Posts

Showing posts with the label sabari

sabari malai

சபரிமலை : ராமனின் அருளைப் பெறுவதற்காக தவமிருந்த சபரி என்கிற கன்னிப் பெண்ணின் நினைவாகவே சபரிமலை எனப் பெயர் பெற்றது. பெரியாறு புலிகள் சரணாலயம் அமைந்துள்ள அந்த அழகான மலைகளின் மீதுதான் உலகப் புகழ்பெற்ற அய்யப்பன் கோவில் அமைந்துள்ளது. முந்தைய காலங்களில் மலைவாழ் மக்களின் காவல் தெய்வமாக விளங்கிய அய்யனார், பின்னர் 15-ம் நூற்றாண்டு வாக்கில் ஒரு சிறிய அய்யப்பன் கோவிலாக உருவானது. அய்யப்பன் அரச குடும்பம் ஒன்றைச் சேர்ந்த இளவரசன் என்கிறது புராணக் கதைகள். பின்னர் கடுமையான தவங்களின் மூலம் அருள் பெற்று நால் வர்ணங்களுக்கு வெளியில் உள்ள சாதிகளால் வணங்கப்படும் அளவுக்கு ஆற்றல்களைப் பெற்றார் என்கின்றன அந்தக் கதைகள். தினசரி பூசை புனஸ்காரங்கள் ஏதும் செய்யப்படாமல் அடர்ந்த காடுகளுக்குள் அமைந்திருந்த இந்தக் கோவிலுக்கு வருடம் ஒரு முறை மகர சங்கரமனா எனும் சடங்கிற்காக (ஜனவரி-பிப்ரவரி மாதங்களில்) மலைப் பண்டாரம், உள்ளத்தார், மன்னன், நரிக்குறவர் போன்ற மலைவாழ் மக்கள் வருவதுண்டு. மேலும் தமிழ்நாட்டில் இருந்து சில பக்தர்களும் வந்து போவதுண்டு. பந்தளம் அரச குடும்பத்தால் நியமிக்கப்பட்ட பூசாரி ஒருவர் அந்த நாட...