Posts

Showing posts with the label A SECRET

CIGARETTE HAD A SECRET - SLAVISM OF SMOKE AGAIN -VETRIMARAN DIRECTOR

Image
CIGARETTE HAD A SECRET -  SLAVISM OF SMOKE AGAIN .என் உடலுக்கு 13 வயதில் நிகோடினை அறிமுகப்படுத்தினேன். என் பள்ளி, கல்லூரி நண்பர்களில் தொடங்கி சினிமா வரை `வெற்றி மாறன்’ என்றாலே எல்லோருக்கும் கையில் சிகரெட்டுடன் இருக்கும் பிம்பம்தான் நினைவுக்கு வரும். 21 வயதுக்கு முன்னர் புகைக்க ஆரம்பித்தால், நமது உறுப்புகள் முறையாக வளரவேண்டிய அளவுக்கு வளராது. `நிகோடின், பிரவுன் சுகரைவிட அடிக்‌ஷனான விஷயம்’ என்கிறார்கள். ஆனால், அது எல்லோருக்கும் எளிதில் கிடைக்கிறது. புகையிலைப் பொருட்கள்தான் முதலில் தடை செய்யப்படவேண்டிய போதைப்பொருள் என நினைக்கிறேன். அந்த அளவுக்கு சிகரெட் என்னைப் பாதித்திருக்கிறது. ஒரு நாளில் ஐந்து சிகரெட்டில் தொடங்கி, `பொல்லாதவன்’ சமயத்தில் ஒரு நாளைக்கு 170 சிகரெட்களைப் புகைக்கும் நிலைக்குச் சென்றிருந்தேன். `பொல்லாதவன்’ ரிலீஸுக்குப் பிறகு ஒருநாள் ஈ.சி.ஜி எடுத்துப்பார்த்தேன். நார்மலாக இல்லை எனத் தெரிந்ததும் `ஆஞ்சியோ செய்துபார்க்க வேண்டுமா?’ என கார்டியாலஜிஸ்ட் முரளிதரனிடம் கேட்டேன். ரிப்போர்ட்டைப் பார்த்த டாக்டர், `ஆஞ்சியோ ஆப்ஷனல். ஆனா, சிகரெட்டை கட்டாயம் விடணும்’ என்றார்...