தார். [7] அவர் பலகுரல் வித்தைகள் மற்றும் பிரபலமான பொழுதுபோக்குகளை அனுபவித்து மகிழிந்தார், அவர் தான் எதிர்காலத்தில் எப்படி வரவேண்டும் என்ற் ஒரு தெளிவான, குறிப்பிட்ட உணர்வைக் கொண்டிருக்கவில்லை, மேலும் அவருக்கு புகழ் வேண்டுமென்றும் அறிந்திருந்தார். அவரது ஆர்வம் நாடகத்துறைக்குள் அவரை இழுத்தது- அவர் கேரிக் நாடகக் குழுவில் ஒரு ஆரம்ப உறுப்பினராக ஆனார் [8] - அவர் கோவென்ட் கார்டனில் ஒரு நடிப்புத் தேர்வுக்கு சென்றார், மேலாளர் ஜார்ஜ் பார்ட்லி மற்றும் நடிகர் சார்லஸ் கெம்பல் ஆகியோர் அவரது நடிப்பை பார்த்து மதிப்பிட வேண்டியிருந்தது. [9] இந்தத் தேர்விற்காக டிக்கின்ஸ், நகைச்சுவை நடிகர் சார்லஸ் மேத்யூஸைப் கவனித்து பின்பற்ற முடிவு செய்திருந்தார், ஆனால் இறுதியில் அவர் உடல் நல்க்குறைவின் காரணத்தால் இந்தத் தேர்வை தவறவிட்டார். அவருக்கு வேறொரு சந்தர்ப்பமும் கிடைத்தது ஆனால் இந்த வாய்ப்புக்கு முன்னால், எழுத்தாளர் என்று அவர் தனது வாழ்க்கையைத் தொடங்கி விட்டார். 1833 ஆம் ஆண்டில் லண்டன் மாதாந்திர பத்திரிகைக்கு அவரது முதல் கதை "(A Dinner at Poplar Walk) ஒரு பிரபல நடைபாதை கடையில் இரவு விருந்து" சமர்ப்பித்திருந்தார். [10] அவரது தாயாரின் சகோதரர் வில்லியம் பாரோ, அவரை பாராளுமன்றத்தின் கண்ணாடி (The Mirror of Parliament) இதழில் பணியமர்த்தினார்,
 1832 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் முதன்முறையாக ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றினார். அவர் ஃபர்னைவல்ஸ் இன்னில் அறைகளை வாடகைக்கு எடுத்து அரசியல் பத்திரிகையாளராக பணிபுரிந்தார், பாராளுமன்ற விவாதங்கள் குறித்த செய்திகளை அளித்தார், மற்றும் அவர் மார்னிங் க்ரோனிக்காக தேர்தல் பிரச்சாரங்களை நடத்த பிரிட்டன் முழுவதும் பயணித்தார். அவருடைய பத்திரிகை அனுபவங்களை, பருவ இதழ்களில் ஓவியங்கள் வடிவில், 1836 இல் (Boz) போஸ் என்ற புனைப்பெயரில் அவரது முதல் தொகுப்பை உருவாக்கி வெளியிடப்பட்டது: போஸ்- ஒரு குடும்பப் புனைப்பெயராக இருந்ததால், அவர் சில ஆண்டுகளுக்கு அதே பெயரை தனது புனைப்பெயராக பயன்படுத்தினார். [11][12] டிக்கின்ஸ், "மோசே" என்ற புனைப்பெயரிடமிருந்து வெளிப்படையாகத் போஸ் பெயரை தத்தெடுத்தார், இது அவருடைய இளைய சகோதரர் ஆகஸ்டஸ் டிக்கன்ஸ் கொடுத்தது, இது ஆலிவர் கோல்ட்ஸ்மித் இன் தி விகார் ஆஃப் வேக்ஃபீல்ட் கதையில் வரும் ஒரு கதாபாத்திரத்தின் பெயர். தலை ஓசையிலிருந்து உச்சரிக்கும்போது, "மோசே" போஸ் என
அழைக்கப்படும் "போஸ்" ஆனார். அவரது இலக்கிய வாழ்க்கை முழுவதும் பத்திரிகைகளுக்காக அவர் பங்களித்து இருந்தார். சனவரி 1835 இல் மார்னிங் குரோனிக்கல் இதழில் இசை விமர்சகர் ஜார்ஜ் ஹோகார்ட் தலைமையின் கீழ் ஒரு மாலை பதிப்பை வெளியிட்டது. தெரு ஓவியங்கள் வரைவதில் பங்களிப்பதற்க்காக டிக்கின்ஸ்சை ஹோகார்ட் அழைத்தார் மற்றும் டிக்கின்ஸ் தனது புல்ஹாம் வீட்டிற்கு ஒரு வழக்கமான பார்வையாளராக ஆனார். டிக்கின்ஸ்சின் தனது கதாநாயகனான வால்டர் ஸ்காட்டுடன் ஹோகார்ட் கொண்ட நட்பால் உற்சாகமடைந்தார், மேலும் ஹோகார்தின் மூன்று மகள்கள் - ஜோர்ஜினா, மேரி, மற்றும் பத்தொன்பது வயது கேத்தரின் ஆகியோரின் நட்பையும் பெற்று மகிழ்ந்தார்.

ஆன்மீகப் பார்வை
ஒரு இளைஞனாக டிக்கின்ஸ் ஒழுங்கமைக்கப்பட்ட மதத்தின் சில அம்சங்களுக்கு ஒரு விரக்தியை வெளிப்படுத்தினார். 1836 ஆண்டில், ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று மூன்று தலைவர்கள் என்ற தலைப்பில் ஒரு துண்டுப் பிரசுரத்தில், ஞாயிற்றுக்கிழமைகளில் விளையாட்டுகளை தடை செய்வதற்கான ஒரு திட்டத்தை எதிர்த்து, மகிழ்ச்சிக்கான மக்களின் உரிமைகளை பாதுகாக்க போராடினார்.

"உங்கள் தேவாலயங்களை பாருங்கள்- குறைந்த சபை மற்றும் குறைவான வருகை. மக்கள் பரிதாபகரமாகவும் முரட்டுத்தனமாகவும் வளர்ந்து, தேவாலயத்தின் நம்பிக்கையின் மீது வெறுப்படைந்து வருகின்றனர், அத்தகைய ஒவ்வொரு ஏழு நாளைக்கு ஒருமுறை மக்களின் விருப்பங்களை தடை செய்கிற விசுவாசத்தால் வெறுக்கப்படுகிறார்கள். மக்கள் தேவாலயங்களுக்கு வெளியே தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்கள் மேலும் தேவாலயங்களை தவிர்க்கவும் செய்கிறார்கள். அதனால் ஞாயிற்றுக்கிழமை தெருக்களுக்கு வாருங்கள், மேலும் சுற்றியுள்ள எல்லாவற்றிற்கும் மேலாகச் செயல்படும் கடுமையான மனச்சோர்வைக் கவனியுங்கள்" என்று அந்த துண்டுப் பிரசுரத்தில் எழுதியிருந்தார்.

மரணம்

1870 ஆம் ஆண்டு சூன் மாதம் 8 ஆம் தேதி, எட்வின் ட்ரோட் மீதான ஒரு முழு நாள் வேலைக்குப் பிறகு டிக்கின்ஸ் இருதய தசை அடைப்பு ஏற்பட்டது. அவர் ஒருபோதும் சுயஉணர்வைப் பெறவில்லை, அடுத்த நாள் அவர் உயிர் பிரிந்தது, அவர் மரணம் மடைந்தார். டிக்கின்ஸ் உண்மையிலேயே பெக்காமில் இருப்பதாக சுயசரிதை எழுத்தாளரான கிளாரி டோமலின் பரிந்துரைத்தார். டிக்கின்ஸ் இருதய தசை அடைப்பால் பாதிக்கப்பட்டபோது, அவருடைய மனைவி எல்லென் டெர்னானும் அவளது வேலைக்காரிகளும் அவரை காட்ஸ் ஹில்லுக்கு அழைத்துச் சென்றனர், அதனால் அவர்களது உறவு பற்றிய உண்மையை பொது மக்களுக்கு தெரியாது. ரோச்செஸ்டர் தேவாலயத்தில் "மலிவான, அசையாத, தனிப்பட்ட முறையில்" இரகசியமாக புதைக்கப்பட வேண்டும் என்ற டிக்கின்ஸ் விருப்பதிற்கு மாறாக, அவரை வெஸ்ட்மினிஸ்டர் அபேயின் பொயட்ஸ் கார்னரில் அடக்கம் செயதனர். இறுதி சடங்கில் அச்சிடப்பட்ட ஒரு கட்டுரையில் பின்வருமாறு வாசகம் உள்ளது: "சார்லஸ் டிக்கின்ஸ் நினைவாக, தனது 58 வது அகவையில் 9 சூன் 1870 அன்று, ராச்செஸ்டர், கென்ட் அருகிலுள்ள தனது இல்லத்தில் டிக்கின்ஸ் (இங்கிலாந்தின் மிகவும் பிரபலமான எழுத்தாளர்) இறந்தார். அவர் ஏழைகள், துன்பங்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்கள் ஒரு அனுதாபியாக இருந்தார் மற்றும் அவருடைய இறப்பு மூலம், இங்கிலாந்தின் மிகப்பெரிய எழுத்தாளர்களில் ஒருவர் உலகில் இழக்கப்படுகிறார்." அவருடைய கடைசிச் சொற்கள்: "நிலத்தின் மேல்", அவரது அண்ணியார் ஜோர்ஜினாவின் வேண்டுகோளுக்கு இணங்க அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை, 19 ஜூன் 1870, டிக்கின்ஸ் நல்லடக்கம் முடிந்த ஐந்து நாட்களுக்கு பின்னர், டீன் ஆர்தர் பென்ரின் ஸ்டான்லி ஒரு நினைவறிக்கையை வெளியிட்டார். "இருண்ட காட்சிகளை கையாள்வதிலும் மற்றும் மிகவும் இழிந்த பாத்திரங்களை கையாள்வதிலும், மேதையாக மற்றும் தூய்மையாக இருக்க முடியும் என்பதற்கு டிக்கின்ஸ் ஒரு உதாரணமாக இருந்தார், இப்போது அவர் நம்மோடு இல்லை என்று துக்க நாள் நினைவு கூறப்பட்டது.

பின்பற்றுவோர்




Sunday, 4 March 2018

FACE BOOK ,SOCIAL NET WORK BEGINS 2004 FEBRUARY 4




FACE BOOK ,SOCIAL NET WORK 
BEGINS 2004 FEBRUARY 4




முகநூல் (Facebook, பேஸ்புக் ) 2004இல் தொடங்கிய இணையவழி சமூக வலையமைப்பு நிறுவனமாகும். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவர் மார்க் சக்கர்பர்க் ஹார்வர்ட் மாணவர்களுக்கு ஆரம்பித்து பின்பு வேறு ஐவி லீக் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் அனுமதி கிடைத்தது. இன்றைய முகநூலில் 13 வயதான நபர்கள் சேரலாம். அலெக்சா நிறுவனத்தின் மதிப்பீட்டின் படி இணைய முழுவதிலும் முகநூல் தான் இரண்டாவது மிகப் பரவலமான இணையத்தளமாகும்.

முகநூல்

பேஸ்புக்கினை தமிழில் முகநூல் என்று அழைக்கின்றார்கள். இவ்வாறு அழைப்பது பரவலாக ஊடகங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.[4][5] பேஸ்புக் அல்லது முகநூல் என்பது 2004ல் தொடங்கப்பட்ட இணையவழி சமூக வலையமைப்பு. ஜுலை 2011 கணக்கெடுப்பின்படி இதில் 800 மில்லியன் உபயோகிப்பாளர்கள் உள்ளனர். 13 வயதிற்கு மேற்பட்டவர்கள் முகநூலில் தங்களின் பெயரைப் பதிவு செய்து கொண்டு முகநூலில் உள்ள மற்றவர்களை நண்பர்களாக்கிக் கொண்டு தங்கள் கருத்துக்களை பரிமாறிக் கொள்வர்.

வரலாறு

முகநூலை மார்க் சக்கர்பர்க் தன் நண்பர்களான எடுடாரோ சாவ்ரின், டஸ்டின் மாஸ்கோவிட் போன்ற ஹார்வர்ட் நண்பர்களுடன் தொடங்கினார். பிறகு ஐவி லீக், ஸ்டான்போர்டு பல்கலைக்கழக மாணவர்களும் முகநூலில் சேர்ந்தனர். பின்னர் ஆப்பிள், மைக்ரோசாஃப்ட் நிறுவன ஊழியர்களும் முகநூலில் சேர்ந்தனர். 2008ல்,முகநூலின் தலைமையகம் அயர்லாந்து நாட்டின் டப்ளின் நகரில் தொடங்கப் பட்டது. 2010ல், முகநூலின் மதிப்பு 41 மில்லியன் டாலராக உயர்ந்து, கூகிள், அமேசானைத் தொடர்ந்து அமெரிக்காவின் மூன்றாவது பெரிய இணைய தள நிறுவனமாக உயர்ந்தது.
2011ல் முகநூலின் தலைமையகம் மென்லோ பார்க், கலிபோர்னியாவிற்கு மாற்றப்பட்டது. 13 வயதிற்கு மேற்பட்ட, சரியான மின்னஞ்சல் முகவரி உள்ள யாரும் முகநூலில் அங்கத்தினர் ஆகலாம்.

இந்திய சட்டம்
இந்தியாவில் இந்திய தகவல் தொழில் நுட்ப சட்டம் மற்றும் இந்திய ஒப்பந்த சட்டம் ஆகியவை 18 வயதுக்குட்பட்டவர்கள் பேஸ்புக் முதலான சமூக வலைத்தளங்களில் உறுப்பினராவதை ஏற்பதில்லை. இது சிறார் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ஏற்படுத்தப்பட்ட ஒன்று.[6][7]

நிறுவனத்தின் வருமானம்

முகநூல் நிறுவனம் 2,000 ஊழியர்களுடன், 15 நாடுகளில் செயல்பட்டு வருகிறது. இதன் நிறுவனர்கள், மற்றும் முன்னாள்,இன்னாள் ஊழியர்களும் இதில் பங்குதாரர்களாக உள்ளனர். இந்த இணையதளத்தின் வருமானம் விளம்பரங்களின் மூலமாகவே கிடைக்கிறது. மற்ற பெரிய இணையதளங்களை விட விளம்பரங்களைப் பார்க்கும் கட்டணம் இதில் குறைவு. ஏனென்றால் இந்த இணையதளத்தை உபயோகிப்போர் இளைஞர்களாக இருப்பதால் அவர்களுக்கு நண்பர்களுடன் கலந்துரையாடவே விருப்பம். விளம்பரங்களைப் பார்க்க அவர்கள் பெரும்பாலும் விரும்புவதில்லை.

இணையதளம்
முகநூல் உபயோகிப்பாளர்கள் தங்களுடைய புகைப்படம், சொந்த விருப்பங்கள், தொடர்பு கொள்ளும் விபரம் போன்ற தகவல்களைக் கோப்புகளாக இத்தளத்தில் பதிவு செய்யலாம். தான் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்ட தகவல்களை யாரெல்லாம் அறிந்து கொண்டார்கள், யாரெல்லாம் தன்னைப் பற்றிய தகவல்களைத் தேடினார்கள் என்று அறிந்து கட்டுப்படுத்தலாம். இது மை ஸ்பேஸ் (என்னுடைய இடம்) என்ற இணையதளத்தை ஒத்து இருந்தாலும், முகநூலில் உண்மையான அடையாளங்கள் கேட்கப்படுகிறது.
முகநூலில் நண்பர்களுடன் தகவல் பரிமாறும் சுவர், புகைப்படங்கள் பதிவு செய்யும் வசதி, நண்பர்களின் தற்போதைய நடவடிக்கை ஆகியவற்றை குறிப்பிடும் தனித்தனி வசதியும் உண்டு. 200 புகைப்படங்கள் வரை ஒரு ஆல்பத்தில் சேகரிக்கும் வசதியும் உண்டு. முகநூல் மூலம் நண்பர்களுக்கு 1 டாலர் செலவில் பரிசுகளை முக்கியத் தகவல்களுடன் அனுப்பலாம். சுமார் 60 நாடுகளில் உள்ள 150 மில்லியன் மக்கள் 200 கைபேசி ஆபரேட்டர்கள் மூலம் நவீனக் கைபேசியில் முகநூல் இணையதளத்தை பயன்படுத்தி வருகின்றனர். ஏப்ரல் 2011ல் முகநூலில் அரட்டை அடிப்பதை நேரடிக் குரல் அழைப்பு மூலம் உலகெங்கும் உள்ள நண்பர்களுடன் பேசும் முறை கொண்டு வரப்பட்டது. ஜூலை 2011ல், ஸ்கைப் என்ற நிறுவனத்தின் உதவியுடன் நேரடி ஒளிப்பதிவாக ஒருவருக்கொருவர் பேசுவதைப் பார்க்கும் முறையைக் கொண்டு வந்தனர்.


வரவேற்பு
இந்த இணையதளம் 'உலகின் சிறந்த 100 இணையதளங்களுள்' ஒன்று என்ற விருதை பி.சி. நாளிதழ் மூலம் 2007ல் வென்றது. 2008ல் 'மக்கள் குரல் விருது' கிடைத்துள்ளது. நியூஜெர்சி மாணவர்களின் கருத்துப்படி இளங்கலை மாணவர்கள் விரும்பும் இணையதளங்களுள் முகநூல் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. 2010ல் சிலிக்கன் பள்ளத்தாக்கில் உள்ள நிறுவனங்களில் சிறந்த படைப்புக்கான விருதைப் பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவின் உச்ச நீதிமன்றம் அனுப்பும் நீதிமன்ற சம்மன் அனுப்பக்கூடிய சிறந்த வழியாக முகநூலைத் தேர்ந்தெடுத்துள்ளது.

பயன்படுத்தும் முதல் 10 நாடுகள்

ஆங்கில மொழி பேசும் கனடா,அமெரிக்கா ஐக்கிய ராஜ்ஜியம் ஆகிய நாடுகளிலும், வட அமெரிக்கா,மத்திய கிழக்கு நாடுகளிலும், ஐரோப்பா, ஆசிய பசிபிக் நாடுகளிலும் முகநூல் சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. அமெரிக்கா, இந்தோனேசியா, இந்தியா, ஐக்கிய ராஜ்ஜியம், துருக்கி, பிரேசில், மெக்ஸிகோ, பிலிப்பைன்ஸ், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகள் முகநூல் பயன்பாட்டில் முதல் 10 இடங்களைப் பெறுகின்றன.

விமர்சனம்

சீனா, வியட்நாம், ஈரான், உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான், சிரியா, பங்களாதேஷ் போன்ற நாடுகளில் இந்த இணையதளம் இஸ்லாமியத்துக்கு எதிரானது, மத வேற்றுமையை ஏற்படுத்தக்கூடியது என்று தடை செய்துள்ளனர். 50% பிரிட்டிஷ் கம்பெனிகளில் வேலை நேரத்தில் முகநூல் இணையதளம் பார்ப்பதற்கு தடை விதித்துள்ளனர். அழையா விருந்தாளிகளால் சில அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட்டதால் ஜெர்மனியில் முகநூலைத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. முகநூலில் 18 வயதுக்குட்பட்ட இளையோர் தங்கள் பதிவுகளை பொதுவெளியில் பகிர்வதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடு அக்டோபர் , 2013 இல் தளர்த்தப்பட்டது.[8]

சமூகத்தில் முகநூலின் தாக்கம்
வியாபாரிகளும், நிறுவனங்களும் தங்களுடைய பொருள்களை மக்களிடம் அறிமுகப்படுத்தும் வழியாக முகநூலைக் கருதுகின்றனர்.
ஒரே எண்ணம்,விருப்பம் உடையவர்களை ஒன்றிணைக்கும் தளமாக உள்ளது.
பிரிந்து போன குடும்பங்கள் இந்த முகநூல் மூலம் ஒன்று சேர்ந்த நிகழ்வுகளும் உண்டு.
சிலர் நண்பர்கள், உறவினர்களிடம் தொடர்பு கொள்ளும் தளமாகக் கருதினாலும், வேறு சிலர் நேரடித் தொடர்பு இல்லாததால் முகநூல் மூலம் சமூகக் குற்றங்கள் நடக்க வாய்ப்பு இருப்பதாகக் கருதுகின்றனர்.
விவாகரத்து, குழந்தைப் பேறு இல்லாமை போன்றவற்றிற்கும் இந்த இணையதளம் காரணமாக இருக்கிறது என்று கருதுவோர் சிலரும், இதை மறுப்பவர் சிலரும் உண்டு.

'த சோசியல் நெட்வொர்க்' என்ற பெயரில் முகநூலைப் பற்றிய திரைப்படம் ஒன்றும் வெளி வந்துள்ளது.
பாதுகாப்பு
முக நூல் பக்கத்தில் சில சமூக விரோதிகளின் தொந்தரவுகளைத் தவிர்க்க [9] என்ற உதவி பக்கத்தை நாடலாம். மற்றும் முக நூல் சம்பந்தமாக புகார் எதுவும் தெரிவிக்க [10] என்ற பக்கத்திற்கு செல்லலாம். தமக்கு வேண்டாத நட்பை நீக்க ("Unfriend”) என குறிப்பிடலாம். மற்றும் எவரின் செய்தியும் வேண்டாம் என்றால் (block) என்ற விருப்ப பகுதியை கவனத்தில் கொண்டு தடை ஏற்படுத்த முடியும். [11]

அரசியலில் தாக்கம்

ஜனவரி 2008 அமெரிக்க அரசியலில் குடியரசுக் கட்சி, ஜனநாயகக் கட்சியின் 'நேருக்கு நேர்' கருத்தரங்கை நடத்தியதால் அமெரிக்கத் தேர்தலில் பெரிய மாற்றம் உண்டாக முகநூல் காரணமானது.
பிப்ரவரி 2008ல் ' ஒரு மில்லியன் குரல்கள் எப். ஏ. ஆர். சி(FARC)க்கு எதிராக' என்று ஆயிரக்கணக்கான கொலம்பிய மக்களை கொலம்பிய ஆயுதப்புரட்சிப் படைக்கு எதிராக ஒன்று திரட்டியதிலும் முக்கியப் பங்கு வகித்தது.

2011 எகிப்திய புரட்சியில் இந்த இணையதளம் முக்கியப் பங்கு வகித்ததால், ஒரு எகிப்தியக் தம்பதியர் தம் குழந்தைக்கு பேஸ்புக் என்று பெயரிட்டுள்ளனர்.
எதிர்ப்பை ஏற்படுத்திய ஆய்வுகள்
2012 ஆம் வருடம் அமெரிக்காவின் ஒரு பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு ஆய்விற்காக, முகநூலின் 700,000 பயனர்களுக்கு அவர்களுக்குத் தெரியாமலேயே சில குறிப்பிட்ட தகவல்கள் மற்றும் பதிவுகள் முகநூல் நிறுவனத்தாலேயே(Facebook) வழங்கப்பட்டு, பயனர்களின் எதிர்வினைகள் மற்றும் மனநிலை மாற்றங்கள் கண்காணிக்கப்பட்டன.[12]கிட்டத்தட்ட 700,000 பயனர்கள் இவ்வாறு எதிர்மறையான தரவுகள் தந்து பரிசோதிக்கப்பட்டனர்.[13]

தரப்படும் தரவுகள் மூலம் முகநூல் பயனர்களைக் தாங்கள் எதிர்பார்க்கும் விதத்தில் செயல்பட வைக்க முடிகிறதா என்ற இவ்வாய்வு அமெரிக்காவின் நேஷனல் அகாடமி ஆஃப் சைன்சஸ் (National Academy of Sciences)[14] நடத்தியது. இந்த வகையான நடவடிக்கை (emotional manipulation) முகநூல் பயனர்களிடையே தங்கள் மனநிலையை உருவாக்கும் கட்டுப்பாடை ஏற்படுத்தும் நடவடிக்கை என்பதால் கோபத்தையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியது.[15]

சர்ச்சைகள்

மொத்த முகநூல் உறுப்பினர்களில் எட்டு கோடி பேர் போலியான பெயர்களில் செயல்படுவதாகக் கண்டுபிடிக்கப்பட்டது.[16]
தமிழகத்தில் சென்னை காவல் துறை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு மாதத்திற்கு குறைந்தது பத்து புகார்கள் முகநூல் மோசடி தொடர்பானவையாக வருகின்றன.[16]
2013 ஆம் ஆண்டு தனது பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் புகைப்படங்களை விளம்பரத்திற்கு பயன்படுத்தியதையடுத்து தொடரப்பட்ட வழக்கில் முகநூல் நிறுவனம் பலருக்கு நஷ்டஈடு வழங்கவேண்டிய நிலை வந்தது.[

Wednesday, 7 February 2018

CHARLES DICKENS , SOCIAL WRITER BORN 1812 FEBRUARY 7






CHARLES DICKENS , SOCIAL  WRITER
BORN 1812 FEBRUARY 7





சார்லஸ் ஜான் ஹஃபாம் டிக்கென்ஸ் (Charles Dickens, 7 பெப்ரவரி 1812 - 9 ஜூன் 1870) விக்டோரியா காலத்தைச் சேர்ந்த மிகவும் புகழ் பெற்ற ஆங்கிலப் புதின எழுத்தாளர்களில் ஒருவரும், தீவிரமான சமூகப் பரப்புரையாளரும் ஆவார். மிகவும் வறியவராக வாழ்க்கையைத் தொடங்கியவர். அது அவரது எழுத்துக்களிலும் எதிரொலித்தது. இவரது டேவிட் காப்பர்ஃபீல்டு, ஆலிவர் டுவிஸ்ட் போன்ற புதினங்கள் (நாவல்கள்) உலகப் புகழ் பெற்றவை.

திறனாய்வாளர்களான ஜார்ஜ் கிஸ்ஸிங், ஜி. கே. செஸ்ட்டர்ட்டன் ஆகியோர், டிக்கென்சினது உரைநடைத் திறன், தனித்துவமான, திறமையான ஆளுமை கொண்ட பாத்திரங்களைத் தொடர்ச்சியாக உருவாக்கும் திறமை, அவரது ஆற்றமிக்க சமூக உணர்வு என்பவற்றுக்குச் சான்றளித்துள்ளனர். ஆனால், சக எழுத்தாளர்களான, ஜார்ஜ் ஹென்றி லூயிஸ், ஹென்றி ஜேம்ஸ், வெர்ஜீனியா வூல்ப் ஆகியோர், உணர்ச்சிவசப்பட்ட தன்மை, நம்பமுடியாத நிகழ்வுகள், இயற்கைக்கு மாறான பாத்திரப் படைப்புக்கள் என்பவற்றுக்காக அவரது ஆக்கங்களைக் குறை கூறியுள்ளனர்.


டிக்கென்சின் புதினங்களினதும், சிறுகதைகளினதும் புகழ் காரணமாக அவை தொடர்ச்சியாக அச்சேறி வருகின்றன. டிக்கென்சின் பல புதினங்கள் தொடக்கத்தில் சஞ்சிகை போன்றவற்றில் தொடராக வெளிவந்தவை. இது அக்காலத்தில் பெரிதும் விரும்பப்பட்ட ஒரு வடிவமாக இருந்தது. எனினும், அக்காலத்துத் தொடர்கதை எழுத்தாளர்கள் பலரைப்போல, டிக்கென்ஸ், வெளியிடத் தொடங்கு முன்னரே புதினம் முழுவதையும் எழுதி முடிப்பதில்லை. இவர், வெளிவரும் ஒழுங்கில் பகுதி பகுதியாகவே புதினங்களை எழுதினார். இந்த முறை, ஒவ்வொரு வெளியீட்டையும் வாசித்து முடித்ததும் அடுத்த வெளியீட்டை எதிர்பார்த்திருக்கும் ஆவலைத் தூண்டும்படி எழுத வசதியானது.
தாக்கங்கள்[மூலத்தைத் தொகு]
ஹொனோரே டி பால்சாக், மிகுவேல் டி செர்வாண்டெஸ், விக்டர் ஹியூகோ, வாஷிங்டன் இர்விங், வில்லியம் ஷேக்ஸ்பியர்

ஆரம்ப வருடங்கள்[மூலத்தைத் தொகு]


சார்லஸ் டிக்கின்ஸ் பிறந்த இடம், 393 வணிகச் சாலை, போர்ட்ஸ்மவுத்

photograph
2 ஆர்டனஸ் டெரேஸ், சாத்தம்,டிக்கின்ஸ் வாழ்ந்த வீடு 1817 – மே 1821[1]
சார்லஸ் ஜான் ஹூஃபாம் டிக்கின்ஸ், பிப்ரவரி 7, 1812 அன்று, 1 மைல் எண்ட் டெரேஸ் (இப்போது 393 வணிகச் சாலை), போர்ட்ஸியா தீவில் (போர்ட்ஸ்மவுத்), ஜான் டிக்கன்ஸ் (1785-1851) மற்றும் எலிசபெத் டிக்கன்ஸ் (née பாரோ, 1789-1863) ஆகியயோரின் எட்டு குழந்தைகளில் இரண்டாவது குழந்தையாக பிறந்தார். அவரது தந்தை கடற்படை அலுவலகத்தில் ஒரு எழுத்தராக இருந்தார் மற்றும் தற்காலிகமாக அந்த மாவட்டத்தில் இருந்தார். சார்லஸ் அவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக செயல்பட அவரது கடற்படை தலைவர் அவர்களைக் கிறிஸ்டோபர் ஹூஃபாம் கேட்டுக் கொண்டார். [2] கடற்படை தலைவர் பன்முகம் கொண்டவராக மேலாளராகவும் மற்றும் ஒரு நிறுவனத் தலைவராகவும் இருந்திருக்கிறார். ஹூஃபாம் பவுல் டொம்பாய்க்கு உத்வேகம் அளித்தாக கருதப்படுகிறது, இவர் டிக்கின்ஸின் பெயர்பெற்ற டொம்பாபே அண்ட் சன் (1848) இல் ஒரு கப்பல் நிறுவனத்தின் உரிமையாளர். [2]

1815 ஆம் ஆண்டு சனவரி மாதம் ஜான் டிக்கின்ஸ் லண்டனுக்குத் திரும்ப அழைக்கப்பட்டார், மேலும் அவரது குடும்பம் நோட்ஃபோக் தெரு, பிட்ஸ்ரோவியாவிற்கு மாற்றப்பட்டது. சார்லஸ்க்கு நான்கு வயது இருந்தபோது, அவரது குடும்பம் ஷெர்னெஸ்ஸிற்கு மாற்றப்பட்டனர், அங்கிருந்து சாத்தம், கென்ட் என்ற இடத்திற்குச் சென்றனர். சார்லஸ் அங்கு 11 வயது வரை கழித்தார். அவரது ஆரம்பகால வாழ்க்கையானது "மிகவும் சிறியதாகவும், எளிமையானதாகவும், குறிப்பாக ஒரு விசயத்தை பற்றிய பொறுப்புகளை எடுத்துக்கொள்ளும் பையனாக" இருந்திருக்கிறார். [3]

சார்லஸ் வெளிப்புறங்களிலும் தனது நேரத்தை செலவழித்தார் ஆனாலும் உற்சாகத்துடன் வாசித்தார், குறிப்பாக போக்கிரிகளின் துணிகர செயல்கள் அடங்கிய நாவல்களான டோபியாஸ் ஸ்மோல்ட் மற்றும் ஹென்றி ஃபீல்டிங், ராபின்சன் க்ரூஸோ மற்றும் கில் பிளஸ் ஆகியோரின் நாவல்களை வாசித்தார். அரேபிய நைட்ஸ் மற்றும் எலிசபெத் இன்ச்பால்ட்ஸின் சேகரிக்கப்பட்ட பெர்சஸ் ஆகியவற்றை அவர் மீண்டும் மீண்டும் வாசித்து மகிழ்ந்தார். [4] அவர் குழந்தை பருவத்தின் நினைவுகளை தக்கவைத்துக் கொண்டார், மக்களிடமும் சம்பவங்களிடமிருந்தும் ஒரு சிறந்த நினைவூட்டல் அவர் தனது எழுத்துக்களில் பயன்படுத்தினார். [5] அவரது தந்தை கடற்படை அலுவலகத்தில் ஒரு எழுத்தராக பணிபுரிந்த ஒரு சில ஆண்டுகளில் அவருக்கு தனிப்பட்ட கல்வியும், பிறகு வயதான பெண் நடத்திய பள்ளியில் பின்னர் சாத்தம்மில் வில்லியம் கில்ஸ் நடத்திய ஒரு பள்ளியில் பயின்றார். [6]


பத்திரிகை மற்றும் ஆரம்ப நாவல்கள்[மூலத்தைத் தொகு]
1832 ஆம் ஆண்டில், 20 வயதில், டிக்கின்ஸ் ஆற்றல் மிக்கவராகவும் தன்னம்பிக்கையுடனும் இருந்தார். [7] அவர் பலகுரல் வித்தைகள் மற்றும் பிரபலமான பொழுதுபோக்குகளை அனுபவித்து மகிழிந்தார், அவர் தான் எதிர்காலத்தில் எப்படி வரவேண்டும் என்ற் ஒரு தெளிவான, குறிப்பிட்ட உணர்வைக் கொண்டிருக்கவில்லை, மேலும் அவருக்கு புகழ் வேண்டுமென்றும் அறிந்திருந்தார். அவரது ஆர்வம் நாடகத்துறைக்குள் அவரை இழுத்தது- அவர் கேரிக் நாடகக் குழுவில் ஒரு ஆரம்ப உறுப்பினராக ஆனார் [8] - அவர் கோவென்ட் கார்டனில் ஒரு நடிப்புத் தேர்வுக்கு சென்றார், மேலாளர் ஜார்ஜ் பார்ட்லி மற்றும் நடிகர் சார்லஸ் கெம்பல் ஆகியோர் அவரது நடிப்பை பார்த்து மதிப்பிட வேண்டியிருந்தது. [9] இந்தத் தேர்விற்காக டிக்கின்ஸ், நகைச்சுவை நடிகர் சார்லஸ் மேத்யூஸைப் கவனித்து பின்பற்ற முடிவு செய்திருந்தார்,
ஆனால் இறுதியில் அவர் உடல் நல்க்குறைவின் காரணத்தால் இந்தத் தேர்வை தவறவிட்டார். அவருக்கு வேறொரு சந்தர்ப்பமும் கிடைத்தது ஆனால் இந்த வாய்ப்புக்கு முன்னால், எழுத்தாளர் என்று அவர் தனது வாழ்க்கையைத் தொடங்கி விட்டார். 1833 ஆம் ஆண்டில் லண்டன் மாதாந்திர பத்திரிகைக்கு அவரது முதல் கதை "(A Dinner at Poplar Walk) ஒரு பிரபல நடைபாதை கடையில் இரவு விருந்து" சமர்ப்பித்திருந்தார். [10] அவரது தாயாரின் சகோதரர் வில்லியம் பாரோ, அவரை பாராளுமன்றத்தின் கண்ணாடி (The Mirror of Parliament) இதழில் பணியமர்த்தினார், 1832 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் முதன்முறையாக ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றினார். அவர் ஃபர்னைவல்ஸ் இன்னில் அறைகளை வாடகைக்கு எடுத்து அரசியல் பத்திரிகையாளராக பணிபுரிந்தார், பாராளுமன்ற விவாதங்கள் குறித்த செய்திகளை அளித்தார், மற்றும் அவர் மார்னிங் க்ரோனிக்காக தேர்தல் பிரச்சாரங்களை நடத்த பிரிட்டன் முழுவதும் பயணித்தார். அவருடைய பத்திரிகை அனுபவங்களை, பருவ இதழ்களில் ஓவியங்கள் வடிவில், 1836 இல் (Boz) போஸ் என்ற புனைப்பெயரில் அவரது முதல் தொகுப்பை உருவாக்கி
வெளியிடப்பட்டது: போஸ்- ஒரு குடும்பப் புனைப்பெயராக இருந்ததால், அவர் சில ஆண்டுகளுக்கு அதே பெயரை தனது புனைப்பெயராக பயன்படுத்தினார். [11][12] டிக்கின்ஸ், "மோசே" என்ற புனைப்பெயரிடமிருந்து வெளிப்படையாகத் போஸ் பெயரை தத்தெடுத்தார், இது அவருடைய இளைய சகோதரர் ஆகஸ்டஸ் டிக்கன்ஸ் கொடுத்தது, இது ஆலிவர் கோல்ட்ஸ்மித் இன் தி விகார் ஆஃப் வேக்ஃபீல்ட் கதையில் வரும் ஒரு கதாபாத்திரத்தின் பெயர். தலை ஓசையிலிருந்து உச்சரிக்கும்போது, "மோசே" போஸ் என அழைக்கப்படும் "போஸ்" ஆனார். அவரது இலக்கிய வாழ்க்கை முழுவதும் பத்திரிகைகளுக்காக அவர் பங்களித்து இருந்தார். சனவரி 1835 இல் மார்னிங் குரோனிக்கல் இதழில் இசை விமர்சகர் ஜார்ஜ் ஹோகார்ட் தலைமையின் கீழ் ஒரு மாலை பதிப்பை வெளியிட்டது. தெரு ஓவியங்கள் வரைவதில் பங்களிப்பதற்க்காக டிக்கின்ஸ்சை ஹோகார்ட் அழைத்தார் மற்றும் டிக்கின்ஸ் தனது புல்ஹாம் வீட்டிற்கு ஒரு வழக்கமான பார்வையாளராக ஆனார். டிக்கின்ஸ்சின் தனது கதாநாயகனான வால்டர் ஸ்காட்டுடன் ஹோகார்ட் கொண்ட நட்பால் உற்சாகமடைந்தார், மேலும் ஹோகார்தின் மூன்று மகள்கள் - ஜோர்ஜினா, மேரி, மற்றும் பத்தொன்பது வயது கேத்தரின் ஆகியோரின் நட்பையும் பெற்று மகிழ்ந்தார்.


ஆன்மீகப் பார்வை[மூலத்தைத் தொகு]
ஒரு இளைஞனாக டிக்கின்ஸ் ஒழுங்கமைக்கப்பட்ட மதத்தின் சில அம்சங்களுக்கு ஒரு விரக்தியை வெளிப்படுத்தினார். 1836 ஆண்டில், ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று மூன்று தலைவர்கள் என்ற தலைப்பில் ஒரு துண்டுப் பிரசுரத்தில், ஞாயிற்றுக்கிழமைகளில் விளையாட்டுகளை தடை செய்வதற்கான ஒரு திட்டத்தை எதிர்த்து, மகிழ்ச்சிக்கான மக்களின் உரிமைகளை பாதுகாக்க போராடினார்.

"உங்கள் தேவாலயங்களை பாருங்கள்- குறைந்த சபை மற்றும் குறைவான வருகை. மக்கள் பரிதாபகரமாகவும் முரட்டுத்தனமாகவும் வளர்ந்து, தேவாலயத்தின் நம்பிக்கையின் மீது வெறுப்படைந்து வருகின்றனர், அத்தகைய ஒவ்வொரு ஏழு நாளைக்கு ஒருமுறை மக்களின் விருப்பங்களை தடை செய்கிற விசுவாசத்தால் வெறுக்கப்படுகிறார்கள். மக்கள் தேவாலயங்களுக்கு வெளியே தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்கள் மேலும் தேவாலயங்களை தவிர்க்கவும் செய்கிறார்கள். அதனால் ஞாயிற்றுக்கிழமை தெருக்களுக்கு வாருங்கள், மேலும் சுற்றியுள்ள எல்லாவற்றிற்கும் மேலாகச் செயல்படும் கடுமையான மனச்சோர்வைக் கவனியுங்கள்" என்று அந்த துண்டுப் பிரசுரத்தில் எழுதியிருந்தார்.

மரணம்[மூலத்தைத் தொகு]

1870 ஆம் ஆண்டு சூன் மாதம் 8 ஆம் தேதி, எட்வின் ட்ரோட் மீதான ஒரு முழு நாள் வேலைக்குப் பிறகு டிக்கின்ஸ் இருதய தசை அடைப்பு ஏற்ப்பட்டது. அவர் ஒருபோதும் சுயஉணர்வைப் பெறவில்லை, அடுத்த நாள் அவர் உயிர் பிறிந்தது, அவர் மரணம் மடைந்தார். டிக்கின்ஸ் உண்மையிலேயே பெக்காமில் இருப்பதாக சுயசரிதை எழுத்தாளரான கிளாரி டோமலின் பரிந்துரைத்தார். டிக்கின்ஸ் இருதய தசை அடைப்பால் பாதிக்கப்பட்டபோது, அவருடைய மனைவி எல்லென் டெர்னானும் அவளது வேலைக்காரிகளும் அவரை காட்ஸ் ஹில்லுக்கு அழைத்துச் சென்றனர், அதனால் அவர்களது உறவு பற்றிய உண்மையை பொது மக்களுக்கு தெரியாது. ரோச்செஸ்டர் தேவாலயத்தில் "மலிவான, அசையாத, தனிப்பட்ட முறையில்" இரகசியமாக புதைக்கப்பட வேண்டும் என்ற டிக்கின்ஸ் விருப்பதிற்கு மாறாக, அவரை வெஸ்ட்மினிஸ்டர் அபேயின் பொயட்ஸ் கார்னரில் அடக்கம் செயதனர். இறுதி சடங்கில் அச்சிடப்பட்ட ஒரு கட்டுரையில் பின்வருமாறு வாசகம் உள்ளது: "சார்லஸ் டிக்கின்ஸ் நினைவாக, தனது 58 வது அகவையில் 9 சூன் 1870 அன்று, ராச்செஸ்டர், கென்ட் அருகிலுள்ள தனது இல்லத்தில் டிக்கின்ஸ் (இங்கிலாந்தின் மிகவும் பிரபலமான எழுத்தாளர்) இறந்தார். அவர் ஏழைகள், துன்பங்கள் மற்றும்
ஒடுக்கப்பட்டவர்கள் ஒரு அனுதாபியாக இருந்தார் மற்றும் அவருடைய இறப்பு மூலம், இங்கிலாந்தின் மிகப்பெரிய எழுத்தாளர்களில் ஒருவர் உலகில் இழக்கப்படுகிறார்." அவருடைய கடைசிச் சொற்கள்: "நிலத்தின் மேல்", அவரது அண்ணியார் ஜோர்ஜினாவின் வேண்டுகோளுக்கு இணங்க அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை, 19 ஜூன் 1870, டிக்கின்ஸ் நல்லடக்கம் முடிந்த ஐந்து நாட்களுக்கு பின்னர், டீன் ஆர்தர் பென்ரின் ஸ்டான்லி ஒரு நினைவறிக்கையை வெளியிட்டார். "இருண்ட காட்சிகளை கையாள்வதிலும் மற்றும் மிகவும் இழிந்த பாத்திரங்களை கையாள்வதிலும், மேதையாக மற்றும் தூய்மையாக இருக்க முடியும் என்பதற்கு டிக்கின்ஸ் ஒரு உதாரணமாக இருந்தார், இப்போது அவர் நம்மோடு இல்லை என்று துக்க நாள் நினைவு கூறப்பட்டது.

பின்பற்றுவோர்[மூலத்தைத் தொகு]
டி. கொராகேசன் போய்ல், ஃபியோடர் டொஸ்தோவ்ஸ்கி, ஜார்ஜ் கிஸ்ஸிங், தாமஸ் ஹார்டி, ஜான் இர்விங், எட்கார் அலன் போ, டாம் வோல்ஃப், ஜி. கே. செஸ்டர்ட்டன், ஜார்ஜ் ஆர்வெல், ரே பிராட்பரி