Posts

Showing posts with the label KI.RAJ NARAYANAN

KI.RAJ NARAYANAN -GANAVATHIYAMMAAL SIVAKUMAR

Image
 KI.RAJ NARAYANAN -GANAVATHIYAMMAL  SIVAKUMAR நெல்லை மாவட்டம், இடைச்செவல் பிறந்த ஊர். அப்பா 80 ஏக்கர் நிலம் வைத்திருந்தார்.இவர் பங்குக்கு 28 ஏக்கர் வந்தது. 7-ம் வகுப்புக்கு மேல் படிப்பு ஏறவில்லை. வெள்ளையர் ஆட்சிகாலம்,விடுதலைப் போராட்டம், கம்மா நாயுடு இனத்தின் வரலாறு- என தன் வாழ்க்கையில் பார்த்த, கேட்ட, அனுபவித்த- விஷயங்களை சிறுகதைகளாக , நாவல்களாகப் பதிவு செய்தவர்...வட்டார வழக்குச் சொல்லகராதி- கோபல்ல கிராமம் -கோபல்ல கிராமத்து மக்கள் -கரிசல் காட்டுக் கடுதாசி- இவர் தமிழுக்குத் தந்த படைப்புக்கள். கு.ப.ரா -சுந்தர ராமசாமி - வல்லிக்கண்ணன் -சிசு செல்லப்பா - மற்றும் ஜெயகாந்தன் - தி.ஜானகிராமன்- இவரின் நட்பு வட்டம். டி. கே.சி. பக்தர். 24 வயதில் இவருக்கு காசநோய் வந்தது. 1930- களில் இதற்கு மருந்து கிடையாது. நாகர்கோயில் அருகில் புத்தேரி டி.பி. மருத்துவமனையில் 2 வருடங்கள்- ஆந்திரா எல்லையிலுள்ள மதனப்பள்ளியில் 2 வருடங்கள் சிகிச்சை. பலனில்லை. 'ஸ்டெப்டாமைசின்'- ஊசி கண்டு பிடிக்கப்பட்டு, 90 நாள், தினம் ஒரு ஊசி போட்டார்கள். 'செத்துப்போவேன்னு நெனைச்சோம். பொழைச்சிட்டியேப்பா'- என்று டாக்டர்கள்...