Showing posts with label GREEDY. Show all posts
Showing posts with label GREEDY. Show all posts

Sunday, 22 July 2018

ACTRESS KASTHURI ANSWERED / ADVISED TO SRI REDDY ABOUT GREEDY AND UNSOCIAL





ACTRESS KASTHURI  ANSWERED/ADVISED TO SRI REDDY ABOUT  GREEDY AND UNSOCIAL





தெலுங்கு திரையுலகில் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருப்பதாக கூறி அண்மையில் பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீ ரெட்டி.தற்போது அவரது கவனம் தமிழ் சினிமா பக்கம் திரும்பியுள்ளது. ஸ்ரீரெட்டி கடந்த சில நாட்களாக தமிழ் சினிமா இயக்குனர்கள்,நடிகர்கள் மீது புகார் கூறி வருகிறார். இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்,நடிகர்கள் ஸ்ரீகாந்த்,லாரன்ஸ்,நடிகரும் இயக்குனருமான சுந்தர்.சி ஆகியோர் மீது புகார் கூறியுள்ளார்.இதனால் தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.எனினும் தொடர்ந்து தனது ஃபேஸ்புக்
பக்கத்தில் குற்றச்சாட்டுகளை முன் வைத்து வரும் ஸ்ரீரெட்டி இதுவரை காவல்துறையினரிடமோ,சம்பந்தப்பட்ட திரைத்துறை அமைப்புகளிடமோ புகார் தெரிவிக்கவில்லை.இதனால் அவர் மீதும் விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இந்நிலையில்,ஸ்ரீ ரெட்டிக்கு ஆதரவாக நடிகை கஸ்தூரி தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். ஃபேஸ்புக்கில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், இன்று தான் ஸ்ரீரெட்டியின் இணையதளப் பேட்டியைப் பார்த்தேன்.சினிமா ஆசைகாட்டி,தங்கள் ஈன புத்திக்குப் பெண்களை இரையாக்கிக் கொள்ளும் ஓநாய்களின் முகத்திரையை கிழித்து தொங்கப்போட்டுக் கொண்டிருக்கிறார்.மானாவாரியாக பெயர்களை இறைக்கிறார்.இவர் கூடவா என்று சிலர் பெயரைக் கேட்டதும் அதிர்ச்சியாக உள்ளது.ஆனால்,அவர் சொல்லும் விவரங்கள் நம்பும்படியாக உள்ளன. ஸ்ரீரெட்டியின் நிலை நமக்கு உணர்த்துவது இதைத்தான்.லஞ்சம் வாங்குவதும் குற்றம்,கொடுப்பதும்
குற்றம்.கொடுப்பதே லஞ்சம்,இதில் கொடுத்த லஞ்சத்துக்கு வாங்கியவர்கள் உண்மையாக இல்லை என்று பிறகு கூப்பாடு போடுவது... கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் இல்லையா? அதிலும்,ஒரு ஊரில் பல பேரிடம் ஏமாந்து,பிறகு அடுத்த ஊரிலும் அதே தவறையே மறுபடி மறுபடி செய்வதற்குப் பெயர் என்ன?குறுக்கு வழி, ஏமாற்றம் நிறைந்தது.அதில் பலமுறை பயணித்திருக்கிறார் இவர்.ஒருமுறை கூட அந்த வழி பயன் தரவில்லை.அப்புறமும் தன் அணுகுமுறை தவறு என்று ஏன் இந்தப் பெண் உணரவில்லை? அப்படியென்றால்,சினிமாவுக்குத் தேவையான தகுதியோ,திறமையோ தனக்கு இல்லை,சமரசங்கள் செய்தாலாவது வாய்ப்பு கிட்டாதா என்று அந்தப் பெண்
யோசித்ததாகவே தெரிகிறது.தகுதிக்கு மேல் பேராசைப்பட,சமரசம் செய்யக்கூட ஒரு மனநிலை வேண்டும்.எல்லோருக்கும் அது கை கூடாது. திருடித் தின்பது சுலபமென்றால்,எல்லோரும் திருடர்களாகத்தான் இருப்பார்கள்.நேர்வழி தான் கடைசியில் நிலைக்கும் என்பதை,பட்டுத்தான் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதில்லை.நம் முன்னோர்கள் நமக்கு அதைச் சொல்லித்தந்து போயிருக்கிறார்கள்.அந்த ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தால் வாழ்க்கையில் ஜாக்பாட் அடிக்காமல் போகலாம்.ஆனால்,என்றும் சீராக, இழப்பில்லாமல் செல்லும். ஸ்ரீரெட்டி செய்த மிகப்பெரிய தவறு என்ன என்று,அவர் இன்று வரை உணர்ந்தாரா எனத் தெரியவில்லை.அவர் சினிமாவில் உள்ள ஆண்களைத் தவறாக எடைபோட்டு,ஏமாந்ததாக நினைத்துக் கொண்டிருக்கிறார்.இல்லை,அவர் தவறாக எடைபோட்டது சினிமாவில் உள்ள பெண்களைத்தான். எல்லா நடிகைகளும் இயக்குநர்கள்,நடிகர்களுக்கு இணங்கிதான் சினிமாவில் முன்னேறியுள்ளார்கள் என்று தப்புக்கணக்குப் போட்டுவிட்டார்.சான்ஸ் கிடைத்திருந்தால் யார் முகத்திரையையும் கிழித்திருக்க மாட்டார்.
சினிமாவை மிகத் தவறாக எடைபோட்டதன் விளைவையே இப்பொழுது சந்தித்துக் கொண்டிருக்கிறார் . இணங்கினால் தான் சான்ஸ் கிடைக்கும் என்று அவர் நினைத்தது மிகப்பெரிய முட்டாள்தனம் மட்டுமல்ல,திறமையையும் உழைப்பையும் ஒழுக்கத்தையும் மூலதனமாக வைத்து முன்னேறிய என்னைப் போன்ற நடிகைகளுக்கு எவ்வளவு அவதூறு... சினிமாவில் நிறைய நல்லவர்கள் உள்ளார்கள். அவர்கள் யாரையும் இப்பெண் சந்திக்கவேயில்லையா? இந்த இடத்தில் ஒரு சம்பவத்தை நினைவுகூர்கிறேன்.நான் ஒரு பெரிய நடிகருடன் கதாநாயகியாக நடித்த படம்.அந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியின் படப்பிடிப்பு.ஜனத்திரள் மிகுந்த காட்சி. அங்கே,ஒரு டீன் ஏஜ் பெண்...ஸ்டைலான,நாகரிகமான அழகிய பெண்,நடிகரை சந்தித்து வாய்ப்பு கேட்கிறார்.வேறு பக்கம் அமர்ந்திருந்த என் காதில் அவர்கள் பேச்சு தெளிவாகக் கேட்டது. பெண்: சார்... நான் உங்க பெரிய ரசிகை.உங்களோட தனியா பேச முடியுமா? நடிகர்: தனியாவா? இங்கேயே சொல்லுமா பெண்: உங்க கூட நடிக்கணும் சார்.அதுக்கு நான் என்ன வேணா பண்ணத் தயாரா இருக்கேன் சார். நடிகருக்கு சுர்ரென்று கோபம் வந்துவிட்டது.எனினும் குரலை
உயர்த்தாமல் மிகக் கடுமையான தொனியில் சொன்னார்.பைத்தியமா உனக்கு?படிக்கிற பொண்ணு பேசுற பேச்சா இது? என்னை என்னானு நினைச்சுப் பேசுறே? என்கிட்டே சொன்ன மாதிரி வேற யாருகிட்டயும் போய் பேசிடாத. இடியட், உங்க அப்பா - அம்மாவுக்குத் தெரியுமா உன் சினிமா ஆசை? நீ ஒரு குழந்தை,சினிமாவுக்கு நீ பொருத்தமாக இருக்க மாட்டாய்.மொதல்ல ஊரு போய் சேரு.படிக்கிற வேலையப் பாரு. மறுபடியும் இதுபோல் யோசிக்காதே... இன்றும் எனக்கு அந்த ஹீரோவின் சொற்கள் நன்றாக நினைவில் உள்ளன.இத்தனைக்கும் அந்த ஹீரோ தொடர்ச்சியாக அவதூறில் மாட்டியவர் தான்.ஆனால்,யாரையும் ஏமாற்றுமளவுக்கு கேவலமான எண்ணம் கொண்டவர் இல்லை. எதற்கு சொல்கிறேன்
என்றால்,சினிமாவில் எல்லோருமே ஏமாற்றுப் பேர்வழிகள் இல்லை.இன்னும் சொல்லப்போனால்,ஏமாற்றுபவர்கள் கூட எல்லோரிடமும் வம்புக்குப் போக மாட்டார்கள்.நாம் நடந்துகொள்ளும் முறையை வைத்துதான் நம்மிடம் எதிராளி நடந்துகொள்வார் என்று தெரிவித்துள்ளார்

Monday, 16 October 2017

CHINA ,GREEDY ,SABOTAGE COUNTRY 1



CHINA ,GREEDY ,SABOTAGE COUNTRY 1

அராஜக நாடு. பேராசை கொண்ட நாடு.






வருங்காலத்தில் உலகப் பொருளாதாரத் தலைமையை எந்த நாடு ஏற்கும்? என்ற கேள்விக்கு சோவியத் யூனியன் என்பது, 1970-களில் சர்வதேச பொருளாதார நிபுணர்களின் பதிலாக இருந்தது.

ஆனால் அடுத்த சில ஆண்டுகளில் தங்கள் கருத்தை மாற்றிக் கொண்டார்கள். `மத்திய கிழக்கு நாடுகள்’. இப்படி மாற்றிக் கொண்டதற்குக் காரணம் அந்தப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட ஏராளமான பெட்ரோலியக் கிணறுகள்.

ஆனால் அமெரிக்காவுக்கு இந்தப் பெருமை கிடைத்தது. “இன்னும் நூறு ஆண்டுகளில் அமெரிக்காவை நாம் தாண்டிவிட வேண்டும்’’ என்று ஐரோப்பியத் தலைவர்கள் லிஸ்பன் மாநாட்டில் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள்.

சில ஆண்டுகள்தான். அவர்கள் அத்தனை பேருக்கும் எழுந்தது ஒரு திகில் உணர்வு. “சீனாவும், இந்தியாவும் இணைந்து வருங்கால உலகப் பொருளாதாரத்தைத் தீர்மானித்து விடுமோ?’’.

ஆக சீனா நமக்கு கடும் போட்டியாளர் என்பதில் சந்தேகமில்லை. அதே சமயம் இந்தியாவும் பலவிதங்களில் அதற்கு போட்டியை அளித்துக் கொண்டிருக்கிறது. (மக்கள் தொகையில்தானே என்று கேலி பேச வேண்டாம்).

சீனாவுக்கும் நமக்கும் பல வருடங்களுக்கு முன் ஒரு நேரடிப் போர் நடந்தபோது, “சிங்கநாதம் கேட்குது, சீன நாகம் ஓடுது’’ என்று கவிஞர் கண்ணதாசன் எழுதிய ஒரு பாடலுக்கு தமிழகத்தின் அத்தனை முன்னணி நட்சத்திரங்களும் நடித்திருந்த காட்சி செய்திப் படமாக அத்தனை திரையரங்குகளிலும் வெளியிடப்பட்டன. ஆக சீனாவை ஒரு நாகப்பாம்போடு ஒப்பிட்டோம். இப்போதும் சீனா சீறிக்கொண்டுதான் இருக்கிறது. அமெரிக்காகூட அதை அடக்க நினைத்தாலும் மனதில் அஞ்சிக் கொண்டுதான் இருக்கிறது.

சீனாவைப் பாம்பாக வர்ணிப்பது ஒருபுறம் இருக்க, சீனர்கள் பாம்புக் கறியையும் சாப்பிடுவார்கள் என்ற குறிப்பேகூட பலருக்கும் அருவருப்பையும், லேசான அச்சத்தையும் அளிக்கக்கூடியதுதான்.

சீனாவின் வர்த்தகம் கொஞ்சநஞ்சமல்ல. குறைவான விலையில் பொருள்களை சந்தைக்கு அனுப்புவதில் பெரும் முன்னேற்றம் கண்டிருக்கிறது. உலக அளவில் துணிகள் ஏற்றுமதியில் சுமார் 40 சதவீதம் சீனாவுடையதுதான்.

தனது வளமான டி.வி.செட் விற்பனை முன்னணியை ஜப்பான் சீனாவுக்குத் தாரை வார்த்து விட்டது. அமெரிக்காவில் சீன ஃபர்னிச்சர் எக்கச்சக்கமாக விற்கின்றன. மிக மென்மையான பட்டுகளை ஏற்றுமதி செய்வதில் முன்னணியில் இருந்தது இத்தாலி. அவர்களை ஒவர்டேக் செய்துவிட்டது சீனா.

ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை சீனாவுக்குச் சென்று வருபவர்கள்கூட அங்கு உண்டாகியுள்ள மாற்றங்களைப் பார்த்து வாய் பிளக்கிறார்கள். 2012க்குள் பத்து புதிய விமான நிலையங்களை சீனா உருவாக்கிக் கொள்ள இருக்கிறது.

இனியும் உழைப்பாளர்களுக்கான கூலியைக் குறைக்க முடியாது என்ற நிலை வந்ததும், பல பிரம்மாண்டமான இயந்திரங்களை சீனத் தொழிற்சாலைகள் பயன்படுத்தத் தொடங்கி விட்டன.

“ஊழலுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை எடுப்போம்’’ என்று கூறுகிறார் சீனப் பிரதமர் லீ கெகியாங். (சுருக்கமாக `லீ’). இந்த ஆண்டு மார்ச் 2 அன்று லஞ்சம் வாங்கியதற்காக தண்டனை அளிக்கப்பட்ட 14 ராணுவத் தளபதிகளின் பெயர்ப் பட்டியலை வெளியிட்டிருக்கிறது சீனா. (என்றாலும் ராணுவ பட்ஜெட்டை 10 சதவீதம் உயர்த்தியிருக்கிறது).

தேசப்பற்று கொண்ட இந்தியர்களுக்கு சீனாவைப் பற்றிய ஒரு பிம்பம் உண்டு. அராஜக நாடு. பேராசை கொண்ட நாடு.

அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பஞ்சசீலக் கொள்கைகளுக்கு தலையாட்டியபடியே இந்தியாவின் முதுகில் குத்திய நாடு சீனா. நம் எல்லைப் பகுதிகளில் சிலவற்றை ஆக்ரமித்துக் கொண்டிருக்கிறது. அருணாசலப் பிரதேசம் இந்தியாவுக்கு உரியதல்ல என்று வேறு சொல்கிறது.

எனவே இந்தத் தொடரில் சீனாவின் சில பெருமைகளை விளக்கும்போது நெருடல் ஏற்படுவது இயல்பு. என்றாலும் `அவர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியவை’ என்ற கோணத்திலும் இவற்றை அறிய வேண்டியது அவசியம்.

இன்று எப்படியோ, சீனர்கள் கால காலமாக வெள்ளைக் கொடியை நம்பியவர் கள். அமைதி விரும்பிகள். அதே சமயம் தங்கள் நாட்டைப் பற்றி எக்கச்சக்க பெருமை கொண்டவர்கள். `சேனா குவோ’ என்று தங்கள் நாட்டை அழைத்துக் கொண்டார்கள். இதற்குப் பொருள் `நடுநாயக சாம்ராஜ்யம்’ என்று அர்த்தம். பிற நாட்டினரை எல்லாம் (முக்கியமாக அமெரிக்கர்களையும், ஐரோப்பியர்களையும்) `சரியான காட்டுமிராண்டிகள்’ என்றுதான் குறிப்பிட்டார்கள்.


சமாதானத்தை அப்படி விரும்பினார்கள். வாழையடி வாழையாக வந்த அவர்களது நால்வகைப் பிரிவுகள் இவைதான். அறிஞர்கள், விவசாயிகள், தொழிலாளிகள், வியாபாரிகள். கவனித்தீர்களா? க்ஷத்ரியர்கள் அல்லது போர் வீரர்கள் என்று ஒரு பிரிவு கிடையாது.

வேறு எந்த விதத்திலும் பிழைக்க வழியில்லை என்றால்தான் ராணுவத்தில் சேருவது அன்றைய சீனர்களின் வழக்கம்.

பின் எப்படி இப்போது தலைகீழ் மாற்றம்? சீன வரலாற்றில் திகைப்புகளுக்கும், அதிர்ச்சிகளுக்கும் பஞ்சமே இல்லை.