Buckingham river development -`கூவம் மேம்பாட்டுத் திட்டம்’
Buckingham river development - `கூவம் மேம்பாட்டுத் திட்டம்’ பக்கிங்ஹாம் கதை என்ன? கூவம்தான். இல்லை என்றால் சென்னையே கூவமாகியிருக்கும் அரசியல்வாதிகள் கொடுத்த வாக்குறுதிகளும் முடிவுகளும் `கூவம் மேம்பாட்டுத் திட்டம்’ என்ற பெயரில் 1967-72-ம் ஆண்டுக்கான ஐந்தாண்டு திட்ட வடிவை அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணா கொண்டுவந்தார். அது கூவத்தில் விழுந்த கல்லாக, குறுகிய காலத்திலேயே அமுங்கிப் போனது. 2001-ம் ஆண்டில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவால், 1,200 கோடி ரூபாயில் மத்திய அரசின் நிதியுதவியோடு, ‘சென்னை நதி நீர் பாதுகாப்புத் திட்டம்’ என்ற பெயரில் மீண்டும் கூவம் சீரமைப்புப் பணி தொடங்கப்பட்டது. இது கூவத்தில் போடப்பட்ட இரண்டாவது கல். 2008-ம் ஆண்டில் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியால் ‘சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை’ அமைக்கப்பட்டது. அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் ஓடுகின்ற ‘சான்-அன்டோரியோ’ நதியின் பராமரிப்பை, சீர்மிகு பயன்பாட்டை நேரில் கண்டு அதன்படி கூவத்தை மேம்படுத்த ஒருமுறையும், பின்னர் 2009-ம் ஆண்டில் கூவம் சீரமைப்பு எப்படி சாத்தியம் என ஆய்ந்தறிய சிங்கப்பூருக்கு ஒரு முறைய...