Posts

Showing posts from November, 2021

ALEXANDER CUNNINGGHAM , EPIGRAPHY BORN 1814 JANUARY 23-1893 NOVEMBER 28

Image
  ALEXANDER CUNNINGGHAM , EPIGRAPHY BORN  1814 JANUARY 23-1893 NOVEMBER 28 சர். அலெக்சாண்டர் கன்னிங்காம் (Alexander Cunningham, 23 ஜனவரி 1814 – 28 நவம்பர் 1893) ஒரு பிரித்தானியத் தொல்லியலாளரும், படைத்துறைப் பொறியாளரும் ஆவார். இந்தியத் தொல்லியல் ஆய்வுகளின் தந்தை எனப்போற்றப்படும் இவர் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் முதல் தலைமை இயக்கரான பதவி வகித்தவர்.[1][2] இவரது உடன் பிறந்தோரான பிரான்சிஸ் கன்னிங்காம், ஜோசப் கன்னிங்காம் என்போரும் தத்தமது வேலைகளுக்காகப் பிரித்தானிய இந்தியாவில் பெயர் பெற்றவர்களாக இருந்தனர். இளமைக் காலம் இவர் 1814 ஆம் ஆண்டில், இலண்டனில், ஸ்கொட்டியக் கவிஞரான அலம் கன்னிங்காம் என்பவருக்கு மகனாகப் பிறந்தார். இலண்டனில் உள்ள கிறிஸ்துவின் மருத்துவநிலையம் எனப்பட்ட நிறுவனத்தில் தொடக்கக் கல்வியைப் பெற்றார். பின்னர் அடிஸ்கோம்பே என்னும் இடத்திலிருந்த எம். ஈ. ஐ கம்பனியின் மடாலயத்திலும், சத்தாமில் இருந்த ஆர். ஈ. எஸ்ட்டேட்டிலும் கல்வி கற்றார். 19 ஆவது வயதில் வங்காளப் பொறியாளர் குழுவில் இரண்டாம் லெப்டினண்டாக இணைந்த அவர், அடுத்த 28 ஆண்டுகள் இந்தியப் பிரித்தானிய அரச சேவையில் பணியாற்...

BRUCE LEE ,ACTOR BORN NOVEMBER 27,1940 -1973 JULY 20

Image
  BRUCE LEE ,ACTOR BORN  NOVEMBER 27,1940 -1973 JULY 20 1940 ஆம் ஆண்டு நவம்பர் 27 ந்தேதி அமெரிக்காவின்சான் பிரான்சிஸ்கோ மாநிலத்தில் பிறந்தார் புரூஸ் லீ நாம் விரும்பும் இலக்கை அடைவதற்கு உடல் வலிமையைவிட மனவலிமைதான் முக்கியம் என்று வாழ்ந்துகாட்டிய வரலாற்று மாந்தர்கள் பலர்.உலகத்தின் உதாசீன பேச்சுக்களையும் ஏளன சிரிப்புகளையும், கேலி கிண்டல்களையும் தாண்டிஒருவன் சாதனை படைக்க வேண்டுமென்றால் அதற்கு உடல் வலிமை மட்டும் போதாது. இரும்புபோன்ற மன வலிமையும் வேண்டும். நாம் தெரிந்துகொள்ளவிருக்கும் வரலாற்று நாயகருக்குஅப்படிப்பட்ட மன வலிமை இருந்தது இல்லையென்றால் பிறந்தபோதே ஆரோக்கியமின்றி ஒழுங்காகபள்ளிக்குக்கூட செல்லாமல் குண்டர் கும்பல்களில் சேர்ந்து எங்கெல்லாம் சண்டைநடக்குமோ அங்கெல்லாம் சண்டையில் ஈடுபட்ட ஓர் இளைஞனுக்கு தற்காப்பு கலையில் சாதனைசெய்ய வேண்டும் என்ற கனவும், ஒரு சிறந்த நடிகனாக வரவேண்டும் என்ற ஆசையும்உதித்திருக்காது. பல இன்னல்களை கடந்து தனது கனவுகளை நனவாக்கவும்முடிந்திருக்காது. 1959 ஆம் ஆண்டு சராசரிக்கும் குறைவானஉயரத்தோடும், ஒல்லியான தேகத்தோடும் அமெரிக்க மண்ணில் வந்திறங்கினான் அந்த 18 வய...

WOMAN IN WORLD HISTORY

Image
 WOMAN  IN WORLD HISTORY உலக வரலாற்றில் பெண்களின் நிலை இப்படித்தான் காலங்காலமாக இருந்து வருகிறது. ஏதோ நான் வேண்டுமென்றே எழுதுவதாக நினைக்க வேண்டாம்.  உலக வரலாற்றில் பெண்கள் பெண்களை தனிப்பிரிவாக, வேறுபட்டவர்களாக, தாழ்ந்தவர்களாக குறிப்பிட்டதன் மூலம் ஆண்கள், பெண்களை மனித இனத்தின் வரலாற்றில் முதலாவது மற்றும் மிகப்பெரிய ஒதுக்கப்பட்ட பிரிவினராக ஆக்கினர். ஆனால், ஆண்களின் எல்லா விவகாரங்களிலிருந்தும் பெண்களை முற்றாக விலக்குவது அசாத்தியமாகும். வேறு எந்த கீழ்ப்படுத்தப்பட்ட வர்க்கமோ, சாதியோ அல்லது சிறுபான்மையினரோ பெண்களைப் போல் தம்மை ஒடுக்குவோருடன் அவ்வளவு நெருக்கமாக ஒருங்கிணைந்து வாழ வில்லை.  ஆதிக்க கலாசாரத்தின் ஆண்கள் அவர்களைத் தமது இல்லங்களினுள்ளும், சமையலறைகளிலும், படுக்கைகளிலும் அனுமதிக்க வேண்டியிருக்கிறது. இவ்வளவு நெருக்கமாக உள்ளவர்களின் மீது கட்டுப்பாடு செலுத்த வேண்டுமென்றால், பெண்களை இழிநிலைக்குத் தாழ்த்துவதற்கு அவர்களே இணக்கம் தெரிவிக்கும் படி தூண்டுவதன் மூலமாக மட்டுமே செய்ய இயலும். பெண்கள் தாழ்ந்தவர்களாக இல்லாததால், பெண்கள் ஆண்களுக்கு இரண்டாந்தரமானவர்களே என்று விளக்குவத...

மஹாபலி (சிறுகதை) சுஜாதா

Image
  மஹாபலி (சிறுகதை) சுஜாதா மகிஷாசுரமர்த்தினி குகைக்கு முன்னால் பெங்காலிகள் 'ஆஷோன்... ஆஷோன்...' என்று ஆரவாரத்துடன் போட்டோ பிடித்துக் கொள்ள...  சென்னை-103-ஐச் சேர்ந்த 'அன்னை இந்திரா மகளிர் உயர்நிலைப் பள்ளி'யின் ஆசிரியைகள் டீசல் வேனிலிருந்து ஆரவாரத்துடன் உதிர்ந்து, மஹாபலிபுரத்தின் சரித்திர முக்கியத்தை விளக்கும் வகையில், ''இங்கதாண்டி 'சிலை எடுத்தான் ஒரு சினைப் பெண்ணுக்கு' ஷூட்டிங் எடுத்தாங்க...'' என்று வியக்க, கற்சிற்பிகளின் உளி சத்தம் எதிரொலிக்க, பிள்ளையர்களும் கொள்ளை முலைச் சுந்தரிகளும் சிலை வடிவில் டூரிஸ்டுகளுக்குக் காத்திருந்தார்கள். 'கல்லோரல் சீப்பா கிடைக்கும்னு யாரோ சொன்னாங்களே?' இவற்றையெல்லாம் கவனிக்காமல் ஊடே நடந்த அந்த இளைஞன், கரைக்கோயிலின் அருகில் வந்து கடற்கரைப்பக்கம் சென்றான். ஆயிரத்து இருநூறு வருஷம் கடலின் சீற்றத்தையும் உப்புக் காற்றையும் தாங்கி வந்திருக்கும் அற்புதத்தைச் சற்று நேரம் பார்த்தான். ''காமிரா வேணுங்களா... நிக்கான், ஜப்பான்... அப்புறம் ரேபான் கண்ணாடி, எலெக்ட்ரிக் ஷேவர்?" அவன் மௌனமாக இருக்க, ''செருப்ப...