Thursday 4 November 2021

MODI`S DEEPAVALI

 

MODI`S DEEPAVALI



மோடியின் தீபாவளிகள்

2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம்

 4 ஆம் தேதியன்று தீபாவளி நன்னாளில் இந்திய நாட்டின் பிரதமர் 

திரு. நரேந்திர மோடி அவர்கள் காஷ்மீரில் உள்ள நவ்ஷேரா பகுதியில் தேசத்தை பாதுகாக்கும் பணியில் இருக்கும் வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடுகிறார். 

.......

2014 ஆம் ஆண்டு  இந்திய தேசத்தின் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட  பிரதமராக பதவியேற்ற நரேந்திர தாஸ் மோடி அவர்கள்......

......

அந்த ஆண்டு (அக்டோபர் 23 2014 அன்று) தீபாவளி பண்டிகையை கடல் மட்டத்திலிருந்து 18 875 அடி உயர சியாச்சின் பனிமலை பேஸ் காம்ப்பில்  டூட்டியில் இருந்த இந்திய ராணுவ வீரர்களுடன் கொண்டாடினார். 

.......

2015 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை (நவம்பர் 11 2015 அன்று) பஞ்சாப் மாநிலத்தில் இந்திய பாகிஸ்தான் எல்லையில் டூட்டியில் இருந்த ராணுவத்தினருடன் அவர்கள் காம்ப்பில் கொண்டாடினார். 

.......

2016 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை (அக்டோபர் 30 2016 அன்று ) ஹிமாச்சல பிரதேசத்தில் ITBP எனப்படும் இந்தோ திபெத்தியன் பார்டர் போலீஸ் படையினரின் இந்திய சீன எல்லைப்பகுதியில் ஒரு அவுட் போஸ்டில் டூட்டியில் இருந்த வீரர்களுடன் கொண்டாடினர். 

........

2017 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை (அக்டோபர் 19 2017 அன்று) காஷ்மீர் மாநில எல்லைப்புற பகுதியில் குர்ரே செக்டரில் (Gurez sector) டூட்டியில் இருந்த BSF வீரர்கள் மற்றும் இந்திய ராணுவ வீரர்களுடன் கொண்டாடினார். 

.......

2018 ஆம் ஆண்டு தீபாவளியை (நவம்பர் 7 2018 அன்று)  உத்தராகண்ட் மாநில இந்திய சீன எல்லைப்பகுதியில் டூட்டியில் இருந்த ITBP படை வீரர்களுடன் கொண்டாடினார்.

......

2019 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை (அக்டோபர் 27 2019 அன்று) ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ரஜோரி (Rajouri) பகுதியில் பாதுகாப்பு பணியிலிருந்த இந்திய ராணுவத்தினருடன் கொண்டாடினார். 

........

2020 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை (நவம்பர் 14 2020 அன்று) ராஜஸ்தான் மாநில எல்லைப்பகுதியான ஜெய்சால்மீர் அருகே இருக்கும் புகழ்பெற்ற லோங்கேவாலா  (Longewala)  அவுட்போஸ்ட்டில் BSF வீரர்களிடையும் இந்திய ராணுவ பிரிவினரோடும் தீபாவளியை கொண்டாடினார்.

 1971 ஆம் ஆண்டு நடந்த யுத்தத்தின் போது பாகிஸ்தானிய பெரும்படைக்கு ஒரு சிறு இந்திய படைப்பிரிவு தண்ணி காட்டிய யுத்த பூமி அது.

.......

நாமெல்லாம் நமது இல்லங்களில் நமது புள்ள குட்டி குடும்பத்தினரோடு நிம்மதியாக தீபாவளி கொண்டாட வேண்டுமானால் குடும்பத்தை பிரிந்து நாட்டின் எல்லையில் பலர் கண் துஞ்சாது காவல் காத்திட வேண்டும். காவல் காக்கின்றார்கள் . 

....

அந்நாளில் அவர்களை நாம் நினைகூறுவது தான் நாம் அவர்களுக்கு செலுத்தும் நன்றி கடன்..

....

வெல்டன் ஸார். 

......

பின்குறிப்பு : மோடி ஒலிக குரூப் யாராவது இப்பதிவை படிக்க நேர்ந்தால் டேக் டைவர்ஷன். 

மாற்று பா(டை)தையில் செல்லவும் .

No comments:

Post a Comment