Posts

Showing posts with the label FOUNDER

SIR ,SYED, AHEMED, KHAN ,GREAT SCHOLAR OF EDUCATION FOUNDER OF ALIGARH UNIVERSITY 1817 OCTOBER 17 - 1898 MARCH 27

Image
  SIR SYED AHEMED  KHAN ,GREAT SCHOLAR OF EDUCATION  FOUNDER OF ALIGARH UNIVERSITY 1817 OCTOBER 17 - 1898 MARCH 27 சர் சையது அகமது கான். மேற்கத்திய அறிவியல் கல்விதான் இந்தியாவின் இன்றியமையாத தேவை என்று வலியுறுத்திய மிகச் சில இந்திய ஆளுமைகளில் ஒருவர். மே 24, 1877-ம் ஆண்டு தான் நிறுவிய, ‘முகம்மதன் ஆங்கிலோ ஓரியண்டல் காலேஜ்’ எனும் கல்லூரியின் வளர்ச்சிக்காகவே உடல் பொருள், ஆவியை தியாகம் செய்தவர். அந்தக் கல்லூரிதான் உத்தரப் பிரதேசத்தின் அலிகர் நகரில் இன்று அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகமாக உருவெடுத்து நிற்கிறது. இந்தியாவின் பழமையான மத்தியப் பல்கலைக்கழகமான இதில், முஸ்லிம்களுக்கு மட்டும்தான் அனுமதி என பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். வட இந்தியாவின் மதநல்லிணக்கச் சின்னமான இங்கு 1881-ல் பட்டம் பெற்ற முதல் மாணவர் பாபு ஈஸ்வரி பிரசாத் என்ற இந்து. இங்கு முஸ்லிம்களுக்கென்று தனியாக இடஒதுக்கீடு குறித்து 1980-களில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் தொடங்கிய வழக்கு தற்போது உச்ச நீதிமன்ற அமர்வின் நிலுவையில் உள்ளது. முஸ்லிம்கள் இடைக்கால நாகரிகம் மற்றும் கோட்பாடுகளில் இருந்து மாறாமல் இருந்த காலம் ...

X-RAY ,FOUNDER, WILHELM ,CONRAD ,RONTGEN , ON 1895 NOVEMBER 8

Image
   X-RAY ,FOUNDER  WILHELM CONRAD RONTGEN  ON  1895 NOVEMBER 8 வில்லெம் கோன்ராடு ரோண்ட்கன் (Wilhelm Conrad Röntgen, இடாய்ச்சு ஒலிப்பு: [ˈvɪlhɛlm ˈʁœntɡən];Wilhelm Conrad Röntgen, மார்ச் 27, 1845 – பெப்ரவரி 10, 1923) என்பவர் ஜெர்மனியைச் சேர்ந்த வூர்ட்ஃசுபர்கு பல்கலைக்கழக இயற்பியலாளர் ஆவார். இவர் நவம்பர் 8, 1895 இல், மின்காந்தக் கதிர்வீச்சு அலைத்தொடர் வரிசையில் ஊடுகதிர் (X-கதிர்) என்று இன்று அழைக்கப்படும் அலைகள் பகுதியைக் கண்டுபிடித்தார். இன்று இவை ஊடுகதிர் அலைகள், X கதிர்கள், புதிர்க்கதிர்கள், ரோண்ட்கன் கதிர்கள் என்று பலவிதமாக அழைக்கப்படுகின்றன. இக்கண்டுபிடிப்பிற்காக இவருக்கு 1901 இல் இயற்பியலுக்கான முதலாவது நோபல் பரிசு வழங்கப்பட்டது. வாழ்க்கைக் குறிப்பு வில்லெம் ரோண்ட்கன் மார்ச் 27, 1845 இல் ஜெர்மனி, பவேரியா மாகாணத்தில், லென்னெப் என்ற ஊரில் ஒரு துணி தயாரிக்கும் வணிகரும் தொழிலதிபருமான பிரீட்ரிக் கான்ராட் ரோண்ட்கன் என்பவருக்கு ஒரே மகனாகப் பிறந்தார். இவரது தாயார் ஆம்ஸ்டர்டாமைச் சேர்ந்த சார்லொட் கொன்சிட்டாசு ஃபுரோவெயின் என்பவராவார். 1848 மார்ச்சு மாத்த்தில் வியாபார ...

CHO RAMASAMY ,FOUNDER OF THUKLAG WEEKLY ,ACTOR BORN 1934 OCTOBER 5 - 2016 DECEMBER 7

Image
CHO RAMASAMY ,FOUNDER OF THUKLAG WEEKLY , ACTOR BORN 1934 OCTOBER 5 - 2016 DECEMBER 7 சோ ராமசாமி (அக்டோபர் 5, 1934 - டிசம்பர் 7, 2016), பத்திரிக்கை ஆசிரியர், நாடக ஆசிரியர், நடிகர், வக்கீல் என பல்வேறு பொறுப்புகளை மேற்கொண்டவர். சோ என அழைக்கப்பட்டவர். துக்ளக் என்னும் அரசியல் வார பத்திரிக்கையின் நிறுவுநர் மற்றும் ஆசிரியர் ஆவார். இவரின் 'அரசியல் நையாண்டி' எழுத்துக்கள் இவருக்கு 'பத்திரிக்கை உலகில்' தனி இடம் வகுத்துத் தந்தது. வாழ்க்கைக் குறிப்பு சோ ராமசாமி சென்னையில் பிறந்தவர். இவருடைய தந்தையார் ரா. ஸ்ரீநிவாசன், தாயார் ராஜம்மாள். இவர் தன்னுடைய பள்ளிப் படிப்பை மயிலாப்பூர் பி.எஸ். உயர்நிலைப் பள்ளியிலும், கல்லூரிப் படிப்பை லயோலா கல்லூரியிலும் பயின்று இளநிலைஅறிவியல் (பி.எஸ் சி) பட்டப் படிப்பை விவேகானந்தா கல்லூரியிலும் பயின்றார். பின் 1953-55-ஆம் ஆண்டுகளில் சென்னை சட்டக் கல்லூரியில் பயின்று இளநிலைச்சட்டப் படிப்பில் (பி.எல்) பட்டம் பெற்றார். 1957 முதல் 1962 வரை சென்னை உயர் நீதி மன்றத்தில் வக்கீலாகப் பணியாற்றினார். 1962 முதல் டி.டி.கே (T.T.K) கம்பெனிகளுக்குச் சட்ட ஆலோசகராகப்...

JOHN SULLIVAN ,FOUNDER OF OOTY

Image
        JOHN SULLIVAN ,FOUNDER OF OOTY  உதகமண்டலம் எப்படி உருவானது  .அந்த மலைக்கு மேல் போன மக்கள் யாரும் உயிருடன் திரும்ப முடியாது. அங்கு பூதங்களும் பிசாசுகளும் வசிக்கின்றன’ - இப்படி ஒரு பயம், அன்றைய சமவெளிப் பிரதேச மக்களுக்கு இருந்தது. அந்த மலைக்கு மேல் என்ன இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் இருந்தாலும், அந்த மலையைப் பற்றி உலா வந்த கதைகளின் காரணமாக, அதை நெருங்க பயந்தனர். அந்த மலை, இன்று சர்வதேச சுற்றுலா தலமாக விளங்கும் நீலகிரி. மலைவாழ் பழங்குடியின மக்கள் மட்டுமே வாழ்ந்த, பெரும் காடாக விளங்கிய, மற்ற மக்கள் நெருங்க பயந்த நீலகிரியை, நவீன உலகத்துக்கு அறிமுகப்படுத்திய பெருமைக்கு உரியவர், ஜான் சல்லிவன். கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சிக் காலத்தில் கோவை மாவட்ட கலெக்டராக இருந்தவர். வாருங்கள்... ஜான் சல்லிவனின் கதையோடு, நவீன நீலகிரியின் வரலாற்றையும் அறிவோம். தோடமலாவில் என்ன இருக்கிறது? 1800-களில் நீலகிரி, 'தோடமலா’ என்றே அழைக்கப்பட்டது. அந்த மலையில் வசிக்கும் பழங்குடியின மக்களில் சிலர், அவ்வப்போது கீழே இறங்கிவருவதும், அவர்களுக்குத் தேவையான பொர...

DAILY THANTHI FOUNDER ATHITHANAR BORN 1905 SEPTEMBER 27 - 1981 MAY 24

Image
.'தமிழர் தந்தை' சி.பா.ஆதித்தனார் சீமான் தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகில் உள்ள காயாமொழி கிராமத்தில் 1905 ம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 27 ஆம் தேதி பிறந்தார். தந்தையார் சிவந்தி ஆதித்தன். தாயார் கனகம் அம்மையார். ‘ஆதித்தனார்’ என்பது அவரது குடும்பப் பெயர். ஆதித்தனாரின் இயற்பெயர் ‘ சிவந்தி பாலசுப்ரமணியன் ஆதித்தன் '.     Si Pa Adithanarதந்தையார் வழக்கறிஞர். சி.பா. ஆதித்தனார் தமது பள்ளிப் படிப்பை திருவைகுண்டத்தில் பயின்றார். திருச்சிராப்பள்ளியில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் பட்ட மேல் படிப்பை முடித்தார்.     கல்லூரியில் படிக்கும்போதே ‘ தொழில் வெளியீட்டகம்’ என்னும் பதிப்பகத்தை தொடங்கி, மெழுகுவர்த்தி செய்வது எப்படி ? தீப்பெட்டி தயார் செய்வது எப்படி? ஊதுபத்தி தயார் செய்வது எப்படி ? சோப்பு தயார் செய்வது எப்படி? பேனா மை தயாரிப்பது எப்படி ? என்பன போன்ற பல நூல்களை எழுதி வெளியிட்டார். இதற்காக ஒரு அச்சகத்தை விலைக்கு வாங்கினார். இதன் மூலம் சுய தொழில் மீது அவருக்கு இருந்த ஆர்வம் வெளிப்படுவதுடன், தமிழக இளைஞர்கள் சுயமாக தொழி...