Sunday, 15 October 2017

SUBBARAYULU ,FIRST CHIEF MINISTER OF TAMILNADU 1920


SUBBARAYULU ,FIRST CHIEF MINISTER OF TAMILNADU 1920















பிறப்பும் படிப்பும்[மூலத்தைத் தொகு]

சுப்பராயுலு ரெட்டியார் 1855 ஆம் வருடம் அக்டோபர் 15 ஆம் நாள் சென்னை மாகாணத்தில், தென் ஆற்காடு மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தார். இவரது தாய் மொழி தெலுங்கு. செல்வச் செழிப்பு மிக்க விவசாய குடும்பத்தில் பிறந்த இவர் சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர் இங்கிலாந்து சென்று சட்டப் படிப்பு படித்தார்.[3][4]

ஆரம்ப கால அரசியல் வாழ்க்கை[மூலத்தைத் தொகு]

சுப்பராயுலு 1912 ஆம் ஆண்டு கடலூர் மாவட்ட வாரியத்தின் தலைவராகப் பதவி வகித்தார். ஆரம்ப காலத்தில் இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினராக இருந்த அவர் 1916 ஆம் ஆண்டு காங்கிரசை விட்டு விலகினார். 1917 ஆம் ஆண்டு தென்னாற்காடு மாவட்ட வாரியத்தின் தலைவரானார். தியாகராய செட்டி, டி. எம். நாயர் ஆகியோர் தொடங்கிய நீதிக் கட்சியில் இணைந்தார். வகுப்பு வாரி இட ஒதுக்கீடு கோரி சென்னை ஆளுநர் வில்லிங்டன் பிரபுவுடன் பேச்சுவார்த்தை நடத்த நியமிக்கப் பட்ட நீதிக் கட்சி குழுவில் இடம் பெற்றிருந்தார்.[5]

இரட்டை ஆட்சி முறையில்[மூலத்தைத் தொகு]

1919 ஆம் ஆண்டு மொன்டேகு-கெம்ஸ்ஃபோர்ட் சட்ட சீர்திருத்தங்களின் விளைவாக, இந்திய அரசாங்கச் சட்டம் (1919) பிரிட்டிஷ் அரசாங்கத்தால் இயற்றப் பட்டது. இச்சட்டத்தின் விளைவாக, இந்தியாவில் மத்திய அரசிலும், மாகாணங்களிலும், இரட்டை ஆட்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்வாட்சி முறையில், நிர்வாகத் துறைகள் இரு வகையாக பிரிக்கப்பட்டன. சட்டம், நிதி, உள் துறை முதலிய முக்கிய துறைகள் பிரிட்டிஷ் ஆளுனரின் நிர்வாகக் குழுவின் நேரடிக் கட்டுப்பாட்டிலும், கல்வி, சுகாதாரம், உள்ளாட்சி, விவசாயம், தொழில் முதலியவை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய அரசவையின் கட்டுப்பாட்டிலும் இயங்கின. சென்னை மாகாணத்தில சட்ட சபை விரிவு படுத்த்தப்பட்டு மொத்தமுள்ள 134 உறுப்பினர்களில் 98 பேர் நேரடி தேர்தலின் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[6][7][8][9]

இம்முறையின் கீழ் சென்னை சட்டமன்றத்திற்கு நவம்பர் 1920 இல் முதல் தேர்தல் நடத்தப் பட்டது. நீதிக்கட்சி பெருவாரியான இடங்களை பிடித்தது. ஆளுனர் வில்லிங்டன் நீதிக்கட்சித் தலைவர் தியாகராய செட்டியை ஆட்சி அமைக்க அழைத்தார். ஆனால் செட்டி தனக்கு பதிலாகத் தன் கல்லூரித் தோழரான சுப்பராயுலுவை பரிந்துரை செய்தார். இதனால் டிசம்பர் 17, 1920 இல் சுப்பராயுலு சென்னை மாகாணத்தின் முதல் முதலமைச்சரானார். கல்வி, சுங்கம், பொதுப் பணிகள் ஆகிய துறைகளுக்கு அவரே அமைச்சரானார். இவரது அமைச்சரவையில் இடம் பெற்ற மற்ற அமைச்சர்கள் பனகல் அரசர் ராமராயநிங்கர் (உள்ளாட்சித் துறை), கூர்ம வெங்கட ரெட்டி நாயுடு (வளர்ச்சித் துறை). பதவியேற்ற ஏழு மாத காலத்திற்குள் சுப்பராயுலுவிற்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது. எனவே ஜூலை 11, 1921 இல் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அவருக்கு பதில் பனகல் அரசர் முதல்வரானார்.[6][10][11][12][12][13][13][14]

மரணம்[மூலத்தைத் தொகு]
சுப்பராயுலு ரெட்டியார் நவம்பர் 1921 இல் மரணமடைந்தார்.[15][16][17]





17.12.1920இல் சர்.பி. தியாகராயரால் சிபாரிசு செய்யப்பட்டு கடலூர் எ. சுப்பராயலு ரெட்டியார் பிரதமராக சென்னை மாகாண முதல் சட்டமனற கூட்டம் 12.1.1921இல் நடைபெற்றது.
1921இல் நீதிக்கட்சி இடஒதுக்கீடு சட்டம் கொண்டு வந்தும் சுமார் 7 வருடங்களாகச் செயல்பட முடியாமல் நிலுவையில் இருந்தது.
அடுத்து நீதிக்கட்சி ஆதரவு பெற்ற டாக்டர் பி. சுப்பராயன் தலைமையில் பிரதமராக சென்னை மாகாண அமைச்சரவை ஏற்பட்டது. சர். முத்தய்யா முதலியார் சேது ரெத்தினம் அய்யர் அமைச்சர்களாக இருந்தனர். அப்போது பத்திரப் பதிவுத் துறை அமைச்சராக இருந்த சர். முத்தையா முதலியார் பெரு முயற்சியில் தமது துறையினர்க்கு பொது 744 அரசாணை 15.9.1928 ஆம் நாளிட்ட வகுப்புரிமை ஆணையை நிறைவேற்றி அமல் படுத்தினார் பெரியார் பெரிதும் பாராட்டினார்.அதோடு எல்லா துறைகளிலும் வகுப்புரிமையை நிறைவேற்ற வேண்டுகோள் விடுத்தார் அதன்படி நிறைவேறியது டாக்டர் பி. சுப்பராயன் அவர்கள் அமைச்சரவை எல்லாத் துறைகளிலும் அமல் செய்ய உத்தரவிட்டார். பார்ப்பனரல்லாதார் அரசு அலுவல்களில் வேலை வாய்ப்புகள் பெற்றனர் கல்வி வாய்ப்பு பெற்றனர். அதன்பிறகு சென்னை மாநில மத்திய அரசு துறைகளில் வேலை பார்க்கும் பார்ப்பனரல்லாதார் பயன் பெறும் வகையில் நீதிக்கட்சி பிரதமர் 1935இல் பொப்பிலி ராஜா சர். ஆர்.கே. சண்முகம், சர் ஏ. ராமசாமி ஆகியோர் முயற்சியினால் Home Department Establishment Special Order Seperate Reservation for Madras Non Brahmin 15.3.1935
இடஒதுக்கீடு அமலுக்கு வந்தது.
தென்னிந்திய ரயில்வே அஞ்சல் துறை துறைமுகம் போன்ற மத்திய அரசு ஊழியர்களும் பயனடைந்தார் கள். இதில் பார்ப்பனரல்லாதாரில் பிற்படுத்தப்பட்டவர் தாழ்த்தப்பட் டவர் வகுப்புகளும் பயனடைந்தனர். 15.8.1947இல் இந்தியா சுதந்திரம் பெற்றதும் பார்ப்பனர்கள் முயன்று மேற்கண்ட மத்திய அரசு உத்திரவை 30.9.1947இல் ரத்து செய்யும்படி செய்து விட்டார்கள். அதன்பிறகு இந்திய அரசியல் சட்ட வரைவு குழுவில் பார்ப்பனர் இருந்ததால் இந்தியா 26.1.1950இல் குடியரசு நாடாக ஆனதும் இடஒதுக்கீட்டிற்கு எதிராக வழக்குத் தொடுத்தது 28.7.1950இல் சென்னை உயர்நீதிமன்றமும் செப்டம்பரில் உச்சநீதிமன்றமும் இடஒதுக்கீடு செல்லாது என தீர்ப்பு அளித்தன.
நீதிக்கட்சி 1928முதல் 22 ஆண்டு காலம் பார்ப்பனரல்லாதாருக்கு வழங் கப்பட்ட சலுகை நிறுத்தப்பட்டது பெரியார் வெகுண்டு எழுந்து மக்களை யும் மாணவர்களையும் திரட்டி மாபெரும் கிளர்ச்சி செய்தார். திருச்சி யில் 3.12.1950இல் வகுப்புரிமை கோரி சர். எஸ். முத்தய்யா முதலியார் தலை மையில் மாநாடு நடத்தினார். அப் போது சட்ட அமைச்சர் டாக்டர் அம்பேத்கர் பிரதமர் ஜவகர்லால் நேரு தமிழ்நாடு காங்கிரசுத் தலைவர் காமராஜ் அவர்கள் முயற்சி செய்து டில்லி பாராளுமன்றத்தில் இந்திய அரசியல் சட்டம் வகுப்புரிமை சட்டம் முதலில் திருத்தப்பட்டு 1951ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்படுகின்றது.
தற்போது திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் முயற்சியால் 69 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகின்றது. மேலும் உச்ச நீதிமன்றமும் 69 சதவீதம் இடஒதுக்கீடு தொடரும் என தீர்ப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
- இனியன் பத்மநாதன்

-விடுதலை,29.9.12

No comments:

Post a Comment