Posts

Showing posts with the label GOKULASTAMI

GOKULASTAMI

Image
. GOKULASTAMI .கோகுலாஷ்டமி -கண்ணன் பிறந்தான் இன்று கண்ணன் பிறந்தான் மகாபாரதத்தின் கதாநாயகன் கிருஷ்ணன். சரியாக சொல்ல வேண்டுமானால் கௌரவர்கள் – பாண்டவர்கள் சம்பந்தப்பட்டதே மகாபாரதக் கதையாகும். தம் மூதாதையரின் அரசாட்சி உரிமைக்காக இவ்விரு அணியினர் மேற்கொண்ட யுத்த-கதையே மகாபாரதக் கதையாகும். அவர்கள் தான் இக்கதையில் பிரதான பங்கினராய் இருந்திருக்க வேண்டும். ஆனால் அப்படித் தெரியவில்லை. கிருஷ்ணன்தான் இக்கதையின் கதாநாயகன். இது விநோதமாய் உள்ளது. மேலும் இந்தக் கிருஷ்ணன் கௌரவர்கள்-பாண்டவர்கள் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்திருந்த ஆளாகவும் தெரியவில்லை. கிருஷ்ணன் நாடாண்ட பாண்டவர்களின் நண்பனாய் இருந்திருக்கிறான். வேறொரு நாட்டின் அரசனான கம்சனுக்கு கிருஷ்ணன் எதிரி. அருகருகே ஒரே இடத்தில், ஒரே காலத்தில் இரு அரசாட்சிகள் இருந்திருக்க கூடுமா? மேலும் இவ்விரு அரசர்களுக்கிடையே உறவு இருந்த்தாய்க் காட்டிட மகாபாரதத்தில் ஏதும் ஆதாரமில்லை. எனவே, கிருஷ்ணன் மற்றும் பாண்டவர் பற்றிய இரு தனித்தனி கதைகள் கலந்து ஜோடிக்கப்பட்டு இடைச்செருகலாகப் பிற்காலத்தில் மகாபாரதத்தில் நுழைக்கப்பட்டிருக்க வேண்டும். கிருஷ்ணனின் கதாபாத்தி...