Showing posts with label Zuckerberg. Show all posts
Showing posts with label Zuckerberg. Show all posts

Monday, 14 May 2018

MARK ELLIOT ZUCKERBERG ,FOUNDER OF FACE BOOK BORN 1984 MAY 14




MARK ELLIOT ZUCKERBERG ,FOUNDER OF 
FACE BOOK BORN 1984 MAY 14


மார்க் எலியட் சுக்கர்பெர்க் (ஆங்கிலம்:Mark Elliot Zuckerberg, பிறப்பு: மே 14, 1984) ஒரு அமெரிக்கத் தொழில் முனைவர் ஆவார். இவர் பிரபல சமூக பிணைப்பு வலைத்தளமான ஃபேஸ்புக்கின் இணை-நிறுவனர் ஆவார். சுக்கர்பெர்க் ஹார்வெர்டில் கல்வி பயின்று கொண்டிருக்கும் போது அவருடைய சக வகுப்புத்தோழர்களான டஸ்டின் மோஸ்கொவிட்ச், எடர்டோ சவெரின் மற்றும் கிரிஸ் ஹக்ஸ் ஆகியோருடன் இணைந்து ஃபேஸ்புக்கை உருவாக்கினார். சுக்கர்பெர்க் ஃபேஸ்புக்கின் CEOவாக பணியாற்றுகிறார்.[3] அவர் தொழில் துவங்கியதைப் பற்றிய சச்சரவுகளின் பொருளாக அவர் உள்ளார்.[4]

2008 ஆம் ஆண்டில் டைம் பத்திரிகை உலகில் மிகவும் செல்வாக்கு மிக்கவர்களில் ஒருவராக சுக்கர்பெர்க்கை சேர்த்தது. அவரது வலைத்தளத் தோற்றப்பாடு, பேஸ்புக் ஆகியவற்றிற்காக அறிவியலர்கள் & சிந்தனையாளர்களின் கீழ் வரும் 101 மனிதர்களுள்[5] 52வதாகத் தரவரிசைப் படுத்தப்படுகிறார். 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில்இருந்து ஒரு பில்லியன் டாலர்களைக் காட்டிலும் அதிகமான மதிப்புடன் சுக்கர்பெர்க் இளம் தொழிலதிபராக இருக்கிறார்.[6]

மார்க் சுக்கர்பெர்க் "உலக வாழ்க்கையை புதுவிதமாகவும் நேர்மறை எதிர்பார்ப்புகளுடனும் வாழுமாறு மாற்றியமைக்காக" டைம் இதழின் 2010ஆம் ஆண்டிற்கான நபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[7

ஆரம்பகால வாழ்க்கை
நியூயார்க்கில் உள்ள ஒயிட் பிளைன்ஸில் சுக்கர்பெர்க் பிறந்தார். நியூயார்க்கில் உள்ள டாப்ஸ் பெர்ரியில் வளர்ந்தார். அவர் நடுநிலைப்பள்ளியில் இருந்த போதே நிரலாக்கம் செய்யத்தொடங்கினார். தொடக்கத்தில் சுக்கர்பெர்க் கணினி நிரல்களை உருவாக்குவதில் மகிழ்ச்சி கொண்டிருந்தார். குறிப்பாக தகவல் தொடர்புக் கருவிகள் மற்றும் விளையாட்டுகள் நிரலாக்கங்களில் ஆர்வமாய் இருந்தார். பிலிப்ஸ் எக்ஸெட்டர் அகாடமியில் சேர்வதற்கு முன்பு அர்ட்ஸ்லே உயர்நிலைப்பள்ளிக்கு மார்க் சென்று கொண்டிருந்தார். “உயர்நிலைப் பள்ளியில் அவர் இலக்கியங்களில் சிறந்து விளங்கினார். அவர் பிலிப்ஸ் எக்ஸ்டெர் அகாடமிக்கு இடம் மாறிச்சென்றார். அங்கு லத்தினில் தன்னை முழுக்க ஆட்படுத்திக் கொண்டார்.[8][8] அவரது தந்தையின் அலுவலகத்தில் பணியாளர்களைத் தொடர்பு கொள்வதற்கு உதவியாக ஒரு நிரலையும் அவர் உருவாக்கினார்; அவர் ரிஸ்க் என்ற விளையாட்டின் பதிப்பையும் உருவாக்கினார். மேலும் சினாப்சிஸ் என்ற இசை இயக்கியையும் உருவாக்கினார். பயனர்களின் கேட்கும் பழக்கங்களைக் கற்பதற்கு செயற்கை நுண்ணறிவில் இது பயன்படுத்தப்பட்டது. மைக்ரோசாஃப்ட் மற்றும் AOL ஆகிய நிறுவனங்கள் சினாப்சிஸை வாங்கி சுக்கர்பெர்க்கை பணியமர்த்த முயற்சித்தது. ஆனால் அவர் அதற்குப் பதிலாக ஹார்வெர்டு பல்கலைக்கழகத்தில் சேர்வதற்கு முடிவெடுத்தார். அங்கு அவர் ஆல்ஃபா எப்சிலிலோன் பீ என்ற அதன் துணைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.[9] கல்லூரியில் த இல்லியாட் போன்ற வீரகாவியங்களில் இருந்து ஒப்புவிக்கும் வரிகளுக்காக அறியப்பட்டார்.[8]

ஃபேஸ்புக்

2008 இல் ராபர்ட் ஸ்கோபிலுடன் சுக்கர்பெர்க் (வலது).
நிறுவுதல்
பிப்ரவரி 4, 2004 அன்று சுக்கர்பெர்க் அவரது ஹார்வர்டு ஓய்வறையில் இருந்து ஃபேஸ்புக்கை நிறுவினார். பிலிப்ஸ் எக்ஸ்டெர் அகாடமியில் அவரது நாட்களில் இருந்து ஃபேஸ்புக்கின் யோசனை அவருக்கு உதித்துள்ளது. பெரும்பாலான கல்லூரிகள் மற்றும் தனியார் பள்ளிகள் போன்று அங்கும் அனைத்து மாணவர்கள், பணியார்கள் மற்றும் ஆசிரியர்களை உடைய குழுப் புகைப்படங்களைக் கொண்டு ஆண்டுமலர் புத்தகத்தை வெளியிடும் நீண்ட-கால மரபுடைய வழக்கம் இருந்தது. அது "ஃபேஸ்புக்" என அறியப்பட்டிருந்தது. கல்லூரியில் ஒருமுறை சுக்கர்பெர்க்கின் ஃபேஸ்புக்கானது "ஹார்வர்டு-நினைவு" என்ற போக்கிலேயே தொடங்கியது. பின்னர் சுக்கர்பெர்க் ஃபேஸ்புக்கை மற்ற பள்ளிகளுக்கும் பரப்புவதற்கு முடிவெடுத்தார். இதை அவரது அறைத் தோழர் டஸ்டின் மோஸ்கோவிட்ச் உதவியுடன் செய்தும் முடித்தார். ஸ்டார்போர்டு, டார்ட்மவுத், கொலம்பியா, கார்னெல் மற்றும் யால் ஆகிய பள்ளிகளில் முதலில் ஃபேஸ்புக்கை அறிமுகப்படுத்தினார். மேலும் பின்னர் ஹார்வர்ட்டின் சமுதாய இணைப்புடன் மற்ற பள்ளிகளுக்கும் அறிமுகப்படுத்தினார்.[10][11][12]

கலிபோர்னியாவுக்கு இடம்பெயர்தல்
மோஸ்கோவிட்ச் மற்றும் சில நண்பர்களுடன் சுக்கர்பெர்க் கலிபோர்னியாவில் உள்ள பாலோ ஆல்டோவிற்கு இடம்பெயர்ந்தார். அங்கு அவர்கள் ஒரு சிறிய இல்லத்தை குத்தகைக்கு எடுத்து அவர்களது முதல் அலுவலகமாக மாற்றினர். அந்தக் கோடைகாலத்தில் அந்த நிறுவனத்திற்கு முதலீடு செய்த பீட்டர் தீலை சுக்கர்பெர்க் சந்தித்தார். 2004 ஆம் ஆண்டு கோடைகாலத்தின் போது அவர்களுக்கு அவர்களது முதல் அலுவலகம் கிடைத்தது. சுக்கர்பெர்க்கைப் பொறுத்தவரை இலையுதிர் காலத்தில் அந்தக் குழுவினர் ஹார்வெர்டுக்குத் திரும்புவதற்கு முடிவெடுத்திருந்தனர். ஆனால் கடைசியாக அவர்கள் கலிபோர்னியாவிலேயே தங்கி விட்டனர். அதன் பிறகு அவர் மாணவராகக் கல்லூரிக்குத் திரும்பவே இல்லை.

நியூஸ் பீடு
செப்டம்பர் 5, 2006 அன்று ஃபேஸ்புக் நியூஸ் பீடு அறிமுகமானது. நியூஸ் பீடு என்பது வலைத்தளத்தில் உங்களது நண்பர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைக் காண்பிக்கும் ஒரு தயாரிப்பு ஆகும். நியூஸ் பீடை தேவையற்றதாக சிலர்[weasel words] பார்த்ததற்காகவும் சைபர்ஸ்டால்கிங்கிற்கான கருவிக்காகவும் சுக்கர்பெர்க் விமர்சிக்கப்பட்டார்.

ஃபேஸ்புக் இயங்குதளம்
மே 24, 2007 அன்று ஃபேஸ்புக் இயங்குதளத்தை சுக்கர்பெர்க் அறிவித்தார். இது ஃபேஸ்புக்கினுள் ஒரு சமுதாயப் பயன்பாடுகளை உருவாக்குவதற்கு நிரலாளர்களுக்காக உருவாக்கப்பட்ட இயங்குதளம் ஆகும். இந்த அறிவிப்பானது உருவாக்குனர் சமூகத்தில் ஆர்வத்தீயை ஏற்படுத்தியது. ஒரு சில வாரங்களில் பல பயன்பாடுகள் உருவாக்கப்பட்டன. அதில் சிலவற்றை ஏற்கனவே இலட்சக்கணக்கான பயனர்கள் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். இன்று உலகம் முழுவதும் 800,000 ஐக் காட்டிலும் அதிகமான உருவாக்குனர்கள் ஃபேஸ்புக் இயங்குதளத்திற்கான பயன்பாடுகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர்.

ஜூலை 23, 2008 அன்று ஃபேஸ்புக் கனெக்ட்டை சுக்கர்பெர்க் அறிவித்தார். இது பயனர்களுக்கான ஃபேஸ்புக் இயங்குதளத்தின் ஒரு பதிப்பாகும்.

பேஸ்புக் பீகான்

நவம்பர் 6, 2007 அன்று லாஸ் ஏஞ்சலில் ஒரு நிகழ்ச்சியில் ஒரு புதிய சமுதாய விளம்பர அமைப்பை சுக்கர்பெர்க் அறிவித்தார். இந்தப் புதிய நிரலின் ஒரு பகுதி பீகான் எனப்பட்டது. இது மக்களை பிற வலைத்தளங்களில் உலாவி நடவடிக்கைகளைச் சார்ந்து அவர்களது ஃபேஸ்புக் நண்பர்களுக்கு தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்கு இடமளித்தது. எடுத்துக்காட்டாக ஈபே விற்பனையாளர் இருந்தது. இதன் மூலம் ஃபேஸ்புக் நியூஸ் பீடின் வழியாக பயனர்களின் நண்பர்கள் பட்டியலிட்ட பொருள்களில் எதையெல்லாம் விற்றார்கள் என்பதை தானாகவே அறிய முடியும்.

இந்த நிரலானது இரண்டு இரகசியக் குழுக்கள் மற்றும் தனிப்பட்ட பயனர்களிடன் இருந்து பலமான இரகசிய ஈடுபாடுகளுடன் வந்தது. சுக்கர்பெர்க் மற்றும் ஃபேஸ்புக்கால் இந்த பிரச்சினைகளுக்கு விரைவாக பதிலளிக்க முடியவில்லை. ஆனால் இறுதியாக டிசம்பர் 5, 2007 அன்று ஃபேஸ்புக்கில்[13] ஒரு வலைப்பதிவை ஜுக்கர்பர்க் எழுதினார். பிக்கானுடன் உள்ள பிரச்சினைகளுக்கு பொறுப்பு எடுத்துக்கொண்டு பயனர்களுக்கு எளிதான வழியில் பொருத்தமாகவும் உள்ள சேவைகளை வழங்க உள்ளதாக அதில் தெரிவித்திருந்தார்.

கனெக்ட்யூ சச்சரவு
ஹார்வர்டு மாணவர்களான கேமரான் வின்கில்வோஸ், டைலர் வின்கில்வோஸ் மற்றும் திவ்யா நரேந்திரா ஆகிய ஹார்வர்டு மாணவர்கள் சுக்கர்பெர்க் மீது குற்றம் சாட்டினர். அதாவது அவர்களுக்கு HarvardConnection.com (பின்னர் கனெக்ட்யூ என்றழைக்கப்பட்டது) என்ற சமுதாய நெட்வொர்க்கை அமைப்பதற்கு உதவுவாதக் கூறி சுக்கர்பெர்க் அவர்களை ஏமாற்றிவிட்டதாக அவர்கள் கூறினர்.[14] 2004 ஆம் ஆண்டில் அவர்கள் வழக்குப் பதிவு செய்தனர். மார்ச் 28, 2007 அன்று இந்த வழக்கு பாராபட்சம் இன்றி இரத்து செய்யப்பட்டது. பின்னர் விரைவில் போஸ்டனில் உள்ள U.S. மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு மீண்டும் பதிவு செய்யப்பட்டது. ஜூலை 25, 2007 அன்று அவ்வழக்கின் பூர்வாங்கமான கேட்டறிதலானது திட்டமிடப்பட்டது.[15] அவர்களது புகாரின் ஒரு பகுதிகளான கனெக்ட்யூ தெளிவாக அறிவிக்கப்படவில்லை என்றும், திருத்தப்பட்ட புகாரை மீண்டும் பதிவு செய்யும் திறமையை அவர்களுக்கு வழங்குவதாகவும் அந்தக் கேட்டறிதலில் நீதிபதி கூறினார். ஜூன் 25, 2008 அன்று இந்த வழக்கு முடிவுற்றது. மேலும் ஃபேஸ்புக் அவர்களுக்கு முடிவாக $65 மில்லியன் கொடுப்பதற்கு ஏற்றுக்கொண்டது.[16]

இந்த வழக்கின் ஒருபகுதியாக 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஹார்வர்டு முன்னாள் மாணவர்கள் பத்திரிகை 02138 இன் வலைத்தளத்தில் இரகசிய நீதிமன்ற ஆவணங்கள் வெளியிடப்பட்டன. அவர்கள் அதில் சுக்கர்பெர்க்கின் சோசியல் செக்யூரிட்டி எண், அவரது பெற்றோர்களின் வீட்டு முகவரி, அவரது கேர்ல்பிரண்டின் முகவரி ஆகியவற்றை உள்ளடக்கியிருந்தனர். ஃபேஸ்புக் அந்த ஆவணங்களை வெளியே எடுக்கும் படி வழக்கு பதிவு செய்தது. ஆனால் நீதிபதி 02138க்கு சாதகமாகத் தீர்ப்பு வழங்கினார்.[4]

ஃபேஸ்புக்கில் மைக்ரோசாஃப்ட்டின் முதலீடு
அக்டோபர் 24, 2007 அன்று ஃபேஸ்புக் இன்க். 1.6% பங்கை மைக்ரோசாஃப்ட் கார்பரேசனுக்கு $240 மில்லியன் டாலர்களுக்கு விற்றது. மேலும் ஆன்லைன் தேடுதல் முனைவரான கூகுள் இன்க்.கிடம் இருந்து போட்டி கோரிக்கையை நிராகரித்தது. இதன் மூலம் அந்த சமயத்தில் $15 பில்லியன் சந்தை மதிப்பை ஃபேஸ்புக் கொண்டிருப்பது தெரியவந்தது. மைக்ரோசாஃப்ட்டின் எக்ஸ்பாக்ஸ் 360 விளையாட்டுகள் கன்சோலின் ஒரு மென்பொருள் புதுப்பித்தலின் வெளியீட்டில் ஃபேஸ்புக், டிவிட்டர் மற்றும் லாஸ்ட்.எஃபெம்மின் ஆதரவு இருந்தது.[17]

2009 இல் ஃபேஸ்புக்

டிசம்பர் 2, 2009 அன்று ஃபேஸ்புக்கில் 350 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

திரைப்படம்
மார்க் ஜூக்கெர்பெர்க் மற்றும் ஃபேஸ்புக்கை உருவாக்கியவர்களை சார்ந்த திரைப்படம் ''த சோசியல் நெட்வொர்க் என அழைக்கப்பட்டது, இப்படம் 2010 ஆம் ஆண்டில் வெளியானது. இத்திரைப்படத்தில் ஜீஸ் ஏய்சென்பெர்க், ஜஸ்டின் டிம்பர்லேக் ஆகியோர் நடித்துள்ளனர்.

Sunday, 4 March 2018

FACE BOOK ,SOCIAL NET WORK BEGINS 2004 FEBRUARY 4




FACE BOOK ,SOCIAL NET WORK 
BEGINS 2004 FEBRUARY 4




முகநூல் (Facebook, பேஸ்புக் ) 2004இல் தொடங்கிய இணையவழி சமூக வலையமைப்பு நிறுவனமாகும். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவர் மார்க் சக்கர்பர்க் ஹார்வர்ட் மாணவர்களுக்கு ஆரம்பித்து பின்பு வேறு ஐவி லீக் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் அனுமதி கிடைத்தது. இன்றைய முகநூலில் 13 வயதான நபர்கள் சேரலாம். அலெக்சா நிறுவனத்தின் மதிப்பீட்டின் படி இணைய முழுவதிலும் முகநூல் தான் இரண்டாவது மிகப் பரவலமான இணையத்தளமாகும்.

முகநூல்

பேஸ்புக்கினை தமிழில் முகநூல் என்று அழைக்கின்றார்கள். இவ்வாறு அழைப்பது பரவலாக ஊடகங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.[4][5] பேஸ்புக் அல்லது முகநூல் என்பது 2004ல் தொடங்கப்பட்ட இணையவழி சமூக வலையமைப்பு. ஜுலை 2011 கணக்கெடுப்பின்படி இதில் 800 மில்லியன் உபயோகிப்பாளர்கள் உள்ளனர். 13 வயதிற்கு மேற்பட்டவர்கள் முகநூலில் தங்களின் பெயரைப் பதிவு செய்து கொண்டு முகநூலில் உள்ள மற்றவர்களை நண்பர்களாக்கிக் கொண்டு தங்கள் கருத்துக்களை பரிமாறிக் கொள்வர்.

வரலாறு

முகநூலை மார்க் சக்கர்பர்க் தன் நண்பர்களான எடுடாரோ சாவ்ரின், டஸ்டின் மாஸ்கோவிட் போன்ற ஹார்வர்ட் நண்பர்களுடன் தொடங்கினார். பிறகு ஐவி லீக், ஸ்டான்போர்டு பல்கலைக்கழக மாணவர்களும் முகநூலில் சேர்ந்தனர். பின்னர் ஆப்பிள், மைக்ரோசாஃப்ட் நிறுவன ஊழியர்களும் முகநூலில் சேர்ந்தனர். 2008ல்,முகநூலின் தலைமையகம் அயர்லாந்து நாட்டின் டப்ளின் நகரில் தொடங்கப் பட்டது. 2010ல், முகநூலின் மதிப்பு 41 மில்லியன் டாலராக உயர்ந்து, கூகிள், அமேசானைத் தொடர்ந்து அமெரிக்காவின் மூன்றாவது பெரிய இணைய தள நிறுவனமாக உயர்ந்தது.
2011ல் முகநூலின் தலைமையகம் மென்லோ பார்க், கலிபோர்னியாவிற்கு மாற்றப்பட்டது. 13 வயதிற்கு மேற்பட்ட, சரியான மின்னஞ்சல் முகவரி உள்ள யாரும் முகநூலில் அங்கத்தினர் ஆகலாம்.

இந்திய சட்டம்
இந்தியாவில் இந்திய தகவல் தொழில் நுட்ப சட்டம் மற்றும் இந்திய ஒப்பந்த சட்டம் ஆகியவை 18 வயதுக்குட்பட்டவர்கள் பேஸ்புக் முதலான சமூக வலைத்தளங்களில் உறுப்பினராவதை ஏற்பதில்லை. இது சிறார் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ஏற்படுத்தப்பட்ட ஒன்று.[6][7]

நிறுவனத்தின் வருமானம்

முகநூல் நிறுவனம் 2,000 ஊழியர்களுடன், 15 நாடுகளில் செயல்பட்டு வருகிறது. இதன் நிறுவனர்கள், மற்றும் முன்னாள்,இன்னாள் ஊழியர்களும் இதில் பங்குதாரர்களாக உள்ளனர். இந்த இணையதளத்தின் வருமானம் விளம்பரங்களின் மூலமாகவே கிடைக்கிறது. மற்ற பெரிய இணையதளங்களை விட விளம்பரங்களைப் பார்க்கும் கட்டணம் இதில் குறைவு. ஏனென்றால் இந்த இணையதளத்தை உபயோகிப்போர் இளைஞர்களாக இருப்பதால் அவர்களுக்கு நண்பர்களுடன் கலந்துரையாடவே விருப்பம். விளம்பரங்களைப் பார்க்க அவர்கள் பெரும்பாலும் விரும்புவதில்லை.

இணையதளம்
முகநூல் உபயோகிப்பாளர்கள் தங்களுடைய புகைப்படம், சொந்த விருப்பங்கள், தொடர்பு கொள்ளும் விபரம் போன்ற தகவல்களைக் கோப்புகளாக இத்தளத்தில் பதிவு செய்யலாம். தான் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்ட தகவல்களை யாரெல்லாம் அறிந்து கொண்டார்கள், யாரெல்லாம் தன்னைப் பற்றிய தகவல்களைத் தேடினார்கள் என்று அறிந்து கட்டுப்படுத்தலாம். இது மை ஸ்பேஸ் (என்னுடைய இடம்) என்ற இணையதளத்தை ஒத்து இருந்தாலும், முகநூலில் உண்மையான அடையாளங்கள் கேட்கப்படுகிறது.
முகநூலில் நண்பர்களுடன் தகவல் பரிமாறும் சுவர், புகைப்படங்கள் பதிவு செய்யும் வசதி, நண்பர்களின் தற்போதைய நடவடிக்கை ஆகியவற்றை குறிப்பிடும் தனித்தனி வசதியும் உண்டு. 200 புகைப்படங்கள் வரை ஒரு ஆல்பத்தில் சேகரிக்கும் வசதியும் உண்டு. முகநூல் மூலம் நண்பர்களுக்கு 1 டாலர் செலவில் பரிசுகளை முக்கியத் தகவல்களுடன் அனுப்பலாம். சுமார் 60 நாடுகளில் உள்ள 150 மில்லியன் மக்கள் 200 கைபேசி ஆபரேட்டர்கள் மூலம் நவீனக் கைபேசியில் முகநூல் இணையதளத்தை பயன்படுத்தி வருகின்றனர். ஏப்ரல் 2011ல் முகநூலில் அரட்டை அடிப்பதை நேரடிக் குரல் அழைப்பு மூலம் உலகெங்கும் உள்ள நண்பர்களுடன் பேசும் முறை கொண்டு வரப்பட்டது. ஜூலை 2011ல், ஸ்கைப் என்ற நிறுவனத்தின் உதவியுடன் நேரடி ஒளிப்பதிவாக ஒருவருக்கொருவர் பேசுவதைப் பார்க்கும் முறையைக் கொண்டு வந்தனர்.


வரவேற்பு
இந்த இணையதளம் 'உலகின் சிறந்த 100 இணையதளங்களுள்' ஒன்று என்ற விருதை பி.சி. நாளிதழ் மூலம் 2007ல் வென்றது. 2008ல் 'மக்கள் குரல் விருது' கிடைத்துள்ளது. நியூஜெர்சி மாணவர்களின் கருத்துப்படி இளங்கலை மாணவர்கள் விரும்பும் இணையதளங்களுள் முகநூல் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. 2010ல் சிலிக்கன் பள்ளத்தாக்கில் உள்ள நிறுவனங்களில் சிறந்த படைப்புக்கான விருதைப் பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவின் உச்ச நீதிமன்றம் அனுப்பும் நீதிமன்ற சம்மன் அனுப்பக்கூடிய சிறந்த வழியாக முகநூலைத் தேர்ந்தெடுத்துள்ளது.

பயன்படுத்தும் முதல் 10 நாடுகள்

ஆங்கில மொழி பேசும் கனடா,அமெரிக்கா ஐக்கிய ராஜ்ஜியம் ஆகிய நாடுகளிலும், வட அமெரிக்கா,மத்திய கிழக்கு நாடுகளிலும், ஐரோப்பா, ஆசிய பசிபிக் நாடுகளிலும் முகநூல் சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. அமெரிக்கா, இந்தோனேசியா, இந்தியா, ஐக்கிய ராஜ்ஜியம், துருக்கி, பிரேசில், மெக்ஸிகோ, பிலிப்பைன்ஸ், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகள் முகநூல் பயன்பாட்டில் முதல் 10 இடங்களைப் பெறுகின்றன.

விமர்சனம்

சீனா, வியட்நாம், ஈரான், உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான், சிரியா, பங்களாதேஷ் போன்ற நாடுகளில் இந்த இணையதளம் இஸ்லாமியத்துக்கு எதிரானது, மத வேற்றுமையை ஏற்படுத்தக்கூடியது என்று தடை செய்துள்ளனர். 50% பிரிட்டிஷ் கம்பெனிகளில் வேலை நேரத்தில் முகநூல் இணையதளம் பார்ப்பதற்கு தடை விதித்துள்ளனர். அழையா விருந்தாளிகளால் சில அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட்டதால் ஜெர்மனியில் முகநூலைத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. முகநூலில் 18 வயதுக்குட்பட்ட இளையோர் தங்கள் பதிவுகளை பொதுவெளியில் பகிர்வதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடு அக்டோபர் , 2013 இல் தளர்த்தப்பட்டது.[8]

சமூகத்தில் முகநூலின் தாக்கம்
வியாபாரிகளும், நிறுவனங்களும் தங்களுடைய பொருள்களை மக்களிடம் அறிமுகப்படுத்தும் வழியாக முகநூலைக் கருதுகின்றனர்.
ஒரே எண்ணம்,விருப்பம் உடையவர்களை ஒன்றிணைக்கும் தளமாக உள்ளது.
பிரிந்து போன குடும்பங்கள் இந்த முகநூல் மூலம் ஒன்று சேர்ந்த நிகழ்வுகளும் உண்டு.
சிலர் நண்பர்கள், உறவினர்களிடம் தொடர்பு கொள்ளும் தளமாகக் கருதினாலும், வேறு சிலர் நேரடித் தொடர்பு இல்லாததால் முகநூல் மூலம் சமூகக் குற்றங்கள் நடக்க வாய்ப்பு இருப்பதாகக் கருதுகின்றனர்.
விவாகரத்து, குழந்தைப் பேறு இல்லாமை போன்றவற்றிற்கும் இந்த இணையதளம் காரணமாக இருக்கிறது என்று கருதுவோர் சிலரும், இதை மறுப்பவர் சிலரும் உண்டு.

'த சோசியல் நெட்வொர்க்' என்ற பெயரில் முகநூலைப் பற்றிய திரைப்படம் ஒன்றும் வெளி வந்துள்ளது.
பாதுகாப்பு
முக நூல் பக்கத்தில் சில சமூக விரோதிகளின் தொந்தரவுகளைத் தவிர்க்க [9] என்ற உதவி பக்கத்தை நாடலாம். மற்றும் முக நூல் சம்பந்தமாக புகார் எதுவும் தெரிவிக்க [10] என்ற பக்கத்திற்கு செல்லலாம். தமக்கு வேண்டாத நட்பை நீக்க ("Unfriend”) என குறிப்பிடலாம். மற்றும் எவரின் செய்தியும் வேண்டாம் என்றால் (block) என்ற விருப்ப பகுதியை கவனத்தில் கொண்டு தடை ஏற்படுத்த முடியும். [11]

அரசியலில் தாக்கம்

ஜனவரி 2008 அமெரிக்க அரசியலில் குடியரசுக் கட்சி, ஜனநாயகக் கட்சியின் 'நேருக்கு நேர்' கருத்தரங்கை நடத்தியதால் அமெரிக்கத் தேர்தலில் பெரிய மாற்றம் உண்டாக முகநூல் காரணமானது.
பிப்ரவரி 2008ல் ' ஒரு மில்லியன் குரல்கள் எப். ஏ. ஆர். சி(FARC)க்கு எதிராக' என்று ஆயிரக்கணக்கான கொலம்பிய மக்களை கொலம்பிய ஆயுதப்புரட்சிப் படைக்கு எதிராக ஒன்று திரட்டியதிலும் முக்கியப் பங்கு வகித்தது.

2011 எகிப்திய புரட்சியில் இந்த இணையதளம் முக்கியப் பங்கு வகித்ததால், ஒரு எகிப்தியக் தம்பதியர் தம் குழந்தைக்கு பேஸ்புக் என்று பெயரிட்டுள்ளனர்.
எதிர்ப்பை ஏற்படுத்திய ஆய்வுகள்
2012 ஆம் வருடம் அமெரிக்காவின் ஒரு பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு ஆய்விற்காக, முகநூலின் 700,000 பயனர்களுக்கு அவர்களுக்குத் தெரியாமலேயே சில குறிப்பிட்ட தகவல்கள் மற்றும் பதிவுகள் முகநூல் நிறுவனத்தாலேயே(Facebook) வழங்கப்பட்டு, பயனர்களின் எதிர்வினைகள் மற்றும் மனநிலை மாற்றங்கள் கண்காணிக்கப்பட்டன.[12]கிட்டத்தட்ட 700,000 பயனர்கள் இவ்வாறு எதிர்மறையான தரவுகள் தந்து பரிசோதிக்கப்பட்டனர்.[13]

தரப்படும் தரவுகள் மூலம் முகநூல் பயனர்களைக் தாங்கள் எதிர்பார்க்கும் விதத்தில் செயல்பட வைக்க முடிகிறதா என்ற இவ்வாய்வு அமெரிக்காவின் நேஷனல் அகாடமி ஆஃப் சைன்சஸ் (National Academy of Sciences)[14] நடத்தியது. இந்த வகையான நடவடிக்கை (emotional manipulation) முகநூல் பயனர்களிடையே தங்கள் மனநிலையை உருவாக்கும் கட்டுப்பாடை ஏற்படுத்தும் நடவடிக்கை என்பதால் கோபத்தையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியது.[15]

சர்ச்சைகள்

மொத்த முகநூல் உறுப்பினர்களில் எட்டு கோடி பேர் போலியான பெயர்களில் செயல்படுவதாகக் கண்டுபிடிக்கப்பட்டது.[16]
தமிழகத்தில் சென்னை காவல் துறை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு மாதத்திற்கு குறைந்தது பத்து புகார்கள் முகநூல் மோசடி தொடர்பானவையாக வருகின்றன.[16]
2013 ஆம் ஆண்டு தனது பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் புகைப்படங்களை விளம்பரத்திற்கு பயன்படுத்தியதையடுத்து தொடரப்பட்ட வழக்கில் முகநூல் நிறுவனம் பலருக்கு நஷ்டஈடு வழங்கவேண்டிய நிலை வந்தது.[