Posts

Showing posts with the label SUBBARAYULU

SUBBARAYULU ,FIRST CHIEF MINISTER OF TAMILNADU 1920

Image
SUBBARAYULU ,FIRST CHIEF MINISTER OF TAMILNADU 1920 பிறப்பும் படிப்பும்[மூலத்தைத் தொகு] சுப்பராயுலு ரெட்டியார் 1855 ஆம் வருடம் அக்டோபர் 15 ஆம் நாள் சென்னை மாகாணத்தில், தென் ஆற்காடு மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தார். இவரது தாய் மொழி தெலுங்கு. செல்வச் செழிப்பு மிக்க விவசாய குடும்பத்தில் பிறந்த இவர் சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர் இங்கிலாந்து சென்று சட்டப் படிப்பு படித்தார்.[3][4] ஆரம்ப கால அரசியல் வாழ்க்கை[மூலத்தைத் தொகு] சுப்பராயுலு 1912 ஆம் ஆண்டு கடலூர் மாவட்ட வாரியத்தின் தலைவராகப் பதவி வகித்தார். ஆரம்ப காலத்தில் இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினராக இருந்த அவர் 1916 ஆம் ஆண்டு காங்கிரசை விட்டு விலகினார். 1917 ஆம் ஆண்டு தென்னாற்காடு மாவட்ட வாரியத்தின் தலைவரானார். தியாகராய செட்டி, டி. எம். நாயர் ஆகியோர் தொடங்கிய நீதிக் கட்சியில் இணைந்தார். வகுப்பு வாரி இட ஒதுக்கீடு கோரி சென்னை ஆளுநர் வில்லிங்டன் பிரபுவுடன் பேச்சுவார்த்தை நடத்த நியமிக்கப் பட்ட நீதிக் கட்சி குழுவில் இடம் பெற்றிருந்தார்.[5] இரட்டை ஆட்சி முறையில்[மூலத...