ROBERT E. LEE BORN 1807 JANUARY 19-1870 OCTOBER 12
ROBERT E. LEE BORN 1807 JANUARY 19-1870 OCTOBER 12 புரட்சித் தளபதி ராபர்ட் ஈ. லீ தவறான தரப்பில் சரியான மனிதர் ராபர்ட் ஈ. லீ ஆள் என்னவோ நல்லவர்தான் ஆனால் சேர்ந்த இடம்தான் சரியில்லை என்று கேள்விப்பட்டிருப்பீர்களே! Right man in the wrong side. அது ராபர்ட் ஈ. லீ க்கு கச்சிதமாகப் பொருந்தும். 19-ம் நூற்றாண்டில் அமெரிக்காவில் நடந்த உள்நாட்டுப் போரில் அடிமைமுறையைக் காப்பாற்றப் போராடியவர்தான் தளபதி லீ. ஐக்கிய அமெரிக்க நாடு 1776-ல் பிரிட்டனிடமிருந்து விடுதலை அடைந்தது. தனது அரசியலமைப்பிலேயே “அனைத்து மனிதர்களும் சமமானவர்கள்” என்று கொண்டிருந்தாலும் அந்நாட்டில் ஆப்பிரிக்காவிலிருந்து கடத்திவரப்பட்ட லட்சக்கணக்கான கறுப்பின மக்கள் அடிமைகளாக இருந்தனர். புதிய அமெரிக்கக் குடியரசு அவர்களைக் குடிமக்களாகக் கருதவில்லை. ஆனாலும் அமெரிக்காவில் அடிமைமுறையை ஒழிக்கவேண்டும் என்று குரல்கள் எழுந்தன. ஐரோப்பாவில் அடிமைமுறை ஒழிக்கப்பட்டபோது, அமெரிக்காவின் பல மாநிலங்களும் அடிமைமுறையை ஒழித்து, கறுப்பின அடிமைகளை விடுதலை செய்தன. (ஆனால் அவர்களுக்கு வாக்குரிமை கொடுக்கவில்லை.) 19-ம் நூற்றாண்டில் அமெரிக்கா...