Posts

Showing posts with the label MISSED SONG

REPUTED MISSED SONG OF ILAIYARAJA

Image
REPUTED MISSED SONG OF ILAIYARAJA காற்றில் கலந்த இசை 11: தொன்ம நகரத்தின் தேவகானம் திரைப்படங்கள் அடைந்த தோல்வி காரணமாகப் பரவலாக அறியப்படாமல் போன நல்ல பாடல்கள் பல உண்டு. குறிப்பாக, பெயர் தெரியாத படங்களின் பாடல்களாக நினைவுகளில் பதிவாகிவிட்ட இளையராஜாவின் அற்புதமான பாடல்கள் ஏராளம். இதுபோன்ற பாடல்களைக் கேட்கும்போது, யாரும் அறியாத ரகசிய வனத்தைக் கண்டடையும் மனக்கிளர்ச்சி நம்முள் ஏற்படும். நூலகத்தில் பலர் கண்ணிலும் படாத அலமாரியில் வாசகர்களுக்காகக் காத்திருக்கும் புத்தகங்களைப் போன்றவை இப்பாடல்கள். இன்று மெய்நிகர் புதையலைப் போல ஏராளமான விஷயங்களைக் கொண்டிருக்கும் இணையத்தில் இதுபோன்ற பாடல்கள் பார்க்க, கேட்க கிடைக்கின்றன. காலத்தின் நிறம் ஏறிய பழைய புகைப்பட ஆல்பங்களைப் புரட்டிப் பார்க்கும் அனுபவத்தைத் தரும் பாடல்கள் இவை. அந்த வரிசையில் இடம்பெறும் பாடல், ‘எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன சுகமோ.’ இடம்பெற்ற திரைப்படம் ‘இது எப்படி இருக்கு’. கருப்பு-வெள்ளைத் திரைப்படம் இது. குமுதம் இதழில் எழுத்தாளர் சுஜாதா எழுதிய ‘அனிதா இளம் மனைவி’எனும் தொடர்கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட...