Posts

Showing posts with the label OLD

OLD WIDOWER ,THE FOOT BALL OF THE FAMILY

Image
  OLD WIDOWER ,THE FOOT BALL OF THE FAMILY எனக்கு 77 வயது….! மனைவியை இழந்து பத்து வருடங்களாகிறது... அன்பின் நீரூற்ற மறந்த எத்தனையோ முதியவர்களில் நானும் ஒருவன்..! இருக்கின்ற நான்கு மகன்களில் ஒவ்வொரு மாதமும் ஒரு மகனிடம்...! இப்போது இருப்பது மூன்றாவது மகனிடம்...! இன்னும் நான்கு நாட்கள் இருக்கிறது கடைசி மகனிடம் செல்ல…! இப்போதிருந்தே வயதான விரல்களை கொண்டு எண்ணிக்கொண்டு இருக்கிறேன் … கடைசி மருமகளிடம் செல்லும் நாட்களுக்காக! போன தீபாவளிக்கு இரண்டாவது மருமகள் வாங்கித்தந்த வெள்ளை வேட்டி பழுப்பு நிறமாகி பலநாட்கள் ஆகிவிட்டது! முதல் மகன் வாங்கித்தந்த கண்ணாடி உடைந்து மூன்று வாரங்கள் ஆகிவிட்டது…….. இப்போது இருக்கும் கோபக்கார மகனிடம் கேட்டால் என்ன சொல்வானோ என்று பயந்து கண்ணாடியை ஒளித்து வைத்துவிட்டு வெறுங்கண்களோடு தடுமாறிக்கொண்டு இருக்கிறேன்! கடைசி மருமகளிடம் சொல்லி தான் மாற்றிக்கொள்ள வேண்டும்……….! இன்னும் நான்கு நாட்கள்தான் என்பதால் எல்லோரும் வேலைக்கு போனபின்பு என்னுடைய வேட்டி ஜிப்பாக்களை துவைத்து வைத்துக்கொள்ள வேண்டும், துணி துவைக்கும் மிஷின் இருந்தாலும் என்னுடைய துணிகளை தனியாகத்தான் போடவேண்டும்...

OLD TANJORE 1940 -1980

Image
  1940 - 1980 ... எங்கள் பழைய தஞ்சை .. 1930 - 1940 களில் ...மின்சக்தி வருகையால் வாழ்க்கை தரம் வெகுவாக 1940-50 களில் இருந்து மாற தொடங்கின ... முன்பு சொன்னது போல .... வசதி பெற்ற வீடுகளில் மெதுவாக குண்டு பல்பு லைட், பேன், மற்றும் ரேடியோ புக ஆரம்பித்தன .. மண்எண்ணெய் அரிக்கன் விளக்குகள்.. பனை விசிறிகள் போன இடம் தெரியவில்லை. 1930- 40 களில் சினிமா கொட்டைகைகள், டெலிபோன்கள் சேவை ஆரம்பித்தன ... 1930 - 1940களில் ட்ராமா கொட்டகைகள் மற்றும் சபாக்கள், சினிமா கொட்டைகளாக மாற்றப்பட்டன .. தஞ்சையின் முதல் சினிமா கொட்டகை "டவர் சினிமா" (பிறகு ஞானம் டாக்கீஸ் என பெயர் மாற்றம்) . .. 1950களில் எனக்கு தெரிந்த முதல் காசு ... பொத்த காசு காலணா .. பெரிய காலணா .. அரைணா... ஒரு அணா... நாலணா எட்டணா .. ஒரு ருபாய் காசு ..... (16 அணா = 1 ரூபாய்) ... காசுக்கு மதிப்பு இருந்த காலம் ... ஒரு முட்டை ஒரு அணா , கோழியின் விலை முக்கால் ரூபாய் ... ஒரு பவுன் தங்கத்தின் விலை ருபாய் 54/= ... ஆனால் ஒரு பவுண்ட் ஆஸ்திரேலியா திராட்சை ரூபாய் 20க்கு விற்கப்பட்டது ... உள்நாட்டில் அப்போது திராட்சை உற்பத்தி இல்லாத காலம் .. அப்போது ஒரு ...

MADRAS ...OLD MADRAS

Image
MADRAS ...OLD MADRAS .கொரோனா ஊரடங்கு காரணமாக சென்னை வெறிச்சோடி காணப்படுகிறது, ஆள் அரவமற்ற சாலைகள், மனித கால்தடம் பதியாத கடற்கரைகள். இதுதான் இப்போதைய சென்னை நிலவரம். இந்நிலையில், தற்போதைய சென்னை மாநகரின் பழங்கால தோற்றத்தை விளக்கும் ஓவியங்களையும், புகைப்படங்களையும் இங்கே தொகுத்தளித்துள்ளோம். 1860ஆம் ஆண்டு வரையப்பட்ட மதராஸ் நகரை குறிக்கும் படம்.பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 1860ஆம் ஆண்டு வரையப்பட்ட மதராஸ் நகரை குறிக்கும் படம். 1860களில் அப்போதைய மதராஸின் துறைமுக பகுதியிலிருந்து ஜார்ஜ் கோட்டை இப்படித்தான் காட்சியளித்தது.பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 1860களில் அப்போதைய மதராஸின் துறைமுக பகுதியிலிருந்து ஜார்ஜ் கோட்டை இப்படித்தான் காட்சியளித்தது. 1865இல் சென்னையிலுள்ள செயின்ட் ஜார்ஜ் கதீட்ரல் கட்டடத்தின் தோற்றம்.பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 1865இல் சென்னையிலுள்ள செயின்ட் ஜார்ஜ் கதீட்ரல் கட்டடத்தின் தோற்றம். இந்தோ - சரசனிக் பாணியில் கட்டப்பட்ட சேப்பாக்கம் மாளிகையின் தோற்றம். இது 1880இல் வரையப்பட்டது.பட மூல...