SUKUMAR AZHIKODE MALAYALAM WRITER BORN 1926 - 2012 JANUARY 24
SUKUMAR AZHIKODE MALAYALAM WRITER BORN 1926 - 2012 JANUARY 24 சுகுமார் அழிக்கோடு (Sukumar Azhikode, மலையாளம்: സുകുമാര് അഴീക്കോട്, மே 26, 1926 - சனவரி 24, 2012) மலையாள மொழி இலக்கியத்திற்கும் இந்திய மெய்யியல் குறித்தும் ஆற்றிய பங்களிப்புக்களுக்காக அறியப்படும் ஓர் இந்திய எழுத்தாளர், விமரிசகர், பேச்சாளர் ஆவார்.[2] மே 26, 1926 இல் கேரளத்தின் கண்ணூர் மாவட்டத்திலுள்ள அழிக்கோடு என்ற சிற்றூரில் பிறந்த சுகுமார் கேரளாவின் திருச்சூர் நகர் அண்மையில் உள்ள இரவிமங்கலத்தில் மணம் புரியாதவராக வாழ்ந்து வந்தார். கல்வியும் பணிவாழ்வும் சுகுமார் அழிக்கோடு 1946 ஆம் ஆண்டில் தமது இளங்கலை பட்டத்தை வணிகவியலில் பெற்றார். பின்னர் கற்பித்தலில் இளங்கலைப் பட்டம், சமசுகிருதம் மற்றும் மலையாளத்தில் முதுகலை பட்டம் என பட்டங்கள் பெற்று இறுதியில் மலையாள மொழியில் ஆய்வு செய்து மலையாள சாகித்திய விமர்சனம் என்ற ஆய்வேட்டிற்காக முனைவர் பட்டமும் பெற்றார். ஆசிரியராக ராஜாஸ் உயர்நிலைப்பள்ளி, சிரக்கல், புனித அலோசியசு கல்லூரி, மங்களூரு, தேவகிரி கல்லூரி, கோழிக்கோடு ஆகிய நிறுவனங்களில் பணியாற்றினார். பின்னர் எஸ் என் எம் பயிற்சிக...