MODI`S DEEPAVALI
MODI`S DEEPAVALI மோடியின் தீபாவளிகள் 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 4 ஆம் தேதியன்று தீபாவளி நன்னாளில் இந்திய நாட்டின் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் காஷ்மீரில் உள்ள நவ்ஷேரா பகுதியில் தேசத்தை பாதுகாக்கும் பணியில் இருக்கும் வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடுகிறார். ....... 2014 ஆம் ஆண்டு இந்திய தேசத்தின் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக பதவியேற்ற நரேந்திர தாஸ் மோடி அவர்கள்...... ...... அந்த ஆண்டு (அக்டோபர் 23 2014 அன்று) தீபாவளி பண்டிகையை கடல் மட்டத்திலிருந்து 18 875 அடி உயர சியாச்சின் பனிமலை பேஸ் காம்ப்பில் டூட்டியில் இருந்த இந்திய ராணுவ வீரர்களுடன் கொண்டாடினார். ....... 2015 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை (நவம்பர் 11 2015 அன்று) பஞ்சாப் மாநிலத்தில் இந்திய பாகிஸ்தான் எல்லையில் டூட்டியில் இருந்த ராணுவத்தினருடன் அவர்கள் காம்ப்பில் கொண்டாடினார். ....... 2016 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை (அக்டோபர் 30 2016 அன்று ) ஹிமாச்சல பிரதேசத்தில் ITBP எனப்படும் இந்தோ திபெத்தியன் பார்டர் போலீஸ் படையினரின் இந்திய சீன எல்லைப்பகுதியில் ஒர...