SAIBOL ,CELEBRATED 80 YEARS
SAIBOL ,CELEBRATED 80 YEARS சரித்திர பின்னணியும், புராதன பெருமைகளையும் உள்ளடக்கிய நகரம், மதுரை. இன்று, 80வது ஆண்டு விழாவை கொண்டாடும், சருமரோக நிவாரணியான, 'சைபால்' நிறுவனம், மதுரை நகரின் பெருமைகளில் ஒன்றாக திகழ்கிறது. நாட்டில், சுதந்திர தீ, கொழுந்து விட்டு எரியத் துவங்கியிருந்த நேரம் அது... நாடெங்கும் காந்திஜியின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு, உடல், பொருள், ஆவியை துறக்க பலரும் துடித்தபடி இருந்தனர். இந்நிலையில் தான், 'சொந்தமாக சிந்திக்கவோ, ஒரு பொருளை தயாரிக்கவோ தெரியாத இவர்கள் சுதந்திரம் பெற்று என்ன, செய்யப் போகின்றனர்' என்று பிரிட்டிஷார் நம்மை கேலி செய்தனர். அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், 'அந்நிய நாட்டு பொருட்களை நாம் உபயோகிக்கக் கூடாது; அதே நேரம், நம் தேவைகளுக்கு நாமே உற்பத்தி செய்ய வேண்டும். அப்போதுதான் அவர்கள் முகத்தில் கரி பூசியது போலாகும். நம்மால் இது நிச்சயம் முடியும். அதற்கான முயற்சியில் இன்றே, இப்போதே இறங்குவீர்...' என்று, 'மேக் இன் இன்டியா' கோஷத்தை முழங்கினார், காந்திஜி. இதைக் கேட்ட, 18 வயதே ஆன, எஸ்.சுப்ரமணியன் ...