MATHURIDEVI ,TAMIL ACTRESS BORN 1927 SEPTEMBER 14
MATHURIDEVI ,TAMIL ACTRESS BORN 1927 SEPTEMBER 14 மாதுரி தேவி (பிறப்பு: ஆகத்து 1929/ 1927 SEPT 14)[1] தமிழ்த் திரைப்பட நடிகையாவார். 1940கள்-50களில் பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். வாழ்க்கைக் குறிப்பு[மூலத்தைத் தொகு] மாதுரிதேவி சென்னை, ராயபுரத்தில் கிறித்தவக் குடும்பம் ஒன்றில் சூசை முதலியார் என்பவருக்கு ஏழாவது குழந்தையாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் கிளாரா. வீட்டில் சந்திரா என்ற செல்லப்பெயருடன் அழைக்கப்பட்டார்.[2] ராயபுரம் செயின்ட் அந்தோனீசு உயர்பள்ளியில் கல்வி கற்றார். பள்ளியில் படிக்கும் போதே திரைப்படங்களில் அதிக ஆர்வம் காட்டினார். திரைப்படப் பாடல்களைப் பாடுவது அவரது முக்கிய பொழுதுபோக்காக இருந்தது. இவரது ஆர்வத்தைக் கண்ட கோசலம் என்பவர் மாதுரிதேவியின் பெற்றோரின் சம்மதத்துடன் தனது சியாம்சுந்தர் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தார். ஆனாலும் கடைசி நேரத்தில் பெற்றோர் மறுப்புத் தெரிவித்ததால் இப்படத்தில் அவரால் நடிக்க முடியவில்லை. [2] மாதுரி தேவி தனது பள்ளிப்படிப்பை இடையிலேயே நிறுத்தி விட்டு, யானை வைத்தி என்பவரிடம் ஆறு மாத காலத்திற்கு கருநாடக இசைப் பயிற்சி ப...